விரைவில் வெளியீடு காண உள்ளது ‘கெத்து’
உதயநிதி நாயகனாகவும் ஏமி ஜாக்சன் நாயகியாகவும்
நடித்துள்ள படம் ‘கெத்து’.

திருகுமரன் இயக்கி உள்ளார். சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எளிய
முறையில் நடந்தேறியது. படம் விரைவில் திரை காண உள்ளது.

========================

பெண்களுக்கு நமீதா கூறிய அறிவுரைஇயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் நாயகனாக
நடித்துள்ள புதிய படம் ‘தற்காப்பு’.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில்
பிரம்மாண்டமாக நடத்தி உள்ளனர்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நமீதா பேசும்
போது, பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான
வழிமுறைகள் குறித்து சில அறிவுரைகளை வழங்கினார்.

“தற்காப்பு என்பது தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வது.
இன்றைய சூழலில் தற்காப்பு என்பது ஆண்களைவிட பெண்களுக்கு
மிக அவசியம் என்பேன். “நான் மாடலிங் துறையில் நுழையும்போது
‘நீங்கள் பெரிய தொழிலதிபரின் மகள். ஏன் இந்தத் துறைக்கு
வருகிறீர்கள்” என்ற ரீதியில் கேள்விகள் எழுந்தன.

“அவர்களுக்கு நான் சொன்ன பதில் இதுதான்.
‘நமீதா என்பது என்னுடைய பெயர். அந்தப் பெயரை பலர் நல்லவிதமாக
அறிந்து வைத்திருக்கும் வகையில் நான் ஏதாவது செய்ய வேண்டும்.
என்னதான் தந்தையாக இருந்தாலும் அவர் வேறு. நான் வேறுதான்’
என்றேன்.

“இப்படி விட்டுக்கொடுக்காமல் போராடியதால் தான் இந்த அளவுக்கு
முன்னேற முடிந்தது. இதுபோல இன்றைய பெண்கள் தங்கள் பெயர்
தனித்துத் தெரிய வேண்டும் என்று விரும்பினால் தங்களுக்குப் பிடித்த
துறையில் சாதிக்க முயற்சிக்க வேண்டும்.” என்றார்.

————————————

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வுசென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ‘பிசாசு’, ‘தனிஒருவன்’, ‘கிருமி’, ‘மாயா’, ’36 வயதினிலே’ உள்ளிட்ட 12 தமிழ்ப்படங்கள் திரையிடத் தேர்வாகி உள்ளன.

13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி நிறைவடைகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிட ’36 வயதினிலே’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘சார்லஸ் ஷபிக் கார்த்திகா’, ‘கிருமி’, ‘கோடைமழை’, ‘மாயா’, ‘ஆரஞ்சுமிட்டாய்’, ‘ஓட்டதூதுவன் – 1854’, ‘பிசாசு’, ‘ரேடியோபெட்டி’, ‘தாக்க தாக்க’, ‘தனிஒருவன்’ ஆகிய 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

மேலும், உலக அளவில் மிகச்சிறந்த 120 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக் கப்பட்ட 16 படங்களும், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளைப் பெற்ற படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்த திரைப்படவிழாவில் இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை மனோரமா ஆகிய இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னி சாட்சி’, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’, ‘மேஜர் சந்திரகாந்த்’ மற்றும் ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகிய 7 படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஸ்கிரீனன்

மும்பை நிறுவனத்துடன் கைகோத்தது ‘ரஜினி முருகன்’: பொங்கலுக்கு வெளியாகிறது!

பென் மூவிஸ் நிறுவன லோகோவுடன் வெளியாகி இருக்கும் 'ரஜினி முருகன்' விளம்பரம்

 

மும்பை நிறுவனமான பென் மூவிஸ் என்ற நிறுவனத்துடன்
இணைந்து ‘ரஜினி முருகன்’ படத்தை பொங்கலுக்கு
வெளியிடுகிறது திருப்பதி பிரதர்ஸ்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி,
சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம்
’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும்
இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

பென் மூவிஸ் என்ற மும்பை பட நிறுவனம்,
‘சிங் இஸ் ப்ளிங்’, ‘கஹானி’ உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்
படங்களை விநியோகம் செய்திருக்கிறது.
மேலும் லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும்
‘பையா’ படத்தின் இந்தி ரீமேக்கையும் தயாரிக்கவிருப்பது
குறிப்பிடத்தக்கது.

ஸ்கிரீனன்

தமிழ் தி இந்து காம்

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்…

தெலுங்கு திரையுலகில் முன்னணி வரிசை
இசையமைப்பாளராக திகழும் தேவிஸ்ரீ பிரசாத்,
ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தை, அவரின்
நெருங்கிய நண்பரும், தெலுங்கின் முன்னணி
இயக்குநருமான சுகுமார் இயக்கவுள்ளார்.

பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ இப்படத்தைத்
தயாரிக்க உள்ளார்.

பொதுவாக ஹீரோவாக நடிக்கும் இசையமைப்பாளர்கள்
தங்களது படங்களுக்கு இசையமைப்பதில்லை. இந்த
முறையை மாற்றும் விதத்தில்
இந்தப் படத்துக்கு தானே இசையமைக்கவுள்ளார்
தேவி ஸ்ரீபிரசாத்.

பீப் பாடல்: சிம்புவுக்கு சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பாடியதாகக் கூறி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதன்படி இன்று சிம்புவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டுள்ள இந்தச் சமயத்தில் இந்த ஆபாசப் பாடலை வெளியிடவேண்டிய அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இதுகுறித்து கோவை மாநகர ஆணையரிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதிகா அளித்த மனு அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

சமீபத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் இணைந்து இசைக் கோப்பில் (மியூசிக் ஆல்பம்) பாடிய பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதில், பெண்களை மிகவும் மோசமாக சித்திரித்துள்ளனர். அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் வேளையில் இதுபோன்ற பாடல்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே, இந்தப் பாடலை தடை செய்வதுடன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் பேரில், 3 பிரிவுகளின் கீழ் சிம்பு, அனிருத் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சிம்புவுக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன் டி.ஆரிடம் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 19-ம் தேதி கோவை ரேஸ் கோர்ஸ் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சிம்புவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

=தினமணி

சினி செய்திகள் – இந்த வாரம்…

அதிகம் சம்பளம் கேட்ட நயன்தாரா!

கமல் மற்றும் விக்ரம் தவிர,
தமிழ் சினிமாவிலுள்ள எல்லா கதாநாயகர்களுடனும்
நடித்து விட்டார் நயன்தாரா.

கமலுடன் நடிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கும்
அவர், விக்ரமுடன், மர்மமனிதன் படத்தில் நடிக்க அழைத்த
போது, ‘அவருடன் நடிக்க வேண்டுமென்றால், கூடுதலாக
ஒரு கோடி ரூபாய் தர வேண்டும்…’ என்றார்.

காரணம் கேட்ட போது, ‘அவர் நடித்த பல படங்கள்
ஓடவில்லை; நான் நடித்தால் அந்த படம் ஓடும் என்பதற்காகத்
தானே, என்னிடம் கால்ஷீட் கேட்கிறீர்கள்…’ என்றார்.

அதையடுத்து, அவர் கேட்ட தொகையை கொடுத்து, ஓகே.,
செய்துள்ளனர்.

———————————-
— சினிமா பொன்னையா

எமிஜாக்சன் கொடுக்கும், ‘ஷாக்!’

லண்டன் நடிகையான எமி ஜாக்சன், தமிழ் படங்களில்
நடிக்கும் போது தான், உடம்பு முழுக்க போர்த்தி, நடிக்கிறார்.

உடன் நடிக்கும்
நடிகர்களுக்கு, தன் லண்டன் நண்பர்களுடன் சேர்ந்து
பார்ட்டிகளில் ஆபாச ஆட்டம் போட்ட வீடியோக்களை தன்
மொபைல் போனில் காண்பித்து, அவர்களுக்கும் அதிர்ச்சி
கொடுக்கிறார்.

— எலீசா

————————–

ரஜினி டைட்டிலில் விஜயசேதுபதி!

ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்த படங்களின் தலைப்பில்,
முன்னணி நடிகர்கள் பலரும் நடித்த வரும் நிலையில்,
தற்போது விஜயசேதுபதியும், ரஜினி நடித்த, தர்மதுரை
படத்தின் தலைப்பில், ஒரு படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை, விஜய சேதுபதியை முதன் முதலாக,
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக்கிய
சீனுராமசாமி இயக்குகிறார்.

——————————————
— சி.பொ.,

ராஜமவுலியை கவர்ந்த அரவிந்த்சாமி!

நீண்ட இடைவெளிக்கு பின், தனி ஒருவன் படத்தில்,
வில்லனாக நடித்திருந்தார் அரவிந்த்சாமி.
இப்படத்தில், இவரின் நடிப்பை பலரும் புகழ்ந்து வந்த
நிலையில், பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலியும்,
அரவிந்த்சாமியின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

அத்துடன், அவருடன் இணைந்து பணிபுரிய, ஆர்வமாக
ருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

———————————–
—சி.பொ.,

கலாய்த்த கவுண்டமணி!

விவசாயி வேடத்தில், 49ஓ படத்தில் நடித்த கவுண்டமணி,
தற்போது, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
என்ற படத்தில், படப்பிடிப்புகளுக்கு கேரவன் வாடகை
விடுபவராக நடித்துள்ளார்.

இப்படத்தில், தற்போதைய இளவட்ட கதாநாயகன்களின்
நடிப்பை, தன் பாணியில் கிண்டலடித்து, டயலாக் பேசியுள்ளார்.
இதனால், மேற்படி படம், திரைக்கு வரும் போது, இளவட்ட
நடிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

——————————-
— சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து, தான் நடிக்கும்
புதிய படத்தில், பெண் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

* பத்து எண்றதுக்குள்ள படத்தின் தோல்வி கொடுத்த அதிர்ச்சி
காரணமாக, தெலுங்கு சினிமாவில், விட்ட இடத்தை பிடிக்கும்
முயற்சியில் இறங்கியுள்ளார் சமந்தா.

* குட்டிப்புலி மற்றும் கொம்பன் படங்களை தொடர்ந்து,
முத்தையா இயக்கும், மருது படத்திலும், நாயகியாக நடிக்கிறார்,
லட்சுமிமேனன்.

* வில்லன் வேடத்தை தவிர்த்து, வித்தியாசமான கதாபத்திரங்களில்
நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார், பிரகாஷ்ராஜ்.

* ஒரு இந்தி படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்,
நடிகை ஹேமமாலினி.

———————————–
வாரமலர்

அவ்ளோதான்!
Advertisement
மேலும் வாரமலர் செய்திகள்:

சினி துளிகள்!

கறுப்பு பூனை!

சண்டக்கோழி நடிகர், கடைசியாக நடித்த,
ஐந்தெழுத்து படம் சில ஏரியா வினியோகஸ்தர்களின்
கையை பலமாக கடித்து விட்டது.
இதனால், நடிகரிடம் அவர்கள் நஷ்டஈடு கேட்க, ‘கொடுக்க
முடியாது…’ என்று நழுவிக் கொண்டார்

. விளைவு, அவர் நடிப்பில், அடுத்து வெளியாகும
படங்களுக்கு தங்களது ஏரியாக்களில், ‘ரெட் கார்டு’ போட
தயாராகி வருகின்றனர் வினியோகஸ்தர்கள்.

————————-

சூப்பர் நடிகர் படத்தில் நடித்து வரும் ஆப்தே நடிகை,
ஒரு சீனில் நடித்து முடித்ததும், நடிகர் நடிகையர், ‘
ரிலாக்ஸ்’ எடுப்பது போன்று, புகையை ஊதி தள்ளுகிறார்.

கேரவனுக்குள் அமர்ந்து, அவர் ஊதி தள்ளுவதைப் பார்த்து,
‘செயின் ஸ்மோக்கர்’களே, ‘இந்த நடிகை நம்மையெல்லாம்,
மிஞ்சி விடுவார் போலிருக்கே…’ என்று மிரண்டு நிற்கின்றனர்.

—————————————–

பிரியாணி நடிகர் நடித்து வந்த படங்கள் எல்லாமே, ‘ப்ளாப்’
ஆகி வருவதால், அவர் நடிக்கும் படங்களுக்கு, ‘பைனான்ஸ்’
செய்ய தயங்குகின்றனர்.

மேலும், அவர் வாய்ப்பு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம்,
‘உங்களை வைத்து படம் செய்ய வேண்டுமென்றால்,
‘மார்க்கெட்’டில் இருக்கும் முன்னணி கதாநாயகிகளிடம்,
‘கால்ஷீட் வாங்கி வாருங்கள்…’ என்கின்றனர்.

இதனால், மாயா மற்றும் இஞ்சி இடுப்பழகி பட நடிகைகளிடம்,
‘கால்ஷீட்’ கேட்டு துரத்துகிறார் பிரியாணி நடிகர்.

———————————————-

* தமிழில், ‘மார்க்கெட்’ சரிந்து கிடப்பதால், தாய்மொழியான
மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுகிறார் ஆர்யா.

* ரஜினியுடன், கபாலியில் ஜோடி சேர்ந்துள்ள ராதிகா ஆப்தே,
தமிழில் வேறு எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை.

* தூங்காவனம் படத்தையடுத்து, தனுஷ் மற்றும் விஜயசேதுபதி
போன்ற நடிகர்களுடன் தலா, ஒரு படத்தில் நடிக்கிறார் த்ரிஷா.

* விஜய் நடிக்கும், குஷி – 2 படப்பிடிப்பு, ஜனவரி மாதம் துவங்குகிறது.

———————————-

வாரமலர்

 

தனுஷுக்கு எதிராக கேபிள், ‘டிவி’ ஆபரேட்டர்கள்!


சமீபத்தில், டி.டி.எச்., விளம்பர படத்தில் நடித்த தனுஷ்,
அதில், கேபிள், ‘டிவி’ ஆபரேட்டர்களை, குறை கூறுவது
போன்று, ஒரு வசனம் பேசியிருந்தார்.

அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, அவ்வசனத்தை நீக்கி
விட்டாலும், ‘அப்படியொரு டயலாக்கை பேசியதற்காக
தனுஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்;
இல்லையேல், அவர் மீது அவதூறு வழக்கு தொடருவோம்…’
என்று, தமிழ்நாடு கேபிள், ‘டிவி’ சங்கத்தினர், தனுஷுக்கு
எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

——————————————
— சினிமா பொன்னையா

அட்டகத்தி நந்திதா ஏமாற்றம்!

அட்டகத்தி பட இயக்குனர் ரஞ்சித்,
தற்போது, ரஜினியின், கபாலி படத்தை இயக்குவதால்,
அவரிடம், வாய்ப்பு கேட்டார் நந்திதா.

முதலில் தருவதாக கூறிய ரஞ்சித், பின், அவ்வேடத்துக்கு
ரித்விகாவை ஒப்பந்தம் செய்து விட்டார். இதனால்,
பெருத்த ஏமாற்றம் அடைந்த நந்திதா, ‘இப்போது,
சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தானே
நழுவியது;

ஆனால், எதிர்காலத்தில் ரஜினி சாருக்கு ஜோடியாக
நடிக்க கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
அதற்காக கூட, இந்த வாய்ப்பு நழுவிப் போயிருக்கலாம்…’
என்று, தன் மனதை தேற்றிக் கொண்டுள்ளார்.
இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!

——————————————
—எலீசா

« Older entries