ஆண்களுக்கு, எந்த வயதில் பெண்களின் மோகம் அறவே இல்லாமல் போகும்?

திருமணமான பிறகு மனைவியை உயிராக காதலிக்கிற எந்த ஆணுக்கும் இன்னொரு பெண் ஒரு பொருட்டாகவே மாட்டாள்.

பாவேந்தர் பாரதிதாசன் குடும்பவிளக்கில், முதுமைக் காதல் குறித்து எழுதியுள்ளதைப் பாருங்கள்.

ஒருவனும் ஒருத்தியும் அன்பு கொண்டு வாழும் வாழ்க்கையைக் காதல் வாழ்க்கை என்கிறோம். இந்தக் காதல் வாழ்க்கை இளமையில் இனிப்பாய் இருப்பதைப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், முதியோரிடம் உண்டாகும் காதல் வாழ்க்கையைப் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ளார்.

முதியவளின் உடலில் பளபளப்போ அழகோ இல்லை. என்றாலும் முதியவர், அவள்மேல் கொண்டிருந்த காதல் மாறவில்லை. இதற்கு அடிப்படை அவர் அவரின் மனைவி மீது உயிராகக் கொண்ட காதலே ஆகும்.

புதுமலர் அல்ல காய்ந்த

புற்கட்டே அவள் உடம்பு!

சதிராடும் நடையாள் அல்லள்

தள்ளாடி விழும் மூதாட்டி

மதியல்ல முகம் அவட்கு

வறள்நிலம்! குழிகள் கண்கள்!

எது எனக்கின்பம் நல்கும்?

‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!

நன்றி: குமரிநாடன் (தமிழ் கோரா)

அதுவும் சாத்தியமே! – (அரசு பதில்கள்)

தலைவனுக்கு இலக்கணம்..!!

வெற்றி கிடைத்ததும் என்ன செய்ய வேண்டும்…

கேள்வியும் பதிலும் – வெ.இறையன்பு

டோக்கியோவில் முதல் நாளே பதக்கம் பெற்ற வீராங்கனை…!

தராசு பதில்கள் – கல்கி

இசை மேதகளின் மதிப்பு…!

தராசு பதில்கள் -கல்கி

குட்டித்தீவை விலைக்கு வாங்க…!

குமுதம்

தமிழ்வாணனின் கேள்வி -– பதில்கள்

அரசு பதில்கள்

கேள்வி-பதில் (துக்ளக்)

« Older entries