கொரியாக்காரங்களுக்குத்தான் தமிழ் தெரியாதே..!!



உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால்
அதை என்கிட்டே சொல்லலாம்..!

நர்ஸை லிப்ஸ்டிக் போடச் சொல்லுங்க
டாக்டர்…சூப்பரா இருக்கும்…!!

அம்பை தேவா

——————————————————————————-



நிறுத்தணும்…எல்லாத்தையும் நிறுத்தணும்…!

அதை மக்கள் உங்ககிட்டே எதிர்பார்க்கிறாங்க,
தலைவரே..!


அ.ரியாஸ்

———————————————–

பாதுகாப்பு


காவல் நிலையத்தின்
குடிநீர் குடத்தருகே
சங்கிலியால்
இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது
சில்வர் தம்ளர்..!

——————
-க.ர.தீபக்

சிந்தனை வயல் – கவிதை தொகுப்பிலிருந்து

நட்சத்திரக் கனவுகள்

Blue_Stars_Night_Fall_Tree_Autumn_Leaves_Barren

நீயும், நானும்
   நிழல் விழும் இரவும்
    நீலக் கருமரமும்
இருந்தோம் அப்பொழுது
 
இயங்காத கடிகாரங்கள்.
புலர்தலில்லாப் பொழுது.
கசங்காத காலம்.
பிறகு,
      நீயில்லை
நானும்,
      நட்சத்திரக் கனவுகளும்.
அப்புறம்
      நானுமில்லை
ஒரேயொரு
      எழுதாத வரிமட்டும்.
====================

உமா மஹேஸ்வரி

மிஷ்கின், சரத்குமார் நடிக்கும் படத்தில் ரீ என்ட்ரி ஆகிறார் ப்ரியாமணி

மிஷ்கின், சரத்குமார் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்டை
முடித்து விட்டார். அடுத்து அவரின் அசோசியேட்
ஆதித்யா ஒரு படத்தை டைரக்ட் செய்ய, மிஷ்கினே
அதற்குக் கதையும் எழுதுகிறார்.

இயக்குநர் ராம் மறுபடியும் அதில் நடிக்கிறார்.
ப்ரியாமணி ரீ-என்ட்ரியும் அதில் நடக்கிறது.
மிஷ்கின்தான் வில்லன்.
ஒருத் தருக்கு இத்தனை பரிமாணமா!

———————————–

இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும்
‘அகிரா’வுக்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்
கொண்டிருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா.

‘‘படத்துல நான் ஃபைட் பண்றேன். அதுக்காக
தற்காப்புக் கலைகள் கத்துக்கறேன். படம் வந்ததும்
என்னோட வொர்க்கை கண்டிப்பா நீங்களே
பாராட்டப் போறீங்க’’ என ஹேப்பியாகிறார்
சோனாக்ஷி.

———————————–

விஷால் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள்
ஆகிவிட்டது. சமீபத்தில் தனது ரசிகர்களை
சந்தித்ததுடன், ரசிகர் மன்றத்தை நற்பணி
மன்றமாக ஆக்கியிருக்கிறார்.

அங்கே தனது ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு
‘வெற்றி’ என பெயர் சூட்டியிருக்கிறார் விஷால்.
இந்த மாற்றங்களால் விஷாலின் ரசிகர்கள் பூஸ்ட்
அப் ஆகியிருக்கிறார்கள்.

———————————–

நன்றி- குங்குமம்

பகிர்ந்து கொள்ள துணை வேண்டும்.

நாளைக்குப் பார்க்கலாம் என்றாய்
சரி என்று நானும்
தலையாட்டிவைத்தேன்
நாளையும் வந்தது
உன்னைத்தான் காணவில்லை
வெட்டவெளியே துணையாக
வெறுமனே நின்றுகொண்டிருக்கிறேன்
பார்ப்பதற்கு ஏதுமில்லை
பகிர்ந்துகொள்ள யாருமில்லை

**

=======================
மேற்கண்ட கவிதை காங்கோவிலிருந்து வெளிவரும்

‘தமிழ்ச்சாரல்’ மின்னிதழின் டிசம்பர் 2014 இதழில் வெளியாகியுள்ளது.
நன்றி: தமிழ்ச்சாரல், கின்ஷாசா, காங்கோ.

https://aekaanthan.wordpress.com/2014/11/11/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/

எக்ஸ் மென் படத்தின் கடைசி பார்ட் அறிவிப்பு…

ஹியூக் ஜாக்மேன் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படம் ‘எக்ஸ் மென்’. இப்படத்தின் மூலம் தான் வால்வோரின் புகழ் ஹியூக் என அவருக்கு புதிய பட்டமே கிடைத்தது.

எக்ஸ் மென், எக்ஸ்2 : எக்ஸ் மென் யுனைட்டட், எக்ஸ் மென் – தி லாஸ்ட் ஸ்டாண்ட், எக்ஸ் மென் : ஒரிஜின்ஸ் – தி வால்வோரின், எக்ஸ் மென் – த ஃபர்ஸ்ட் க்ளாஸ், தி வால்வோரின், எக்ஸ் மென் : தி டேஸ் அஃப் ஃபியூச்சர் பாஸ்ட், என இதுவரை 7 பாகங்கள் வெளியாகியுள்ளன.

எட்டாவது பாகமாக எக்ஸ் மென் : அபோகலிப்ஸ் உருவாக உள்ளது. நீல நிற உடல் கொண்ட உருவம் மாறும் பெண்ணாக ஜெனிஃபர் லாரன்ஸ் கடைசி 2 பாகங்களில் நடித்திருப்பார். தற்போது எக்ஸ் மென் பாகங்களில் கடைசி பாகமான அபோகலிப்ஸ் பாகத்திலும் தனது மிஸ்டிக் கேரக்டரை அறிவித்துள்ளார் ஜெனிஃபர் லாரன்ஸ். எனினும் எக்ஸ் மென் கடைசி பாகம் என அறிவிக்கப்பட்டுள்ளது ஹாலிவுட் ரசிகர்களுக்கு சற்றே இது வருத்தமான செய்தியே.

இதே பாணியில் ‘ஹாரி பாட்டர்’, மற்றும் ‘ஐயன் மேன் படங்களும் பாகங்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-நன்றி- சினிமா விகடன்

தேன் குடித்த கிறுகிறுப்பு…


அப்பா இல்லை இப்போது
இருக்கிறது
அவர் அமரும் மரத்தடி


————————————–

குழந்தையின் அழுகை
ஆல்பத்தில்
பார்த்துவிட்டுச் சிரிக்கிறது


—————————————

தோட்டம் சுற்றி
முள்வேலி
முள்வேலியில் ஜம்மென்று குருவி


——————————————–

தலையில் நெருப்பு
ஐயோ சேவல்
ஏறும் கூரை மேலே


——————————————–

தேன்குடித்த கிறுகிறுப்பு
தள்ளாடும்
பட்டாம்பூச்சி


===============================
எஸ்.ஷங்கரநாராயணன்
கடவுளின் காலடிச் சத்தம் ஹைக்கூ கவிதைகள்

தனிமை – -பா.கிருஷ்ணன்



நடுக்காட்டில்
தன்னந்தனியாய்க் கிடந்த
குட்டையில்
தூங்கிக் கொண்டிருந்த
தண்ணீரில் விழுந்த
மரத்தின் இலை போல
காரணம் இல்லாத சலசலப்பு…

மழைநாளின்
அட்டைப் பூச்சியைப் போல
மனசில் ஒட்டிக் கொண்ட
நினைவுகளைப் பிய்த்து
எறியமுடியாத தவிப்பு…

குடிசைக்குள்
துடைத்து துடைத்தும்
ஒழியாமல் மீண்டும் மீண்டும்
வலை விரிக்கும்
ஒட்டடை போல
நெஞ்சில் அடிக்கடி
பூசிக்கொள்ளும்
நினைவுக் கசப்பு…

இனம் புரியா சுகங்களைத்
தேடாமல் திணறாமல்
மனம் முழுதும் ஏற்பட்ட
விநோதமான களைப்பு…

மனம் லேசாகிப்
போகும் போதும்
தனித்துக் கிடக்கும்
சிந்தனைகள்
திரும்பத் திரும்ப வந்து
அழைக்கழிக்கும்
தனிமை என்பதும் சில சமயம்
கனமானது விசித்திரம்…

————————
._-பா.கிருஷ்ணன்

சாமியைக் காட்டிலும்…….


ஊர்த் திருவிழாவில் சாமி பார்க்க
அப்பாவின் பின் கழுத்தில் அமர்ந்து
இரு தோள்களின்கீழ்
கால்கள் தொங்கவிட்டு
தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து
அசைந்து நடக்கும்
அப்பாவின் நடையில் ஆனந்தப் பாட்டு!
“சாமி தெரியுதா’ என்று
தன் கால் உயர்த்தி
எக்கி நின்று காட்டுகையில்
சாமியைக் காட்டிலும்
உயர்ந்து நின்றார் அப்பா!

—————————-
– மு. மகேந்திரபாபு, பருப்பாயூரணி
நன்றி: கல்கி

குறளரசனின் இசையில் இது நம்ம ஆளு


பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா
இணைந்து நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.
சிம்புவின் தம்பி குறளரசன் இந்தப் படத்தின் மூலம்
இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

படத்தின் முன்னோட்ட படம் அடுத்த வாரம்
வெளியிடப்பட உள்ளது.

‘இது நம்ம ஆளு’ படத்தின் க்ளைமேக்ஸ் பாடலை
மட்டும் குறளரசன் இசையமைத்தார் என்றும் மற்றபடி
முழு படத்துக்கும் இசையமைத்து வருவது சிம்பு தான்
என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது.

தனது தம்பிக்கு ஒரு பெரிய அறிமுகத்தைக் கொடுக்க
வேண்டும் என்பதற்காகவே சிம்புவே அனைத்து இசைப்
பணிகளையும் செய்து தன் தம்பி பெயரில்
வெளியிடுவதாகவும் சொல்லுகிறார்கள்.

இது எந்தளவுக்கு உண்மை என்பதையும் சிம்புதான்
விளக்க வேண்டும்.

« Older entries