ரவுடி பெண்ணாக நயன்தாரா!


நானும் ரவுடி தான் படத்தையடுத்து,
ஜீவாவுடன் நயன்தாரா நடித்து வரும், திருநாள்
படத்தில், பெண் ரவுடி போன்று, சில காட்சிகளில்
நடித்துள்ளார் நயன்தாரா.

வாயில் பிளேடை வைத்தபடி அவர் நடித்துள்ள காட்சி,
அப்படத்தின், ‘ட்ரெய்லரில்’ வெளியானதை அடுத்து,
ஏராளமான ரசிகர்கள், ‘லைக்’ கொடுத்துள்ளனர்.

இதனால், இனிமேல் சாப்ட்டாக இல்லாமல், அதிரடி
கதாபாத்திரங்களுக்கு முதலிடம் கொடுக்க
முடிவெடுத்துள்ளார்.
அக்கறை வந்து முழக்கம் போடுது!

—————————————-
—எலீசா

கவுதம்  மேனன் படத்தில் ஜெயம் ரவி!


நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பின்,
யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை
விஜய்யை வைத்து இயக்கயிருந்தார்
கவுதம் மேனன்.

ஆனால், அவர் கூறிய கதை விஜய்க்கு பிடிக்காததால்,
அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து,
சூர்யாவை வைத்து இயக்கவிருந்த, துருவ நட்சத்திரம்
படமும், கைவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது,
அப்படத்தை ஜெயம் ரவியை நாயகனாக வைத்து,
இயக்கவிருக்கிறார்.

ஏற்கனவே, இப்படத்திற்கு ஒப்பந்தமான, த்ரிஷா,
பார்த்திபன் மற்றும் அருண்விஜய் போன்றோரே
இப்படத்தில் நடிக்கின்றனர். அச்சம் என்பது
மடமையடா படப்பிடிப்பு முடிந்ததும், அப்படம்
துவங்குகிறது.

——————————————-
— சினிமா பொன்னையா

சினி செய்திகள்

 

 

 

 

ஓ காதல் கண்மணி படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க தன்ஷிகாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால், மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டுமென்ற தனது கனவு நிறைவேறப்போவதாக கூறி மகிழ்ச்சியுடன் வலம் வருகிறாராம் தன்ஷிகா.

—————-

னது நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்த்த பிரகாஷ்ராஜ் தோனி, உன் சமையலறையில் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு மன ஊரி ராமாயணம் என பெயரிட்டுள்ளராம்..

———————-

 

 

 

 

ஞ்சி இடுப்பழகி படத்திற்காக 10 கிலோவிற்கு தனது எடையைக் கூட்டி நடித்த அனுஷ்காவிடம் பாகுபலி 2ஆம் பாகத்தில் நடிக்க தயாராகும்படி இயக்குனர் ராஜமவுலி கூறியதால் மீண்டும் தனது எடையை பழைய நிலைக்கு கொண்டு வர பெரிதும் முயற்சித்து தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார்.

————————-

சிவகார்த்திகேயன்

—————

தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் தனது படத்தில் இடம்பெறும் டெக்னீஷியன்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறுவதுடன், அந்த டெக்னீஷியன்களை தான்தான் முடிவெடுப்பேன் என்று கூறுவதுடன் தனது கண்டிசன்களுக்கு உடன்படும் இயக்குனர்களுக்கு மட்டுமே கால்சீட் தர ஒப்புக்கொள்கிறாராம்.

—————–

 

 

 

-நிக்கி கல்ராணி

டார்லிங் படத்தில் மிரட்டல் பேயாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நிக்கி கல்ராணி தற்போது கோ-2, கவலை வேண்டாம் ஆகிய படங்களைத் தொடர்ந்து லாரன்ஸின் மொட்டசிவா கெட்ட சிவா படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

 

 

வடபழனி ஃபோரம் மாலில் எஸ்பிஐ சினிமாஸின் புதிய திரையரங்கு திறப்புசென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் திறக்கப்பட்டுள்ள எஸ்பிஐ சினிமாஸின் ‘பளாஸோ’ திரையரங்கின் பிரம்மாண்ட உட்புறத் தோற்றம்.

வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் எஸ்பிஐ சினிமாஸின் புதிய திரையரங்கு நேற்று திறக்கப்பட்டது. மொத்தம் 9 ஸ்கீரின்களைக் கொண்ட இந்த திரையரங்கத்துக்கு ‘பளாஸோ’ என பெயரிட்டுள்ளனர்.

சென்னை, வடபழனியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஃபோரம் மால் என்ற வணிக வளாகம் திறக்கப்பட்டது. பல அடுக்குகளைக் கொண்ட இந்த மாலில், எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்ட திரையரங்கத்தை அமைத்துள்ளது. உரிமம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் திரையரங்கை உடனடியாக திறக்கவில்லை.

இந்நிலையில், முறையான உரிமம் கிடைத்ததையடுத்து, இந்த திரையரங்கு நேற்று திறக்கப்பட்டது. மொத்தம் 9 ஸ்கீரின்கள் கொண்ட இந்த திரையரங்கில், ஐமேக்ஸ் என்ற ஒரு ஸ்கீரினில் மட்டும் டிக்கெட் விலை ரூ.360 ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது. அதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்காததால், அந்த ஒரு ஸ்கிரீனில் மட்டும் படம் திரையிடப்படவில்லை. மற்ற 8 ஸ்கிரீன்களிலும் நேற்று பகல் காட்சி திரையிடப்பட்டது.

ஐமேக்ஸ் ஸ்கிரீனுக்கான கட்டண ஒப்புதல் கிடைத்ததும் அதிலும் படம் திரையிடப்படும் என கூறப்படுகிறது.

தமிழ் தி இந்து காம்

முத்தம் தர தயக்கம் இல்லை-நடிகை ரெஜினா.

 

 • Regina will Create Records with Lip-Locks
 • சக ஹீரோவுக்கு முத்தம் தர தயக்கம் இல்லை என்று கூறி
  உள்ளார்.,நடிகை ரெஜினா.

  லிப் டு லிப் கிஸ் தருவதற்கு எனக்கு கூச்சம் எதுவும் இல்லை.
  அப்படியொரு காட்சியில் நடிக்க நேர்ந்தால் அது புதிய
  டிரெண்டாகவும், ரெக்கார்டு செய்யும் விதத்திலும்
  வித்தியாசமானதாக இருக்கும்.

  இதெல்லாமே ஸ்கிரிப்ட்டுக்கு தேவைப்பட்டால் மட்டுமே
  செய்வேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

  ——————————–

 

சென்சார் சிக்கலில் தெலுங்கு லெஸ்பியன் திரைப்படம்!

 

தெலுங்கில் தயாராகி இருக்கும் ‘லெஸ்பியன்’ பற்றிய
‘அஃபயர்’ திரைப்படம் சென்சார் சிக்கலில் மாட்டிக்
கொண்டுள்ளது.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரசாந்தி இதில் லெஸ்பியனாகவும்,
அவரோடு லெஸ்பியன் உறவு கொள்ளும் பெண்ணாக கீதாஞ்சலியும்
நடித்திருக்கிறார்கள்.

மிதமிஞ்சிய செக்ஸ் காட்சிகள் இருப்பதால், படத்துக்கு சான்றிதழ்
வழங்க முடியாது என்று தணிக்கைக் குழுவினர் மறுத்து வருகிறார்களாம்.

——————–

சண்முகபாண்டியன் ஜோடியாக சோயாவுக்கு வாய்ப்பு


‘தமிழன் என்று சொல்’ படத்தில் சண்முகபாண்டியன்
ஜோடியாக சோயா ஆஃப்ரோஸு நடிக்க வாய்ப்பிருப்பதாக த
கவல்கள் வெளியாகியுள்ளன.

அருண் பொன்னம்பலம் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும்
அவருடைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாக
இருக்கும் படம் ‘தமிழன் என்று சொல்’.

ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க இருக்கும் இப்படத்தை
வரதராஜன் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை
சென்னையில் நடைபெற்றது.

படப்பூஜையில் கலந்து கொண்ட விஜயகாந்த், “விஜயகாந்த்
ஏதோ கத்தி எல்லாம் வைத்திருக்கிறார் என்று நினைத்து
விடாதீர்கள். நிச்சயமாக சொல்வேன், இப்படம் ஒரு மாறுபட்ட
படம். தமிழ் மொழிக்காக நான் செய்கிற படம் ‘தமிழன் என்று சொல்”
என்று பேசினார்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக
சோயா ஆஃப்ரோஸிடம்(Zoya Afroz) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு
வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் படக்குழு
சார்பில் தெரிவித்தார்கள்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட
இருக்கிறது.

———————————————————
தமிழ்தி இந்து காம்

 

சேலையில், எளிமையாக இருப்பது எனக்கு பிடிக்கும்’’ – ஐஸ்வர்யாராய்

மும்பை,

‘சேலை அணிந்து எளிமையாக இருப்பது எனக்கு பிடிக்கும்’ என்று நடிகை ஐஸ்வர்யாராய் கூறினார்.

உலக அழகி

ஐஸ்வர்யாராய் உலக அழகி பட்டம் வென்று 21 வருடங்கள் ஆகிறது. 2007–ல் அபிஷேக்பச்சனை மணந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஆரத்யா என்ற மகள் இருக்கிறாள். குழந்தை பிறந்த பின் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இரண்டு இந்திப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார்.

தனக்கு பிடித்த விஷயங்கள் குறித்து ஐஸ்வர்யாராய் மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

‘‘எனக்கு விதவிதமான கைக்கடிகாரங்கள் ரொம்ப பிடிக்கும். வெளிநாடுகளுக்கு போகும்போதெல்லாம் அவற்றை வாங்கி வருவேன். வீட்டில் நிறைய கைக்கடிகாரங்களை குவித்து வைத்துள்ளேன். உடைகளுக்கு பொருத்தமான கைக்கடிகாரங்களை அணிந்து கொண்டு வெளியே செல்வேன்.

பிடித்த நிறம்

எனக்கு பிடித்த நிறம் கருப்பு. அத்துடன் நீலம், வெள்ளை நிறங்களையும் விரும்புவேன். எந்த ஆடைகளை அணிந்தாலும், இந்த நிறங்கள் அவற்றில் இருப்பது போல் பார்த்துக்கொள்வேன். சேலைகள் அணிந்து எளிமையாக இருப்பது பிடிக்கும். நீண்ட கவுன், சுடிதாரையும் விரும்பி அணிவேன்.

எனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பச்சன். நடிகைகளில் நர்கீசை பிடிக்கும். தாய்லாந்து, சைனீஸ் உணவுகளை பார்த்தால் விட மாட்டேன் வெளுத்து கட்டுவேன். அப்படி அந்த உணவுகள் மீது எனக்கு இஷ்டம்.

மினுமினுப்பு

எப்போதாவது சோர்வாக இருந்தால், மசாஜ் செய்து குளிப்பேன். அதன் பிறகு நல்ல தூக்கம் போட்டு எழுவேன். அப்போது முகத்தில் புதிய மினுமினுப்பு வரும். என்னை சுற்றி எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். பண்டிகை காலங்களில் படப்பிடிப்பு இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பேன். அந்த நாட்களில் குடும்பத்தோடு புதுபுது இனிப்புகள் செய்து சாப்பிடுவேன்.

எனக்கு பிடித்தது பிரான்ஸ். அங்கு அழகு நிலையங்களில் முகத்தை ஒயின் மூலம் அழகு படுத்துவது பிரபலம். அந்த நாட்டுக்கு போகும்போதெல்லாம் நான் ‘ஒயின் பேசியல்’ செய்துகொள்வேன்.’’

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.

சர்வதேச பட விழாவில், ரேடியோ பெட்டி!


பணி ஓய்வு பெற்ற தந்தைக்கும், நாகரிக மோகம் கொண்ட ம
கனுக்குமிடையே நடக்கும் பிரச்னையை சொல்லும் படம்,
ரேடியோ பெட்டி!

ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ள இப்படம், டிசம்பர் மாதம்,
கோவாவில் நடைபெறவிருக்கும், இந்தியாவின், 46வது சர்வ
தேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில்,
திரையிட தேர்வாகியுள்ளது.

இப்படம், கடந்த மாதம், தென்கொரியாவில் நடைபெற்ற,
‘புசான்’ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு, பாராட்டு
பெற்றது குறிப்பிடத்தக்கது.

————————————–
—சினிமா பொன்னையா.

சவாலே சமாளி

cinema_7

நடிகர் அருண்பாண்டியனின் ஏ.பி.குரூப்ஸ் வழங்க, சத்யசிவா இயக்கத்தில் அசோக்செல்வன், பிந்துமாதவி, ஜெகன், நாசர், ஊர்வசி, கருணாஸ். எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில், எஸ்.எஸ்.தமன் இசையமைப்பில் வெளியாகியுள்ள படம் “சவாலே சமாளி’.

நகைச்சுவையை பிரதானமாக்கியதால் கதைக்காக பெரிய மெனக்கெடல் செய்யப்படவில்லை. பி.எஸ்ஸி., விஸ்காம் படித்திருக்கும் நாயகன் மீடியாவில்தான் வேலை பார்க்கவேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால், பெரிய நிறுவனம் எதிலும் வேலை கிடைக்கவில்லை.

கருணாஸ் நஷ்டத்தில் நடத்திவரும் “டாப் 10′ டிவியில் கேமராமேனாக வேலை கிடைக்கிறது. அங்கே தொகுப்பாளராக வேலை பார்க்கும் நண்டு ஜெகன் நண்பராகிறார். இருவருக்கும் சம்பளம் இல்லை என்றாலும், வெளியில் சொல்லிக்கொள்ள கெüரவமாக இருக்கும் என்பதால், அந்த டிவி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் வாங்கிய கடன் வட்டிக்குமேல் குட்டிபோட, கருணாஸ் தற்கொலை முடிவை மேற்கொள்கிறார். அதன்பிறகு நாயகனும் ஜெகனும் இணைந்து டாப் 10 டிவியில் ஒரு புதிய ஐடியாவை உருவாக்கி வெற்றிபெற நினைக்கிறார்கள். இதனிடையே தன் தங்கையின் தோழியுடன் காதலில் விழும் நாயகன், அவ்வப்போது டூயட் பாடவும் மறக்கவில்லை.

ஒருசேர, தான் வேலைபார்க்கும் டிவி நிறுவனத்திலும், தன் காதலிலும் நாயகன் சவால்களை சமாளித்து எவ்வாறு வெற்றி பெற்றார் என்பது சுபம் போடும் நகைச்சுவை கலந்த கதை.

அசோக்செல்வன் டூயட் பாடுவதிலும், தன் தங்கைகளின் தோழிகளிடம் வழிந்து காதலைப் பக்கம் பக்கமாக பேசி வெறுப்பேற்றுவதுமாக நடிப்பில் முன்னேற்றம் அடைந்துள்ளார். ஆனால், நகைச்சுவைக் காட்சிகளில் பரிதாபத்தையே பரிசாக அளிக்கிறார்.

பிந்துமாதவி பாடல்களில் இளமையாகவும், குளோசப் ஷாட்களில் ரொம்….ப முதுமையாகவும் தெரிகிறார். அவர் நாயகனிடம் காதலில் விழுவதற்கான காரணங்கள் அவ்வளவு வலுவுள்ளதாக இல்லை.

ஜெகனை நம்பி முழுப்படமும் பயணிக்கிறது. அதற்கேற்றாற்போல அவரும் கத்தோ கத்து என்று கத்துகிறார். கருணாúஸ, “ஏண்டா நீ டிவியில் பேசுறாப்புலையே இங்கேயும் வந்து கத்துறியேடா?’ என்கிறார்.

நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, “ராட்டினம்’ சுவாதி, ஊர்வசி ஆகியோர் தங்களால் முடிந்தமட்டும் படத்துக்கு உதவியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவில் ஒரு கோர்வை இல்லை. மேக்கப்பில் கன்டின்யூட்டி இல்லை. ஒரு காட்சியில் சுவாதிக்கு கண்இமையில் மரு இருக்கிறது. அடுத்த ஷாட்டிலேயே அது இல்லாமல் இருக்கிறது. வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி சூப்பராக இருக்கிறது. பின்புலத்தில் ஓடும் பஸ்ஸின் நிறத்துக்கு ஏற்ப ஆடைகளின் நிறங்களை வடிவமைத்தது சிறப்பு.

படத்தின் பெரும்பலம் எஸ்.எஸ்.தமனின் இசை. “எத்தனை கவிஞன் பாடினாலும்..’, “யாரோ யாரோ..’ பாடல் இனிமை. பின்னணி இசையும் பிரமாதம். சினேகன் பாடல் வரிகளும் நன்று. எஸ்.அகமதுவின் கத்தரி எடிட்டிங்கில் வன்மை காட்டியிருக்கலாம்.

என்னதான் நகைச்சுவை கதை என்றாலும், திரைக்கதையில் தாறுமாறாக பயணிப்பதும், கூத்துக் கலையில் புகழ்பெற்ற ஒரு கிராமத்தின் வறுமையை, ஒரு டுபாக்கூர் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தியதாகக் காட்டுவதும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

சிவாஜி – ஜெயலலிதா நடித்த “சவாலே சமாளி’ படத்தின் தலைப்பைக் கேட்டுவாங்கி வைத்தது, படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியது. நேரத்துக்குத் தகுந்தாற்போல எழுதப்பட்ட நகைச்சுவை வசனங்கள். அசோக்செல்வன் – ஜெகன் நகைச்சுவைக் கூட்டணி போண்றவை படத்தின் பலம்.

சவாலே சமாளி – சமாளிப்பு!

தினமணி

 

« Older entries Newer entries »