இந்திய சிறுமிக்கு ‛சேஞ்ச்மேக்கர்’ விருது

நியூயார்க்:
ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது சிறுமியான
பாயல் ஜான்கிட்டுக்கு, ‛சேஞ்ச் மேக்கர்’ விருது வழங்கி
கேட்ஸ் அறக்கட்டளை கவுரவித்துள்ளது.

இந்திய சிறுமிக்கு ‛சேஞ்ச்மேக்கர்' விருது Gallerye_025234244_2375726

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவருடைய மனைவி
மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ‘கோல் கீப்பர்’
எனப்படும் இலக்குகளை சாதித்தவர்கள் விருது அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் வழங்கப்பட்டது.

இந்திய சிறுமிக்கு ‛சேஞ்ச்மேக்கர்' விருது Gallerye_025246823_2375726

அதன் ஒரு பகுதியான மாற்றத்தை ஏற்படுத்தியோருக்கான
விருதை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த
பாயல் ஜான்கிட் 17 என்ற சிறுமிக்கு வழங்கப்பட்டது.

குழந்தைத் திருமணம் குழந்தை தொழிலாளர் முறையை
எதிர்த்து போராடி வருவதற்காக அவருக்கு இந்த விருது
வழங்கப்பட்டது

———————————-
தினமலர்

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு

ஹர்பல் சிங் குமார்

புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி யில் ஈடுபட்டு வரும்
இந்திய வம்சாவளி பிரிட்டன் ஆய்வாளருக்கு இங்கிலாந்து
ராணியின் நைட்ஹூட் (சர்) பட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது.

புத்தாண்டில் கவுரவிக்கப்படு பவர்கள் பட்டியல் நேற்று
வெளி யிடப்பட்டது. இதில், இங்கிலாந் தில் உள்ள கேன்சர்
ரிசர்ச் யுனைடெட் கிங்டம் (சிஆர்யுகே) அமைப்பின்
தலைமை நிர்வாகி யான ஹர்பல் சிங் குமாருக்கு,
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிஸபெத் நைட்ஹூட் பட்டம்
அறிவித்துள்ளார்.

புற்றுநோய் தடுப்பு தொடர் பான ஆய்வு மற்றும், நோயின்
ஆரம்பகட்டத்திலேயே கண்ட றிதல், சிகிச்சை முறை
போன்றவற்றில் மிக அதிக பங்களிப்பு செலுத்தியமைக்காக
இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது தலைமையில் சிஆர்யுகே-வின் வருவாயும், ஆய்வுகளுக்கு
ஒதுக்கப்படும் தொகையும் இதுவரை இல்லாத அளவுக்கு
உச்சத்தை தொட்டன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகை பிடிக்க
தடை விதிக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இம்முறை பிரிட்டிஷ் பேரரசின் விருதை அதிக அளவிலான இந்திய
வம்சாவளியினர் பெறவுள்ளனர். இந்திய இனிப்பக நிறுவனர்
ரேகா மெஹர், தொழிலாளர் கட்சியின் ஆயிஷா ஹஸாரிகா
ஆகியோர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

—————————————
தமிழ் தி இந்து காம்

ஆஹா! ரியல் ஜங்கிள் புக் ஹீரோ!

பால்டிமோரில் துணிக்கடை வைத்திருக்கிறார் கிறிஸ்டோபர் ஸ்ஹாஃபர். 2012-ம் ஆண்டு ‘ஷார்ப் டிரெஸ்ட் மேன்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய கோட், சூட்களை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கிறார். அவற்றை ஓரளவு புதுத் துணி போல மெருகேற்றிவிடுகிறார்.

பால்டிமோரில் வசிக்கும் ஏழைகள், சிறையில் இருந்து திரும்பியவர்களுக்கு இலவசமாக உடைகளை வழங்கி வருகிறார். ‘‘ஒருவரின் ஆடையை வைத்துதான் அவரை முதல் பார்வையிலேயே மதிப்பிடுகிறோம். ஏழைகளும் சிறையில் இருந்து வெளிவரும் கைதிகளும் ஒரு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நல்ல துணி அவசியம்.

அவர்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிவித்து, கம்பீரமாக இண்டர்வியூவுக்கு அனுப்பிவைப்பேன். எங்கள் ஆடைகளை அணிந்து சென்ற எவரும் வேலை கிடைக்காமல் திரும்பியதில்லை. நம்மைப் போன்ற மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தவறு செய்துவிட்டு சிறை சென்று திரும்புகிறார்கள். அவர்களை நாமும் தண்டிக்கக்கூடாது.

அவர்கள் பிறரைப் போல வாழ்வதற்கு என்னால் முடிந்த உதவி இது’’ என்கிறார் கிறிஸ்டோபர். ‘‘நான் 30 ஆண்டுகள் சிறையில் இருந்து திரும்பியவன். என்னைப் பார்த்தாலோ, என் கதையைக் கேட்டாலோ யாருமே வேலை தரமாட்டார்கள். கிறிஸ்டோபர் உதவியால் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டது. உலகத்தையே வென்றது போல அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் ஜான்.

உங்க சேவை தொடரட்டும் கிறிஸ்டோபர்!

தமிழ் தி இந்து காம்

பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆடை என்ன?- பட்டியலுடன் பலகை வைத்தது கோயில் நிர்வாகம்



ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடு விவரம் கொண்ட பலகை |
படம்: சி.வெங்கடாசலபதி.
—————————————————————–

ஜனவரி 1 முதல் பக்தர்கள் என்ன மாதிரியான உடையணிந்து கோயிலுக்கு வரலாம் என்ற பட்டியலடங்கிய பலகைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில் நிர்வாகங்களும் வைத்துள்ளன.

இந்த வரிசையில் வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் ஆடை கட்டுப்பாடு குறித்து விளக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஆடவர் பேண்ட், சட்டை, வேட்டி போன்ற ஆடைகளையும், பெண்கள் சேலை, பாவாடை தாவனி, சுடிதார் துப்பட்டாவுடன் போன்ற ஆடைகளையும் அணிந்து வர வேண்டும். இதை கடைபிடிக்காத பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

இந்த ஆடைக் கட்டுப்பாடு ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் தி இந்து காம்

பழனி கோவிலில் நாளை முதல் பெண்கள் ஜீன்ஸ்–லெகின்ஸ் அணிந்து செல்ல தடை

பழனி கோவிலில் நாளை முதல் பெண்கள் ஜீன்ஸ்–லெகின்ஸ் அணிந்து செல்ல தடை

பழனி, டிச.31–

தமிழ்கடவுள் முருகபெருமானின் 3–வது படைவீடான பழனி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகம் காணப்படும்.

கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் லுங்கி, பெர்முடாஸ் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆண்கள், வேட்டி சட்டை, பைஜாமா மற்றும் பேண்ட் சட்டை அணிந்து வரலாம்.

தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளிட்ட கோவில்களில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி பழனி மலைக்கோவில், திருஆவினங்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், இலக்கி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட உப கோவில்களில் இந்த ஆடை கட்டுப்பாடு ஜனவரி 1–ந்தேதி முதல் பழனி திருக்கோவில் நிர்வாகம் அமல்படுத்த உள்ளது.

இதற்கான பதாகைகளும் பல்வேறு இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (1–ந்தேதி) முதல் பெண்கள் ஜீன்ஸ், மிடி, லெகின்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

பெண்கள் சேலை, தாவணி, சுடிதார் அணிந்து வரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாலைமலர்

 

8 ஆயிரம் கிலோ லட்டு தயாரித்த ஆந்திர ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை
கொண்ட லட்டு தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வீட்
நிறுவனத்துக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதிக எடை கொண்ட இனிப்பு சுவை உணவை தயாரித்ததற்காக
அந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கின்னஸ் விருது
பெற்றுள்ளது.

ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய
ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி
8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரித்தது.

இந்நிலையில், அதிக எடை கொண்ட லட்டை தயாரித்ததற்காக
அந்நிறுவனத்துக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த விருது சான்றிதழில், ”2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
15 ஆம் தேதி எஸ்.வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு சொந்தமான
ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய
ஸ்வீட்ஸ் நிறுவன அதிக எடை கொண்ட லட்டு (8,369 கிலோ)
தயாரித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேஸ்வர ராவ்,
கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது எங்களது நிறுவனம் சார்பில்
8,000 கிலோ மற்றும் 6,000 கிலோ எடை கொண்ட இரு மகா லட்டுகள்
தயாரிக்கப்பட்டு, விசாகப்பட்டிணம் மற்றும் விஜயவாடாவில் உள்ள
விநாயகர் சிலைகளுக்கு படைக்கப்பட்டன என்றார்.

ஏற்கெனவே கடந்த 4 நான்கு ஆண்டுகளாக அதிக எடையுள்ள
லட்டுகளை தயாரித்ததற்காக கின்னஸ் விருது பெற்றுள்ளதாக அவர்
கூறினார்.

வரும் காலத்தில் 500 கிலோ எடை கொண்ட பால்கோவா தயாரித்து
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா சந்நிதானத்தில்
படைக்கப்படும் என்றார் வெங்கடேஷ்வர ராவ்.

————————————–
தினமணி

உலகின் டாப் 10 தலைவர்கள் பட்டியல்: 7ஆவது இடத்தில் மோடி

பிரிட்டனைச் சேர்ந்த ஓ.ஆர்.பி இன்டர் நேஷனல் என்ற நிறுவனம், உலக அளவில் 65 நாடுகளில் கருத்துக் கணிப்பு நடத்தியது.

இதன் முடிவில், உலகில், மிகவும் பிரபலமான தலைவராக அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவருக்கு ஆதரவாக 59 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

2ஆவது இடத்தை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும், 3ஆவது இடத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில், 7 ஆவது இடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிடித்துள்ளார். அவரை ஆதரித்து 24 சதவீதம் பேரும், அவரை எதிர்த்து 20 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இஎஸ்ஐ மாதிரி மருத்துவனையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் செயல்பட்டு வரும் தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழக மாதிரி மருத்துவனையில் (ESICMH) காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியிடங்களை வழக்கமான அடிப்படையில் நேரடி பணி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 122

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Staff Nurse – 50 + 17 +3

2. Dietician – 01

3. Pharmacist – 09 + 03

4. Blood Bank Technician – 01

5. ECG Technician  – 01 + 01

6. Medical Social Worker – 04

7. Boiler Attendant – 01

8. Lab Assistant – 03 + 01 + 01

9. Cook/Cook mate-cum-Bearer-cum-Masalchi – 07 + 03

10. Laundry Operator- 01 + 01

11. Dresser – 01

12. Nursing Orderly – 13

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: http://esipgirnr.kar.in அல்லது http://www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ESIC ஊழியர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esic.nic.in/backend/writereaddata/recruitment/466da35eeab225dcd815d97ade16632d.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

=

தினமணி

 

‘ஃபோர்ப்ஸ்’ பட்டியலில் ‘ராமசுவாமி’!

‘ஃபோர்ப்ஸ்’ எனும் உலக அளவில் பிரபலமான வணிக இதழ், அமெரிக்காவில் 40 வயதுக்குள் உள்ள தொழில்முனைவோர் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் தமிழர்!

இந்தப் பட்டியலில் 40வது இடத்தில் அபூர்வா மேத்தா 40 கோடி டாலர் மதிப்புடன் உள்ளார். 29 வயதான‌ அபூர்வா மேத்தா ‘இன்ஸ்டாகார்ட்’ என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.

தமிழர்கள் தங்களின் ‘காலரை’ தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஆம்! 33வது இடத்தில் 30 வயதான‌ விவேக் ராமசுவாமி உள்ளார்.

விவேக் ராமசுவாமியின் பூர்வீகம் தமிழ்நாடு. வேலைக்காக ‘திரை கடல் ஓடியும் திரவியம்’ தேடச் சென்ற இவரின் தந்தை சென்ற இடம் அமெரிக்கா. அங்கு ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் வேலை செய்தார். விவேக்கின் அம்மா மனநல மருத்துவர்.

உலகின் முன்னணி பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவில் இளநிலைப் பட்டம் படித்த விவேக், 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத் தலைவராக இருந்திருக்கிறார். இவர் ஒரு டென்னிஸ் வீரரும் கூட.

‘ஆக்ஸோவான்ட் சயின்ஸஸ்’ என்ற பயோடெக்னாலாஜி நிறுவனத்தை நிறுவிய இவர், இதுவரை 33 மருந்துகளுக்குக் காப்புரிமையைப் பெற்றிருக்கிறார். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட‌ 11 மாதங்களிலேயே பயோடெக்னாலஜி துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.

ரூ.33 கோடி முதலீட்டோடு ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். குறுகிய காலத்திலேயே பொதுப் பங்கு வெளியீடு(ஐ.பி.ஓ.) மூலம் 360 மில்லியன் டாலர் திரட்டியிருக்கிறது. இதற்கு முன்னதாக ரோவியண்ட் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி அதிலிருந்து வெளியேறினார்.

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்களுக்கு மருந்து கண்டுப்பிடிப்பதே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஆக்ஸோவான்ட் நிறுவனம்.

பல்வேறு நிறுவனங்களில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த விவேக் ராமசுவாமியின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 3318.75 கோடி. ஆனால் இவரை ‘பிஸினஸ் மேக்னட்’ என்று சொன்னால் ‘அப்படி எல்லாம் இல்லை. நான் ஒரு ‘ஆக்ஸிடென்டல் ஆன்ட்ரப்ரெனுவர் (தற்செயலான தொழில்முனைவோர்)’ என்று கூறுகிறார்.

=

தமிழ் தி இந்து காம்

 

 

2 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை: புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

-தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டுள்ளது.

இந்த இரு நிலைகளால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

« Older entries