– # தக்காளியின் தாயகம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா.
–
# செடி வகையைச் சேர்ந்த தக்காளிச் செடி 1 முதல் 3 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது.
–
# மணித்தக்காளி, பேத்தக்காளி ஆகிய இனங்கள் இந்தியாவில் உள்ளன. அமெரிக்காவில் இருந்து வந்த தக்காளி வகையை நாட்டுத் தக்காளி அல்லது சீமைத் தக்காளி என்று தமிழில் அழைக்கிறார்கள்.
–
# உலகிலேயே சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக தக்காளி விளைகிறது.
–
# தக்காளியில் வைட்டமின் ‘சி’யும் வைட்டமின் ‘கே’வும் மிக அதிகமாக உள்ளன.
–
# தினமும் தக்காளிப் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. வேக வைத்து சாப்பிடுவதைவிட பச்சையாகச் சாப்பிடுவது அதிக பலன் தரும்.
–
———————————-
தகவல் திரட்டியவர்: மா. அன்பரசி,
7-ம் வகுப்பு,
தமிழ் தி இந்து காம்