முத்தம்…

என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.

நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி

சாமதானம் படுத்தும் அழகிற்காகவே

உன்னிடம் எத்தனை முறை

வேண்டுமானாலும் வீண் சண்டைகள்

போடலமடா

என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன

====================================================

-காயத்ரி

http://pirivaiumnesippaval.blogspot.in/2009/04/blog-post_06.html

முத்தம் அழகு –

கண்களில் வாங்கு
கடவுச் சீட்டு
பற

சந்திக்கையிலும் சரி
பிரிகையிலும் சரி
முத்தம் அழகு

உடற்பயிற்சி நல்லது
உழைப்பு
மிக
நல்லது

சாப்பிடுதல் சலிப்பு தரும்
விருந்துண்ணல்
மகிழ்ச்சி தரும்

மன வருத்தமா
சுற்றுலா
செல்லுங்கள்

நல்ல இடமா
மலை
நல்ல நேரம்
மழைக்காலப் பின்னிரவு

———————————–


மழைக்காலத் தும்பிகள் – அறிவுமதி
-நன்றி: குங்குமம்
படம் – இணையம்

நாகரிக வளர்ச்சியாம்…!

அடி, வெட்டு, குத்து , சண்டை
என்றால் விலக்கி விட்டது
அந்தக் காலம்

ஒரு சினிமாத் திரை போல
வேடிக்கை பார்ப்பது
இந்தக் காலம்

இரத்த வெள்ளத்தில் விபத்து
இரக்கத்தோடு
ஓடிச் சென்றது அந்தக் காலம்
ஒதுங்கிச்செல்வது இந்தக் காலம்

நாகரிக வளர்ச்சியாம்…!!

————————————–
டாக்டர் R.ஞான செலின்
உணர்வுகளை மழுங்க விடாதீர்கள் – கவிதை தொகுப்பிலிருந்து

நல்ல வேளை


ஐயோ!
என் பர்சைக் காணோமே
அடடா என்று கூடச் சொல்லாமல்
நல்லவேளை!
நான் உள்ளே – உள்ளே பத்திரமாய்
வைத்திருந்தேன்
என்று சொல்லும் மனிதர்களைக்
கண்டு வியக்கிறேன்…!

————————————————
டாக்டர் R.ஞான செலின்
உணர்வுகளை மழுங்க விடாதீர்கள் – கவிதை தொகுப்பிலிருந்து

உன்னைப் பார்க்க முடியாமல் நான்…


நீ
என் அருகில் வந்து பேசினாய்
எல்லோரும்
என் கண்களுக்கு
தூரமாய்த் தெரிந்தார்கள்

என்னைக் கடந்து சென்ற
எந்தப் பெண்ணும்
என்னைக் கடத்திச் சென்றதாய்
என் நினைவில் இல்லை
என்னை நீ
கடந்து சென்றபின்
என்னிடம் கடத்தி செல்ல
எதுவும் இல்லை

பூட்டி இருக்கும்
உன் ஈடு
நடை சாத்திய கோயில்!

எங்கு வரிசையில்
நான் நிறக நேர்ந்தாலும்
எனக்கு முன்பாக
நீதான் நின்று கொண்டிருக்கிறாய்
நீழலாகவோ
அல்லது நினைவாகவோ

நீ
நின்றுவிட்டுப் போன
இடங்களிலெல்லாம்
என் நிழல்
நின்று கொண்டே இருக்கிறது

உன்னைப்பற்றி
யாரிடமும் பேசுவதேயில்லை
கவிதைகளாய்த்தான் சொல்கிறேன்

நீ
ஹெல்மெட்
மாட்டிக்கொண்டு போகிறாய்
உன்னைப் பார்க்க முடியாமல்
நான்
விபத்துக்குள்ளாகிறேன்!

==========================
>செ.செந்தாமரைக்கண்ணன், சென்னை 34
நன்றி: குங்குமம்

விதவிதமான நிறங்களில்…



கப்பல்களைச் செய்து
பக்கெட் நீரில்
விட்டுச் சலித்தவள்
விதவிதமான நிறங்களில்
மைழையை வரைந்து
உயிர்ப்பிக்கின்றாள்

மணல் அள்ளியே
மறைந்த ஆறுகளையும்
வெட்டப்பட்ட முற்றத்து மரங்களையும்
பின்பு…

கணினியின் வாசனைகளை
உடைத்து விடுவிக்கும்
ஆதி விளையாட்டுகளின் அடர்வில்
கூடு கட்டத் தொடங்குகிறது
அத்துவான நகரத்தில்
குட்டிகளுடன்
சுற்றித்திரிந்த
மயிலிறகு!

===============================
>சி.கலைவாணி, வேலூர்

காதல் கண்ணியம்!

காலண்டரில் வரும்
காதலர் தினம்
காமனுக்கு ஏதும்
பயன் தருமோ?

* மன்மதன் மனம்
புண்படா தினம்
என்பதை இந்நாள்
உணர்த்திடுமோ?

* நாளொரு ஆளைத்
தேடிடும் வேலை
இந்த நாளில்
நடந்திடுமோ?

* நம்பிய துணைக்கு
நம்பிக்கை துரோகம்
செய்யா வண்ணம்
நலம் தருமோ?

* காதற் கடவுள்
மன்மதன் ஆயினும்
கொள்கை மாறாக்
குணமுடையான்!

* தன்மனை ரதியாள்
தவிர்த்து வேறாள்
தன்மனம் மாறாத்
தன்மையினான்!

* பெண்ணவள் கூட
பெருமான் தன்னிடம்
எரிந்தவன் மீளவே
இறைஞ்சியவள்!

* காதலர் தினத்தை
கவுரவமாக்க
கருதினால்
காதல் ஜோடிகளே…

* காதல் என்பது
கண்ணியமானது
கருத்திலிதனை
நிறுத்திடுங்கள்!

* ஒருவனுக்கொருத்தி
என்பதை நினைத்து
‘காதலர் தினத்தை’
நடத்திடுங்கள்!

========================
ஆர்.அபிராமி, குன்னூர்.

வாரமலர்

மழை

nayan

வருந்தி அழைத்தாலும்
வராது

தானாக வரும் காதல்
போல

——-

எத்தனை முறை பெய்தாலும்

அடுத்தமுறை எப்போது

ஏக்கத்தில் மனது

——–

மழை எழுதிப் பார்த்ததில்

நனைந்து போனது இதயம்

——

குடை பிடித்து தடுத்தாலும்

தடை தவிர்த்து பாதம் தொடும்

——-

மழை இசை

மழை இரைச்சல்

மழை இம்சை

மழை இயக்கம்

——–

மழைக்காக காத்திருந்த மனசு

வந்தவுடன் கேட்க்கும் மழை நின்னாச்சா

——-

வராத போது மழை பிடிக்கும் மனசுக்கு

வந்தவுடன் குடை பிடித்துவிடும்

——-

கறுப்பு கொடி காட்டினாலும்

கம் என்று பெய்துவிடும்

——–

கவிஞனுக்கு மழை கூடல்

சிறுவனுக்கு அது கடல்

——-

நின்ற பின்னும்

பெய்துகொண்டே ……இருக்கும்

மனதில்

——

உழவு நிலத்தில் விளைச்சலானது

பரிணாம வளர்ச்சியில் அரசியலானது

-http://yazhinisunthar.wordpress.com

தேவதை!

சிறகுகளுடன்தான்
தேவதைகள் பூமியில் உலவும்
என்பதை..
நம்ப மறுக்கின்றன
தாயைக் கண்டுகொண்ட
குழந்தைகள்!

—————–

-கோவை நா.கி.பிரசாத்
குமுதம்

வண்ணம்!

இழந்துவிட்ட
வண்ணத்தை
மீண்டும்
பெற்றுவிட்டது
குழந்தையின்
கையில் மாட்டிக்கொண்ட
வண்ணத்துப்பூச்சி…!

—————

-தில்பாரதி
குமுதம்

« Older entries