ஈரம் சொட்டும் கூந்தல்


தூய்மை இந்தியா போஸ்டரை
படிக்கத் தெரியாதே
நாய்க்கு..!

அ.யாழினி பர்வதம்

——————————-

ஈரம் சொட்டும் கூந்தலுடன்
நீ சென்றாய்…!
பாரம் ஆனது மனது!

முருகானந்தம்

—————————

ஒரு குளிர் பானத்தில்
இரண்டு ஸ்ட்ரா வைத்து
உறிஞ்சும்போது
நிறைந்து விடுகிறது
நம் மனது!

ம.தினேஷ் குமார்

———————–
–பாக்யா

சண்டைபோட வேண்டாம் என்று யார் சொன்னது?

முரண்

நீ
அருகில் இருந்தால்
அலுத்துபோவதும்
எட்ட இருந்தால்
தவித்துப்போவதும்
எனக்கு
வாடிக்கையானது….

*********

ஊடல்

சண்டைபோட வேண்டாம்
என்று யார் சொன்னது?
இல்லையென்றால்
உன்
கண்ணீர் கரிக்கும்
முத்தங்களும்
காதோர sorryக்களும்
எப்படி கிடைப்பதாம்?

*************

தனிமை

நண்பர்கள்
அலுவலக ஊழியர்கள்
பரபரப்பான வேலை
பசிக்கும் வயிறு
சினிமா, டிவி மற்றும் இணையம்
இத்தனைக்கும் நடுவே
நீயில்லாத தனிமையோடு
நான்

=====================

=https://yasavi.wordpress.com/category/கவிதை/

விதிவிலக்கு…!

அம்மா தாயே என விளித்து
விரல் நீட்டி
பிச்சை கேட்கிறார்
முதியவர் ஒருவர் வீதியில்!

அனாதை குழந்தைகளுக்கு
உடைகளை தானம் வேண்டி
வீட்டின் கதவை தட்டுகிறாள்
நலிந்த பெண்ணொருத்தி!

நிதி வேண்டி
உண்டியலை குலுக்கி
நீட்டுகிறான்
கட்சித் தொண்டனொருவன்!

கோவிலுக்கு
காணிக்கை செலுத்தும்படி
சீட்டை சிரத்தையாய் நீட்டுகிறான்
பக்தனொருவன்!

நாடுகள்
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு
பிச்சைகளை
உறுதி செய்து கொள்கின்றன!

என்னை மட்டும் ஏன்
விதி விலக்காய்
இருக்கச் சொல்கிறாய்
உன் அன்பை
அடைகாத்துக் கொண்டு!

—————————–
— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.

தினமலர்- வாரமலர்

அப்பாவிகளின் பொதுஅறிவு

எனக்குத் தெரியாது.

மிகக் குறைந்த பட்சம்
அமெரிக்கப் பனிப்பொழிவு பற்றியோ
மைத்திரிபால தடம்மாறுவது பற்றியோ
பெற்றோல் விலைக்குறைப்பு அரசியல் பற்றியோ
பந்து பட்டு அவுஸ்ரேலிய வீரர் மரணமானது பற்றியோ
நரேந்திரமோடி குப்பை கூட்டுவது பற்றியோ
பதுளை மண்சரிவு பற்றியோ
ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்கள் பற்றியோ
எஸ் பொ காலமானது பற்றியோ
எனக்கெதுவும் தெரியவே தெரியாது.

-=============================

http://marikumar.blogspot.sg/search/label/சிரிக்க%20சிந்திக்க

நரம்பில்லா நாக்கு…!

ஆய்வுகள் செய்வார் உளரோ..?

மறைபொருள் – கவிதை

கயிறு – கவிதை

முப்பாட்டன் முண்டாசுக்காரனுக்கு…!

முப்பாட்டன் முண்டாசுக்காரனுக்கு!

‘தனியொரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்’
என்று மிரட்டினாய்
அரசு பயந்து அமைத்தது
அம்மா உணவகம்!

‘ஓடி விளையாடு பாப்பா’ என்றாய்
ஓயாமல் விளையாடுகிறோம்
வீடியோ கேம்!

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்றாய்
ஜாதிகள் இல்லாமல் போகவே செய்கிறோம்
கவுரவக் கொலைகளால்!

‘ஆடுவோமே
பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று’என்றாய்
ஆட்டமாய் ஆடி
பாடாய் படுத்துகின்றனர்
ஆட்சி, அதிகாரத்திலிருப்பவர்கள்!

‘மனதில் உறுதி வேண்டும்’ என்றாய்
நான்கு குவார்ட்டர் அடித்தாலும்
தள்ளாடாமல் நிற்பதற்கு தான்
டாஸ்மாக்கில் பயிற்சி எடுக்கிறோம்!

‘காணி நிலம் வேண்டும்’ என்று
ஆசை படச் சொன்னாய்…
புறம்போக்கு நிலங்களையும்
வளைத்து விட்டோம்!

‘சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்’
என்றதை செய்து பார்த்து
சேது சமுத்திரத் திட்டத்தில்
பைசா பார்த்து விட்டோம்!

‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று
பாடத் தான் முடிகிறது
பாலியல் வன்முறைகளைப் பார்த்து!

‘சொல்லடி சிவசக்தி…
எனை சுடர் விடும்
அறிவுடன்
ஏன் படைத்தாய்’ என்று
உன்னோடு சேர்ந்து
பாடி அழத் தான் முடிகிறது
வேறு வழியற்று!

————————————–

— அ. யாழினி பர்வதம்,
சென்னை.
நன்றி- தினமலர்

கோவில் படிகள்


ஒவ்வொரு படியிலும்
அதை அமைத்துக் கொடுத்த
உபயதாரரின் பெயர்கள்

சிருஷ்டிகர்த்தாவாக
தர்மகர்த்தாவாக
தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும்
முயற்சி

நீங்கள் படியமைத்து
பெயர் போட்டுக்கொள்ள
மலையமைத்துக் கொடுத்த
உபயதாரரின் பெயரை
எனக்குச் சொல்ல முடியுமா..?

—————————-
மகுடேஸ்வரன்
யாரோ ஒருத்தியின் நடனம் (கவிதை தொகுப்பு)

« Older entries