தீபாவளி டிப்ஸ் – குமுதம் சிநேகிதி

சமையல் டிப்ஸ்

?????????????

வெங்காயத் தீயல்


நன்றி- குங்குமம் தோழி

முட்டை ஊறுகாய்


நன்றி- குமுதம் ஹெல்த்

முட்டை அல்வா

இங்கிலீஷ் கோன்ஸ் – ஸ்டார் ஹோட்டல் ரெசிபி

Displaying page0041_i2.jpg

டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்

கத்திரிக்காயை வேக வைக்கும்போது
ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்தால் கத்தரிக்காய்
நன்றாக குழையும்.

கோஸ் பொரியல் செய்யும்போது சிறிதளவு பால்
சேர்த்தால் கெட்ட வாடை வராது. பொரியலும்
ருசியாக இருக்கும்-

பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து
பிசறி வைத்து சிறிது புளித் தண்ணீர் தெளித்து
கலந்து வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்து
வதக்கினால் கசப்பே இருக்காது.

தாளிக்கும் எண்ணெய்யிலேயே சிறிது மஞ்சள்
பொடி சேர்த்து காய்கறிகளைப் போட்டு வதக்கினால்
அவை நல்ல நிறத்துடன் இருக்கும்.

ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

——————————————————

புளித்த தோசை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய்,
உப்பு சேர்த்த பணியாரம் செய்தால் மிகவும் ருசியாக
இருக்கும்.

கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

————————————————–

அமராந்த் கீரை விதை லட்டு

இந்த வாரம் நாம் அமராந்த் என்னும் தண்டுக் கீரை வகையை
பற்றி பார்ப்போம.” இது பச்சை இலையின் நடுவே சிவப்பு
மற்றும் முழுவதும் சிவப்பு வண்ணத்தில் இலைகளைக்
கொண்டது. ஒரு ஆள் உயரத்துக்கு இந்தச் செடி வளரும்.

இந்தச் செடியின் தண்டு, இலை மற்றும் விதைகளில் நிறைய
சத்துக்கள் உள்ளன. இமயமலைப் பகுதிகளில் இது அதிகமாக
பயிரிடப்படுகிறது. இதன் பூக்கள் பார்ப்பதற்கே கண்
கொள்ளாக் காட்சியாக இருக்கும். தமிழ் நாட்டிலும் பயிரிடப்
படுகிறது. மற்ற கீரை விதைகளைப் போல் இல்லாமல் இதன்
விதைகள் சாப்பிடக்கூடியதாக இருக்கின்றன.

இந்த விதைகளைப் பொரியாக்கி உருண்டைகள் செய்யலாம்.
இதில் தாதுச் சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம்.

அமராந்த் கீரை விதை லட்டு

தேவையான பொருட்கள்:
அமராந்த் விதைப் பொரி – ஒன்றரைக் கப்,
பேரிச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – ஒரு கப்,
ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி,
தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி,
முந்திரி, உலர்ந்த திராட்சை – தேவையான அளவு.

செய்முறை:
பேரிச்சம் பழங்களை மிக்சியில் போட்டு இரண்டு சுற்று
அரைத்துக் கொள்ளவும், முந்திரியை நெய்யில் வறுத்த,
இரண்டு மூன்று துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
அமராந்த் பொரியில் அரைத்த பேரிச்சம் பழத்தை சேர்த்து
நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

இந்தக் கலவையில் தேங்காய் எண்ணெய், முந்திரி,
உலர்ந்த திராட்சை சேர்த்துக் கொள்ளவும். பிறகு
உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான அமராந்த்
லட்டு ரெடி.

—————————————————-

– தென்றல் மதுசூதனன்
கல்கி

கும்முனு இருக்கு குல்குல்!

வாசகிகள் கைமணம்படங்கள்: ஆ.முத்துக்குமார்

குல்குல்

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் – 2 சிட்டிகை, கெட்டி தேங்காய்ப் பால் – அரை கப், சர்க்கரை – ஒரு கப், பொடித்த முந்திரிப் பருப்பு – தேவையான அளவு, நெய், எண்ணெய் கலந்த கலவை – பொரிக்க தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:  கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய்த்தூள், 2 டேபிள்ஸ்பூன் நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்து, தேங்காய்ப் பால் ஊற்றிப் பிசையவும். இதை ஈர துணியை போட்டு மூடி, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். சர்க்கரையுடன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு செய்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறிய பூரிகளாக இட்டு, உள்ளே சிறிது பொடித்த முந்திரி வைத்து மடித்து, மீண்டும் பூரிகளாக தேய்க்கவும். வாணலியில் நெய், எண்ணெய் கலந்த கலவையை ஊற்றி, காய்ந்ததும் அதில் சிறு பூரிகளைப் போட்டு பொரித்து எடுத்து, சர்க்கரை பாகில் போட்டு, ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும்.

– ஆர்.ராமாத்தாள், சென்னை-42


பனீர்  வெஜ் குருமா

தேவையானவை: காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு – தலா ஒரு கப் (நறுக்கியது), கேரட், பீன்ஸ் – தலா அரை கப் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி – அரை கப், வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், பனீர் துண்டுகள் – 50 கிராம், பட்டை, சோம்பு – தாளிக்க தேவையான அளவு, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 6, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு… பட்டை, சோம்பு போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, நன்றாக வதக்கிய பிறகு காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை சேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய்கள் வெந்ததும் பனீர், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து ஊற்றி, கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

– பி.தமிழ்செல்வி, காஞ்சிபுரம்


வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்:

குல்குல்: ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொண்டால், சுவை கூடும்.

பனீர் – வெஜ் குருமா: பனீருக்கு பதில் டோஃபு (சோயா பனீர்) சேர்த்தும் செய்யலாம்.

ஏழு கறி சாம்பார்

என்னென்ன தேவை?

வேக வைக்க…

பீன்ஸ் – 6,
கேரட் – 1,
கத்தரிக்காய் – 3,
அவரைக்காய் – 6,
முருங்கைக்காய் – 1,
பூசணிக்காய் – 50 கிராம்,
பெங்களூர் கத்தரிக்காய் (சௌ சௌ) – 50 கிராம்,
தக்காளி – 2,
சின்ன வெங்காயம் – 10,
பச்சை மிளகாய் – 2,
சாம்பார் தூள் – 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
வெல்லம் – சிறிது,
புளி – எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்),
உப்பு – தேவைக்கு.
துவரம் பருப்பு – 150 கிராம்,
பெரிய வெங்காயம் – 1,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்.

தாளிக்க…

எண்ணெய் – 3 டீஸ்பூன்,
நெய் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
சின்ன வெங்காயம் – 5,
கொத்தமல்லி – சிறிது.

அலங்கரிக்க…

கொத்தமல்லி – சிறிது.

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பைக் களைந்து, 1 1/2 டம்ளர் தண்ணீர்
விட்டு, வெங்காயம், வெந்தயம், பெருங்காயத் தூள்,
மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும்
மசித்துக் கொள்ளவும்.

காய்களைக் கழுவி அரிந்து வைக்கவும். ஒரு
பாத்திரத்தில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்கறிகள்,
ஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க
விடவும். அதில் சாம்பார் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

காய் வெந்ததும் கரைத்த புளி சேர்த்துக் கொதிக்க
விடவும். வெல்லம் மற்றும் வெந்த பருப்பைச் சேர்த்து
கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி கொதிக்க
விட்டு இறக்கவும். கடைசியாக தாளிக்க
வேண்டியவற்றை தாளித்து சாம்பாரில் சேர்த்து இறக்கி,
கொத்தமல்லி தூவி பரிமாறவும். மசூர் தால், மூங்தால்
கொண்டும் சாம்பார் செய்யலாம்.

நீரிழிவுக்காரர்களுக்கு காய்கறிகளுடன், பாகற்காயை
சேர்க்கலாம். கசப்புத் தெரியாது.

——————–தினகரன்

« Older entries