அம்மனும், ஈஸ்வரியும்

ஆடி மாதம் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு
வருவது, அம்மன் திருவிழாக்கள்தான். அம்மன் பாடல்கள்
என்றால் நம் கண்முன் வருபவர், திரைப்பட பின்னணிப்
பாடகி எல்.ஆர். ஈஸ்வரி
தான் பாடிய அம்மன் பாடல்களைப் பற்றி மனம் திறக்கிறார்
அவர்.

நான் பாடி, ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் மாரியம்மன்
பாடல், “வரமளித்து உலகயெல்லாம் வாழ்வளிக்க வந்தவளே!’
என்ற பாட்டு, அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர்
வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன்.

இன்று ஆடி, தை மாதம் என்றால் மாரியம்மன் கோயில்களில்
மட்டுமல்லாமல், பல்வேறு கோயில்களிலும் ஒலிக்கிற ஒரு
பாட்டு “செல்லாத்தா! செல்ல மாரியாத்தா!’. இந்தப் பாட்டை
எழுதியவர் வீரமணி சோமு. அதேபோல இன்னொரு மிகப்
பிரபலமான பாட்டு “வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதி
பராசக்தியவள்’ என்ற பாட்டு. நான் கிறிஸ்துவ மதத்தைச்
சேர்ந்தவள் என்றாலும், நான் பாடிய அத்தனை அம்மன் மீதான
பாடல்களையும் முழுமையான ஈடுபாட்டோடு, அனுபவித்துதான்
பாடியிருக்கிறேன்.

அதற்குக் கவிஞர் தமிழ் நம்பியின் அற்புதமான தமிழும்,
ஆன்மிக அறிவும் காரணம். அவரை என் வாழ்நாளில் மறக்க
முடியாது.

பண்டிகையோ, திருவிழாவோ… என்னோட பக்தி பாடல்கள்
ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை என்று சொல்லவிடலாம்.
அதிலும், ஆடி மாதம் முழுக்க எங்கும் என் குரல்தான்! அது அந்தத்
தெய்வமா பார்த்து எனக்குக் கொடுத்த வரம்.

குன்னக்குடி வைத்தியநாதன், வீரமணி சோமு, எல்.கிருஷ்ணன்,
இசையமைப்பாளர் தேவா போன்றவர்களின் இசையமைப்பில்
ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கேன்.
ஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதமா, மாணிக்கமா, மரகதமா,
வைரமா, பவழமா, நவரத்தினமா ஜொலிக்கும்.

குறிப்பாக, “கற்பூர நாயகியே கனகவல்லி’ங்கிற பாடல் சூப்பர்
ஹிட் ஆனது. அதை எழுதியவரோ, இசையமைத்தவரோ யாருன்னு
ரொம்ப பேருக்கு தெரியாது. கவிஞர் அவினாசி மணி என்பவர்
எழுதிய தெய்வீக மணம் கமழும் வார்த்தைகளுக்கு இசையமைத்தவர்
வீரமணி -சோமு.
“பள்ளிக்கட்டு சபரி மலைக்கு’ பாடுவாரே அதே பாடகர் வீரமணிதான்!

தேவாவின் இசையமைப்பில் “மகமாயி… சமயபுரத்தாயே’ பாடலில்
கவிஞர் தமிழ் நம்பி எழுதிய வரிகளை நான் பாடியுள்ளேன்.
அது என்னவோ எனக்காகவே எழுதியது போலத் தோன்றுவதால்
அதைக் கேட்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்கி விடும். என்
நெஞ்சம் பக்தியில் நெகிழ்ந்துவிடும்.

———————————————————

-அனிதாமூர்த்தி
மங்கையர் மலர்

விலங்குகள், பறவைகள் சிவனை வணங்கிய தலங்கள்

lord-shiva-and-parvati-QG99_l

வ.எண் விலங்கு – பறவை தலங்கள்
1. அணில் குரங்கணில் முட்டம்
2. ஆமை குரங்கணில் முட்டம், திருமணஞ்சேரி
3. திருச்சிற்றேமம், ஈங்கோய்மலை
4. எறும்பு திருவெறும்பூர், எறும்புச்சுரம்
5. ஏறு(காளை) திருவையாறு
6. கரிக்குருவி மதுரை, வலிவலம்
7. கருடன் சிறுகுடி
8. கழுதை கரவீரம்
9. குதிரை ஆயவந்தி
10. குரங்கு குரங்கணில் முட்டம், குரங்காடுதுறைகள், குரங்குக்கா, குரக்குக்கா, குரக்குத்தளி, வாலிகண்டபுரம்
11. சிங்கம் திருநாவலூர்
12. தவளை ஊற்றத்தூர்
13. நண்டு திருந்துதேவன்குடி, நீடூர்
14. நாரை திருநாரையூர், மதுரை
15. பசு திருவாவடுதுறை, கருவூர், ஆவூர், திருக்கொண்டீச்சுரம், பட்டீச்சுரம், திருவாமாத்தூர்
16. பன்றி சிவபுரம்
17. பாம்பு திருக்காளத்தி, திருப்பாம்புரம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருநாகேச்சுரம், திருநாகைக்காமராணம்
18. மயில் மயிலாப்பூர், மயிலாடுதுறை
19. மீன் திருச்சேலூர்
20. முயல் திருப்பாதிரிப்புலியூர், திருக்கானப்பேர், திருக்குற்றாலம்
21. யானை மதுரை, திருவானைக்கா, திருக்காளத்தி, ஸ்ரீசைலம், திருவெண்டுறை
22. வண்டு வாளொளிபுறறூர்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
அன்பே சிவம்
=
aanmeegachudar.blogspot.in

ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணர்


மரிசீ மகரிஷி அருளியுள்ள சம்மோஹன கிருஷ்ணர்
தியான ஸ்லோகம்!

மரிசீ மகரிஷியால் நமக்குக் கிடைத்துள்ள
இந்த அரிய சக்தி வாய்ந்த ஸ்லோகம் நிம்மதியற்ற
குடும்பங்களில் மன நிம்மதியையும், மன
நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி
வாய்ந்த ஸ்லோகமாகும்.

அற்புதமான இந்த ஸ்லோகத்தை உலக மக்கள்
நன்மை கருதியே மரிசீ மகரிஷி நமக்கு
அளித்தருளியிருக்கிறார்.

காலையில் நீராடிய பின்பு மூன்று முறையும்,
இரவில் உறங்கப் போகும் முன்பு ஒரு முறையும்
சொல்வது அளவற்ற நன்மையைத் தரும்.

முக்கியமாக, திருமணமான பெண்களுக்கு
மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தருவது
இந்த ஸ்லோகம்.

திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள்
நீங்கி நல்ல வரன் அமையும்.

ஸ்ரீமந் நாராயணீயத்திலும், ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரைப் ப
ற்றிக் கூறப்பட்டுள்ளது. மரீசி இயற்றிய அந்த
ஸ்லோகத்தை அர்த்தத்துடன் கீழே கொடுத்திருக்கிறோம்.

சம்மோஹன கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்!
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்!!

பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா!
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்!!

இக்ஷீசாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:!
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்!!

சர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே!!

பொருள்:
=-
தாமரை இதழ் போன்ற கண்களும், பலவிதமான
திருவாபரணங்களைத் தரித்தவரும், அழகான வில் போல்
வளைந்த திருமேனியும், அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத
ரூபமாகத் திகழ்பவரும், சரிபாதி புருஷாகார சரீரரும்,
சரிபாதி பெண்மையான சரீரமும், வலது நான்கு, இடது
நான்கு கைகளில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில்,
புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணு
வாத்யம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன
திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவித மனோஹரமான
புஷ்பங்களைத் தரித்தவரும், இன்னல் படும் மக்களை
அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர
வல்லவருமான மோஹனரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும்
ஸ்ரீ கிருஷ்ணனைத் தியானிக்கிறேன்!


ஆதாரம்: Shri A.M.Rajagopalan (AMR) குமுதம் ஜோதிடம்