பஞ்சாங்க பலன்

நன்றி- தமிழ்நாடு -இ பேப்பர்

பெண் பிள்ளை பெற்றவர்கள் என்றும் பாக்கியம் செய்தவர்களே!!

ஒரு கிராமத்தில் ஒரு வயதான செல்வந்தர் இறந்து விட்டார்!!.

அவரை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல தயாராகி கொண்டு இருக்கும் அந்த வேளையில் !!

ஒருவர் திடீர் என்று குறுக்கிட்டு !

பிணத்தை எடுக்க விட மாட்டோம்!! எனக்கு இவர் 10 லட்சம் பணம் கடன் கொடுக்க வேண்டியிருக்கு. அதை யார் கொடுப்பார்கள் என்று எனக்கு தெரிய வேண்டும் என்று தடுக்க!

அங்கு இருந்த மூன்று மகன்களும் ” ஐயா !! எங்களுக்கு இந்த கடன் பற்றி தெரியாது!! மேலும் அவர் இறந்த பின் , அவர் வாங்கிய கடனை நாங்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்!! என்று சொல்லி கையை விரித்து விட!!

அவரோ காசு வராமல்!! பிணம் சுடுகாடு செல்லாது என்று சொல்ல!!

திடீர் என்று கூட்டத்தில் ஒரு பெண்!!

” ஐயா !! நான் அவருடைய மகள்,!! இந்த நகைகளை வைத்து கொள்ளுங்கள் இது 5 லட்சம் பெறும்!! எல்லாம் என் தந்தை என் திருமணத்திற்கு கொடுத்தது!!

இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் மீதி பணத்தை கொடுத்து விடுகிறேன்!! தயவு செய்து என் அப்பாவை நல்லடக்கம் செய்ய விடுங்கள்!! .

என்று கெஞ்சி கதற!!

அவரோ!! தாயி என்னை மன்னிக்கவும்!!

உண்மையில் நான்தான் உன் அப்பாவிற்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும்.

உன் தந்தை ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார்!

நான் இறந்த பின்னும் யார் என் மேல் மிகவும் பாசம் அதிகம் வைத்து இருக்கிறார்களோ!!

அவர்களுக்கு இந்த பணத்தை கொடுத்து விட சொன்னார்!!

இந்தாம்மா!! அந்த 10 லட்சம் உன் தந்தை ஆத்மா!! சாந்தி அடையட்டும் !! என்றார்!!

பெண் பிள்ளை பெற்றவர்கள் என்றும் பாக்கியம் செய்தவர்களே!!

-உமர்ஷெரிப் ஹபிபுல்லா – தமிழ் கோரா

சீரியல் பார்க்கும் நேரம்- மைக்ரோ கதை

நன்றி- தினமணி கதிர்

உயரப்பறக்கும் கழுகும் வீண் பெருமை கொண்ட கிளியும்!

ஒரு காட்டில் அமைதியாக இருந்த கழுகும் வீண் பெருமை கொண்ட கிளியும் இருந்தது.

கிளி ஒரு நாள் கழுகு கிட்ட வந்து! உனக்கு தெரியுமா இந்த பறவைகளில் நான் தான் மிகவும் சிறந்தவன். என்னால் மிகவும் உயரமான மரத்திற்கு மேல் பறக்க முடியும்! உன்னால் அப்படி பறக்க முடியுமா என்று கேட்டது!

அதற்கு கழுகு அமைதியாக சரிதான் உன் அளவுக்கு என்னால் உயரமாக பறக்க முடியாது என்று சொல்லிட்டு பறந்து போய் விட்டது.

மறு நாள் கிளி கழுகி கிட்ட போய் நீ இப்ப சும்மா தானே இருக்க ! வா உனக்கு எப்படி உயரமாக பறக்க வேண்டும் என்று சொல்லி தருகிறேன்! என்று கூட்டி சென்றது!

இரண்டும் பறக்க ஆரம்பித்தது. கிளி உயர உயர பறக்க! கழுகு கூடவே பறந்து கொண்டு இருந்தது.

கிளிக்கு ஒரே பெருமை!

சட்டென்று கழுகு உயர பறந்து கிளி பார்க்க முடியாத அளவு உயரம் பறந்து சென்று விட்டது.

இரண்டும் ஒரு மரத்தின் அமர!

அப்பொழுது கிளி கழுகு கிட்ட சொல்லியது உண்மையில் நீ மிக பெரிய திறமைசாலி ஆனால் நீ ஏன் என் கிட்ட இதை சொல்லவே இல்லை என்று கேட்க!

அதற்கு கழுகு அமைதியாக சொன்னது!

நான் கழுகு, நான் அதிகம் பேச மாட்டேன்! எனக்கு என் சக்தி என்னவென்று தெரியும்! என்னால் மிக உயரமாக பறக்க முடியும்!

மற்ற பறவைகள் மழை வந்தால் மழைக்கு பயந்து மரக்கிளைகளில் தஞ்சம் அடையும் ஆனால் நான் மேகத்தின் மேல் பறந்து மழையை

கடந்து செல்வேன்! என்றது!

கருத்து –

உங்கள் திறமைகளை அடுத்தவர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியது என்பது அவசியம் இல்லை. உங்கள் வெற்றி நீங்கள் யாரு என்று முடிவு எடுக்கும்!

-உமர்ஷெரீப் ஹபிபுல்லா- தமிழ் கோரா

யானையும் வாத்தும் – நல்ல கதை!

ஒரு கட்டில் நரி யானை கிட்ட சென்று உனக்கு தெரியுமா இந்த வாத்து உன்னை பற்றி இல்லாததும் பொல்லாதத்தும் சொல்லுது! நீ போய்

என்னானு கேளு மக்கா! என்று சொன்னது!

அதற்கு யானை! நான் இப்பவே போய் அதன் எலும்பை உடைத்து சூப் வைத்து விடுகிறேன்! நான் பார்த்து கொள்கிறேன்! நீ போய் தூங்கு என்று சொல்லி நரியை அனுப்பி வைத்தது.

இரண்டு நாள் கழித்து மறுபடியும் நரி போய் யானை கிட்ட நீ என்ன அந்த வாத்தை ஒன்னுமே செய்யாமல் விட்டுட! அந்த வாத்து இன்னைக்கு கூட உன்னை பற்றி எப்படி தப்பு தப்பா பேசினான் தெரியுமா என்று சொல்ல!

யானைக்கு பயங்கர கோபம்! நீ கவலை படாதே இன்னைக்கு அவன் கழுத்தை திருவி போட்டு விடுகிறேன்! நீ போ என்று அனுப்பியது!

அப்புறம் ரெண்டு நாள் கழித்து மறுபடியும் யானை கிட்ட போய் நீ எல்லாம் ஒரு ஆளு அந்த வாத்தை ஒன்னுமே செய்ய மாட்டிக்குறே!

இந்த தடவை யானைக்கு கோபம் உட்ச்சத்தை தொட்டது! அவனை இப்பவே போய் நான் என்ன செய்றேன் பாரு என்று சொல்ல!

நரி என்று வெறும் கையோடு போகாதே என்று கடப்பாரை ஒன்று கொடுத்தது. யானை வாங்கி கொண்டு வேகமாக சென்றது!

நரியும் சரி இந்த யானை என்ன தான் செய்கிறது என்று பார்க்கலாம் என்று அதன் பின்னே சென்றது.

பார்த்தால் என்ன ஆச்சரியம் யானை தன் விவசாய நிலத்திற்கு சென்று மண்ணை கொத்திகொண்டு இருந்தது.

நரிக்கு ஒரே கோபம் யானை கிட்ட வந்து நீ என்னப்பா செய்து கொண்டு இருக்கை என்று கேட்க!

அதற்கு யானை சொல்லியது எனக்கு நிறைய வேலை இருக்கு இந்த வாத்து கத்துவது மட்டும் தான் வேலை ஆனால் நான் அப்படி இல்லை நான் பலசாலி, அறிவாளி இந்த பொய்யான வதந்திகளுக்கு செவி சாய்க்க தேவை இல்லை! என்று சொல்லி நரியை அனுப்பியது!

கருத்து – வாழ்க்கையில் அப்படி தான் நாம் பலசாலிகள், அறிவாளிகள் நம் இலக்கை நாம் அடைய உழைக்காமல் , இந்த வாத்துக்கள் போல் இருக்கும் மனிதர்கள் தேவை இல்லாத பேச்சால் நம் இலக்கு தடை பட கூடாது!

மூல எழுத்தாளர் – Chima _ Dickson official

–உமர்ஷெரிப் ஹபிபுல்லா- தமிழ் கோரா

செத்தாண்டா சேகர் – நகைச்சுவை கதை

சேகர் சுத்த சைவம். முட்டை கூட தொடாத வர்கம். கல்யாணத்துக்கு

சைவ குடும்பமா தேடித் தேடி அவனுக்குப் பெண் எடுத்தார்கள்.

ஒரு வருஷம் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் மூடி மறைத்த
திருகுதாளம் ஒரு மகன் பிறந்ததும் துளிர்விடத்தொடங்கியது.

மகனுக்கு குருவாயூரில் ‘ஹரி’ என்று நாராயணன் நாமகர்ணம்
சூட்டி , முடி காணிக்கை தந்து வீடு திரும்ப, விஸ்வரூபம் எடுத்தது
மறைத்து வைத்துக் காத்த வீர சைவம்.

வீட்டுக்குள்தானே என்று சேகரும் பது மனைவியும் சேர்ந்து பாயில்டு
எஃக்கை, அதான் ‘அவிச்ச முட்டையில்’ மகன் மூலம் தடம்புரள
ஆரம்பித்தார்கள்.

அவிச்ச முட்டையை அடுக்களையில் தனியாய் அமர்ந்து நளினமாய்
முட்டி முட்டி ஓடு உடைக்கும் மார்கத்தை ஹரிக்குக் கற்றுக் கொடுக்க ,
ஐந்தில் அது அழகாய் வளைந்ததில் அப்பா அம்மாவுக்கு
ஆனந்தம்.

ஒருநாள் தாத்தா பாட்டியோடு ஊரிலுள்ள ‘மயூரா மளிகைக்
கடைக்கு’ப் போனார்கள் ஹரியோடு அப்பா அம்மா.

ரேக்கில் இருந்த மளிகைப் பொருட்களை எடுத்து தள்ளுவண்டியில்
நிரப்பி அவர்கள் நகர்த்த கூடவே நடந்து வந்த, தளிர்நடை பயிலும் குட்டி
ஹரிசடக்கென அடி ரேக்கிலிருந்த பச்சை முட்டை ஒன்றை குனிந்து தன்
பிஞ்சுக்கையால் எடுத்தான். அவ்வளவுதான். ‘செத்தான்டா சேகர்!’
என்று பெத்தவள் பதறினாள்….!

அதை எங்கே பாயில்டு எஃகாக எண்ணி முட்டி முட்டி உடைத்துத்
தங்களை குழந்தை கடையிலேயே காட்டிக் கொடுத்துவிடப்போகிறதோ
என்று பதற,

தாத்தா சொன்னார்,

‘ பார்த்துடா கொழந்தே அது பாயில்டு எஃகல்ல…,! பச்சை முட்டை !’
என்றதும், பாட்டி தன் பொக்கை வாய்காட்டிச் சிரித்தாள்.!

–வளர்கவி

இரண்டு பானைகள்

ஒரு வயதான பாட்டி கிராமத்து வெளியே குடிசை அமைத்து தங்கி இருந்தார். தினமும் இரண்டு பானைகளை ஒரு குச்சியில் கட்டி அருகில் இருக்கும் ஆற்றில் போய் நீர் எடுத்து வருவது அவள் வழக்கம்.

ஒரு முறை ஒரு பானையில் சிறிய வெடிப்பு ஏற்படவே ஆற்றில் இருந்து நீர் எடுத்து வரும்போது அந்த வெடிப்பின் வெளியே கசிந்து வரும் வழியில் கொட்டி கொண்டு வந்தது.

வீட்டுக்கு வந்தால் ஒரு பானையின் நீர் மட்டும் முழுமையாக இருக்க மற்றொரு பானை முக்கால் அளவு தான் இருக்க ! விரிசல் இருந்த பானை வருத்தம் கொண்டது தன் குறையை எண்ணி!

நல்ல பானை குறையுள்ள பானையை எள்ளி நகையாடியது!

இப்படியே ஆறு மாதம் ஓடி இருக்கும். தினமும் வெடிப்பு ஏற்பட்ட பானை வரும் வழியில் நீரை கொட்டி கொண்டு வர! வீடு வந்தால் நல்ல பானை அதை எள்ளி நகையாடுவது என்பது வாடிக்கை ஆகி விட்டது.

ஒரு நாள் குறையுள்ள அந்த பானை அந்த பாட்டியிடம் தயவு செய்து நீங்கள் ஒரு புது பானையை வாங்கி கொள்ளுங்கள். என்னால் உங்களுக்கு முழு பயன் இல்லை! உங்கள் உடல் உழைப்பும் வீண் ஆகிறது என்று சொல்ல!

அதற்கு அந்த பாட்டி நீ ஒன்றை கவனித்தாயா! உன்னை நான் சுமந்து வரும் திசையில் மலர்கள் நிறைய மலர்ந்து இருப்பதை.

பானையும் புரியாமல் என்னவென்று கேட்க. பாட்டி சொன்னார்கள் என்று உன் பானையில் விரிசல் ஏற்பட்டு நீர் கசிய ஆரம்பித்ததோ அன்றே நீ நீர் கொட்டி வரும் வழியில் நல்ல மலர் தரும் செடிகளின் விதைகளை நட்டு வைத்தேன்!

இப்பொழுது நீ தினமும் சிந்தும் நீரால் அவைகள் நன்றாக வளர்ந்து எனக்கு மலர்கள் நிறைய கொடுக்கிறது. நானும் அதை விற்று தேவையான பணத்தை பெறுகிறேன்!

இப்பொழுது சொல் யார் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்கள் என்று!

-உமர்ஷெரிப் ஹபிபுல்லா- தமிழ் கோரா

ஒரே ஒரு தட்டு!

தந்தை எனும் மந்திரச் சொல் – ஒரு பக்க கதை

———————

விவாக ரத்து – ஒரு பக்க கதை

« Older entries