போடாத சட்டையை கழற்றும் மந்திரவாதி இவன்…(விடுகதைகள்)

-விடைகள்

1. அன்பு
2. செருப்பு
3. சீப்பு
4. கொம்பு
5. பாம்பு
6. கரும்பு
7. உப்பு
8. எறும்பு
9. அடுப்பு
10. சிரிப்பு
11. நெருப்பு

விளையாட முடியாத பந்து – அது என்ன? – விடுகதைகள்

—-விடைகள்:

1. தபால்
2. கடல் அலை
3. தலைமுடி
4. கதவு
5. வெங்காயம்
6. காற்று
7. முட்டை
8. திரைப்படம்
9. மேகம்
10. விளக்குத்திரி
—————-

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல, – விடுகதைகள்

Inline image 3

-1) குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,
அது என்ன?

2) சடசட மாங்காய் சங்கிலி ரோடு விழுந்தா கறுப்பு,
தின்னால் தித்திப்பு. அது என்ன?

3) குண்டப்பன் குழியில் வீழ்ந்தான். எழுந்தான்,
எல்லார் வாயிலும் விழுந்தான் அவன் யார்?

4) ஊளை மூக்கன் சந்தைக்குப் போறான். அவன் யார்?

5) வெள்ளைக்காரனுக்கு கறுப்புத் தொப்பி அது என்ன?

6)மரத்து மேலே பழம் பழத்து மேலை மரம் அது என்ன?

7) காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா
மயங்கிக் கிடக்கு அது என்ன?

8) உச்சிக் குடும்பியன் சந்தைக்கு வந்தான். அவன் யார்?

9) அம்மா போடும் வட்டம் பளபளக்கும் வட்டம்,
சுவையைக் கூட்டும் வட்டம், சுட்டுத் தின்ன இஸ்டம்
அது என்ன?

10) நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம்
குதிரைக் குட்டி அவர்கள் யார்?

11) பச்சைக் கதவு. வெள்ளை ஜன்னல் திறந்தால்
கறுப்பு ராஜா அது யார்?

12) சொறி பிடிச்சவனை கறி சமைத்து சோறெல்லாம்
கசப்பு அவன் யார்?

—————————

-விடைகள்

அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் – விடுகதைகள்

1) கறுப்பு குளத்தில் வெள்ளை பூக்கள் – அது என்ன?

2) கறுப்பு நீற கூந்தலின் நீளமோ அளக்க முடியாது –
அது என்ன?

3) கறுப்பு மேகம் வரும்போது தனது கறுத்த உடலை
விரிப்பான் – யார் அது?

4) கன்னங்கருத்த பழம் குளத்திற்குள்ளே கிடக்குது
– அது என்ன?

5) வெள்ளை கடலுக்குள் இரு கருப்பு முத்துக்கள் –
அது என்ன?

6) இரவு இவன் காதை திருகினால், அதிகாலைதான்
அழுவான்- யார் அது?

7) எண்ணையின்றி ஒளி தருவான், முடிவில்
தன்னுருவின்றி அழிந்திடுவான் – யார் அது?

8) தனியாக திரிந்திடுவான், உணவு கிடைத்தால்
அனைவரையும் அழைப்பான் – யார் அது?

9) அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம், அழகான
வெள்ளை ஓவியம் – அது என்ன?

10) பார்த்தேன் – பார்த்தான், சிரித்தேன் – சிரித்தான்,
முறைத்தேன் – முறைத்தான் – யார் அது?

——————————————————

விடைகள்
————–
1. கரும்பலகை
2. தார்ரோடு
3. குடை
4. கண்விழி
5. கண்கள்
6. கடிகாரம்
7. மெழுகுவர்த்தி
8. காகம்.
9. கோலம்
10. முகம் பார்க்கும் கண்ணாடி

பளபளப்பான பாவை பெற்றாள் ஒரே பிள்ளை – (விடுகதைகள்)

விடைகள்
————————–
41. வாழை
42. தீக்குச்சி
43. தங்கம்
44. மெழுகுவர்த்தி
45. அத்தி
46. வேர்க்கடலை
47. சட்டை
48. கடுகு
49. மெழுகுவர்த்தி
50. மண்ணெண்ணெய், பெட்ரோல்

புதிரோடு விளையாடு !

அருணா எஸ்.சண்முகம் ஓவியம்: பிள்ளை

1. பிக்னிக்

சேகர், தனது நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருக்கும் அருவிக்கு பிக்னிக் செல்வதாக இருந்தான். ”சேகர், நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. எத்தனை பேர் பிக்னிக் போறீங்க… எப்படிப் போறீங்க?” என்று கேட்டார் அப்பா.

”ஒரு சைக்கிளில் இரண்டு பேர் உட்கார்ந்துபோனால், இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது. ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால், இரண்டு பேருக்கு சைக்கிள் இருக்காது. நாங்க எத்தனை பேர்? சைக்கிள் எத்தனை? சொல்லுங்க பார்ப்போம்” என்றான் சேகர். நீங்க சொல்லுங்களேன்!


2. பரிசல் பயணம்!

அந்த ஊர் ஆற்றைக் கடக்க, ஒரே ஒரு பரிசல்தான் இருந்தது. அதை ஓட்டும் மருது, ஏடாகூடம் பிடித்த ஆள். காலில் காயம்பட்ட நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு, ஆற்றங்கரைக்கு ஓடிவந்தான் ராகவன். பரிசல் ஓட்டுபவரிடம், ”அண்ணே, அந்தக் கரையில் நிற்கும் மருத்துவரிடம் என் நாய்க்கு மருத்துவம் பார்க்கணும்” என்றான்.

ஏற்கெனவே ஒரு சிறுமியுடன் அங்கே நின்றிருந்த ஒரு பெண், ”என் வீடு அந்தக் கரையில்தான் இருக்கு. அங்கே போக இவர், நிறைய கண்டிஷன்கள் போடுகிறார். அங்கே போய்விட்டு திரும்பி வரும்போது, யாராவது சவாரியோடுதான் வருவாராம். உடனே ஆள் கிடைக்கலைனா, ஒரு சவாரிக் காசை சேர்த்துத் தரணுமாம். குழந்தைங்க ஏறினால்,  நான்கில் ஒரு பங்கு கொடுத்தால் போதுமாம். ஒரே சமயத்தில் ரெண்டு பேருக்கு மேலே ஏறவும் கூடாதாம்.” என்று பொரிந்துதள்ளினாள்.

சிறிது யோசித்த ராகவன், தனது திட்டத்தை அந்தப் பெண்ணிடம் சொல்ல, அவள் சம்மதித்தாள். ராகவன் யோசனைப்படி அவர்கள் கரையைக் கடந்தார்கள். அது எப்படி?


3. ராமனும் அனுமனும்!

சாக்கு மூட்டையுடன் சைக்கிளில் சென்ற வேலனைத் தடுத்து நிறுத்திய அவனது நண்பன், ”எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.

”வயல்காட்டுக்குக் கிளம்பின என் அப்பா, முக்கியமானதை மறந்துட்டார். அதைக் கொடுக்கப்போறேன். ராமன் கையில் இருக்கும் முதல் எழுத்தையும், அனுமன் கையில் இருப்பதன் கடைசி எழுத்தையும் எடுத்துக்க. அதோடு, அரிசிக்கு முந்திய நிலையைச் சேர்த்துக்க. அதுதான் பையில் இருக்கு” என்று சொல்லிவிட்டுச்  சென்றான்.

நண்பனுக்குத் தெரிந்துவிட்டது. உங்களுக்கு?


4. எ… எ… எக்ஸாம்!

”அடுத்த வாரம் தேர்வுகள் ஆரம்பிக்கப்போகுது. நீ எப்படி ஃபீல் பண்றே?” என்று கேட்டான் ஷங்கர். அதற்கு ரவி, ”அதை வாயால் சொல்லப் பயமா இருக்கு. நான் சொல்றதை வெச்சுக் கண்டுபிடி. முதல் இரண்டு எழுத்துகள் விழியைக் குறிக்கும். 1, 2 மற்றும் 4 -ம் எழுத்துகளைச் சேர்த்தால், கர்னாடக சங்கீதத்தில் பயன்படுத்தும் ஒரு இசைக் கருவியின் பெயர் வரும். என்ன அது?” என்று கேட்டான். சிறிது நேரம் யோசித்த ரவி, ”ஓஹோ… ஹா…ஹா” என்று சிரித்தான்.  அதைக் கண்டுபிடித்து நீங்களும் சிரியுங்களேன்!


விடைகள்

1. சேகருடன் செல்கிற நண்பர்கள் 8, மிதிவண்டிகள் 6.

2. முதலில் நாயும் சிறுமியும் சென்றார்கள். நாயை, மருத்துவரிடம் கொடுத்துவிட்டு, அதே பரிசலில் திரும்பினாள் சிறுமி. பிறகு, ராகவனும் சிறுமியும் சென்றார்கள். ராகவன் இறங்கிக்கொள்ள, சிறுமி திரும்பிவந்தாள். அம்மாவும் சிறுமியும் சென்றபோது, நாய்க்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு ராகவன் திரும்பிவிட்டான்.

3. ராமன் கையில் இருப்பது: வில், அனுமன் கையில் இருப்பது: கதை, அரிசிக்கு முந்தைய நிலை: நெல். வேலன் எடுத்துச்சென்றது: விதைநெல்.

4. கண்டம்

.vikatan.com

ஆறு வித்தியாசங்கள்…

நீரைக்கண்டால் பயந்தாங்கொள்ளி – விடுகதைகள்

1) ஊரைக் கண்டால் பாயும் கொள்ளி,
நீரைக்கண்டால் பயந்தாங்கொள்ளி – அது என்ன?

2) பச்சை பெட்டகத்துக்கு சிவப்புக்கதவு – அது என்ன?

3) ஓட்டு வீட்டைத் தாண்டி ஓட முடியாத சோம்பேறி –
அவன் யார்?

4) வல்லவன் வாலும் வாளாக மாறும் – அது என்ன?

5) அன்றாடம் தீ பிடித்தும் அழியாத வீடு – அது என்ன?

6) கடல் நீரில் வளரும், மழை நீரில் கரையும் – அது என்னன?

7) ஆயிரம் பேர் அணி வகுப்பு, ஆனாலும் இல்லை
சல சலப்பு – அது என்ன?

8) விரிந்த பெருங்கடலில் சமைக்க மூடியாத மீன் கூட்டம் –
அது என்ன?

9) குதிரையோ கறுப்பு, குளிப்பாட்ட வெளுப்பு
– அது என்ன?

10) வெள்ளைக் கிண்ணத்தில் கறுப்புக் கோலிக்காய்
– அது என்ன?

——————————————————
விடைகள்:

1) நெருப்பு
2) கிளி
3)ஆமை
4)தேள்
5) அடுப்பு
6) உப்பு
7) எறும்புக் குஊட்டம்
8) வின்மீன்கள்
9) உளுந்து
10) கண்

சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?

01. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?
நாய்
02. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
இளநீர்
03. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
அன்னாசிப்பழம்
04. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
நண்டு
05. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
பட்டாசு
06. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?
நுளம்பு
07. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
சோளப்பொத்தி
08. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?
அன்னாசிப்பழம்
09. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
தேங்காய்
10. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?
நத்தை
11. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
கண்ணீர்
12. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
மெழுகுதிரி
13. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?
நுங்கு
14. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
அகப்பை
15. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
முட்டை
16. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
கடிதம்
17. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
கல்வி
18. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
முருங்கைமரம்
19. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?
உப்பு
20. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?
கத்தரிக்காய்

———————————–

கிளை இல்லா மரம் ….(விடுகதைகள்)


1) தண்ணீரில் நீந்தத் தெரியும் மீன் அல்ல
இரண்டு கால் இருக்கும்; நடக்கும்; மனிதன் அல்ல
இறக்கை உண்டு; ஆனால் பறக்காது. அது என்ன?

————————————

2) கிளை இல்லா மரம்
ஏறினால் வழுக்கும் மரம்
ஒற்றைப் பூவில் நூறு காய் காய்க்கும்
தின்ன காய் துவர்க்கும்
பழமோ இனிக்கும். அது என்ன??

————————————-

3) .தாளம் இல்லாமல் பாட்டுப்பாடுவார்; பாடகர் அல்ல
நோய் இல்லாவிட்டாலும் தேடி வந்து ஊசி குத்துவார்;
மருத்துவர் அல்ல
வலையைக் கண்டால் மிரண்டுபோவார்; மீனும் அல்ல.
அது என்ன?

————————————

4) பறக்கும் இது பறவை போல
தலைகீழாய்த் தொங்கும் கோட்டான் போல
பாலூட்டும் ஆனால் பசுவல்ல
பழம் தின்னும் கிளியும் அல்ல அது என்ன?

—————————————

5) .கூரை விட்டைப் பிரிச்ச ஓட்டு வீடு
ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகையின் நடுவே குளம். அது என்ன?

————————————-

விடைகள்:-

1) வாத்து
2) வாழை
3) கொசு
4) வௌவால்
5) தேங்காய்

« Older entries