தலைவர் குஷியா இருக்காரே …என்ன விஷயம்..?!
ஒக்ரோபர் 3, 2015 இல் 10:10 பிப (நகைச்சுவை)
Tags: நகைச்சுவை, cooking
என்னை சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை…!!
ஒக்ரோபர் 2, 2015 இல் 5:54 முப (அனுபவ மொழிகள்)
Tags: அனுபவ மொழிகள், cinema, cooking
LIFE = (L)ove (I)s (F)ueling (E)veryone.
–
–
–
முருங்கைக் கீரை குழம்பு
மே 3, 2015 இல் 3:33 பிப (cooking)
Tags: cooking
முளைகட்டிய நவதானிய சூப்
மார்ச் 12, 2015 இல் 9:53 பிப (Uncategorized)
Tags: cooking
–
தேவையானவை: முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில்
எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 2 பல்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு – காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை – தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப் பால் – ஒரு கப்,
புளிக்காத கெட்டி தயிர் – அரை கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு,
கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு
நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு
பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக
வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர்
ஊற்றி கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து,
தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்து
விடவும்.
பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித்
தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி
பரிமாறவும்.
–
———————————————
நன்றி அவள்விகடன்
புளிக்குழம்பு (இனிப்பு)
பிப்ரவரி 12, 2015 இல் 3:48 முப (Uncategorized)
Tags: cooking
தேவையானவை
—————-
புளி எலுமிச்சங்காய அளவு.
சாம்பார் வெங்காயம் ஒரு கையளவு.(எந்த காயும் போடலாம்)
வெல்லம் 2 அல்லது 3 நெல்லிக்காயளவு.
குழம்பு பொடி இரன்டு ஸ்பூன்.
மஞ்சள்தூள், பெருங்காயம் சிறிது.
கறிவேப்பிலை 2 ஆர்க்.
தாளிக்க
———–
நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி.
கடுகு ஓர் ஸ்பூன்.
வெந்தயம் இரண்டு ஸ்பூன்.(மூன்றுஸ்பூனும் போடலாம்).
செய்முறை.
—————–
அடுப்பில் வாணலியை ஏற்றி, நல்லெண்ணையை ஊற்றி, நன்கு காயவேண்டும்.
கடுகு, வெந்தயம் எண்ணெயில் வெடிக்க விடவேண்டும். வெடித்ததும், அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
மஞ்சள்தூள் சிறிது, பெருங்காயம் சிறிது போட்டு நன்கு கிளறி விடவேண்டும்.
வெங்காயம் வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான உப்பும், குழம்பு மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், கறிவேபிலையையும் கிள்ளி குழம்புடன் சேர்க்கவும்.
நல்லெண்ணெயை ஊற்றி நன்கு கரண்டியால் கலக்கவேண்டும்.
இப்போது வெல்லம் 2 அல்லது 3 நெல்லிக்காயளவு சேர்த்தி கொதிக்கவிடவும்.
இப்போது இனிப்பு புளிகுழம்பு தயார்!
வெல்லம் (பிடிக்காதவர்கள்), போடாமலேயும் உபயோகிக்கலாம்
=======================================
–தங்கமணி