மகிழ்ச்சியாக இருக்க சிறந்த தருணம்…!

3.jpg

 

குதிரை சவாரியை விடகுதூகலமானது தந்தையின் முதுகு@sudha_sa
குதிரை சவாரியை விடகுதூகலமானது தந்தையின் முதுகு

———-

@laksh_kgm
இயற்கை இலவசமாகக் கொடுத்த தூய்மையான
தண்ணீரைக் கெடுத்து, பின் சுத்திகரித்து, மூன்றில்
ஒரு பங்கை சேதாரமாக்கி, விலைக்கு விற்பவன்
மனிதன்!

@RavikumarMGR
படம் ஆரம்பிக்கும்போதே அபசகுனமா
‘குடிப்பது உடல்நலத்துக்குக் கேடு’ன்னு போடாதீங்கய்யா!
# பலபேர் படம் பாக்கப் போறதே ஃபுல் போதையோடதான்…

@barathi_
மருந்து, மாத்திரைகள் மட்டும் அல்ல… வார்த்தைகளும் காலப்
போக்கில் வீரியம் இழந்து, குப்பைக்குத்தான் போகின்றன!

@Tottodaing
எந்த வேட்பாளரையும் விட, பணம்தான் அதிக ஓட்டுகளை வாங்குது…
இதுகூட தெரியாம என்னத்த வேடிக்கை பாக்குறீங்க!

@PDSangeetha
சிலர் வாய்க்கு ஜிப்பும், மூளைக்கு லாக்கும், கண்ணுக்குத் திரையும்,
காதுக்கு வடிகட்டியும், கைகளுக்கு விலங்கும் போடணும்…

@writernaayon
படமே தெரியாமல் புள்ளிகளை வெறித்துப் பார்த்த நாட்களின் டி.வி.
சுவாரஸ்யத்தை இன்று 250 சேனல்களிலிருந்தும் பெற முடியவில்லை!

@MrElani
குழாய்ல தண்ணி சிந்துறத பாத்தா அலுப்பு பாக்காம நிறுத்திட்டுப் போங்க…
அடுத்த தலைமுறைக்கு நாம சேர்த்து வச்சிட்டுப் போற சேமிப்பு அது
மட்டும்தான்.

–குங்குமம்
புகைப்படம் – விகடன்.காம்

முல்லாவா? கொக்கா?

திடீரென்று முல்லாவிற்கு இசையில் ஆர்வம் ஏற்பட்டது! யாரிடமாவது முறையாக இசைப்பயிற்சி பெற வேண்டும் என எண்ணினார். அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்ததில் அருகிலேயே ஒரு இசைக்கலைஞன் இருப்பதை அறிந்தார். அவரிடம் சென்று தனக்கு இசைப்பயிற்சி தரமுடியுமா? என்று கேட்டார் முல்லா.

 அதற்கு அந்த இசைக்கலைஞர் “”உங்களுக்கு பயிற்சி தர நான் தயார். ஆனால் ஒரு நிபந்தனை!”என்றார்.

 “”என்ன நிபந்தனை?”என்று முல்லா கேட்டார்.

 “”நீங்கள் எனக்கு தட்சணையாக முதல் மாதம் 10தங்கக் காசுகள் தர வேண்டும்…,இரண்டாவது மாதம், 5தங்கக் காசுகள்…,மூன்றாவது மாதம் 3 தங்கக் காசுகளும், நான்காவது மாதம்.., அதாவது பயிற்சி முடியும் கடைசி மாதத்தில் 1தங்கக் காசும் தரவேண்டும். சம்மதமா?”என்று கேட்டார் இசைக்கலைஞர்.

 உடனே முல்லா, “”சம்மதம்தான்…, நான் 4ஆவது மாதமே வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்கிறேன்” என்று கூறிவிட்டு வீட்டுக்கு நடையைக் கட்டினார். முல்லாவா? கொக்கா?

பால.கோவிந்தராஜ்-சிறுவர் மணி

 

மனைவி ஓட்டிக்கிட்டு போன காரை கண்டு பிடிங்க…!

20151121_081639_resized.jpg

டியர், நான் என்ன சொல்றதுன்னே தெரியலை..!


டியர், நான் என்ன சொல்றதுன்னே தெரியலை..!

பதினாலாம் வாய்பாடு தெரிஞ்சா சொல்லு…!

பாலாசி கணேஷ்

——————————–

அங்கே எதிரியின் படைவீரர்கள் நமது படைவீரர்களை
நையப் புடைத்துக்கொண்டு இருக்கிறார்கள்…நீங்கள்
என்னடாவென்றால் இங்கே ஒரு புதருக்குப் பின்னால்
ஒளிந்து கொண்டு வாளை சுழற்றுவது போல் செல்ஃபி
எடுத்துக்கொண்டு இருக்கிறீரகள்…

உங்களூக்கே நியாயமா மன்னா?

லட்சுமணன்

—————————————-

தலைவர் எதுக்கு நம்ம கட்சி தொண்டர்களுக்கு
மிஸ்டு கால் தர்றாரு?

அவுங்க எல்லாம் நம்ம கட்சியிலதான்
இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கத்தானாம்..!

கோபாலன்

—————————————–

போர் முடிந்துவிட்டது…பதுங்கு குழியிலிருந்து
வெளியே வாருங்கள் மன்னா…

இதை நீயே சொல்கிறாயா…எதிரி சொல்லச்
சொன்னானா..?

சி.சாமிநாதன்

———————————-

டாக்டர் எனக்கு ஒரு காது மட்டும் கேட்க
மாட்டேங்குது…!

நான் தந்த மருந்தைச் சாப்பிட்டுமா ஜூரம் விடலை..?

பாலாசி கணேஷ்

————————————–

 

பார்க்காமல் கடப்பதில் முடியும் சில காதல்கள்…!

page_122.jpg

அறுபது வயசுல ஒரு கண்டம் இருக்குன்னு சொன்னாங்க…!

joke.jpg

பதுங்கு குழி வேணாம், போருக்கே போகிறேன்…!!

E_1447397260.jpeg

பிரச்னைகளிடம் இருந்து விலகி இருக்கணும்..!!

மனைவி: என்னங்க நம்ம வீட்டுக்குள்ள திருடன் வந்திருக்காங்க
எழுந்திருங்க!

போலீஸ் கணவர்: சும்மாயிருடி. நான் இப்ப டூட்டியில இல்ல!

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

———————————————

“வட்டாட்சியரை தண்ணீர் இல்லாத காட்டுக்கு டிரான்ஸ்ஃபர்
பண்ணினால் என்ன ஆவாரு…?”

“பாவம்ங்க… “வாட்ட ஆட்சியரா’ ஆயிடுவாரு…!”

ஜி.வினோத், திருநெல்வேலி.

——————————————

“சல்லிசா எது வந்தாலும் தலைவர் வாங்கிடுவார்”

“ஒரு சின்னக் கட்சி விலைக்கு வருது, வாங்குறாரான்னு கேளேன்!”

வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

———————————————-

ஆசிரியர்:
ஏன்டா உன் புத்தகங்களை பக்கத்து மேசையில் வைச்சுட்டு நீ
இங்க உட்கார்ந்திருக்க?

மாணவன்:
நீங்கதான சார்… பிரச்னைகளிடம் இருந்து விலகி இருக்கணும்னு
சொன்னீங்க?

சீ.பிரவீன், தர்மபுரி.

———————————————-

வாசுவும் சரோஜாவும் ஒண்ணா படிச்சவங்க…!


உங்க மகள் கல்யாணம் செலவு இல்லாம முடிஞ்சுதா
எப்படி?

வாசுவும் சரோஜாவும் ஒண்ணா படிச்சவங்க…!

———————————–

எதுக்கு ஈ.என்.டி. டாக்டரைப் பார்க்கப் போறீங்க?

டீ விழுந்த டீயை குடிச்சிட்டிராம்…!

——————————-

ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஆரஞ்சின் நிறம் ஆரஞ்ச்.
ஆனால் ஆப்பிளின் நிறம் ஆப்பிள் அல்ல….!

சாப்பிட வந்தவர் :
இந்த் ஊசி போன வடையை யாருய்யா சாப்பிடுவது?
கூப்பிடு ஹோட்டல் மேனேஜரை.

சர்வர் : இல்ல சார் நிச்சயமா அவரும் சாப்பிட மாட்டாராம்!

—————————————-
படித்ததில் பிடித்தது

கேள்வி :
காதல் திருமணத்திற்கும், பெரியவர்கள் பார்த்து
செய்யும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?

பதில் :
முதலாவது தற்கொலை இரண்டாவது மற்றவர்கள் செய்யும்
கொலை..!

—————————————-

« Older entries