* தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது…!
ஒக்ரோபர் 23, 2015 இல் 7:16 முப (sayings)
Tags: sayings
* நீங்கள் உங்களுக்குள் வளர்ச்சி பெறும்போது,
உங்களுக்குள் பெருமையும் முன்முடிவுகளும் இருக்காது.
—
* தூய்மையான, ஆழமான பொருள் பொதிந்திருப்பதாய்
உங்கள் செயல் அமையும்.
–
* உடலுடன் நீங்கள் கொண்டுள்ள அடையாளம்தான் உங்கள்
ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
—
* உடலுறவல்ல! எந்த வேலையிலும் மனஅழுத்தம் என்பது இல்லை,
உங்கள் உடல், மனம் மற்றும் உணர்வுகளை கையாளத் தெரியாததே
உங்களை மனஅழுத்தத்திற்கு உட்படுத்துகிறது.
–
* தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது.
–
* உங்கள் பதிவுகளை நீங்கள் துடைத்துவிட்டால்,
உண்மை தானாகவே உங்களுக்குள் பதிந்துவிடும்.
–
====================
சத்குரு
தன்னம்பிக்கையை வளர்க்கும் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பொன்மொழிகள்!!!
ஜூலை 28, 2015 இல் 7:58 பிப (sayings)
Tags: sayings
–
–
–
ஓடுகிற குதிரைக்குத்தான் அடி அதிகம்
ஜூலை 22, 2015 இல் 7:28 முப (sayings)
Tags: sayings
–
வைத்தியர் சொன்னதெல்லாம் மருந்து
–
ஓடுகிற குதிரைக்குத்தான் அடி அதிகம்
–
செயல்தான் மிக சுருக்கமான பதில்
=
உரையாடதவனுக்கு ஒன்றுமே தெரியாது!
–
காத்திருக்க முடிந்தவனுக்கு எல்லாமே சரியாகி விடும்
–
===========================================
–
விருந்தும் மருந்தும் மூன்றே நாள்
–
காலம் தாழ்த்தி செய்யும் உதவி உதவியன்று
–
புத்தாடைகளுடன் நரகம் செல்வதைக்காட்டிலும்
கந்தல் துணியுடன் சுவர்க்கம் செல்வது மேலானது
–
வறுமை சண்டையை வளர்க்கும்
–
வெட்டியவனுக்கு ஒரு கோடாரி, வெட்டாதவனுக்கு பல கோடாரி
–
=======================================
–
கர்வத்தை விட அடக்கம் அதிக பலனைத் தரும்
–
போரைப் போலவே அமைதியிலும் புகழ் பெற முடியும்
–
மனம் வேறிடத்தில் இருந்தால், கண்கள் குருடுதான்.
–
சோம்பேறி மூச்சு விடுகிறான், ஆனால் வாழ்வதில்லை
–
சிக்கனமே உண்மையான சம்பாத்தியம்
–
===============================
–
மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்…!
ஜூலை 22, 2015 இல் 7:27 முப (sayings)
Tags: sayings
மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!
–
மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்
–
மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!
–
மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.
–
மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?
–
===================================
–
வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
–
வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்
–
அவன் வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு
–
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது
–
முதலையும் மூர்க்கனு ம் கொண்டது விடா!
–
=====================================
….தொலைத்தவருக்குத்தான் தெரியும் அருமை..!!
ஜூலை 17, 2015 இல் 8:13 முப (sayings)
Tags: sayings

–


–

–


–

விவேகம் வெற்றியைத் தரும்…!
உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையன் ஆகிறான்.
ஜூலை 1, 2015 இல் 1:51 பிப (sayings)
Tags: sayings
–
சோம்பல் மிக மெதுவாக நடப்பதால்
வறுமை அவனை எளிதில் பிடித்து விடுகிறது.
–
——————————————-
–
நன்றியும் கோதுமையும் நல்ல இடத்தில்தான்
விளையும்.
–
———————————————
–
குற்றம் என்ற புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
–
——————————————–
–
உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையன்
ஆகிறான்.
–
———————————————
–
வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்.
உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும்.
–
————————————————
–
ஆனால் என்ற வெறுக்கத்தக்க வார்த்தை வந்து
விட்டால், முன்னால் சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.
அதற்கு இல்லை என்று மறுப்பதோ அவமானப்
படுத்துவதோ மேல்.
–
————————————————
–
துயரங்களை எதிர்பார்ப்பவன் இரண்டு முறை
துயரம் அடைகிறான்
–
————————————————-
–
புறாவைப்போல பறந்துவிடும் பேச்சை
நாலு குதிரைகள் சேர்ந்தாலும் இழுக்க முடியாது.
–
————————————————