உத்தமர்கள் வாழும் பூமி!

இதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை
நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம்
உண்மை.

நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ
எந்தக் குறைவும் கிடையாது. நடைமுறை நிகழ்வுகள்
பல, இதிகாச புராண நிகழ்வுகளை விட, மிகவும்
அற்புதமாக இருக்கும்.

இதிகாச புராணங்கள் உண்மையென, இன்றும்
நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

நடந்த வரலாறு இது:

யுகங்களைத் தாண்டியும், அரிச்சந்திரன் புகழ் இன்றும்
நிற்பது போல, இந்த வரலாறும் நிற்கும்; நிற்க வேண்டும்.

வங்காளத்தில் ஒரு கிராமம். அங்கே, ஓர் ஏழை வேதியர்
வசித்து வந்தார். மிகவும் நேர்மையான அவர்,
ஸ்ரீராமரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்; தான் வைத்திருக்கும்
ஸ்ரீராம விக்கிரகத்திற்கு, தினமும் வழிபாடு செய்யாமல்
சாப்பிட மாட்டார்.

இந்த பக்தரின் மனைவியும், இவருக்கு அனுகூலமாக
இருந்தார். அத்தம்பதிக்கு, ஓர் ஆண், பெண் என, இரு
குழந்தைகள்.

அந்த கிராமத்து ஜமீன்தார், ஒருநாள், பக்தரை கூப்பிட்டு
வரச்சொன்னார். அவர் வந்ததும், ‘ஐயா… நீங்கள் எனக்கு
ஓர் உதவி செய்ய வேண்டும்…’ என்றார், ஜமீன்தார்.

பதறிய பக்தர், ‘ஏழையான நான் போய், உங்களுக்கு
எப்படி உதவ முடியும்…’ எனக் கேட்டார்.

‘நீங்கள் பொய்யே சொல்ல மாட்டீர்; சத்தியசந்தர் என்பது,
அனைவருக்கும் தெரியும். நீங்கள் என்ன சொன்னாலும்,
இந்த ஊர் நம்பும். அதனால் தான், உங்கள் உதவியை
கேட்கிறேன்…’ என்றார், ஜமீன்தார்.

பக்தர் புரியாமல் திகைக்க, தொடர்ந்தார் ஜமீன்தார்…

‘எனக்கெதிராக ஒரு வழக்கு நடக்கிறது. அதில், நீங்கள்
என் பக்கம் சேர்ந்து,
எனக்காக ஒரு சின்ன பொய் சொல்ல வேண்டும்.
அவ்வளவு தான்…’ என முடித்தார், ஜமீன்தார்.

அதுவரை அடக்கமாக இருந்த பக்தர், கம்பீரமாக நிமிர்ந்து,
‘பொய்யில், சிறிய பொய்யாவது; பெரிய பொய்யாவது…’
என்றார்.

ஜமீன்தாருக்கு, ‘பக்’கென்றது. ‘என்னைக் கண்டாலே
பணிந்து, நடுங்கி, ஒடுங்கி இருக்க வேண்டிய ஏழை,
கம்பீரமாக என் முன்னால் நின்று பேசுவதா…’ என்று
நினைத்தார்.

ஆனாலும், ‘ஐயா… நீர் மட்டும் எனக்காகப் பொய் சாட்சி
சொல்லாவிட்டால், உங்கள் வீட்டையும், கொஞ்ச நஞ்சம்
இருக்கும் நிலத்தையும் பிடுங்கி, பொய் வழக்கு தொடுத்து,
உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவேன்…’ என,
கடுமையாக மிரட்டினார்.

சற்றும் அசராமல், ‘ஐயா… நீங்கள் என்ன செய்தாலும் சரி,
உயிரே போவதாக இருந்தாலும், பொய் சொல்ல மாட்டேன்…’
என்று அழுத்தமாக சொல்லி விட்டார், பக்தர்.

எனவே, பக்தரின் மீது பொய் வழக்கு தொடுத்து, அவரை
குடும்பத்தோடு வீதியில் நிற்க வைத்தார், ஜமீன்தார்.

அணுவளவும் கலங்கவில்லை, பக்தர்; தாம் பூஜை செய்து
வரும் ஸ்ரீராம விக்கிரகத்துடன், மனைவி மக்களையும்
அழைத்து, ஊரை விட்டே வெளியேறி விட்டார்.

அரிச்சந்திரன், சத்தியசந்தர் என்பது தெரியும்;
ஆனால், அது கலியுக வரலாறு அல்ல. தீமைகளே மலிந்து,
நிறைந்து இருப்பதாகச் சொல்லப்படும் கலியுகத்தில் தான்,
மேலே கூறிய வரலாறு நடந்தது.

சத்தியசந்தரான அந்த பக்தரின் மகன் தான், உலகமே
வியக்கும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

நம்மால் அப்படியெல்லாம் இருக்க முடிகிறதோ, இல்லையோ…
உத்தமர்களான பரமஹம்சர்கள் வாழ்ந்த,- வாழும் பூமி இது

என்பதை, தினமும் நினைத்தால் கூட போதும்; நலம் விளையும்!


பி.என்.பரசுராமன்
வாரமலர்

Advertisements

சினி துளிகள்!

  • ராட்சசன் படத்தை அடுத்து,
    அதோ அந்த பறவை போல மற்றும்

ஆடை படங்களில் நடித்து வருகிறார், அமலாபால்.

————————

*மிஸ்டர் சந்திரமவுலி படத்தை அடுத்து, தேவராட்டம்
மற்றும் செல்லப் பிள்ளை ஆகிய படங்களில் நடிக்கிறார்,

கவுதம் கார்த்திக்

———————————

தொடை அழகியான, நிக்கி கல்ராணி!

தமிழ் சினிமாவில், ‘தொடையழகி’ என்று பெயரெடுத்தவர்,
ரம்பா. அவருக்கு பின், அந்த இடம் காலியாக இருந்தது.
இந்நிலையில்,
சார்லி சாப்ளின் – 2 படத்தில், தன் தொடையழகை
காண்பித்து நடித்ததை அடுத்து, ‘தொடையழகி’ என்று
அழைக்கப்படுகிறார், நிக்கி கல்ராணி.

அதோடு, இந்த பாணியை தொடர்ந்து கடைப்பிடிக்க
நினைக்கும் நடிகை, தொடையழகை இன்னும்
அழகுபடுத்தும் நோக்கத்தில், ‘ஜிம்’ சென்று, அதற்கு
தேவையான, ‘ஸ்பெஷல்’ உடற்பயிற்சிகளை எடுத்து
வருகிறார்.

போக்கு அற்ற மத்தளம் கொட்டினதாம்;

பூண்டி தெய்வம் வந்து ஆடினதாம்!


— எலீசா

தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, கொலம்பியா
பல்கலைகழகத்தில், வரும், 23, 2௪ம் தேதிகளில், தலித்
திரைப்படம் மற்றும் கலாசார விழா நடக்கிறது.

இதில், இந்தியாவில் பல மொழிகளில் தயாரான,
தலித் மக்கள் பிரச்னையை சொல்லும் படங்கள்
திரையிடப்படுகின்றன.

அந்த வகையில், தமிழில், பா.ரஞ்சித் இயக்கத்தில்,
ரஜினி நடித்த, காலா படம் திரையிடப்படுகிறது.

அதோடு, பா.ரஞ்சித் தயாரித்த, பரியேறும் பெருமாள்

மற்றும் கக்கூஸ் ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.


— சினிமா பொன்னையா
வாரமலர்

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

அந்த பெரிய நகரத்தின் முக்கியமான சாலையில்,
கடுமையான போக்குவரத்து நெரிசல். எல்லா திசையிலும்,
கார்களும், ஸ்கூட்டர்களும், பஸ்களும், மினி லாரிகளும்
தேங்கி நின்றன.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய, ஒரு கார் காரர்,
வெளியே எட்டிப் பார்த்தார். அட்டை பெட்டியை குலுக்கியபடி,
ஒரு சிறுவன், ஒவ்வொரு வண்டி அருகே நின்று, ஏதோ
கேட்டபடி வருவதை கண்டார். அவனை கூப்பிட்டு,

‘என்ன தம்பி… ஏன் இவ்வளவு போக்குவரத்து நெரிசல்…’
என்று கேட்டார்.

‘ஒரு கட்சித் தொண்டர், தன் மேல் பெட்ரோல் ஊற்றி,
நடு ரோட்டில் கிடக்கிறார் சார்… அவர் சார்ந்த கட்சிக்கு,
5,000 ரூபாய் நிதி வேண்டுமாம். அந்த தொகை கிடைக்கா
விட்டால், கொளுத்தி சாவேன் என்கிறார்.

அவருக்காக தான், நான் கலெக் ஷன் பண்ணுகிறேன்…’
என்றான், சிறுவன்.

‘இதுவரை என்ன கிடைத்தது?’ என்று கேட்டார், கார் காரர்.

‘ஏழு தீப்பெட்டி, இரண்டு ‘சிகரெட் லைட்டர்’ சார்…’

என்று பதில் வந்தது.


வாரமலர்

கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!

எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!

எது முக்கியம் – கவிதை

நாள்காட்டியில் தேதியை
கிழிப்பது முக்கியமில்லை…
அந்த தேதியில்
நாம் என்ன கிழித்தோம்

என்பதே முக்கியம்!

மற்றவர்களுக்கு பிடித்தது போல
பளபளப்பாய் வாழ்வது
முக்கியமில்லை…
என்றும் நமக்கு பிடித்தது போல
கலகலப்பாய் வாழ்வது தான்

முக்கியம்!

ஏமாறாமல் வாழ்வது
முக்கியமில்லை…
பிறரை
ஏமாற்றாமல் வாழ்வது தான்

முக்கியம்!

வரவுக்கு ஏற்ப பணத்தை
செலவழிப்பது முக்கியமில்லை…
அந்த பணத்தை
நாம் எப்படி சம்பாதித்தோம்

என்பதே முக்கியம்!

அனாதை இல்லத்திற்கு
அள்ளித் தருவது முக்கியமில்லை…
அந்த இல்லத்திற்கு
நம் பெற்றோரை

அனுப்பாமல் இருப்பதே முக்கியம்!

தத்துவங்களை மேடையில்
பேசுவது முக்கியமில்லை…
அதன்படி
நாம் நடக்கிறோமா

என்பதே முக்கியம்!

மற்ற செல்வங்களோடு
வாழ்வது முக்கியமில்லை…
பெற்ற பிள்ளைகளோடு
வாழ்கிறோமா என்பதே

முக்கியம்!

துரோகம் செய்த நண்பனை
துரத்துவது முக்கியமில்லை…
தவறு செய்த நண்பனை

திருத்துவதே முக்கியம்!

விழாமல் வாழ்வை கடப்பது
முக்கியமில்லை…
அப்படி விழுந்தாலும்
உடனே எழுந்து

நடப்பது தான் முக்கியம்!

நம்மை சிரிக்க வைப்பவர்களை
சிரிக்க வைப்பது முக்கியமில்லை…
நம்மை கண்டு
ஏளனமாய் சிரிப்பவர்களை

சிந்திக்க வைப்பதே முக்கியம்!


மு.பெ.ராமலிங்கம், கோவை.
நன்றி- வாரமலர்

முகநூலில் ரசித்தவை…!

அவனுக்கு ‘நல்லா வேணும்’…!

வெற்றி என்பது…!!

« Older entries