–
-சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட திண்டுக்கல்லை சேர்ந்த ஜி. ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
–
ஜனவரி 4, 2016 இல் 7:38 முப (news)
–
-சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட திண்டுக்கல்லை சேர்ந்த ஜி. ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
–
திசெம்பர் 15, 2015 இல் 4:53 முப (news)
Tags: news
–
இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் செயல்பட்டு வரும் தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழக மாதிரி மருத்துவனையில் (ESICMH) காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியிடங்களை வழக்கமான அடிப்படையில் நேரடி பணி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 122
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Staff Nurse – 50 + 17 +3
2. Dietician – 01
3. Pharmacist – 09 + 03
4. Blood Bank Technician – 01
5. ECG Technician – 01 + 01
6. Medical Social Worker – 04
7. Boiler Attendant – 01
8. Lab Assistant – 03 + 01 + 01
9. Cook/Cook mate-cum-Bearer-cum-Masalchi – 07 + 03
10. Laundry Operator- 01 + 01
11. Dresser – 01
12. Nursing Orderly – 13
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: http://esipgirnr.kar.in அல்லது http://www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ESIC ஊழியர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esic.nic.in/backend/writereaddata/recruitment/466da35eeab225dcd815d97ade16632d.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
=
தினமணி
திசெம்பர் 3, 2015 இல் 3:49 முப (news)
Tags: செய்திகள்
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கப்படும் என மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு, பி.எஸ்.என்.எல். ஒரு வாரம் இலவச சேவை வழங்கும் என்றார். இந்த வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றார் அமைச்சர்.
ஏர்டெல் சலுகை
இதேபோன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு 30 ரூபாய்க்கு ‘டாக் டைம்’ வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது கழித்துக் கொள்ளப்படும்.
இதேபோல ‘போஸ்ட் பெய்ட்’ வாடிக்கையாளர்கள் இரு நாள்கள் 10 நிமிஷம் இலவசமாக பேசி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும், 50 எம்.பி. இலவச இன்டர்நெட் டேட்டாவும் அளித்துள்ளது.
மேலும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய பில் தொகையை தாமதமாகவும் செலுத்த அவகாசம் அளித்துள்ளது.
தினமணி
திசெம்பர் 3, 2015 இல் 3:48 முப (news)
Tags: செய்திகள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை வரவுள்ளனர்.
கன மழையால் சென்னை விமானம் மூடப்பட்டுள்ள நிலையில், புதுதில்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் அவர்கள் விமானம் மூலம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம் விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையத்துக்கு வந்தடைகின்றனர்.
அங்கிருந்து குழுக்களாக பிரிந்து செல்லும் அவர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள. அவர்கள் தங்களுடன் மீட்பு பணிக்காக 40 காற்றடைத்த படகுகள் மற்றும் உணவுப் பொருள்களையும் எடுத்து வருகின்றனர்.
மீட்பு பணியின் போது, வெளியேறாமல் தங்கள் வீட்டிலேயே தங்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை அவர்கள் வழங்குவார்கள் என தேசிய பேரிடர் மீட்பு குழுவின் தலைவர் ஒ.பி. சிங் கூறினார்.
ஏற்கெனவே 40 பேர் அடங்கிய 11 பேரிடர் மீட்பு குழுவினர் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில் 011-2436 3260, 09711077372 ஆகிய அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
–
தினமணி
திசெம்பர் 3, 2015 இல் 3:47 முப (news)
Tags: செய்திகள்
–
உலக ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, 17ஆவது இடத்தில் இருந்த அவர், தோஹாவில் கடந்த மாதம் நடைபெற்ற கத்தார் கிளாசிக் போட்டியில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எகிப்தின் ரனீம் எல் வெலிலியை வெற்றி கொண்டார். இதன் மூலம் அவர் 4 இடங்கள் முன்னேறியுள்ளார்.
–
இதனிடையே, மற்றொரு இந்திய வீராங்கனையான தீபிகா பல்லிக்கல் 16ஆவது இடத்தில் இருந்து 14ஆவது இடத்துக்கு பின்தங்கினார். சசிகா இங்லே 87ஆவது இடத்தில் உள்ளார்.
–
ஆடவர் தரவரிசையில், செளரவ் கோஷல் 18ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவர் தவிர மகேஷ் மன்காவ்ன்கர் 62ஆவது இடத்திலும், ஹரீந்தர்பால் சந்து 66ஆவது இடத்திலும், குஷ் குமார் 97ஆவது இடத்திலும் உள்ளனர்.
நவம்பர் 29, 2015 இல் 10:37 பிப (news)
Tags: நகைச்சுவை
–
துபாய்:
வளைகுடா என்றதும் பலருக்கு நீண்ட பாலைவனம் நினைவுக்கு வரும் ஆனால் மலர்களும், மரங்களும் நினைவிற்கு வரும் வகையில் வளைகுடா நாடுகளின் நகரங்களில் ஒன்றான துபாயில் மரம், செடிகளோடு இயற்கை சூழலை உருவாக்க முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் அழகிய தோட்டங்களை உருவாக்குகின்றனர்.
–
–
இந்நிலையில் 2013ம் வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் வித விதமான பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் துபாயில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. கோடை காலத்தையோட்டி தற்காலிகமாக மூடப்பட்ட துபாயில் உள்ள பிரம்மாண்ட மலர் பூங்கா நேற்று மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்ச்சி பூங்கா அரங்கில் நடைபெற்றது. முதல் நாளிலேயே ஏராளமானோர் குவிந்தனர். இப்பூங்கா வருடத்தில் ஆறுமாத காலம் செயல்படும்.
–
–
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 4.5 கோடிக்கும் மேற்பட்ட மலர்களோடு இப்பூங்கா ஏற்படுத்தப்பட்டு பல்வேறு அழகிய வடிவங்களோடு மலர் அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். உலகின் மிகப்பெரிய மலர் பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
–நன்றி:தினகரன்
நவம்பர் 29, 2015 இல் 8:24 முப (news)
Tags: news
கடந்த, 1912ல், பிரிட்டனில் இருந்து,
அமெரிக்காவுக்கு சென்ற, ‘மிதக்கும் சொர்க்கம்’ என
அழைக்கப்பட்ட, ‘டைட்டானிக்’ கப்பல், நடுக்கடலில்,
பனிப் பாறையில் மோதி, மூழ்கியது.
இந்த விபத்தில், 1,500 பேர் இறந்தனர். கப்பல் மூழ்கிய
இடத்தில், மீட்கப்பட்ட பொருட்கள், அவ்வப்போது ஏலம்
விடப்படுகின்றன. அந்த கப்பலின், முதல் வகுப்பு
பயணிகளுக்கு வழங்கப்பட்ட, ‘மெனு கார்டு’ சமீபத்தில்,
பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த,
பனிப்பாறையின் கறுப்பு – வெள்ளை புகைப்படம்,
21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய், ஆச்சர்யத்தை
ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த அடுத்த நாள், அதே வழியில் சென்ற,
மற்றொரு கப்பலில் இருந்த ஒருவர், அந்த பனிப்பாறையை
படம் எடுத்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த
புகைப்படம், சமீபத்தில் தான் ஏலம் விடப்பட்டுள்ளது.
–
— ஜோல்னாபையன்.
நவம்பர் 26, 2015 இல் 8:20 முப (news)
Tags: news
பானஜி: மதசகிப்பின்மையை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான ‘முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். எதுவும் வன்முறையாக இருக்க கூடாது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு நாம் காண்பிக்க வேண்டும்” எனக் கூறினார்.
டெல்லியில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாலிவுட் முன்னணி நடிகரான அமீர்கான், நாட்டில் மதசகிப்பின்மை இல்லாத சூழல் நிலவுவதால் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதாகவும், இதன் காரணமாக ‘இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா?’ என்று தன் மனைவி கேட்டார் என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
–
விகடன்.காம்