காலை உணவு -முளை கட்டிய பயிர்

DSC07940

காலை சிற்றுண்டி செரிமானம் ஆவதற்குள் மதியச் சாப்பாட்டு வேளை வந்து விடுகிறது. அப்படிப்பட்ட அவசர உலகில் இயந்திரமாய் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். என்ன செய்ய, ஓடித்தான் ஆக வேண்டும், காலத்தின் கட்டாயம். சரி. ஆமாம் என்றே வைத்துக் கொள்வோம். நடக்கவே வலுவில்லாத கால்களை ஓடச் சொன்னால் ; அவை எப்படி ஓடும், கால்களுக்கு வலு வேண்டாமா ?

நம்மில் பெரும்பாலனோர் பணி நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடுகலிள் தங்கியிருப்பவர்ள். சமைத்து சாப்பிடுவது என்பது பலருக்கு இயலாத காரியம். மேலும், பலர் செய்யும் தவறான செயல், காலை உணவை தவிர்ப்பது அல்லது ஏதோ கடமைக்குக் சாப்பிடுவது அல்லது பிசா, பர்கர் போன்ற சத்தே இல்லாத கேடுகளைச் சாப்பிடுவது. சமைக்காமலேயே எதேனும் உணவு இருக்கிறதா ? ,அதை தினமும் செய்ய முடியுமா ? . இந்தக் கேளிவிகளுக்கு பதில் , ஆம், இருக்கிறது. அந்த உணவின் பெயர் “முளைகட்டிய பயிர்” என்பதாகும்.

நிறைந்திருக்கும் சத்துக்கள் :

1ஓ கிராம் முளைகட்டிய பயிரில் காலோரில் – 30 கி, புரதம் – 3 கி, கார்போ ஹடிரேட்- 2 கி , நார்ச் சத்து – 2கி , அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் பி,சி என் மிகவும் சத்து நிறைந்த அனைவரும் சாப்பிடக் கூடிய எளிய உணவு.

செய்முறை :

பச்சை பயிரை சுமார் 12 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, தண்ணியை எடுத்துவிட்டு , சுத்தமாண துணியில் 10 மணி நேரம் கட்டி வைக்கவும்.இது காற்று படும் இடத்தில் இருப்பது நலம். இப்படிச் செய்தபின், பயிரில் முளை விட்டிருக்கும். இதனுடன் தேவையான அளவு சீரகத்தூள் , துருவிய கேரட், நறுக்கிய சின்ன/பெரிய வெங்காயம், தக்காளி , மிளகுத் தூள், உப்பு, எழுமிச்சை சாறு சேர்த்தால் சுவையான காலை உணவு தாயர். முளைகட்டிய பயிர் 3-4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

DSC07423

 முளைகட்டிய பயிர் + அவல்

அவலை ஒர் 5-10 நிமிடம் ஊறவைத்து, முளைகட்டிய பயிருடன் கலந்து சாப்பிடலாம், உடல் வெட்பத்தைக் தடுக்கும், மலச்சிக்கலை தடுக்கும், மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு எற்ற உணவு இது.

பட உதவி : இணையம் .

மைதா மாவின் தீமைகள்,…

சூடான இட்லி சாம்பார்

புரதச் சத்து பற்றிப் பேசும்போதே, புலால் உணவின் புரதத்தைப் பற்றிதான் அதிகம் சொல்கிறார்கள். சமீபகாலத்தில், செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுவன், மரத்தடி நிழலில் முளைத்த காளான்களைப் பறித்துக்கொண்டு, எதிரில் இருந்த அவனுடைய குடிசைக்குள் புகுந்தான். இதை எதற்குப் பறிக்கின்றாய் என்று அவனைக் கேட்க, ‘அம்மா பறிக்கச் சொன்னாங்க. கூட்டு செய்யத்தான்’ என்று பதிலளித்தான்.

மலைவாழ் மக்களும், சில கிராம மக்களும் பல காலமாக உணவாக உபயோகிக்கும் காளான்களை இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் உணவியல் நிபுணர்களும் மிகச்சிறந்த புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருளாக சிபாரிசு செய்கிறார்கள். இப்போது இந்தக் காளான்களை திருமண வீடுகளில்கூடப் பரிமாறுகிறார்கள். இதில் நீர்ச் சத்தும் முழுமையான புரதச் சத்தும் உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்கள் என்று எல்லா வயதினரும் இதைச் சாப்பிடலாம்.

நம் உணவில் பருப்பு வகைகள் முக்கிய அளவு புரதத்தைத் தருகின்றது. ‘ஏழையின் இறைச்சி’ என்று மேல் நாட்டினரால் அழைக்கப்படும் பருப்பு வகைகள், நம் உணவு முறையில் முக்கியத்துவம் வகிக்கிறது. பருப்பு வகையில் இறைச்சி, முட்டை, பால் ஆகிய உணவைவிட புரதத்தின் தரம் குறைவாக இருக்கலாம். ஆனால், இயற்கை நமக்கு தேவையான அளவு மற்ற உணவுகளில் பருப்பு வகைகளில் இல்லாத அமினோ அமிலங்களைப் படைத்திருக்கிறது. இயற்கைக்குத்தான் நம் மீது எத்தனை கருணை. பருப்பு மற்றும் அரிசியின் கலவையில் நாம் சமைக்கும் உணவுகள், புரத அளவிலும் தரத்திலும் முழுத்தன்மை அடைகிறது. நாம் இந்த நுணுக்கங்களை பெரிதாக ஆராயாமல் இருக்கலாம்.

அன்றாடம், சராசரி குடும்பங்களில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் உட்கொள்கிறார்கள். காலை உணவாக பிரசித்தி பெற்ற இட்லி மற்றும் தோசையின் கலவையைக் கவனிப்போம். அரிசியில் லைசீன் (lysine) குறைவாக உள்ளது. உளுந்து வகையில் மிதியோநைன் (methonine) என்ற அமிலோ அமிலம் குறைவாக உள்ளது. இவை இரண்டும் 4:1 என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து, இட்லி, தோசை என்று உபயோகிக்கும்போது தேவைக்கேற்ப புரத அளவு முழுமையாக உடலுக்குக் கிடைக்கிறது.

1980-களில் அரிசிக்கும் கோதுமைக்கும் போட்டி. 90-களில் சீரியல்ஸ் என்று பதப்படுத்தப்பட்ட தானிய வகைகள் பிரசித்தி பெற்றது. 2000-ல் காலை உணவாக வெறும் பழங்களோ அல்லது ஓட்ஸ் கஞ்சிக்கு மாறியது. இன்று 2015-ல், மறுபடியும் உலக அளவில் மிக ஊட்டச்சத்துமிக்க காலை உணவு என்று இட்லி, தோசை, பொங்கலை வரிசைப்படுத்தி உணவியல் நிபுணர்கள் அழுத்திச் சொல்கிறார்கள்.

இந்த ‘சுடச்சுட இட்லி சாம்பார்’, இவ்வளவு நல்லதை தருகிறதா என்று ஆச்சரியமாக உள்ளதா? எல்லா வகை காலை உணவுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவை தானியம் மற்றும் பருப்பு வகைகளின் கலவையில் இருந்தே தயார் செய்யப்படுகிறது. உதாரணமாக இட்லி, பொங்கல், ஆப்பம், என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் தேவையான கலோரியுடன் உடம்பின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான புரதச் சத்தும் சரிவிகிதத்தில் கொடுப்பதால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கு தெம்பும் சுறுசுறுப்பும் அளிக்கிறது.

பருப்பு வகைகள் மட்டுமின்றி பால், தயிர், இறைச்சி, மீன் வகைகள், கொட்டை வகைகள் போன்ற உணவுகளிலிருந்தும் நமக்குத் தரமான புரதம் கிடைக்கிறது. மனித வாழ்க்கையில் வளர்ச்சி அதிகம் இருக்கும் பருவம் குழந்தைப் பருவம், விடலைப் பருவம், பெண்கள் கருவுறும்போது மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் நேரம். இக்காலகட்டங்களில், உடல் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கவும் புரதம் மிக முக்கிய ஒரு பங்கை ஏற்கிறது.

பருப்பை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள இயலாதவர்கள் முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முளை கட்டிய பயிறு வகைகளைச் சாப்பிடுவதால், வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். புரதச் சத்து எளிமையாக செரிக்கக்கூடிய சத்தாக மாற்றப்படுகிறது.

=By அருணா ஷ்யாம்

நன்றி- தினமணி

இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறிய புதுக்கருவி

அழகினை தோல் நிர்ணயித்து விடுவதில்லை..!!

வறட்டு இருமலால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை – என்ன செய்வது?

வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல்
துன்பப்படுகிறீர்களா? என்னவெல்லாமோ மருந்து
சாப்பிட்டு விட்டேன்; ஆங்கில மருத்துவரிடம் சென்று
ஊசியும் போட்டாச்சு! அப்படியும் இருமல் குறைய
வில்லை! என்ன செய்யவென்றே தெரியவில்லை!
என்று வருத்தப்படுகிறீர்களா?

கொஞ்சம் சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம்
(ஒவ்வொன்றும் 30கிராம் அளவில்) எடுத்துப் பொடித்துக்
கொள்ளுங்கள். இவற்றுடன் சின்ன துண்டு சுக்கு, மல்லி,
கருப்பட்டி(கருப்புக்கட்டி) அல்லது பனங்கற்கண்டு
ஆகியன சேர்த்துக்கொள்ளுங்கள்.

200 மி.லி. நீர் சேர்த்து, பாதியாகும் அளவு நன்றாகக்
கொதிக்க விடுங்கள். ஆறிய பின்னர் மூன்று மணி
நேரத்திற்கு ஒருமுறை குடியுங்கள்! வறட்டு இருமல்
திரும்பிப் பார்க்காமல் ஓடி விடும். இரவிலும் இருமல்
தொல்லை இல்லாமல் தூங்கலாம்.

அலுவலகத்தில் இருமிக்கொண்டே இருக்கிறேன்.
பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது
என்ன செய்வது? என்று கேட்பவர்கள், கொஞ்சம் காய்ந்த
திராட்சையை (உலர் திராட்சை) வாயில் ஒதுக்கிக்
கொள்ளுங்கள். இந்த உமிழ்நீர் இறங்க, இறங்க, இருமல்
வராது.
——————————-
குறிப்பு: சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் – இ
வையெல்லாம் எங்கே கிடைக்கும் எனத் தயங்க வேண்டாம்.
நாட்டு மருந்துக் கடைகள் எல்லாவற்றிலும் இவை கிடைக்கும்.
================
சித்த மருத்துவர் சேதுராமலிங்கம்

நன்றி–கீற்று

பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது)

பிராண முத்திரை – Prana Mudra
பிராண முத்திரை Prana Mudra
பிராண முத்திரை

செய்முறை:

சுண்டு விரலையும் மோதிர விரலையும் பெரு விரலுடன் இணைக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களை நீட்டிக்கொள்ளவும்.

பயன்கள்

  • கண் பார்வை தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் நல்லது.
  • சிறு நீரகத்துக்கு நல்லது.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  • வயிற்றில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு நல்லது.

===

பாட்டி மருத்துவம்

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்

குறிப்பு:-
முகநூலில் வந்தது இங்கு. அதனால் எல்லா குறிப்புகளும் நம்பகத்தன்மை உடையவா என்று தெரியாது.

http://nalamnaadu.blogspot.in/2013/04/blog-post.html

நலமா வாழ யோக முத்திரை

விரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் சொல்லியிருக்காங்க அவை யோக முத்திரை எனப்படும். ஏன் முத்திரை என்று சொல்லக்கூடாதா என்றால் சதிர் (பரதநாட்டியம்) ஆட்டத்தில் நிறைய முத்திரைகள் உண்டு (மற்ற நாட்டியங்களிலும் முத்திரைகள் உண்டு) அவை நாட்டிய முத்திரைகள், எனவே முத்திரை என்று சொன்னால் நாட்டிய முத்திரை என்று தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவே யோக முத்திரை என்கிறோம். இந்த முத்திரைகளை செய்தால் ஒரு வாரத்திலேயே பலன்கள் தெரிய ஆரம்பிக்குமாம். நோய் முத்திப்போய் இருந்தது என்றால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம். நாள் பட செய்வது நல்லது என்கிறார்கள். முயன்று பாருங்களேன் காசு செலவு பண்ண தேவையில்லை, ஆனா நேரம் செலவு செய்யனும்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

கை விரல் குறிக்கும் மூலம்
பெரு விரல் சூரியன்
ஆட்காட்டி விரல் காற்று
பாம்பு(நடு) விரல் ஆகாயம் (வானம்)
மோதிர விரல் மண்
சுண்டு விரல் நீர்

நம்ம உடம்பு மூன்று நாடிகளால் ஆனது அவை வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்). சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர்கிட்ட போனா அவர் இதில் எது அதிகம்? எது குறை? என்று பார்த்துதான் மருத்துவம் பார்ப்பார். ஏன்னா  வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள் இவர்கள். ஐந்து பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.

அன்றாட வாழ்விலேயே இவற்றை பயன்படுத்துவோம். இப்ப பயன்படுத்துவது குறைந்து விட்டது அல்லது இல்லை எனலாம். ஊர்புறங்களில் உள்ள பெரியவர்கள் இப்போதும் இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள்.

  1. நெஞ்சில் கபம் கட்டிக்கிச்சு (நெஞ்சில் சளி கட்டிக்கிச்சு)
  2. பித்தம் தலைக்கு ஏறிடுச்சு (சூடு தலைக்கு ஏறிடுச்சு)
  3. வாதம் அதிகம் இருக்குன்னு நினைக்கிறேன் (மூட்டு வலி, கழுத்து வலி வந்தா இப்படி சொல்வார்கள்)

வானமும்(ஆகாயமும்), காற்றும் சேர்ந்து வாதமாகவும், வெப்பம் (சூரியன்) பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் அறியப்படுகின்றன.  அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்

முத்திரை பற்றி அடிப்படையான குறிப்பு

  • விரலின் நுனி பெருவிரலின் நுனியை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை ( காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) சமப்படுத்துவதாக பொருள்.
  • விரலின் நுனி பெருவிரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) குறைப்பதாக பொருள்.
  • பெருவிரலின் நுனியால் விரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) அதிகரிப்பதாக பொருள் (கவனிக்க)

கவனிக்க:
ஒரே ஒரு தளத்தில் மட்டுமே மேற்கண்ட தகவலை பார்த்தேன். வேறு எதிலும் குறிப்பிட்ட மூலத்தை அதிகரிக்க என்ற குறிப்பு இல்லை. இதற்கு காரணம் வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் நோய், அதனால் சமப்படுத்தினால் மட்டும் போதும் என்று கருதுகிறேன். சமப்படுத்தும் போதே குறைந்திருக்கும் மூலம் அதிகமாகிவிடுகிறது.

வாதம் இயக்கத்துக்கு காரணமானது. நரம்பு தொடர்பான நோய்கள், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் வாதம் சீர்கேட்டால் வரும். மூன்று நாடிகளில் வாதம் சீர்கேட்டால் வரும் நோய்களே அதிகம். 80 வகையான நோய்கள் வரும்  என்று சொல்கிறார்கள். வாதத்துக்கு அடுத்து பித்தம் இதனால் சுமார் 40 வகையான நோய்கள் வரும் என்கிறார்கள். கபம் தான் கடைசி.

வெப்பம் அதிகமானால் பித்தம் வரும், மலச்சிக்கல் இதில் முதன்மையானது. பித்தம் அதிகமானாலும் நரைக்கும், வயதாகாமல் நரை வந்தால் அது பித்த நரையாக இருக்க வாய்ப்பு அதிகம், வயிற்றில் அமிலம் சுரந்து அது வாய் வழியாக வெளிவரும்.

சளி, எச்சில் அதிகம் சுரப்பது முதலிய நீர் தொடர்பான நோய்கள் கபம் சீர்கேட்டால் வரும்.

உணவுகள்:

வாதம்
வாதத்தைக் கூட்டும் உணவு எது என்றால் அது புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.

பித்தம்
பித்தம் அதிகமாக துரித உணவு மற்றும் அதிகம் உணவகங்களில் தின்பது காரணம். (நமக்கே தெரியும் அவை நல்லதில்லை என்று).
பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்த்தால் பித்தம் கூடும். அரிசி அந்த விடயத்தில் நல்லது.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) திங்கணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க சமையலறை மட்டும் கவனித்தால் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம்

கபம்
பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தவிர்க்கவும். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை என்பவை கபத்தை குறைக்க உதவும்.

வாதம் இல்லையென்றால் மற்ற இரண்டு நாடிகளும் இயங்காது. அதனால் மூன்று நாடிகளில் வாதம் தான் ராசா.

நானும் நிறைய இடத்துல படிச்சேன் எல்லாத்துலயும் வாதம் பித்தம் கபம் அதிகரிச்சா என்ன பண்ணுவது என்று தான் போட்டிருக்கே தவிர இவை குறைஞ்சா என்ன பண்ணுவது என்று போடவில்லை. அதனால இந்த நாடிகள் மக்களுக்கு அதிகரிக்கும் மிக மிக குறைவான பேருக்கு தான் குறையும் என்று நினைக்கின்றேன். நல்ல சித்த மருத்துவர்கிட்ட கேட்கனும் அல்லது நல்ல நூற்கள் வாங்கி படிக்கனும். வாதம் பித்தம் கபம் பற்றி சிறிதளவு தெரிஞ்சிக்கிட்டோம். இந்த மூன்று நாடிகளை அதிகரிப்பது குறைப்பது சமன் செய்வது என்பது தான் முத்திரை. இப்ப முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.

முத்திரைகளை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். பலர் பல விதமா சொல்றாங்க. (24, 45, 60 நிமிடம் என்கிறார்கள்) அதனால் நாம் பொதுவாக 30 நிமிடம் என்று கொள்வோம். முத்திரைகளை எந்த நிலையிலும் செய்யலாம் அதாவது படுத்துகிட்டு, நடந்துகிட்டு, உட்கார்ந்துகிட்டு. ஆனால் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் சிறந்தது. நம்மாள அது முடியலை என்றால் சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு செய்தால் சிறப்பு, சம்மணம் போட முடியா நிலையில் உள்ளவர்கள் நாற்காலியில் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்கார்ந்து செய்யலாம். 30 நிமிடத்திற்கு குறைவாகவோ அதிகமாகவோ செய்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. 30 நிமிடமும் ஒரே மூச்சாக (இடைவெளி விடாமல்)  முத்திரை செய்தால் சிறப்பு இந்த அவசர உலகத்தில் ஒரே சமயத்தில் 30 நிமிடம் என்பது முடியாது என்று கருதுகிறீர்களா பாதகம் இல்லை, 5 நிமிடம் என்று 6 முறை இடைவெளி விட்டு செய்யலாம். முத்திரைகளை இரண்டு கையால் செய்ய வேண்டும் அது முடியாதவர்கள் ஒரு கையில் செய்யலாம்..

நமக்கு எது (வாதம், பித்தம், கபம்) குறைவு அதிகம் என்று தெரிந்து செய்தல் நலம், அதனால நாடி பார்க்க தெரிஞ்சிருந்தா சிறப்பு.

உதவி: கூகுள் ஆராய்ச்சி மூலம் கிடைத்த பல்வேறு இணைய தளங்கள், பதிவுகள், புத்தகங்கள்.

=======================

ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

—-

சென்னையில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்ப்பானங்களையும், இளநீர், நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கை பானங்களையும், குளிர்ச்சியான உணவுகளையும் தேடி செல்கிறோம்.

அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 850க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக்  கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள்.

சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள் ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

பால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடை யாது. உண்மையில் பால் அளவுக்கு ஏற்ப குடித்தால் கிட்னியில் கல் உருவாகுவதை தவிர்க்க முடியும்.

உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வாய்க்குள் நுழையாத பல நோய்களை பரிசாக அளித்து வருகின்றன. ஆண்டுதோறும் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் யுரோலாஜிஸ்ட் டாக்டர் சேகர் கூறுகையில், “சிறுநீரகத்தில் கல் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். அதை ஆரம்பக்கட்டத் திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்தி விட லாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறை களில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.

முன்பெல்லாம் சிறுநீரக கல் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிகம் ஏற்படும். ஆனால் இப்பொழுது ஆண் களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகை யவர்கள் கோடைக்காலத்தில் ஸ்கேன் எடுத்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்க முடியும். தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பி லிருந்து தப்பிக்கலாம்.

இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கள் ஏற்படுவதை தடுக்க முடியும். தமிழகத்தை விட வடஇந்தியா பகுதிகளில் சிறுநீரக கல் பாதிப்பு அதிக மாக இருக்கிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்த பாதிப்பு இருக்கிறது” என்றார்.

– எஸ்.மகேஷ்

நன்றி- விகடன்

« Older entries