‘மீம்’மழை போற்றுதும்: இணையத்தை நனைத்த பகிர்வுகள்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதையடுத்து மீம்மகன்கள், தங்கள் மீம்களால் மழையை வரவேற்று வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான மீம்கள் சிரிக்கவும், சில சிந்திக்கவும் வைக்கின்றன. இணையத்தில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட மீம்மழைகளில் சில துளிகள்…

=================
தமிழ் தி இந்து காம்

விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி?

பண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை.
அது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன.
பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.
ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்
1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.
2. விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்” தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.
3. அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.
4. சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.
5. விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.
6. ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.
7. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.
8. அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.
9. விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.
மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.
 
நன்றி: இதயபூமி
anthimaalai.blogspot.sg/2012/06/blog-post_07.html
படங்கள் – இணையம்

ஒன் ஸ் மோர்

புத்தகப் பிரியர்களை நாமெல்லாம் புத்தகப் புழுக்கள் என்று
கூறுவதுண்டு. அதுவும் ஒருவகையில் சரிதான்.
மண்புழுக்கள் எப்படி மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்தைப்
பண்படுத்துகின்றனவோ அப்படிப் புத்தகப் புழுக்களும் நம்மைப்
புரட்டிப் போட்டு தம் மனத்தைப் பண்படுத்திக் கொள்வதோடு
சமூகத்தையும் பண்படுத்த உதவுகின்றனர்.

பெட்ரண்ட் ரஸ்ஸல் தன்னுடைய கல்லறையில் தன்னை ஒரு
புத்தகப் புழுவென்று எழுதி வைக்க வேண்டியதாய் கூறுவார்கள்.
நல்ல நூல்கள் நம் எல்லாரையும் “”படி படி” என்று படிக்கத்
தூண்டுகின்றன.

ஒருமுறை உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக
அரங்கத்தின் படிகளில் மெல்ல ஏறிக் கொண்டிருந்தபோது
உதவிக்கு வந்த சிறுவன் ஒருவன் அவர் கவனமாகப் படியேற
வேண்டும் என்ற நோக்கில், “”தாத்தா… படி… தாத்தா படி…” என்று
நினைவூட்டிக் கொண்டிருந்தான்.

“”நிறைய படித்துக் கொண்டிருக்கிற நான் படிப்பதை நிறுத்தி
விடக்கூடாது என்ற நோக்கில் அந்தச் சிறுவன் என்னை “”தாத்தா
படி, தாத்தா படி” என்று படிக்க நினைவூட்டிக் கொண்டு வந்தான்
என்று விளையாட்டாகச் சொல்லி மகிழ்ந்த செய்தி ஒன்று உண்டு.

நம்மைச் சிலிர்க்கச் செய்யும் ஒரு வரலாற்றுச் செய்தி.
சீன யாத்திரிகர் யுவான் சுவாங் அரிய புத்தகங்கள் பலவற்றோடு
ஹுப்ளி நதியில் படகில் பயணிக்கிறார். படகில் எடை அதிகமாய்
இருப்பதால் மூழ்கும் அபாயம். படகோட்டி பாரத்தைக் குறைப்பதற்குச்
சில புத்தகங்களை நதியில் வீச வேண்டியபோது, “”புத்தகங்களை
வெளியே வீச வேண்டாம்” என்று தடுத்து விட்டுத் தாமே
படகிலிருந்து குதித்து நதியில் நீந்தி வந்திருக்கிறார் யுவான் சுவாங்.

புத்தகங்களைக் காப்பதில் அவருக்கிருந்த இந்த அக்கறையும்
நிகழ்ச்சியும் உலகறிந்த வரலாற்றுச் செய்தியாகும்.

கேரளத்துப் பெரியார் என்று அழைக்கப்படும் ஆன்மிகப் புரட்சியாளர்
நாராயண குரு அவர்கள்கூட திருப்புகழ், திருமந்திரம், திருக்குறள்
போன்ற நூல்களை வாங்குவதற்காகக் கூலி வேலை செய்தார்
என்று கேள்விப்படுகிறோம்.

உவமைக் கவிஞர் சுரதா அவர்களும் புத்தகங்கள் திரட்டுவது,
படிப்பது என்று தன் பெரும்பகுதி வாழ்வைக் கழித்தவர்.
அவர் வீடு முழுக்கப் புத்தகங்கள்தாம். அவருடைய அறைக்
கட்டிலைப் புத்தகங்களும் செய்தித்தாள்களுமே ஆக்கிரமித்திருக்கும்.
அவர் கீழே தரையில் படுத்திருப்பார். புத்தகங்கள் கட்டிலில்
படுத்திருக்கும்!

ரஷ்ய அதிபர் லெனின் தன் பிறந்த நாளின்போது புத்தகங்களைத்தான்
பரிசளிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும்
அன்பு வேண்டுகோள் விடுத்ததாய்க் கூறுவதுண்டு. அப்படிச் சேகரித்த
புத்தகங்கள்தாம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகத்தை
நிரப்பியிருக்கிறதாம்!

பெர்னாட்ஷா தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை லண்டன்
நூலகத்தில் கழித்ததாகக் கூறுவர். தொடக்க காலங்களில் வறுமை
காரணமாக நல்ல ஆடைகள் அவருக்குக் கிடையாது.

பொது இடங்களில் காணப்படுவதைவிட நூலகங்களில் அடைபட்டுக்
கிடத்தல் நல்லதெனச் சொல்லத் தொடங்கியவர் நாளடைவில் படிப்பு
ருசியில் படித்ததன் விளைவாக எழுதும் உந்துதலைப் பெற்றாராம்.

அதேபோன்று அறிஞர் இங்கர்சாலை வீட்டை விட்டு ஒருநாள்
துரத்தியிருக்கிறார்கள். ஒரு நூலகம்தான் அவருக்கு அடைக்கலம்
கொடுத்துள்ளது.

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மேற்படிப்புக்காக லண்டன்
சென்றபோது, “”எங்கே தங்க வேண்டும்?” என்று நண்பர்கள் கேட்ட
போது, “”எங்கு தங்கினாலும் தங்குகிற இடத்துக்கு அருகே ஒரு
நூலகம் இருக்க வேண்டும்” என்று வேண்டியிருக்கிறார்!

கோகலே தம்முடைய திருமணத்தின்போது, “”வரதட்சிணை வேண்டாம்.
உங்கள் திருப்திக்காகக் கொடுக்க விரும்பினால் நூல்களாகவே
கொடுத்து விடுங்கள்” என்று வேண்டியதாகச் சொல்வதுண்டு.

எம்.ஜி.ஆர். நூல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
அவருடைய வீட்டில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்தது.
தன்னம்பிக்கை எழுத்தாளர் அப்துற் ரஹீம் நூலகம் திறக்கும்போது
முதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியே
வருவார்!

இப்படிப் புகழ் வாய்ந்த பெருமக்கள் வாழ்வில் நூல்களும், நூலகங்களும்
பெரிதும் தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. கொடுங்கோலனாக
விளங்கிய ஹிட்லர்கூட லண்டன் மீது படையெடுத்தபோது,
“”லண்டன் நூலகத்தை அழித்து விடாதீர்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
நூலகங்களைக் கவியரசர் கண்ணதாசன் “ஞானவான்கள் வாழும் ஆலயம்’
என்பார்.

“”அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்” என்பார் கவிஞர் வைரமுத்து.
புத்தகங்களைப் பாதுகாப்பதென்பது ஒரு புதையலைக் காப்பதற்கு ஒப்பானது.

———————————————-

கேசி
தினமணி கதிர்

அருமை..

டப்…டப்…லேப்டாப்

ஜடை அழகு…

‘டிப்ஸ்’ விருந்து –

கிராமத்துப் பழமொழி

மொழி அறிவோம்: கத்திரிகோல் , கத்தரிகோல் எது சரி ?

கத்திரிகோலா ? கத்தரிகோலா?
நிறைய சந்தர்ப்பங்களில் SCISSORS என்பதைக் குறிக்க
கத்திரிகோல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
சில இடங்களில் கத்தரிகோல் என்ற சொல் கையாளப்படுகிறது.

இந்த இரண்டில் எது சரி ?
கத்தரிகோல் என்பதே சரி. கத்திரிகோல் என்பது தவறு.
ஏன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கத்தரிப்பது என்பது தான் கத்தரிகோல் செய்யக்கூடிய
தொழில். கோல் என்பது இவ்விடத்தில் கருவி என்ற பொருளில்
வருகிறது.

கத்தரிக்கப் பயன்படும் கோல் என்பதைக் குறிக்கவே
கத்தரிகோல் என்ற சொல் உருவாக்கப்பட்டது, இதற்கு மாறாக
கத்திரிகோல் என்று எழுதினால் அது பல மாறுபட்ட
அர்த்தங்களை தந்துவிடும்.

ஏனெனில் கத்திரி என்பது வெயிலைக் குறிக்கும்.
ஆதலால் கத்திரிகோல் என்று எழுதுவது தவறு.
கத்தரிகோல் என்று எழுதுவதே சரி.
===================
புதிய தலைமுறை டி.வி
ள்: 14045
மதிப்பீடுகள்: 3882

View user profile Send private message

அறுவடைதெய்வங்கள்

« Older entries