வங்கக்கடலில் 18 மணி நேரத்தில் உருவாகும் புயல்…

செய்திகள் – பல்சுவை

ஐ.பி.எல்.: தகுதி சுற்றில் குஜராத்தை வீழ்த்தி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை!

ஜேசிபி-யில் திருமண ஊர்வலம்… மணமகன் உருக்கம்!

உலக ஹோமியோபதி தினம் – ஏப்லர் 10

-தினத்தந்தி-(மாணவர் ஸ்பெஷல்)

காய்ச்சல், மூச்சுவிட சிரமம் இருந்தால்..? – இன்ப்ளூயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் இன்ப்ளூயன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வரும்
நிலையில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பரவி வரும்
இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் தமிழகத்திலும் பரவியுள்ளது.
நாடு முழுவதும் இந்த காய்ச்சலுக்கு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில்
பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள்
இதனால் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சலை தடுக்க தேவையான
நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் இன்ப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு
நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு
இன்ப்ளூயன்சாவுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட
வேண்டும்.

காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்கள் 7 நாட்கள் வரை வீட்டிலேயே
தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

லேசான காய்ச்சல், அறிகுறிகள் கொண்டவர்கள், தீவிர காய்ச்சல்
அதிக இருமல் கொண்டவர்கள் என 2 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த
குறைவு உள்ளிட்ட தீவிர பாதிப்பு உள்ள சி வகையினர் உடனடியாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனை
செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், மூச்சு விட சிரமம் இருந்தால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 104 மற்றும் 108 ஆகிய எண்களை
தொடர்பு கொண்டு இன்ப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பான
சந்தேகங்கள், ஆலோசனைகளை 24 மணி நேரமும் பெறலாம்.

மருத்துவமனை ஊழியர்கள் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்
கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள், இணை நோய் உள்ளவர்களும்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.

மருத்துவமனைகளில் ஆய்வகங்கள், காய்ச்சல் பிரிவில் பணிபுரிவோர்
என்95 முகக்கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை நெறிமுறைகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ் வெப்துனியா

நாட்டு நடப்பு

அந்துமணி-சிந்துமணி

-முரசொலி

கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா.சபை விளக்கம்

‘பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம்’ – குஜராத் மாநிலத்தில் அறிவிப்பு

 'பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம்' - எந்த மாநிலத்தில் இந்த அறிவிப்பு? 147724

குஜராத்தில் உள்ள பள்ளிகளில், 6 முதல் +2 வரையிலான வகுப்புகளின்
பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதாக அம்மாநில அரசு
அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான
பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், குஜராத்தில் 6 முதல் 12 ஆம்
வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க
அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய
கலாச்சாரம் மற்றும் அறிவியலை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க
வேண்டும்.

அந்த வகையில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்களில்
பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும். மாணவர்களுக்கு பகவத் கீதையின்
முக்கியத்துவம் பற்றி கூறப்படும். பின்னர், கதைகள், ஸ்லோகங்கள்,
பாடல்கள், கட்டுரைகள், விவாதங்கள், நாடகங்கள், வினாடி வினாக்கள்
போன்ற வடிவங்களில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும்” எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி குஜராத் கல்வித்துறை மந்திரி ஜிது வகானி கூறுகையில்,
”பகவத் கீதையின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை அனைத்து
மதத்தினரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

பகவத் கீதையை அறிந்து கொள்ளவும், மாணவர்களிடையே அது
குறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் பாடத் திட்டத்தில்
பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன், மத்தியப்பிரதேசத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில்
ராமாயணம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதியதலைமுறை

1000 ஆண்டு பழமையான பைரவர் சிலை கண்டெடுப்பு

தமிழ் முரசு

« Older entries