முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது

திருமுருக கிருபானந்த வாரியார்

பேராசிரியர் ரா.மோகன் எழுதிய, ‘நகைச்சுவை நாயகர்கள்’
நுாலிலிருந்து:

கிருபானந்த வாரியார், எதையும் நகைச்சுவையாக சொல்வதில்
வல்லவர்.

முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது என
கூறுகையில், ‘முருகன், நாம் கேட்டதை எல்லாம் தரும்
வள்ளல். வள்ளல் என்பது ஆண் பால். அதன்
பெண் பால் தான், வள்ளி. ஆக, முருகனின் மனைவி,
அதாவது, வள்ளலின் மனைவி, வள்ளியானார்…

‘அதேபோல், இல்லாள்… இல்லத்தை ஆள்பவள்.
பெண் பாலாகத்தான் குறிப்பிடுகிறோம். இதையே
ஆண் பாலாக குறிப்பிட முடியுமா… அப்படி குறிப்பிட்டால்,
‘இல்லான்’ ஆகி விடுவார்.

பொருள்: எதுவுமே இல்லாதவன் என்பதாகும்.

‘இதனால், மனைவி, இல்லத்தை ஆள்பவள் என்பதை
உணர்ந்து தான், பிச்சைக்காரன் கூட, ‘அம்மா… பிச்சை…’
என்று கேட்கிறான். ‘அய்யா… பிச்சை…’ என, கேட்பதில்லை…

‘நம் புராணங்களில், மன்மதன் உண்டு; அவனை, காமன்
என, அழைப்பர். இவன், காதல் மன்னன். இவனுடைய
அருள் இருந்தால் தான், மனிதர்களுக்கு சிருங்கார
உணர்வே வரும். இவனுக்கு ஏன், காமன் என பெயர்
தெரியுமா… எல்லா மதங்களிலும், நாடுகளிலும் காதல்
தேவன் உண்டு. ஆக, அவன் பொது. இதை ஆங்கிலத்தில்,
‘Common’ என, அழைப்பர். தமிழிலும், காமன். புரிந்ததா?’
என்றார்.

——————————–
நடுத்தெரு நாராயணன்
திண்ணை -வாரமலர்

சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை

எழுத்தாளர் ரெ.சண்முக வடிவேல் எழுதிய, ‘தமிழ் வளர்த்த
சான்றோர்கள்’ நுாலிலிருந்து:

சாலமன் பாப்பையா தலைமையேற்று நடத்திய,
ஒரு பட்டிமன்றத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி:

ஒருமுறை, ஒரு அம்மையார் தொடர்பே இல்லாமல்,
அவருக்கு தெரியும் என்பதற்காக, பாட்டு பாடினார்.
சாலமன் பாப்பையா, பட்டி மன்றங்களில் இப்படி
பாட்டு கேட்பது அரிது. அவர் அதை தவிர்ப்பார்.

இருந்தும், இந்த அம்மையார், ‘சிட்டுக் குருவி சிட்டுக்
குருவி சேதி தெரியுமா… என்னை விட்டுப் பிரிந்து
போன கணவர் வீடு திரும்பலே…’ என்ற பாடலை,
பாடினார்.

உடனே, பாப்பையா குறுக்கிட்டு, ‘புண்ணியவான்
குடுத்து வச்சவன்; ஓடிப்போயிட்டான்…’ எனக் கூற,
சபையே சிரிப்பால் அதிர்ந்தது.

———————
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

மரணத்தின் பல வகைகள்

கணக்கு பரீட்சையில் அதெல்லாம் வராது…!! – வாட்ஸ் அப் பகிர்வு

இது வாட்ஸ் அப் கலக்கல் ELARGE_20200131174438810269
இது வாட்ஸ் அப் கலக்கல் ELARGE_20200201071906838371
இது வாட்ஸ் அப் கலக்கல் ELARGE_20200202163558569988
இது வாட்ஸ் அப் கலக்கல் ELARGE_20200204191120639053
இது வாட்ஸ் அப் கலக்கல் ELARGE_20200208130528965601
இது வாட்ஸ் அப் கலக்கல் ELARGE_20200209121828788583

குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…!

தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு

sushmita-sen-instagram-post-her-adopted-daughter

தத்தெடுப்பது பற்றி தனது மகள் எழுதிய கட்டுரையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகை சுஷ்மிதா சென்.

முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் அழகியான சுஷ்மிதா சென், ‘பிவி நம்பர் ஒன்’, ‘தஸ்தக்’, ‘மெய்ன் ஹூன் நா’, தமிழில் ‘ரட்சகன்’, ‘முதல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

தனது 24-வது வயதில் 2000-ல் ரெனீ என்ற பெண் குழந்தையை சுஷ்மிதா தத்தெடுத்தார். 10 ஆண்டுகள் கழித்து 2010-ல், அலிசா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்தார்.

இப்போது 10 வயதான அலிசா, தத்தெடுப்பது குறித்து பள்ளியில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் அந்தக் கட்டுரையைப் படித்துக் காட்டும் வீடியோவை சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக கட்டுரையைப் படித்து முடிக்கும் அலிசா, தான் இந்தக் கட்டுரையைத் தனது கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தை வைத்து சொந்தமாக எழுதியதாகத் தெரிவித்துள்ளார்.

‘நீங்கள் வாழ்க்கையைக் கொடுத்தது ஒரு முறை. எப்படி என்றால், நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்’ என்ற கட்டுரையின் வரி தன்னை மிகவும் கவர்ந்தது என்று குறிப்பிட்டுள்ள சுஷ்மிதா, இந்தக் கட்டுரை தனக்குக் கண்ணீரை வரவழைத்தது என்று கூறியுள்ளார்.

தன் மகள்களை இதயத்திலிருந்து பிறந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார் சுஷ்மிதா சென். தனது முதல் மகள் ரெனீயிடம், அவர் தத்தெடுக்கப்பட்டது குறித்துச் சொன்னபோது, அனைவருமே வயிற்றிலிருந்து பிறக்கிறார்கள். நீ விசேஷமானவள், நீ இதயத்திலிருந்து பிறந்தாய் என்று கூறியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.


நன்றி-இந்து தமிழ் திசை {வெற்றிக்கொடி}

பிரேம்கள் ரொம்ப அழகு

நீங்கள் விரும்பியபடி உங்கள் மனமே இயங்காதபோது…

ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன செய்தி:

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி:

வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.
நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.
நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி ஒரே நேரம்தான் காட்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி !

வாட்ஸ் அப் பகிர்வு

பல்சுவை கம்பம் – தொடர் பதிவு-1

« Older entries