அப்படீங்களா!


ஒரு வாள், அதற்கு வயது 1260.

ரொம்பப் பழையது என்பதால் இற்றுப் போயிருக்கும்
என்று நினைத்துவிடாதீர்கள். இப்போது சாணை பிடித்தாலும்,
தலையை வெட்டும் அளவுக்கு வலிமையானதாக இருக்கிறது.
இத்தனை ஆண்டுகளானாலும் எப்படி இற்றுப் போகாமலிருக்கிறது?

அது இருந்த இடம் அப்படி.

நார்வே நாட்டில் உள்ள ஓஸ்லோ நகரிலிருந்து 250 கி.மீ.
தொலைவில் உள்ளது ஹாகெலி. மீன் பிடித்தலும், வேட்டையாடுதலும்
அந்தப் பகுதிக்கேயுரிய சிறப்புகள். அங்கு உள்ள மலைப்பகுதியில்
தான் இந்த வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த மலைப் பகுதியில் ஓர் ஆண்டில் ஆறு மாதம் உறை பனியாக
இருக்கும். மீதி ஆறுமாதங்களில் காற்றில் ஏகப்பட்ட ஈரப்பதம்
இருக்கும். இந்த வெப்பநிலைதான் அந்த வாள் இத்தனை
ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாமல் இருக்கக் காரணம்
என்கிறார்கள்.

நார்வேயில் உள்ள ஊர்சுற்றி ஒருவர் இந்தப் பகுதிக்கு வந்தபோது
சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருக்கிறார். அப்போது
அந்த மலைப்பகுதிக்குச் செல்லும்போது, பாறைகளுக்கு இடையே
அந்த வாளைக் கண்டெடுத்திருக்கிறார்.

அந்த வாள் 30 அங்குல நீளம் உள்ளது. தற்போது அந்த வாள்
பெர்ஜெனில் உள்ள பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

என்.ஜே., சென்னை-69.

——————————
தினமணி கதிர்

அனுபவங்கள் சொல்கின்றன…!

anubavam.jpg

நெல்லை பாதுகாப்போம்..

page0116_i2.jpg-1.jpg

 

 

இனி பெண்களும் லுங்கி அணியலாம்!

Women longer wear Lungi!

நன்றி குங்குமம் தோழி

ஃபேஷன்

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ‘லுங்கி டான்ஸ்’ பாடல், ‘மான் கராத்தே’ படத்தின் ‘டார்லிங்கு டம்பக்கு’ பாடலில்  ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்… இதோ அடுத்தகட்ட விளைவு. திருப்பூர் நிஃப்ட் காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன் மாணவிகளின்
முயற்சியில் லுங்கிக்கு இப்போது யுனிவர்சல் அங்கீகாரம்!

ஆண்களால் ரிலாக்ஸாக மட்டுமே அணியப்பட்டு வந்த லுங்கி, இப்போது பெண்களின் கைகளில் எக்கச்சக்க அவதாரங்கள்  எடுத்துள்ளது. லுங்கியில் விதம் விதமான பேன்ட், டாப்பாக அணிந்து ெகாள்ள அந்தக்கால சல்வார் முதல் இந்தக்கால ஷார்ட்  டாப் வரை விதம் விதமாக வடிவமைத்து அசரடித்து இருக்கிறார்கள். ‘அதுக்கும் மேலே’ யோசித்து லுங்கியில் ஃபிஷ் கட்  உள்ளிட்ட பார்ட்டி வியர், பிரைடல் கார்மென்ட்ஸ் என லுங்கியில் இவ்வளவு டிசைன்களா என மெய்சிலிர்க்க  வைத்திருக்கின்றனர்!

‘லுங்கி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்தால், சர்வதேச அளவில் புதிய உடை வகைகளை உருவாக்கி மார்க்கெட்டிங்  செய்யலாம். இது மிகப்பெரிய சாதனைப் பயணத்துக்கான ஸ்டார்ட்டிங் பாயின்ட்’ என்கின்றனர் லுங்கியைப் பிரித்து மேய்ந்து  கிறுக்குத்தனமான கிரியேட்டிவிட்டிக்கு சவால் விட்டு சாதித்திருக்கும் இந்த ஃபேஷன் பிசாசுகள்!

‘லுங்கியில் எதையாச்சும் புதுசா யோசிக்கலாமே’ என்று கொளுத்திப் போட்டது டிசைனிங் எக்ஸ்பெர்ட் பூபதி விஜய். ஏன் இந்த  கொலவெறி என பூபதியிடம் கேட்டோம்.  ‘‘நம்ம ஊரைப் பொறுத்தவரை லுங்கி இரவு உடை. இரவை மட்டுமே பார்த்த லுங்கி  இனி பகலிலும் வலம் வரும் பார்ட்டி வேராக மாறப் போகுது. தென்னிந்திய அளவில் தேடிப் பிடித்ததில் லுங்கியில் பல டிசைன்கள் கிடைத்தன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாடர்ன் உடைகளை லுங்கியில்  யோசிக்கச் சொன்னேன்.

அப்படிக் கிடைத்ததுதான் இந்த வெற்றி. லுங்கியை வைத்து புதுவிதமாக உடைகள் தயாரிக்கும் போது அதன் மதிப்பு கூடுகிறது.  மிகக்குறைந்த செலவில் புதிய உடைகளை உருவாக்கலாம். அணியவும் சாஃப்டாக இருக்கும். பராமரிப்பதும் எளிது. இன்றைய  இளைஞர்களின் விருப்பத்துக்கும் ஈடுகொடுக்கும். இதற்கு சர்வதேச அளவில் மார்க்கெட் உருவாக்கலாம். லுங்கி மார்டன்  உடையாக அவதாரம் எடுக்கும் வரை கடக்கும் பயணத்தில் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். லுங்கி டிசைனர் உடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, பலதரப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  விரைவில் லுங்கி பெண்கள் உடையாக எங்கும் அவதரிக்க உள்ளது’’ என்கிறார் பூபதி.

‘‘லுங்கி ரொம்ப சாஃப்ட். அணிந்து கொள்ள இதமானது. டாப்புடன் வேஸ்ட் கோட் சேர்த்து அணிவது போல வடிவமைத்தேன்.  இதுபோன்ற லுங்கி மிக்சிங் உடைகளுக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கும். தயாரிப்புச் செலவு குறைவு. யாரும் எளிதில் வாங்கி  அணிந்து கொள்ள முடியும். யூத் டிரெண்டையே அலேக்காக மாற்றும் அற்புத வித்தை லுங்கிக்கு இருக்கு. உள்நாட்டில் மட்டும்  இல்லாம சர்வதேச அளவில் அந்தந்த நாடுகளில் கலாசாரத்துக்கு ஏற்ற புது வித உடைகளில் புதுமை செய்யலாம். புதுசா  யோசிக்கிறவங்களுக்கு நிறைய கான்செப்ட் கிடைக்கும்’’ என்கிறார் அர்ச்சனா.

லுங்கியில் கேதரிங் பேன்ட் வடிவமைத்திருக்கிறார் நந்தினி. ‘‘இப்படியொரு கலக்கல் ஐடியா பயங்கர எனர்ஜிடிக்கா இருக்கு. இப்போ எதையும் கிறுக்குத்தனமா யோசிக்கணும்… சீக்கிரம் போரடிச்சிடாம இருக்க மறுபடி மறுபடி புதுமைகள் செய்யணும். டிசைனிங்கில் புதுசா யோசிக்க லுங்கி வசமாக சிக்கியது எங்கள் கையில். இது நம்ம நேட்டிவிட்டியோட அடையாளம். ஈசியா உற்பத்தி செய்யவும் முடியும். குழந்தைகள், சிறுவர்கள், டீன் ஏஜ், சீனியர் சிட்டிசன்… இப்படி வயதுக்கு ஏற்ற புதுவித உடைகள் லுங்கியில் பின்னியெடுக்கப் போறோம்’’ என்கிறார்  நந்தினி. லுங்கியை வைத்து பிரித்வி செய்திருப்பது பிரைடல் டிரஸ்.

‘‘பிரெஞ்சு பிரைடல் டிரஸ்ஸில் லுங்கியை அங்கங்கே டிசைன் செய்தேன். இன்டர்நேஷனல் லெவல் பார்ட்டி வேர்களை இதில்  டிசைன் செய்ய முடியும். கண்டிப்பாக ஹிட் ஆகும். இதுவரை கிராமப்புற உடையாகவே பார்க்கப்பட்ட லுங்கி பத்தின  மைண்ட்செட்டையே மாற்றி விட்டது இந்த கான்செப்ட். வித்தியாசமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களை லுங்கியில்  கொண்டு வர முடியும். இது இன்னும் பல உயரங்களை கண்டிப்பா எட்டும். லுங்கி நிறுவனங்களுக்கும் புது வாய்ப்பு கிடைக்கும்’’  என்கிறார் பிரித்வி.

‘‘எனக்கென்னவோ காலம் காலமா ஆணுக்கான உடையாகவே பார்க்கப்பட்ட லுங்கியில், பெண்களுக்கான உடைகளை  உருவாக்கியிருப்பது ஆணாதிக்கத்தையே உடைத்த மாதிரி இருக்கு’’ என்று தொடங்குகிறார் அபிநயா, ‘‘முதலில் நான் அழகா இருக்கணும்… என்னைச் சுற்றியிருக்கும் உலகமும் அழகாயிருக்கணும். இதுதான் என்னோட சிம்பிள் கான்செப்ட். லுங்கியை எங்க கையில் கொடுத்தப்போ அதில் ஃபெமினிசத்தோட அடையாளத்தையும் பார்த்தேன். ஆண்மைக்குள்ளும் பெண்மை இருக்குன்னு கவிதைல சொல்வாங்களே. அதுபோலத்தான் இதுவும். லுங்கியை ஆண்கள் மட்டும்தான் அணியணுமா? லுங்கி பெண்கள் கைக்கு மாறினால் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதில் எம்ராய்டரி உள்ளிட்ட கை வேலைப்பாடுகளை சேர்க்கும் போது ரிச் லுக் கொடுக்க முடியும். பெண்கள் உலகத்தை உள்ளும் புறமும் மாற்றிப் போடும் வித்தை இந்த கான்செப்ட்ல இருக்கு’’ என்கிறார் அபிநயா. ‘‘லுங்கி என்பது இரவு மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட உடையாகத்தான் இருந்து வந்தது. லுங்கியில் மாடர்ன் டிரஸ் வடிவமைத்தாலும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடியதாக இருக்கும். எல்லாப் பெண்கள் உடையிலும் லுங்கியை கலந்து கட்டி டிசைன் பண்ணலாம். ெதாழில் முனைவோர் அவதாரம் எடுக்கிற பெண்களுக்கும் இது வரமா அமையும்’’ என்கிறார் ரம்யா. உடுத்தித்தான் பார்ப்போமே!

– எஸ்.ஸ்ரீதேவி

லுங்கி ஆல்பம் காண:

 

 

‘மீம்’மழை போற்றுதும்: இணையத்தை நனைத்த பகிர்வுகள்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதையடுத்து மீம்மகன்கள், தங்கள் மீம்களால் மழையை வரவேற்று வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான மீம்கள் சிரிக்கவும், சில சிந்திக்கவும் வைக்கின்றன. இணையத்தில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட மீம்மழைகளில் சில துளிகள்…

=================
தமிழ் தி இந்து காம்

விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி?

பண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை.
அது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன.
பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.
ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்
1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.
2. விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்” தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.
3. அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.
4. சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.
5. விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.
6. ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.
7. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.
8. அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.
9. விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.
மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.
 
நன்றி: இதயபூமி
anthimaalai.blogspot.sg/2012/06/blog-post_07.html
படங்கள் – இணையம்

ஒன் ஸ் மோர்

புத்தகப் பிரியர்களை நாமெல்லாம் புத்தகப் புழுக்கள் என்று
கூறுவதுண்டு. அதுவும் ஒருவகையில் சரிதான்.
மண்புழுக்கள் எப்படி மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்தைப்
பண்படுத்துகின்றனவோ அப்படிப் புத்தகப் புழுக்களும் நம்மைப்
புரட்டிப் போட்டு தம் மனத்தைப் பண்படுத்திக் கொள்வதோடு
சமூகத்தையும் பண்படுத்த உதவுகின்றனர்.

பெட்ரண்ட் ரஸ்ஸல் தன்னுடைய கல்லறையில் தன்னை ஒரு
புத்தகப் புழுவென்று எழுதி வைக்க வேண்டியதாய் கூறுவார்கள்.
நல்ல நூல்கள் நம் எல்லாரையும் “”படி படி” என்று படிக்கத்
தூண்டுகின்றன.

ஒருமுறை உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக
அரங்கத்தின் படிகளில் மெல்ல ஏறிக் கொண்டிருந்தபோது
உதவிக்கு வந்த சிறுவன் ஒருவன் அவர் கவனமாகப் படியேற
வேண்டும் என்ற நோக்கில், “”தாத்தா… படி… தாத்தா படி…” என்று
நினைவூட்டிக் கொண்டிருந்தான்.

“”நிறைய படித்துக் கொண்டிருக்கிற நான் படிப்பதை நிறுத்தி
விடக்கூடாது என்ற நோக்கில் அந்தச் சிறுவன் என்னை “”தாத்தா
படி, தாத்தா படி” என்று படிக்க நினைவூட்டிக் கொண்டு வந்தான்
என்று விளையாட்டாகச் சொல்லி மகிழ்ந்த செய்தி ஒன்று உண்டு.

நம்மைச் சிலிர்க்கச் செய்யும் ஒரு வரலாற்றுச் செய்தி.
சீன யாத்திரிகர் யுவான் சுவாங் அரிய புத்தகங்கள் பலவற்றோடு
ஹுப்ளி நதியில் படகில் பயணிக்கிறார். படகில் எடை அதிகமாய்
இருப்பதால் மூழ்கும் அபாயம். படகோட்டி பாரத்தைக் குறைப்பதற்குச்
சில புத்தகங்களை நதியில் வீச வேண்டியபோது, “”புத்தகங்களை
வெளியே வீச வேண்டாம்” என்று தடுத்து விட்டுத் தாமே
படகிலிருந்து குதித்து நதியில் நீந்தி வந்திருக்கிறார் யுவான் சுவாங்.

புத்தகங்களைக் காப்பதில் அவருக்கிருந்த இந்த அக்கறையும்
நிகழ்ச்சியும் உலகறிந்த வரலாற்றுச் செய்தியாகும்.

கேரளத்துப் பெரியார் என்று அழைக்கப்படும் ஆன்மிகப் புரட்சியாளர்
நாராயண குரு அவர்கள்கூட திருப்புகழ், திருமந்திரம், திருக்குறள்
போன்ற நூல்களை வாங்குவதற்காகக் கூலி வேலை செய்தார்
என்று கேள்விப்படுகிறோம்.

உவமைக் கவிஞர் சுரதா அவர்களும் புத்தகங்கள் திரட்டுவது,
படிப்பது என்று தன் பெரும்பகுதி வாழ்வைக் கழித்தவர்.
அவர் வீடு முழுக்கப் புத்தகங்கள்தாம். அவருடைய அறைக்
கட்டிலைப் புத்தகங்களும் செய்தித்தாள்களுமே ஆக்கிரமித்திருக்கும்.
அவர் கீழே தரையில் படுத்திருப்பார். புத்தகங்கள் கட்டிலில்
படுத்திருக்கும்!

ரஷ்ய அதிபர் லெனின் தன் பிறந்த நாளின்போது புத்தகங்களைத்தான்
பரிசளிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும்
அன்பு வேண்டுகோள் விடுத்ததாய்க் கூறுவதுண்டு. அப்படிச் சேகரித்த
புத்தகங்கள்தாம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகத்தை
நிரப்பியிருக்கிறதாம்!

பெர்னாட்ஷா தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை லண்டன்
நூலகத்தில் கழித்ததாகக் கூறுவர். தொடக்க காலங்களில் வறுமை
காரணமாக நல்ல ஆடைகள் அவருக்குக் கிடையாது.

பொது இடங்களில் காணப்படுவதைவிட நூலகங்களில் அடைபட்டுக்
கிடத்தல் நல்லதெனச் சொல்லத் தொடங்கியவர் நாளடைவில் படிப்பு
ருசியில் படித்ததன் விளைவாக எழுதும் உந்துதலைப் பெற்றாராம்.

அதேபோன்று அறிஞர் இங்கர்சாலை வீட்டை விட்டு ஒருநாள்
துரத்தியிருக்கிறார்கள். ஒரு நூலகம்தான் அவருக்கு அடைக்கலம்
கொடுத்துள்ளது.

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மேற்படிப்புக்காக லண்டன்
சென்றபோது, “”எங்கே தங்க வேண்டும்?” என்று நண்பர்கள் கேட்ட
போது, “”எங்கு தங்கினாலும் தங்குகிற இடத்துக்கு அருகே ஒரு
நூலகம் இருக்க வேண்டும்” என்று வேண்டியிருக்கிறார்!

கோகலே தம்முடைய திருமணத்தின்போது, “”வரதட்சிணை வேண்டாம்.
உங்கள் திருப்திக்காகக் கொடுக்க விரும்பினால் நூல்களாகவே
கொடுத்து விடுங்கள்” என்று வேண்டியதாகச் சொல்வதுண்டு.

எம்.ஜி.ஆர். நூல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
அவருடைய வீட்டில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்தது.
தன்னம்பிக்கை எழுத்தாளர் அப்துற் ரஹீம் நூலகம் திறக்கும்போது
முதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியே
வருவார்!

இப்படிப் புகழ் வாய்ந்த பெருமக்கள் வாழ்வில் நூல்களும், நூலகங்களும்
பெரிதும் தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. கொடுங்கோலனாக
விளங்கிய ஹிட்லர்கூட லண்டன் மீது படையெடுத்தபோது,
“”லண்டன் நூலகத்தை அழித்து விடாதீர்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
நூலகங்களைக் கவியரசர் கண்ணதாசன் “ஞானவான்கள் வாழும் ஆலயம்’
என்பார்.

“”அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்” என்பார் கவிஞர் வைரமுத்து.
புத்தகங்களைப் பாதுகாப்பதென்பது ஒரு புதையலைக் காப்பதற்கு ஒப்பானது.

———————————————-

கேசி
தினமணி கதிர்

அருமை..

டப்…டப்…லேப்டாப்

ஜடை அழகு…

« Older entries