ஸ்ருதிஹாசனுக்கு கமல் பார்த்த மாப்பிள்ளை

கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘சபாஷ் நாயுடு’
படத்தில் அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மகளாக
நடிக்கவுள்ளார் என்பதும் இளைய மகள் அக்ஷராஹாசன்
உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளார் என்பதையும்
ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக
ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளராம். Manu Narayan என்ற
பெயர் கொண்Iட இந்த நடிகர் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக
நடிக்க கமல் தேர்வு செய்துள்ளார்.

இவர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் மட்டுமின்றி
Good Night Good Morning, Wall Street உள்பட ஒருசில ஹாலிவுட்
படங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி முதல்
அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கும்
இந்த படத்தை ராஜீவ்குமார் இயக்கவுள்ளார்

லைக்கா ரூ.1 கோடி நிதி.. கமல் காலில் விழுந்த விஷால்..- ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜை நெகிழ்ச்சிகள்

ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

இப்படத்திற்கு தலைப்பு ‘சபாஷ் நாயுடு’ என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார்.

வாடகை கொடுத்த கமல்

நடிகர் சங்க இடம் எந்தவித கடனும் இன்றி மறுபடியும் நிர்வாகிகளுக்கு வந்தவுடன் நடந்த முதல் விழா ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜையாகும். இதற்காக நடிகர் சங்கத்திற்கு 2.5 லட்சம் கொடுத்தார் கமல்.

மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் ரூ.1 கோடியை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக அளித்தார். சுபாஷ்கரன் கொடுத்த காசோலையை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார் கமல். அப்போது “இப்பணம் கிடைப்பதற்கு காரணம் கமல் சார் தான்” என்று கமல்ஹாசன் காலில் விழுந்து வணங்கினார் விஷால்.

கமலை வாழ்த்திய இளையராஜா

படத் துவக்க விழாவில் பேசிய இளையராஜா, “கட்டிடத்தை எழுப்ப வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்த நடிகர் சங்கத்தினருக்கு இங்கு ஒரு கட்டிடத்ததையே எழுப்பி விழா நடத்தி வரும் என் அன்பு சகோதரர் கமல் அவர்கள் நீடூடி வாழ வேண்டும். சபாஷ் நாயுடு” என்று பேசினார்.

மேலும், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்த போது கமலிடம் ‘சபாஷ் நாயுடு’ எப்படியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார் இளையராஜா. அத்தலைப்பு கமலுக்கு பிடித்துவிடவே அதையே தலைப்பாக வைத்துவிட்டார் கமல்.

ஒரே படத்தில் 2 மகள்கள்

‘சபாஷ் நாயுடு’ படத்தின் கமலின் 2 மகள்களும் பணியாற்ற இருக்கிறார்கள். கமல் – ரம்யா கிருஷ்ணன் இருவருக்கும் பிறந்த மகளாக ஸ்ருதிஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் உதவி இயக்குநராக அக்‌ஷரா ஹாசன் பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் 85% அமெரிக்காவில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

விழாவில் பேசிய ஸ்ருதிஹாசன் “எனக்கு வாழ்க்கை, கலை, சினிமா கொடுத்தவர் அப்பா. அவரோடு நடிப்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

கட்டிடம் கட்டி முடித்த உணர்வு: நாசர்

‘சபாஷ் நாயுடு’ படத் துவக்க விழாவில் பேசிய நாசர் “கமல் அவர்கள் என்னிடம் படத்தின் தலைப்பு அறிமுக விழா பண்ண முடிவு பன்ணிருக்கிறோம். அதற்கு நடிகர் சங்கத்தின் இடம் தேவைப்படுகிறது, உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.

தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். இது நீங்கள் விளையாடிய இடம், நடனம் கற்றுக்கொண்ட இடம், நடிகர்களுக்கான ஒரு இடம் என்று கூறினேன். நாங்கள் கட்டிடம் கட்ட தான் வந்தோம். ஆனால் அதற்கு முன் இந்த விழா இங்கே நடைப்பெற்றது. ஏதோ கட்டிடம் கட்டி முடித்த உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் துவக்கமே பிரமாண்டமாய் இருப்பதில் மகிழ்ச்சி” என்று பேசினார்.

தமிழ் தி இந்து காம்

விஜய்சேதுபதி நடிக்கும் படத்தில் டி.ராஜேந்தர்.

தான் இயக்கி நடித்த படங்களைத் தவிர மற்ற இயக்குநர்களின்
படங்களில் பாடுவதிலும், நடனமாடுவதிலும் மட்டுமே ஆர்வம்
செலுத்தி வந்தார் டி.ராஜேந்தர். தன் மகன் சிம்பு நடிக்கும்
படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதுவரை மற்ற இயக்குநர்களின் படங்களில் படம் முழுக்க வரும் கதா
பாத்திரத்தில் அவர் நடித்ததில்லை. இப்போது நடிக்கிறார். “அனேகன்’
படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் – ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட்
நிறுவன கூட்டணி மீண்டும் இணையவுள்ள படத்தில் கதையின் பிரதான
கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.
படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கதை, திரைக்கதை, வசனப்
பொறுப்புகளில் இயக்குநர் கே.வி.ஆனந்த்துடன் எழுத்தாளர்கள் சுபா
இந்த முறையும் இணைகின்றனர். கபிலன் வைரமுத்து பாடல்களை
எழுதுகிறார்.

——————————————–
திரைக்கதிர்

படம்- இணையம்

முந்திரிக்காடு திரைப்படம்….

 

“பூமணி’, “பூந்தோட்டம்’, “கிழக்கும் மேற்கும்’, “நிலவே முகம்காட்டு’
உள்ளிட்ட படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த மு.களஞ்சியம், சிறிது
இடைவெளிக்குப் பின் தற்போது நடிகராக கவனத்தை ஈர்க்கிறார்.

சமீபத்தில் வெளியான “கோடை மழை’ படத்துக்காக அவர் ஏற்று
நடித்திருந்த கதாபாத்திரம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
“இயக்குநர் என்பதுதான் என் முகம். ஆனால், இளம் இயக்குநர்கள் பலர்
என்னை நடிக்க அழைக்கிறார்கள். நடிப்பு என்பது இயக்கத்தோடு சார்ந்த
ஒன்று என்பதால், எனக்கு நடிப்பதில் எவ்விதச் சிரமமும் இல்லை.

அதனால் என்னைத் தேடி வரும் கதாபாத்திரங்களை ஏற்று வருகிறேன்.
அடுத்து ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில்
“களவு தொழிற்சாலை’ படத்தில் உளவுத் துறை அதிகாரி வேடம் ஏற்கிறேன்.

இயக்குநர் கி.ரா. இயக்கும் “மெர்லின்’ படத்திலும் நடிக்கிறேன். நடிப்பது
ஒருபுறம் இருந்தாலும் படம் இயக்குவதிலும் கவனம் வைத்துள்ளேன்.
“முந்திரிக்காடு’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். படம் இறுதிக் கட்டத்தை
நெருங்கி வருகிறது” என்றார் களஞ்சியம்.

—————————
திரைக்கதிர்

ஒரு மெல்லிய கோடு – திரைப்படம்

 

“குப்பி’, “வனயுத்தம்’ படங்களைத் தொடர்ந்து ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி
வரும் படம் “ஒரு மெல்லிய கோடு.’ அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா,
அக்ஷாபட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.

இந்திய அரசியலில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு
கொலைப் பின்னணியைக் கதைக் களமாகக் கொண்டு இப்படம் உருவாகி
வருவதாகக் கூறப்படுகிறது.

——————————-

டெல்லி கணேஷ் தயாரிக்கும் திரைப்படம்…

காலச் சூழலுக்குத் தகுந்தவாறு மனித வாழ்க்கையில் ஏற்படும்
மாற்றங்களைக் களமாகக் கொண்டு உருவாகி வரும் படம் “என்னுள்
ஆயிரம்.’ நடிகர் டெல்லி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அவரது
மகன் மகா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மலையாள வரவு மரீனா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கதை, திரைக்கதை,
வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எவ்வளவுதான் முயற்சிகள் இருந்தாலும் விதிப்படிதான் எல்லாம் நடக்கும்
என்பதை களமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
காதல், காமெடி, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்ஷியல் சினிமாவாக
இது உருவாகி வருகிறது. சென்னை, பெங்களூர், புதுச்சேரியில் படப்
பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

—————————-
திரைக்கதிர்
————-

இவர் ஒரிஜினல் அல்ல!



அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல, ‘டிவி’ நடிகை,
கிம் கர்தாஷியான்.

இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பெண் ரசிகைகளோ, கிம்மை போலவே, தாங்களும் தோற்றமளிக்க
வேண்டும் என்பதில் அதிகமாக மெனக்கெடுகின்றனர்.

கனடாவைச் சேர்ந்த, கமீலா என்ற பெண், தன் முகம் மட்டுமல்லாது,
உடற்கட்டையும், கிம் போலவே மாற்றி, ஒரிஜினல் கிம் போலவே
தோற்றமளிப்பதுடன், அவரைப் போன்று கவர்ச்சி உடை அணிந்து,
புகைப்படங்கள் எடுத்து, இணையதளங்களில் வெளியிட்டு, கலக்கி
வருகிறார்.

————————
— ஜோல்னாபையன்.

1980’s நடிகைகளின் அரிய புகைப்படத் தொகுப்பு…

Silk Smitha Rare Pictures
1980 களில் தமிழ் சினிமா ரொம்பவே செழிப்பாக இருந்தது. அருமையான நடிகர்கள், மிகச் சிறந்த இயக்குனர்கள் என்றிருந்த காலகட்டத்தில், அழகான மேலும் நடிக்கத் தெரிந்த நடிகைகளும் இருந்தார்கள். இன்றும் அன்றைய நடிகைகளின் முகங்கள் நம் மனதில் பசுமையோடு நினைவில் நிற்கிறது. அதனால் மீண்டும் திரு. ‘ஸ்டில்ஸ்’ ரவி அவர்கள்
‘கிளிக்கிய’ அன்றைய தமிழ் திரைப்பட கதாநாயகிகளின் புகைப்படங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளேன். இதில் நடிகைகள் ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, அபிலாஷா, சரிதா, பானுப்ரியா, கனகா, ராதா, ரேவதி, சுஹாசினி, ஸ்ரீப்ரியா, குஷ்பூ, ராதிகா, ஐஸ்வர்யா மற்றும் அன்றைய முன்னணி நடிகையும், இன்றைய தமிழகத்தின் முதலமைச்சருமான செல்வி. ஜெயலலிதா அவர்களும் உள்ளனர். முதல் இரண்டு சில்க் ஸ்மிதா படங்களை தவிர மற்ற அனைத்தும் ரவி அவர்கள் எடுத்தது. ஒவ்வொரு போட்டோவும் அருமை.
Silk Smitha Rare Pictures 1
Actress Banupriya Rare Pictures
Tamil Actress Aishwarya Rare Pictures
Tamil Actress Sridevi Pictures
Tamil Actress Jayalalitha rare Pictures
Tamil Actress Radhika in Shooting Spot
Tamil Actresses Saritha & Radhika Rare Pictures
Tamil Actresses Kushboo in Shooting Spot
Tamil Actress Revathi Rare pictures
Tamil Actress Silk Smitha Rare pictures
Tamil Actress Jayalalitha Rare pictures
Tamil Actress Sripriya Rare Pictures
Tamil Actress Kanaga Rare Pictures
Tamil Actress Sridevi with her Mother
Tamil Actress Silk Smitha Rare Pictures 3
Tamil Actress Sri devi Rare Pictures 3
Tamil Actress Suhasini Operating Camera











நன்றி: திரு. ‘ஸ்டில்ஸ்’ ரவி & ஆனந்த விகடன்.

http://oorkavalan.blogspot.in/2011/10/1980s.html

ஆக்ஷன் ஹீரோக்களின் அவஸ்தை

‘பியூட்டி போதும். இனி பெர்ஃபார்மன்ஸ் தான் முக்கியம்’ என
புது ரூட்டில் ஜூட் விட்டிருக்கும் அனுஷ்காவை விரட்டிப் பிடித்தோம்.

முதலில் சினிமா எனக்குப் பிடிபடவில்லை. சினிமா வாசனை
நுழையாத குடும்பத்தில் பிறந்து வந்ததால் அந்த வேலை முதலில்
கடினமாகத் தெரிந்தது. என்னை சினிமாவுக்கு அழைத்து வந்த
நாகார்ஜூனா காரு சினிமாவில் உள்ள நெளிவு சுளிவுகளை
எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.

இப்ப பக்குவமும் பிடிப்பும் வந்துவிட்டது படபடவென பாஸ்டையும்
பிரஸண்டையும் கொட்டியவரிடம் ஃபியூச்சரைப் பற்றிய கேள்வியை
வைத்தோம்.

சரி; எதிர்காலத் திட்டம் ஏதாவது?

அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் வகுத்துக் கொண்டு செயல்
படறதில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ, அதுக்கு ஏத்த மாதிரி
என்னை மாற்றிக் கொண்டு வாழ்கிறவள் நான். எதையும் எதிர்
கொள்வேன். எதற்கும் தயார்?

ரொம்ப போல்டா இருக்கீங்க. ஆக்ஷன் ஹீரோயினாக அடுத்தடுத்து
நடித்த அனுபவமா?

நீங்க வேற… அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரணமான
விஷயமல்ல அது ரொம்ப கஷ்டமான வேலைன்னு இப்ப உணர்றேன்.
சண்டைக் காட்சிக்காக எகிறிக் குதித்து, ஓடி விரட்டி நடிப்பது ஈசியல்ல.
அதன்பிறகு கை, கால்கள் ரொம்ப வலிக்க ஆரம்பித்துவிடும்.
பாவம் ஆக்ஷன் ஹீரோக்கள். அவர்களின் கஷ்டம் இப்ப தெரிகிறது.

அக்ஷனில் கலக்கியாச்சு. இனி அடுத்தது அரசியலா?

அரசியல் பத்தி ஜீரோ பர்சன்ட் கூட தெரியாது. அரசியல்ல நான் ஒரு
எல்.கே.ஜி. அதுல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. வேறு நல்ல விஷயங்களில்
மனதைச் செலுத்தவே விரும்புகிறேன்.

யோகாவைவிட வேறு நல்ல விஷயம் வேணுமா?
உங்க இளமைத் தோற்றத்தைப்பற்றி உங்க பழைய சிநேகிதிகள் கமெண்ட்?

அவர்களை அடிக்கடி சந்திக்க முடியவில்லை என்றாலும் எப்பொழுதாவது
பார்க்கும்பொழுது அவங்க குடும்பம் குழந்தைன்னு அழகாக வாழ்வது
எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனா அவங்க என்னைப் பார்த்து, குழந்தை
குடும்பம்னு நாங்கெல்லாம் வயசானவங்களாயிட்டோம்
நீ மட்டும் சின்னபொண்ணு மாதிரி அப்படியே இருக்கியே! எனறு கலாய்ப்பாங்க!

——————————

– சபீதா ஜோசப்

விரைவில் வெளியீடு காண உள்ளது ‘கெத்து’




உதயநிதி நாயகனாகவும் ஏமி ஜாக்சன் நாயகியாகவும்
நடித்துள்ள படம் ‘கெத்து’.

திருகுமரன் இயக்கி உள்ளார். சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எளிய
முறையில் நடந்தேறியது. படம் விரைவில் திரை காண உள்ளது.

========================

« Older entries