தில்லை மரம்

“தில்லைமரம்” என்பது சிதம்பரம் ஸ்ரீ நடராஜர்
ஆலயத்தின் தலமரம். இன்றைய சிதம்பரத்தில்
தில்லை மரங்கள் இல்லை.

100 வருட பழமையான தில்லை மரம் பூத்துக் குலுங்குகிற நேரத்தில் அதன் கீழ் நின்றால் பூக்களின் நெடி சுவாசத்திற்குள் புகுந்து மயங்கம் அடைய செய்திடும். முகமும் பெரிதாக வீங்கிவிடும். மலை வாழ் மக்கள் மூஞ்சி வீங்கி மரம் என்பார்கள்.

தில்லை மரத்தின் பால் நமது உடலில் பட்டால் புண் தோன்றும். தில்லை மரத்தின் இலை, விதை, பால் முதலியவற்றிலிருந்து எச்சரிக்கையுடன் பல மருந்து பொருள்களைத் தயாரிக்கிறார்கள்.

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவில் கடல் அருகில் இருந்ததாகவும், அங்கு சுயம்பு லிங்கம் இருந்ததாகவும், அதன் அருகில் வளர்தாமரை குளம் இருந்ததாகவும், இந்தக் குளத்தைச் சுற்றி தில்லை மரங்கள் அதிகமாக காணப்பட்டதாம்.

ஸ்வேத வர்மன் எனும் பல்லவ அரசன், தன் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அவருக்கு திடீரென்று பெருநோயான குஷ்டம் வந்ததால் அவருடைய அரசு அதிகாரத்தை பறிச்சிட்டு நாட்டை விட்டே வெளியே அனுப்பிட்டார்களாம்.

அவன் தன் பெருநோய் தீர இந்த சுயம்புலிங்கத்தை வணங்கி, அருகிலிருந்த குளத்தில் தினம் குளித்து இறைவனை வழிபடுகிறான். அப்போது அவருடைய உடம்பில் சில மாற்றங்கள் வர ஆரம்பித்து அவருடைய குஷ்ட நோய் நீங்கி விடுகிறது.

நோய் நீங்க அந்தக் திருக்குளத்தைச் சுற்றியிருந்த தில்லை மரங்களின் வேர்கள் தான் காரணமாக அமைந்தது. அவருடைய உடல் நிறம் தங்க நிறமாக ஆனதால் அவரை மக்கள் ஹிரண்ய வர்மன் என அழைத்தனர்.

சமஸ்கிருதத்தில் ஹிரண்யா என்பதற்கு தங்கம் என்ற பொருள். பின்னாளில்
ஸ்வேத வர்மன் தான் அருள்மிகு ஸ்ரீநடராஜர் கோவிலை கட்டியதாக ஸ்கந்தபுராண தகவல். இதே ஸ்வேத ராஜன் திருவெண்காடு திருத் தலத்துடனும் சம்பந்த படுகிறான். அகோர மூர்த்தி சஹஸ்ர நாமம் இவனைபற்றி நிறைய விஷயங்கள் கூறும்.

தில்லை மர வேர்களுக்கு தொழுநோயை குணப்படுத்தும் தன்மை இருக்கிறது இது ஆராய்ச்சி முடிவு. தில்லை மர இலையைக் கிள்ளினால் அதிலிருந்து பால் வடியும், அதில் எஸ்காயெகரியன் எனும் விஷ தன்மை நிறைந்திருக்கிறது. இது கண்களில் பட்டால் தற்காலிகமாக கண் பார்வை போய்விடும்.

ஆனால், தில்லை மர வேரை இடித்து சாரெடுத்து கண்ணில் விட்டால் பறிபோன பார்வை திரும்ப கிடைத்துவிடும். தில்லை மர பட்டையில ஸ்டாக்கினோன் எனும் வேதிப்பொருள் இருக்கிறது. இதுவும் தொழுநோயை குணப்படுத்தும்.

பண்டைய கால மக்கள் தில்லை மர வேரையும், பட்டையையும், கொம்புகளையும், இலைகளையும் எரித்து அதிலிருந்து வரும் புகையை தொழுநோய் காயங்கள், மீது பட செய்தும் அந்நோயை விரட்டியிருக்கிறார்கள் என பல சித்த நூல்களில் குறிப்புள்ளது. சுனாமி எனப்படும் பேரழிவிலிருந்து மக்களை காக்க தில்லை மரங்கள் பிச்சாவரம் கடற்கரை அருகில் நட்டு வளர்க்கப்படுகிறது.

     - சித்தர்களின் குரல் shiva shangar நன்றி🙏

வாட்சப் பகிர்வ

பின்னூட்டமொன்றை இடுக