திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!

திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்! E_1328782098

* திருமணம் தும்மல் போன்றது.
அது எப்பொழுது வரும் என சொல்ல இயலாது.
– ரஷ்யப் பழமொழி

* திருமணத்திற்குப் பற்கள் உண்டு. அகப்பட்டவர்களைக்
கடித்து விடும்.
– ஜமாக்கர்

* திருமணம் என்பது ஆயுள் தண்டனை. ஒருவர் உள்ளத்தை
மற்றவர் திருடியதால் பெற்ற பரிசு.
-ஞானி

* எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்
திருமணம் செய்து கொள்வது பெண்ணின் வேலையாகும்.
அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு
தள்ளி வைப்பது ஆடவனின் வேலையாகும்.
– பெர்னாட்ஷா

* விவாஹம் என்பது ஆண்-பெண் வாழ்க்கை நலத்தில்
ஈடுபடுவதற்கான கூட்டு முயற்சியாகும்.
– அண்ணா

* திருமணம் என்பது வெறும் உடற்சேர்க்கையன்று.
அது உணர்ச்சிகளின் சேர்க்கை. சிந்தனைகளின் சேர்க்கை.
– காண்டேகர்

* திருமணம் என்பது கணவனும், மனைவியும் சேர்ந்து தமக்கு
மட்டும் இன்பம் தேடிக் கொள்வதல்ல. வருங்கால சந்ததிக்கே
நன்மை தேடிக் கொள்வதாகும்.
-ரூடல்ப்பிஷர்

* கல்யாணம் என்பது இருவரை ஒருவராகக் காண்பது.
அந்த ஒருவர் யார் என்பதைக் காண்பதே வாழ்வு.
-ஓர் அறிஞர்

* ஆணோ பெண்ணோ திருமணம் முடிக்காமல் தனியாக
வாழ்க்கை நடத்துகின்ற காலம் வரை அவர்கள் பாதி வாழ்க்கை
வாழ்ந்தவர்கள்.
-ரிச்டர்

தகவல்: சியாமளா ராஜகோபால், சென்னை-64
மங்கையர்மலர்

பின்னூட்டமொன்றை இடுக