தடுமாறி வீழ்வதில் தவறில்லை…!

தடுமாறி வீழ்வதில் தவறில்லை...! ACo38OA



தடுமாறி வீழ்வதில் தவறில்லை
எழுந்திருக்க எண்ணமில்லாமல் இருப்பதுதான் தவறு.

பகைமையை அன்பினால் வெல்லுங்கள்
சோம்பலை செயல் ஊக்கத்தினால் வெல்லுங்கள்

கள்ளத்தனத்தை விட்டு விட்டால்
ஒருவன் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கலாம்.

நற்பண்புக்கும் அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் இருக்கும்,
நாம் அடையும் சந்தோஷம்.

அன்புமொழி பேசும் இதயத்தை மட்டும் திறந்து வையுங்கள்.

நம்பிக்கை என்பது புயல் காற்றில் விழும் மெல்லிய
மலரல்ல.
அது அடிபெயரா இமயமாகும்.

வாழ்வில் அன்பாகவும், தாழ்வில் தக்க துணையாகவும்
விளங்குவது கல்வி.

துணிச்சலோடு உழைப்பவுனுக்குத்தான் வெற்றி.

இன்பங்களை பெற முயல்வதைவிட
லட்சியங்களை பெருக்க முயல்வதே மேல்.

உன் குணம் சரியாக இருந்தால்
உன் மனமும் சரியாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக