மகிழ்ச்சியுடன் வாழுங்கள் – அரவிந்தர்

 கடவுளின் அடிமையாக இருப்பதே ஆனந்தம்.
அவரை மறந்து வாழ்வது நரகத்தை விடக் கொடியது.

* அன்பும், ஆற்றலும் தனித்தனியாக செயல்பட்டால்
உலகம் வளர்ச்சி பெறாது.
இரண்டும் இணைந்தால் மட்டுமே நலம் பெறும்.

* கடவுள் உன் உள்ளத்திலேயே குடி கொண்டிருக்கிறார்.
நீ செய்யும் பணிகளே அவருக்கான வழிபாடு.

* நீ பனையளவு பாவம் செய்தவனாக இருந்தாலும்,
தினையளவு நன்மை செய்திருந்தால் அவரது அருளுக்குப்
பாத்திரமாவாய்.

* மனிதர்களை நேசித்து அவர்களுக்கு தொண்டு செய்.
ஆனால், யாருடைய பாராட்டுக்கும் ஆசைப்படாதே.

* மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலையே. அதைக் கற்றுக்
கொண்டால் துன்பத்திலும் கூட மகிழ்ச்சியுடன் இருக்க
முடியும்.

* கடவுளைச் சரணடைந்து விடு. உன் குறைகளைப்
போக்கி நல்லவனாக்குவது அவரது பொறுப்பு.

* கடவுளின் அரசாட்சியில் தீமை என்பதே இல்லை.
நன்மையோ அல்லது நன்மைக்கான முயற்சியே எங்கும்
நடக்கிறது.

-அரவிந்தர்

பின்னூட்டமொன்றை இடுக