வேட்டிக்கு அவமரியாதை!

திருமண முகூர்த்தத்தின்போது அணியும் ஆடையாக
வேட்டி சுருங்கிவிட்ட காலமிது. டிவி சேனல்களில்
வேட்டியை சேல்ஸ் செய்ய ராஜகம்பீரம் என
புகழ்ந்தாலும் பிராக்டிகலாக பல இடங்களில் வேட்டிக்கு
தடா உள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஒரு வணிக மாலில் ஒருவரை
தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
எதற்காக? வேட்டி அணிந்ததற்காக! க்வெஸ்ட் மாலில்
தான் இந்திய உடைக்கு நடந்தது இந்த அவமானம்.

குர்தா, வேட்டி அணிந்து மாலுக்குள் நுழைய முயன்ற
டெப்லீனா சென் என்பவரின் நண்பரை மாலின்
செக்யூரிட்டிகள் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
காரணம் கேட்டபோது, லுங்கி, வேட்டிக்கு அனுமதியில்லை
என்றவர்கள், அணிந்து வந்தவர் ஆங்கிலத்தில் பொளந்து
கட்டியதும் சல்யூட் அடித்து உள்ளே அனுப்பியிருக்கின்றனர்.

வேட்டிக்கு மரியாதை இல்லை. ஆங்கிலத்துக்கு?
கூழைக் கும்பிடு! புதிய இந்தியா!

———————————
ரோனி
நன்றி- குங்குமம்

பின்னூட்டமொன்றை இடுக