காய்கறிகள் – சிறுவர் பாடல்


காம்பு நீண்ட கத்தரிக்காய்
கடையில் விற்கும் கத்தரிக்காய்!
பாம்பு போலும் புடலங்காய்
பச்சை வண்ண பீர்க்கங்காய்!

குண்டு குண்டு பூசணிக்காய்
கூடை போலும் பரங்கிக்காய்!
உண்டுகளிக்க வெள்ளரிக்காய்
உயரத் தொங்கும் பாகற்காய்!

கடித்துத் தின்ன வெண்டைக்காய்
கசப்பைக் கொடுக்கும் சுண்டைக்காய்
முடிச்சுப் போல் முருங்கைக்காய்
முற்றிப் போன வாழைக்காய்!
 
——————–
>கவிஞர் வ.நஞ்சுண்டன்
உலா வரும் நிலா (குழந்தை இலக்கியம்)

பின்னூட்டமொன்றை இடுக