எத்தனை வயசு வரை நடிக்கணும்?

கண் பார்வை மங்கலா இருக்கு!

அப்ப இதுவரை என்னை நீங்க வர்ணிச்சதெல்லாம்

பொய்யா?

>கீதா
——————————————————–

அந்த திருமண தரகருக்கு ரொம்பவும் திமிர்!

என்னவாம்?

திருமணங்கள் இங்கு நிச்சயிக்கப்படுகின்றன என்று அவர் வீட்டு
வாசலில் போர்டு வச்சுருக்காரு!

> கணேஷ்
——————————————————-

என்னோட பேஷண்டுகளை நான் தெய்வமாக மதிக்கிறவன்!

அதுக்காக , பேஷண்டுகளின் போட்டோக்களை வரிசையாக
வெச்சு,மாலை போட்டு பார்க்கணுமா, டாக்டர்?

>ஆர்.அப்துல்சலாம்
———————————————————-

தயாரிப்பாளர்; ”எங்க புதிய மெகாசிரியலில் நடிக்கணும்!”

நடிகை;” எத்தனை வயசு வரை நடிக்கணும்?”

——————————————————-
நன்றி; தினமலர்

பின்னூட்டமொன்றை இடுக