பனி மூடிய காலை…

தொலைவில் மலை
பனிமூடிய காலை
பர்தா கோலம்
———————————–
மந்தைகள் போகும்
மேய்ப்பவன் இல்லை
கட்சி ஊர்வலம்

—————————————–

இரட்டிப்பு மகிழ்ச்சி
இப்படியே இருக்கட்டும்
பக்கத்து வீட்டுக்காரன் துக்கம்

———————————-
சிந்திய பருக்கை
எறும்பு வரிசை
தயங்கும் மிதியடி…

==================
>சென்னிமலை தண்டபாணி
நன்றி: கொஞ்சம் ஹைகூ
கொஞ்சம் சென்ரியு

பின்னூட்டமொன்றை இடுக