புகைப்படத்தின் விலை, 21 லட்சம் ரூபாய்!

 

கடந்த, 1912ல், பிரிட்டனில் இருந்து,
அமெரிக்காவுக்கு சென்ற, ‘மிதக்கும் சொர்க்கம்’ என
அழைக்கப்பட்ட, ‘டைட்டானிக்’ கப்பல், நடுக்கடலில்,
பனிப் பாறையில் மோதி, மூழ்கியது.

இந்த விபத்தில், 1,500 பேர் இறந்தனர். கப்பல் மூழ்கிய
இடத்தில், மீட்கப்பட்ட பொருட்கள், அவ்வப்போது ஏலம்
விடப்படுகின்றன. அந்த கப்பலின், முதல் வகுப்பு
பயணிகளுக்கு வழங்கப்பட்ட, ‘மெனு கார்டு’ சமீபத்தில்,
பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த,
பனிப்பாறையின் கறுப்பு – வெள்ளை புகைப்படம்,
21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய், ஆச்சர்யத்தை
ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த அடுத்த நாள், அதே வழியில் சென்ற,
மற்றொரு கப்பலில் இருந்த ஒருவர், அந்த பனிப்பாறையை
படம் எடுத்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த
புகைப்படம், சமீபத்தில் தான் ஏலம் விடப்பட்டுள்ளது.

— ஜோல்னாபையன்.

மதசகிப்பின்மையை நானும் எதிர்கொண்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்!

பானஜி: மதசகிப்பின்மையை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான ‘முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். எதுவும் வன்முறையாக இருக்க கூடாது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு நாம் காண்பிக்க வேண்டும்”  எனக் கூறினார்.

டெல்லியில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாலிவுட் முன்னணி நடிகரான அமீர்கான், நாட்டில் மதசகிப்பின்மை இல்லாத சூழல் நிலவுவதால் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதாகவும், இதன் காரணமாக  ‘இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா?’ என்று தன் மனைவி கேட்டார் என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

விகடன்.காம்

ஊதிய கமிஷன் பரிந்துரையின் 10 முக்கிய அம்சங்கள்

நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய கமிஷனின் பரிந் துரை அறிக்கை மத்திய அரசிடம் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்டது. அதன் முக்கிய பரிந் துரைகள் வருமாறு:

* ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு. அடிப்படை ஊதியத்தில் 16% உயர்வு.

* படிகளில் 63% உயர்வு. ஆண்டுக்கு 3% ஊதிய உயர்வு. 52 படிகள் ரத்து, 36 படிகள் இதர படிகளோடு இணைப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயம்.

* அதிகபட்ச ஊதியம் ரூ.2.5 லட்ச மாக நிர்ணயம், குரூப் இன்சூரன்ஸ் தொகை ரூ.50 லட்சமாக உயர்வு. இதனால் பிரிமியம் பிடித்தம் உயரும், ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத உயர்வு.

* ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் ராணுவத்தை போன்று துணை ராணுவ படைகளிலும் அமல்.

* தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், மின்வாரியம், விமான நிலையங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு ரூ.4.50 லட்சம் ஊதியம்.

* ராணுவ பணிக்கு இளைஞர்களை ஈர்க்க ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் ஓராண்டு மானியக் கல்வி.

* ராணுவ குறுகிய கால சேவைகளில் பணியாற்றும் அதிகாரிகள் 7 முதல் 10 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் ஓய்வுபெற சிறப்பு சலுகை.

* தனியார் நிறுவனங்கள் போன்று பணித் திறன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வட்டியில்லா கடன்கள் ரத்து.

* மனைவி துணையில்லாத ஆண்களின் நலன் கருதி குழந்தை பராமரிப்புக்காக முழு ஊதியத்துடன் ஓராண்டு விடுமுறை.

* பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.

=

தமிழ் தி இந்து காம்

 

கோவா சர்வதேச படவிழாவில் இளையராஜாவுக்கு விருது!

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச படவிழாவில்
இளையராஜாவுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டுக்கான இந்திய திரையுலக ஆளுமை நூற்றாண்டு
விருது இளையராஜாவுக்கு இன்று வழங்கப்பட்டது.
கோவாவில் நடக்கும் சர்வதேசப் படவிழாவில் இந்த விருதை மத்திய
நிதியமைச்சர் அருண் ஜேட்லி இளையராஜாவுக்கு வழங்கினார்

————————————–
தினமணி

 

அஞ்சலக சேமிப்பு -வட்டி விகிதங்கள்

அஞ்சலக் முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் என்ன?

சேமிப்பு கணக்குகளுக்கு – 4%,
ஆர்டி கணக்குகளுக்கு – 8.4%,
டைம் டெப்பாசிட்களுக்கு (TD)
1 வருடம் – 8.4%, 2 வருடம் – 8.4%, 3 வருடம் 8.4%, 5 வருடம் 8.5%
மந்த்லி இன்கம் ஸ்கீம் (Monthly income scheme) – 8.4%
பிபிஎஃப் – 8.7%
செல்வமகள் சேமிப்பு கணக்கு – 9.2%
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு  – 9.3%
கிஷான் விகாஸ் பத்திரம் – 8.7%
நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்
(8ஆவது வெளியீடு, 5 வருடங்கள்) – 8.5%, (9ஆவது வெளியீடு, 10 வருடங்களுக்கு ) – 8.8%

————————

வரிச் சேமிப்புக்கு திட்டமிடுபவர்கள் கீழ்க்காணும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
5 வருட டைம் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி, அஞ்சலக, ஆயுள் காப்பீடு, செல்வ மகள் சேமிப்புத் திட்டம், ஊரக அஞ்சல் காப்பீடு ஆகிய திட்டங்களின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி பிரிவு 80சியின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும்.

————————————-

ட்விட்டர் கேள்வி -பதில்

http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10022

 

 

சென்னையை 22-ம் தேதி புயல் உலுக்கும்!’- பயமுறுத்தும் பஞ்சாங்கம்!


-சென்னை:
வருகின்ற 22-ம் தேதி சென்னையை புயல் உலுக்கும் என்று
வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக
வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது,
எதிர்கால பலன்களைச் சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள்
செய்கின்றனர்.

அப்படிப்பட்ட பஞ்சாங்கம் இருவகைப்படும். முனிவர்கள் எழுதிய
சுலோகங்கள் அடிப்படையில் எழுதப்படுவது ‘வாக்கிய பஞ்சாங்கம்’.
சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுவது
‘திருக்கணித பஞ்சாங்கம்’.

இதில், வாக்கிய முறை பஞ்சாங்கத்தை பல்வேறு ஜோதிடர்களும்
வெளியிட்டு வருகிறார்கள்.

அவ்வாறு வெளியான ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ம் தேதி
(சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு
நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து
வருகிறது.

இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகின்ற 21-ம் தேதி (சனிக்கிழமை)
தொடங்கி “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22-ம் தேதி
(ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்”
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தின் பிடியிலிருந்து
தற்போதுதான் மக்கள் இலேசாக மீண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி மீண்டும்
மழை வந்துவிடுமோ என்ற கவலை பஞ்சாங்கத்தை நம்புவர்களிடையே
ஏற்பட்டுள்ளது.

—————————————-
விகடன்

ஜிசாட்-15 விண்ணில் செலுத்தப்பட்டது

பிரெஞ்ச் கயானா:

தகவல் தொடர்பு செயற்கை கேளான ஜிசாட்-15 செயற்கை

கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன்-5 விஏ-227 ராக்கெட்

மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதனுடன் சவுதி அரேபியாவின் அராப்சாட் 6பி செயற்கை கோளும்

விண்ணில் செலுத்தப்பட்டது.

இன்று(11-11-15) அதிகாலை 3.04 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது

-தினமலர்

பிரிட்டன் நீதிபதியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், பதவியேற்றுள்ளார்.

லண்டன்:
பிரிட்டன் நீதிபதியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த
பெண், கல்யாணி கவுல் பதவியேற்றுள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்தவர் கல்யாணி கவுல், 54.
இவரது தந்தை மகேந்திரா கவுல், ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’
என்ற ரேடியோவிலும், தாய் ரஜினி கவுல், பி.பிசி., செய்தி
நிறுவனத்திலும் பணியாற்றினர்.
லண்டன் பொருளாதார பள்ளியில், பாரிஸ்டர் பட்டம் பெற்ற
கல்யாணி, 1983 முதல், வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கல்யாணி கவுல், நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியர் ஒருவர், பிரிட்டன் நீதிபதியாக நியமிக்கப்படுவது,
பிரிட்டனில் அபூர்வமாக நடைபெறும் செயல்.அதுபோல,
அமெரிக்காவின், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் முக்கிய பொறுப்பில்,
அமெரிக்க வாழ் இந்தியர் அசோக் மகோ, நியமிக்கப்பட்டுள்ளார்.
டில்லியில் பட்டப்படிப்பு படித்த மகோ,அமெரிக்காவின் டெக்சாஸ்
பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர்.

வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் வாரியத்தில்
உறுப்பினராக, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசு இவருக்கு, 2014ல், ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி அரசு
கவுரவித்துள்ளது.

—————————————–
தினமலர்

இன்றைய தொழில்நுட்பத்திற்கெல்லாம் அடி நாதமான உலகின் அழகிய பெண்: கொண்டாடும் கூகுள்

நாம் இப்போது பயன்படுத்தும் ப்ளூ டூத், வை-பை மற்றும் ஜிபிஎஸ்

ஆகிய தொழில்நுட்பத்திற்கெல்லாம் அடி நாதம் உலகின் அழகிய

பெண் என்று வர்ணிக்கப்பட்ட ஹெட்டி லாமர்  தான்.அவரின் ஃபிகொயின்சி ஹோப்பிங் என்கிற கண்டுபிடிப்பு தான்

தற்போதைய ஸ்பெக்ட்ரம் கம்யூனிகேஷன் டெக்னாலஜியின்

தொடக்கம்.

1913-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த ஹெட்டி லாமர், 1

930-களில் ஐரோப்பிய சினிமாவில் அறிமுகமாகி, பின்பு ஹாலிவுட்டிலும்

பிரபலமானார்.

மிகவும் கவர்ச்சியாய் நடித்து எதிர்ப்பும் அதே சமயம் வரவேற்பும் பெற்ற

இவர், “woman of the Science” என்றும் கொண்டாடப்பட்டார்.

இன்று இவரது 101-வது பிறந்த நாள்.

அதை கூகுள் அற்புதமான வீடியோவுடன் அதன் டூடுல் பக்கத்தில் கொண்டாடி

வருகிறது.

============

தங்கப் பத்திரத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யும் புதிய திட்டம் வரும் 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி கொண்டு வரும் இந்த தங்கப் பத்திரத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்…

தங்கத்தின் எடை மதிப்புக்கு ஈடான விலை மதிப்பு கொண்ட பத்திரமே தங்கப் பத்திரம் எனப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த பத்திரத்தை திருப்பிக் கொடுத்து முதிர்வுப் பணத்தை பெறலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் வட்டியும் உண்டு.

தற்போதைய நிலையில் முதல் தொகுதி தங்கப் பத்திரங்களை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி பெறப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 26-ம் தேதி தங்கப்பத்திரங்கள் வினியோகிக்கப்படும்.

வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் இப்பத்திரங்களை வாங்க இயலும். முதல் தொகுதி தங்கப் பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள் ஆகும். 5-வது ஆண்டிலிருந்து முதலீட்டிலிருந்து வெளியேறும் வாய்ப்பும் தரப்பட்டுள்ளது.

2,5,10,50,100,500 கிராமிலிருந்து 500 கிராம் வரை பல்வேறு எடை மதிப்புகளில் பத்திரங்கள் வெளியிடப்படும். பத்திரங்களின் விலை அவற்றின் வெளியீட்டு நாளுக்கு முந்தைய வாரத்தில் நிலவிய தூய தங்கத்தின் சராசரி விலையை வைத்து கணக்கிடப்படும். தங்கப் பத்திர முதிர்வு பணத்தை திரும்பத் தரும் போதும் இதே நடைமுறையே கணக்கிடப்படும் என்றும் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல் தொகுதி பத்திரத்திற்கான வட்டி 2.75 சதவிகிதம் என்றும் நிதியமைச்சகம் நிர்ணயித்துள்ளது. முதலீட்டு தொகை மீதான வட்டி ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். தங்கப்பத்திரத்திற்கு தரப்படும் வட்டி, வருமான வரிக்குட்பட்டது.

மேலும் இத்திட்டத்தில் கிடைக்கும் ஆதாயத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெறுவது போல் தங்கப் பத்திரங்கள் மீதும் கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திர விற்பனையின் போது ஒரு சதவிகித வினியோக கட்டணம் வசூலிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

சாதகமான அம்சங்கள்

காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யப் போகும் திட்டம் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுவது என்பதால் இது மிகவும் நம்பகத்தன்மை கொண்ட முதலீடு என கூறப்படுகிறது.

பொதுவாக தங்கத்தின் மீதான முதலீட்டு திட்டங்களில் வருவாய் எப்போதும் அதன் விலை ஏற்ற, இறக்கத்தை மட்டுமே சார்ந்துள்ளது. ஆனால் தங்கப் பத்திரத் திட்டத்தில் கூடுதலாக வட்டி வழங்கப்படுவது அதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக பார்க்கப் படுகிறது.

தங்க நகைகளைப் போல தங்கப் பத்திரத்தையும் அடகு வைத்து பணம் பெற அனுமதி அளித்திருப்பது இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாக இருந்தாலும் 5 ஆண்டுகளில் இருந்தே பத்திரத்தை பணமாக்கும் வசதியும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மேலும் தங்க நகைகள் திருட்டு அதிகரித்து விட்ட இக்காலத்தில் அதை பொருள் வடிவில் பாதுகாத்து வைத்திருப்பதை விட காகித வடிவில் முதலீடாக வைத்திருக்கும் வசதி மக்களை கவர்ந்திழுக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் என்ற சந்தை மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்கும் போது அது தூய்மையானததானா என்பது போன்ற கவலைகள் எழும் நிலையில் தங்கப் பத்திர முதலீட்டில் அந்தக் கவலைகள் இருக்காது என்பதையும் அந்நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.

தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை பொறுத்தே இத்திட்டத்தின் லாப, நஷ்டங்கள் அமையும். தங்கம் விலை எதிர்காலத்தில் குறையும் பட்சத்தில் இத்திட்டம் நஷ்டத்தை தரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தங்க விலை நிலவரத்தை நீண்ட காலமாக உற்று கவனித்து வருபவர்கள் அதன் விலை குறைய வாய்ப்பு மிகமிகக் குறைவு என்கிறார்கள்.

தங்கத்தில் காகித வடிவில் முதலீடு செய்யும் திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. கோல்டு இடிஎஃப் போன்ற ஆவண வடிவ திட்டங்களை காட்டிலும் தங்கப் பத்திரம் திட்டம் ஆதாயம் மிக்கது என்கின்றனர் நிபுணர்கள்

இந்தியாவில் முதலீட்டு நோக்கில் அதாவது தங்க நாணயங்கள் மற்றும் கட்டி வடிவில் விற்கப்படும் தங்கத்தின் அளவு ஆண்டுக்கு 300 டன்கள் என மதிப்பிட்டுள்ளது மத்திய அரசு. இந்த முதலீடுகளில் பெரும்பகுதியை தங்கப் பத்திரத்திட்டத்திற்கு திருப்பிவிடுவதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.

இத்திட்டத்தை நோக்கி மக்களை நோக்கி கவர்ந்திழுப்பதற்காக மூலதன ஆதாய வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளும் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 கிராம் தங்கத்துக்கு ஈடான விலையை செலுத்தினாலே இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும் என்பது சாமானிய மக்களை வெகுவாக கவரும் அம்சம்.

மேலும் வங்கிக் கிளைகளிலும் அஞ்சல் அலுவலகங்களிலும் கூட இந்த பத்திரங்களை வாங்க முடியும் என்ற அம்சமும் இத்திட்டத்தை நோக்கி சாமானிய மக்களை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

——————————

புதிய தலைமுறை டி.வி

« Older entries Newer entries »