மொக்க ஜோக்ஸ் ..!

படம் நல்லா ஓட பட்டுன்னு ஒரு ஐடியா கொடுங்க!

படம் நல்லா ஓட பட்டுன்னு ஒரு ஐடியா கொடுங்க!

‘ஜெட்’ன்னு பேர் வைங்க!

கார்த்திக் ஆனந்த்

———————————–

புருஷன், பொண்டாட்டிகிட்டே ஒளிவு, மறைவு எதுவும்
இருக்கக் கூடாது கமலா!

அதுக்காக வீட்டுல இருக்குறப்போ உடம்புல துணி
எதுவும் போட்டுக்காம, வெறும் கோமணத்தோட
இருக்கறது கொஞ்சம் கூட நல்ல இல்லே, ஆமா…!

ஜா.ரவி

———————————–

என்னோட பாட்டுக்காகவா இத்தனை கை தட்டல்!

இல்லை, பாட்டை நிறுத்தினதுக்காக!

இராமன்

———————————-

என்னடி இட்லியை தலையில் வச்சிருக்க..?

என் புருஷன் இட்லி பூ போல இருக்குன்னு
சொன்னாரே..!

என்.சாமிநாதன்

———————————–

எலக்சன் தேதி அறிவிச்சதுமே, இவர் படு சுறுறுப்பாக
இயங்க ஆரம்பிச்சுடுவார்!

அப்படியா…எந்தக் கட்சியில இருக்காரு?

கட்சியெல்லாம் எதுவுமில்லை, பிரபல ஜோக்
எழுத்தாளருங்க, இவரு!

வி.ரேவதி

———————————

மணி இரண்டாச்சு, இன்னும் சாப்பாடு ரெடியாகலை
நான் ஹோட்டலுக்கு போறேற்!

ரெண்டு நிமிஷம் பொறுங்க!

அதுக்குள்ள தயார் பண்ணிடுவியா?

இல்லங்க…நானும் ஹோட்டலுக்கு வர்றேன்!

பொருநை பாலு

———————————–
–பாக்யா

நாய்க்கும் பேய்க்கும் வித்தியாசம் தெரியுமா?


டாக்டர். நீங்க கேக்குற பணத்தை குடுத்துடறேன்..!

கவலைப்படாதீங்க, ஆபரேஷன்ல உங்களை
எப்படியாவது காப்பாத்திடறேன்..!

இல்ல டாக்டர்..எனக்கு நீங்க பண்ணாம இருந்தாலே
போதும்!

ஜா.ரவி

—————————————

நாய்க்கும் பேய்க்கும் வித்தியாசம் தெரியுமா?

நாய் சத்தம் போட்டு பயமுறுத்தும், பேய் சத்தமில்லாம
பயமுறுத்தும்!

சுப்ரமணி

———————————

தினமும் ராத்திரி நரக வேதனையை அனுபவிக்கிறேன்!

ஏன்?

எனக்கு ஏக்கம் வரும்போதெல்லாம், என் மனைவி
தூக்கம் வருதுன்னு படுத்துடறாளே!

வெ.பாலாஜி

————————————

இவர் பாடிய பாட்டுக்கு ஏன் அரசர் பத்து கசையடி
தண்டனையா குடுத்தாரு?

நாட்டில் பத்து பதுங்கு குழிகளை சொந்தமாக
கொண்டவனேன்னு பாடிட்டாராம்!

ஜா.ரவி

—————————————
–பாக்யா
=

“என் மனைவி ஒரு மாடர்ன் ஆர்ட்”

“”காலையில் என் வீட்டு வாசல்ல நான் தண்ணி தெளிச்சா
போதும்… என் வீட்டுக்காரர் எழுந்துக்குவார்”

“”எப்படி?”

“”குடிச்சிட்டு அங்கதானே விழுந்து கிடப்பார்!”

——————————————–

“என் மனைவி ஒரு மாடர்ன் ஆர்ட்”

“எப்படி?”

“”எனக்கு மட்டும்தான் அவளைப் புரிஞ்சுக்க முடியும்.
எங்க அப்பா அம்மாவுக்கு அவ புரியாத புதிர்!”

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

———————————————–

தொண்டர் 1: தலைவர் மேல ஏன் சிபிஐ கோபமா இருக்கு?

தொண்டர் 2: சிபிஐ கேள்வி கேட்டா, ஒவ்வொரு கேள்விக்கும்
“நாலு ஆப்ஷன் சொல்லுங்க’ன்னு கேட்டாராம்!

எம்.சோமசுந்தரம், பொன்னமராவதி.

—————————————–

இவர்: அறுபதாம் கல்யாணம்… பற்றிச் சொல்லுங்களேன்..!

அவர்: அதுக்கென்ன அவசரம்! இப்பத்தானே என்னோட
ஆறாவது கல்யாணம் முடிஞ்சிருக்கு…

எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.

————————————————-

செய்கூலி, சேதாரம் இல்லாம நகையை வாங்குவேன்…!!


‘‘அந்த பட்டாசுக் கடையில் மட்டும் கூட்டம் அள்ளுதே…
எப்படி?’’

‘‘ஊசி’ வெடி எப்படி வெடிக்கிறதுன்னு அழகான நர்ஸ்
‘டெமோ’ பண்ணிக் காட்டறாராம்!’’

– பர்வீன் யூனுஸ், ஈரோடு

———————————————-

‘‘நான் ஒவ்வொரு தீபாவளிக்கும் நகை வாங்கும்போது
செய்கூலி, சேதாரம் இல்லாம பார்த்துதான் வாங்குவேன்…’’

‘‘அப்படியா! எங்க வாங்குவீங்க?’’

‘‘என் மாமனார் வீட்டுலதான்…’’

– யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

———————————————–

‘‘வேலைக்காரி வந்த பிறகு தான் தீபாவளிக்குப் புடவை
எடுக்கப் போகணுமா…. ஏன்?’’

‘‘பக்கத்து வீட்டுக்காரி எத்தனை புடவை எடுத்தாள்னு
அவ சொல்லுவா… அதைவிட அதிகமா ஒரு புடவை
எடுக்கத்தான்!’’

– பர்வீன் யூனுஸ், ஈரோடு.


——————————————-

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் பாம்பு மாத்திரைன்னாலும், அது வெடிக்கடையில
தான் கிடைக்கும். மெடிக்கல் ஸ்டோர்ல கிடைக்காது!

– நாக தோஷம் நீங்க பாம்பு மாத்திரை கொளுத்துவோர் சங்கம்
– வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

——————————————

‘‘ஹலோ சார்!
நாங்க சிவகாசியில் இருந்து பேசுறோம்… நீங்க ஆர்டர் செஞ்ச
ராக்கெட்டெல்லாம் ரெடியாயிருச்சு…’’

‘‘நீங்களே பத்த வச்சு இங்கே அனுப்பி விட்டுருங்களேன் சார்!’’

– யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

———————————————-

‘‘தீபாவளியும் அதுவுமா தலைவருக்கு வெடிகுண்டு மிரட்டல்
வந்துச்சாமே?’’

‘‘நீ வேற… பட்டாசுக் கடையில போன தீபாவளிக்கு வச்ச
பாக்கியைக் கேட்டதைத்தான் அப்படிச் சொல்றாரு அந்த மனுஷன்!!’’

– யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

————————————————

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ரயில் வெடின்னாலும், அதையும் சிவகாசியிலதான்
செய்வாங்க. பெரம்பூரில் செய்யமாட்டாங்க…

– தீபாவளிக்கு நான்கு மாதத்திற்கு முன்பே ஊருக்கு டிக்கெட்
ரிசர்வ் செய்தோர் சங்கம்

– வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

———————————————-

தலைவர் அரசியலுக்கு வரலைன்னா என்னவா இருந்திருப்பார்..!!

முகத்துல எட்டு தையல் போடுற அளவுக்கு எதுக்கும்மா அடிச்சே…?

சுத்த சுந்தரி

உங்க படம் ஒண்ணுதான் பார்கிற மாதிரி இருக்கு…!!

எல்லை தாண்டி போய் வெடிக்கும்…!!

« Older entries Newer entries »