மூச்சு வாங்குது…!

சில வகை மீன்கள், தண்ணீருக்கு வெளியே அடிக்கடி
துள்ளிக் குதிக்கும். மீன்கள், நீரில் உள்ள ஆக்சிஜனை
சுவாசித்தே வாழ்கின்றன.

இந்த நிலையில், அவை நீருக்கு வெளியே குதிப்பதன்
ரகசியம் என்ன…

தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை, செவுள்களால்
சுவாசிக்கின்றன மீன்கள். சில ரக மீன்களுக்கு, இந்த
ஆக்சிஜன் போதுமானதாக இல்லை. அவற்றின் சுவாச
உறுப்பு, காற்றை நேரடியாக சுவாசிக்கும் வகையில்
அமைந்திருக்கும்.

இந்த வகை மீன்கள், தண்ணீருக்கு வெளியே அடிக்கடி
குதித்து, சுவாசிப்பதை வழக்கமாக்கி கொள்ளும்.
இனப்பெருக்க காலத்தில், அதிக சுறுசுறுப்புடன் நீருக்கு
வெளியே குதித்து, உற்சாகத்தை வெளிப்படுத்துவதும்

உண்டு.


  • என்றென்றும் அன்புடன், அங்குராசு.
    சிறுவர் மலர்
Advertisements

ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி

தாறுமாறாக எதையாவது செய்தால், ‘ஏடாகூடமாக
செய்து மாட்டிக்கொள்ளாதே…’ என்று, எச்சரிப்பதை
கேட்டிருப்போம். அது ஒருவகை, பேச்சு வழக்கு.
இங்கே அறியப்போகும், ‘ஏடாகூடம்’ வேறு
வகையிலானது.

புதிர் விளையாட்டு கருவி ஒன்றுக்கு, ஏடாகூடம்
என்று பெயர். அது, ‘ரூபிக் கியூப்’ என்ற புதிர் சதுரம்
போன்றது. சொல்லப் போனால், அதற்கு அடித்தளமாக
அமைந்தது.

ஏடாகூடம், மர கட்டைகளால் உருவாக்கப்பட்ட கருவி;
மர துண்டின் வெட்டுப் பள்ளங்களில், ஆப்புக்
கட்டைகளை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும்;
எளிதில் பிரிக்க முடியாது. ஆனால், குறிப்பிட்ட ஆப்பு
இணைப்பை உருவினால், சுலபமாக பிரியும்.

அந்த ஆப்பைத் தவிர, வேறு எந்த கட்டையை
இழுத்தாலும், சிக்கல் அதிகரிக்கும். அதனால் தான்,
ஏடாகூடம் என்று பெயர்.

கையடக்கமாக செய்த ஏடாகூடம் கருவிகள், கடந்த
நுாற்றாண்டில், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தன.
பணப்பெட்டி, பொருள் பாதுகாப்பு அறை போன்றவற்றை,
ஏடாகூடம் தொழில்நுட்ப அடிப்படையில், பாதுகாத்தனர்.
அவை, வலிமையான பூட்டுகளாக விளங்கின.

கேரளாவில், திருவிதாங்கூர் சமஸ்தான பகுதிகளில்,
ஏடாகூடம் கருவிகள் காணப்பட்டன. மூன்று கட்டை,
ஆறு கட்டை, பன்னிரெண்டு கட்டை என, பல ரகங்களில்
புழக்கத்தில் இருந்தன.

ஏடாகூடத்தை, ‘ஊரா குருக்கு’ என்றும் அழைத்தனர்.
இதற்கு, அவிழ்க்க முடியாத முடிச்சு என்று பொருள்.
ஆங்கிலத்தில், ‘டெவில்ஸ் நாட்’ அதாவது, ‘நரக முடிச்சு’
என்பர். இந்த கருவியை, இப்போது காண்பது அரிது.

ஏடாகூடம் கருவி உருவாக்கி, சாதித்தவர்களும்
சமீபத்தில் உண்டு. கன்னியாகுமரி மாவட்டம்,
களியக்காவிளை அருகே, மீனச்சல் கிராமத்தை சேர்ந்த
ஓவியர் ராஜசேகரன், சிறுவயதிலேயே, ஏடாகூடம் பற்றி
அறிந்திருந்தார்.

இணையத்தில் உலாவிய போது, 19 அடி நீள, ஏடாகூடம்
கருவி இருப்பதை கண்டார். ஐரோப்பா கண்டம்,
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் அதை உருவாக்கி,
கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

அதைக் கண்ட உத்வேகத்தில், 24 அடி நீளத்தில், ஆறு
பலகைகளை இணைத்து, பிரம்மாண்ட ஏடாகூடம்
கருவியை, கேரள மாநிலம், கொல்லத்தில் உருவாக்கி,
கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
ஓவியம் வரைவதிலும், அவர் கின்னஸ் சாதனை

படைத்துள்ளார்.


அதிமேதாவி அங்குராசு!
சிறுவர் மலர்

மொக்க ஜோக்ஸ்

ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை

 ஆங்கில நாவல் எழுதி  14 வயது சிறுமி சாதனை

சென்னை:
சென்னையைச் சேர்ந்த, 14 வயது சிறுமி, ஆங்கிலத்தில்
நாவல் எழுதி சாதனை படைத்துள்ளார்.

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர், ஜெயசேகர்;
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்
பணியாற்றுகிறார். இவரது மனைவி கோமதி; கால்நடை
மருத்துவர். இவர்களின் மகள், தீபிகா; நொளம்பூரில்
உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு
படிக்கிறார்.

இவர், எல்.கே.ஜி., முதல், மூன்றாம் வகுப்பு வரை,
அமெரிக்காவிலும்; பின், ஆறாம் வகுப்பு வரை
சென்னையிலும், பின், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பை,
அமெரிக்காவிலும் படித்து உள்ளார்.

சிறு வயதில் இருந்தே கதை புத்தகங்கள், ஓவியம் என,
தீபிகா ஆர்வமாக இருந்தார். அவரது ஆர்வத்தை பார்த்த
பெற்றோர், அவருக்கு ஒத்துழைப்பு அளித்து
உற்சாகமூட்டினர்.தொடர்ந்து தினமும், தன்
கற்பனைகளால் எழுதிய கதைகளை தொகுத்து
, ‘சொர்க்க தீவுக்கு ஒரு பயணம்’ என்ற தலைப்பில்,
புத்தகமாக உருவாக்கி உள்ளார்.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை
அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், நேற்று
நடந்தது.

சிறுமி படிக்கும் பள்ளியின் முதல்வர்,
வினிதா சுப்ரமணியம், புத்தகத்தை வெளியிட,
சிறுமியின் தாத்தாக்கள் அருணாச்சலம், எஸ்.டி.கே.மணி
ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மொத்தம்,
193 பக்கங்கள் உள்ள இந்த புத்தகம், 195 ரூபாய் விலையில்
விற்கப்படுகிறது.

கடல் வளம் மீது அதிக ஆர்வமுள்ள சிறுமி தீபிகா,
புத்தகத்தில் கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாக, அவரது தந்தை,
ஜெயசேகர் தெரிவித்தார்.

புத்தகத்தின் அட்டைப் படம், அதற்கான விளம்பர
வீடியோ ஆகியவற்றையும், சிறுமி வினிதாவே தயார்

செய்துள்ளார்.


தினமலர்

இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு

சிசு, டாக்டர், அமெரிக்கா, கருக்கலைப்பு

ஜூலியட் :
அமெரிக்காவில் இறந்த டாக்டர் ஒருவரது வீட்டில்,
2,000க்கும் அதிகமான, இறந்த நிலையிலான சிசுக்கள்
இருந்தது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பிறப்பதற்கு முந்தைய நிலையில், தாயின் வயிற்றில்
உள்ள குழந்தை, சிசு என்று அழைக்கப் படுகிறது.
அமெரிக்காவின், இல்லினாயிஸ் மாகாணம்,
வில் கவுன்டி பகுதியை சேர்ந்தவர், உல்ரிச் கிளோப்பர்.

டாக்டரான, இவர், கருக்கலைப்பு மருத்துவத்தில்
நிபுணர். இவர், நடத்தி வந்த கருக்கலைப்பு மருத்துவ
மனைக்கு வழங்கப்பட்டு வந்த உரிமம், 2015ல் ரத்து
செய்யப்பட்டது. இதைஅடுத்து, அந்த மருத்துவமனை
மூடப்பட்டது.

இந்நிலையில், கடந்த, 3ம் தேதி, கிளோப்பர் இறந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், கிளோப்பர் வீட்டில், ஒரு
அறையில், 2,000க்கும் அதிகமான, சிசுக்கள் பதப்படுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக, வில் கவுன்டி ஷெரீப்
அலுவலகத்துக்கு, அவரது குடும்ப வழக்கறிஞர்
தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசாரும், டாக்டர்களும், கிளோப்பர்
வீட்டுக்கு சென்றனர். அங்கு, 2,246 சிசுக்கள்,
பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளதை கண்டுபிடித்தனர்.

இது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர்

சிந்தனையாளர் முத்துக்கள்!

சிந்தனையாளர் முத்துக்கள்!

அறிவியலில் தோல்விகளே இல்லை; எல்லாமே பரிசோதனைகளும், முயற்சிகளும் தான்.

நரேந்திர மோடி,பிரதமர், இந்தியா

பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!

பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!

மக்காச்சோளம் போன்று உயர்ந்து வளர்ந்து கதிர்
விடும் பயிர்கள் என்றால், பறவைகளுக்கு படு குஷி.
ஆனால், அவற்றை விளைவிக்கும் விவசாயிகளுக்கு
பறவைகள் பெரிய தலைவலி.

இதற்கு தான் பல நுாற்றாண்டுகளாக சோளக் காட்டு
பொம்மை போன்றவை பறவைகளை விரட்ட பயன்
பட்டன. இருந்தாலும், பறவைகள் இது போன்ற
பொம்மைகள் ஆபத்தில்லாதவை என்பதை கண்டு
பிடித்து, தைரியமாக பயிர்களை சூரையாடுகின்றன.

பறவைகளை பொருத்து, பயிர்களை பொருத்து,
14 முதல், 75 சதவீதம் வரை சேதாரம் ஏற்படுவதாக
விஞ்ஞானிகள் மதிப்பிட்டுஉள்ளனர். இவ்வளவு
சேதத்தை குறைக்க, அமெரிக்காவிலுள்ள ரோட்
ஐலண்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், லேசர்
கதிர்களை பயன்படுத்த முடியும் என, கண்டறிந்து
உள்ளனர்.

பயிரின் மேல்மட்ட உயரத்திற்கு கம்பங்களை நட்டு,
அதில் லேசர் கருவியை பொருத்தி வைத்தனர்
விஞ்ஞானிகள். கம்பத்தில் லேசர் சாதனம், கலங்கரை
விளக்கம் போல சுழன்றபடியே இருக்கும். அதிலிருந்து
வெளிவரும் லேசர் துடிப்புகள், 600 அடி வரை வீரியமாக
வீசக் கூடியவை.

பறவைகள் தானியத்தை கொத்த வந்தால், சட்டென்று
லேசர் கதிரைப் பார்த்ததும் மிரண்டு, வேறு பக்கம்
வேகமாக பறந்து போய்விடுகின்றன.இதில் பயன்படுவது,
ஆபத்தில்லாத பச்சை நிற, எல்.இ.டி., லேசர்தான் என்பதால்,
சூரிய மின்சாரமே இக்கருவிக்கு போதுமானது.

ஏற்கனவே, அமெரிக்காவில் சோளக் கருது விளைவிக்கும்
விவசாயிகள், இக்கருவியை வாங்கி பொருத்த ஆரம்பித்து

விட்டனர்.


தினமலர்

கற்றாழையில் பிளாஸ்டிக் பை!

உலகெங்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை வர ஆரம்பித்து
விட்டது; ஆனால், பிளாஸ்டிக் பைகளுக்கு சரியான
மாற்றுக்கான தேடல் இன்னும் முடிந்தபாடில்லை.

மெக்சிகோவை சேர்ந்த, அதேமஜாக் பள்ளத்தாக்கு
பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வறண்ட பூமியிலும்
விளையும் கற்றாழைகளிலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்க
முடியும் என, கண்டறிந்துள்ளனர்.

கற்றாழையை வெட்டி, பிழிந்து கிடைக்கும், வழவழ
கொழகொழ சாறில், மிருகக் கொழுப்பு, மெழுகு
ஆகியவற்றை சேர்த்து, இயற்கை பிளாஸ்டிக்கை
தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மெக்சிகோ
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த இயற்கை பிளாஸ்டிக்கில் வலுவான ஷாப்பிங்
பைகளை தயாரிக்க முடியும். மேலும், இதை குப்பையில்
போட்டால், பத்தே நாட்களில் மட்கிப் போய்விடும்;
தண்ணீரில் சில மணி நேரத்தில் கரைந்துவிடும். இதை,

இதைத்தான் உலகம் எதிர்பார்க்கிறது.


தினமலர்

காரணம் – கவிதை

குழந்தையோடு
கை நீட்டுபவளுக்கு
கரிசனப்படுகிறாய்…

இறந்துபோனது
அஃறிணை உயிரெனினும்
கண்ணீர் சிந்துகிறாய்…

பூக்களைப் பறிக்காதீர் என
பூங்காக்கள் தோறும்
பிரச்சாரம் செய்கிறாய்…

உலகின்
ஏதோ ஒரு மூலையில்
பூகம்பத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக
பிரார்த்திக்கிறாய்…

எப்போதும்
சாப்பாட்டை வீண்டிக்க
விரும்ப மாட்டாய்…

வீட்டுக்கு ஆகாது,
தரித்திரம் பிடிக்கும் ஆகிய
தர்க்கங்கள் மீறி
குருவிக்கூட்டை
கலைக்காமல்
விட்டு வைத்திருக்கிறாய்…

இந்தக் காரணங்கள்
போதாதா
நான்உன்னைக் காதலிக்க!!

—————————சுமதிஸ்ரீ
தகப்பன் சாமி – கவிதைதொகுப்பிலிருந்து

எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்…!

  எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...! DuqUJaolSemk7RK52Npx+ae979df9-6ab0-4804-b367-de071eaec394

« Older entries Newer entries »