அன்பு..

இந்த மூன்றெழுத்து
மந்திரத்தால்
யாரும் எதையும்
சாதிக்கலாம்

இது இல்லையென்றாலும்
குறைந்தாலும்
பிரச்சினைகள்
தலைதூக்கும்
தலைவிரித்தாடும்

இதன் நீள அகல ஆழங்கள்
எங்கும் எப்போதும்
எல்லையற்றது..!

இதற்கு ஈடாக
இவ்வுலகில் இனி
எது தோன்ற முடியும்?

வன்முறை வென்றதாக
வரலாறே இல்லை!
அன்பு தோற்றதாக
அடையாளமும் இல்லை..!

————————-
>கவிஞர் கவியழகன்
நன்றி: (கவிதைப்பூக்கள்)

 

தன்மானம்..

 

மோதலில்
தலை கவிழ்ந்தால்
அவமானம்!
காதலில்
தலை கவிழ்ந்தால்
அது நாணம்!

சுய மரியாதை என்பது
தன்மானம்!
வெகுமதி என்பது
சன்மானம்!


புத்தொளி கொடுத்திடக்
கண்தானம்!
புத்தனின் வழிதான்
நிர்வாணம்!

அண்டம் என்பதே
பெருவானம்!
அழிவில்லாப் புகழே
வருமானம்!


அங்கக் குறைபாடே
உடலூனம்!
அதைக் கேலி பேசுவது
அறீவினம்!

——————–
>கவிஞர் கவியழகன்
(கவிதைப் பூக்கள்)

சுற்றினால்..

புவி சுற்றினால்
காலத்தின் ஓட்டம்!

சூரியன் சுற்றினால்
பகலிரவு மாற்றம்!

காற்று சுற்றினால்
சூறாவளித் தோற்றம்!

தலை சுற்றினால்
மனிதருக்கு மயக்கம்!

பூக்களைச் சுற்றினால்
மணத்தின் ஈர்ப்பு!

பேட்டையைச் சுற்றினால்
பயங்கரப் பேர்வழி!

நாட்டைசு சுற்றினால்
நாளைய தலைவன்!

எண்களைச் சுற்றினால்
பேசலாம் தொலைபேசி!

வீணாகச் சுற்றினால்
உயர்வேது நீ யோசி!

==================
>கவிஞர் கவியழகன்
(கவிதைப் பூக்கள்)

குழந்தை

சொற்களே இல்லா
மொழியால்
பற்களே இல்லா
வாயால்
மழலையமுதம் பேசும்
அற்புத மனித அரும்பு!

பிஞ்சு கை கால்
அசைக்கும்
கொஞ்சுகையில்
சிரிக்கும்
எவரையும் எளிதில்
கவரும்


உடற்பயிற்சி
செய்வது போலக்
கைகளை அசைக்கும்
கால்களை உதைக்கும்!

உழைத்துக் களைத்து
ஓயந்தது போல
அசைந்து அடிக்கடி உறங்கும்


எத்தனைத் தாய்
அருகினில் வந்தாலும்
தன் தாயை அறியும்!

தாய்ப்பால் அருந்திச்
சுவைக்கையிலே
பேச்சொலி ஏதும்
கேட்டுவிட்டால் உடனே
திரும்பிப் பார்க்கும்!


வண்ண வண்ண
அசைவுகளைக்
காணும் பொழுது
எப்பொழுதும்
கன்னக்குழிவுடன்
சிரிக்கும்!

நினைத்த போதெல்லாம்
நினைத்தவர்
மேலெல்லாம்
நனைத்து வைக்கும்
சிறுநீரால்!


—————————
>கவிஞர் கவியழகன்
(கவிதைப் பூக்கள்)

மூன்றெழுத்து மந்திரம்!

அன்பு

இந்த மூன்றெழுத்து மந்திரத்தால்
யாரும் எதையும்சாதிக்கலாம்!

இது இல்லையென்றாலும் குறைந்தாலும்
பிரச்சினைகள் தலை தூக்கும், தலை விரித்தாடும்!

இதன் நீள அகல ஆழங்கள்
எங்கும் எப்போதும்
எல்லையற்றது!

இதற்கு ஈடாக இவ்வுலகில் இனி
எது தோன்ற முடியும்?

வன்முறை வென்றதாக வரலாறே இல்லை!
அன்பு தோற்றதாக அடையாளமும் இல்லை!

தாய் சேய் இடையேயும்
குடும்பத்திலும்
நிலவினால் இது பாசம்!

தோழமை இடையே தோன்றும் போது நட்பு!
மணமாகும் முன் தருவதும் பெறுவதும் காதல்!
கருதாமல் பலனை உதவின் கருணை!
எளியவர் மீது கொண்டால் இரக்கும்!

தாய் நாட்டின் மீது
நேசமே நாட்டுப்பற்று!

——————————————————————-
கவிஞர் கவியழகன்
நன்றி(‘கவிதைப்பூக்கள்’ கவிதைத் தொகுப்பு)