மதுபோதையில் உளறிய குடிமகன்.. விபச்சார விடுதியை கண்டுபிடித்த போலீஸ்..

சென்னையில் மது போதையில் கலாட்டா செய்து கொண்டிருந்த குடிமகன் ஒருவரை காவல் துறையினர் விசாரித்த போது விபச்சார விடுதி குறித்து உளறியதாகவும் அதன் பின்னர் அந்த விபச்சார விடுதியை சோதனை செய்தபோது 4 பெண்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 

சென்னையில் உள்ள ஜாம்பஜார் விடுதி அருகே இரண்டு போதை நபர்கள் கத்தியை காட்டி ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயல்வதாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனே சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் மதுபோதையில் தகராறு செய்த பாலகிருஷ்ணன், அந்தோணி ராஜ் ஆகிய இருவரின் கைது செய்து விசாரித்த போது அந்த விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும் அதில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க வந்ததாகவும் அப்போதுதான் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறினர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட விடுதிக்கு காவல்துறையினர் சோதனை செய்தபோது வெளி மாநிலங்களில் இருந்து பாலியல் தொழிலுக்காக பெண்கள் வரவழைக்கப்பட்டு பாலியல் தொழில் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து விடுதியின் வரவேற்பாளர் மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த விடுதியில் பாலியல் தொழிலுக்கு உள்ளாகிய 4 பெண்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் விடுதியை ஒப்பந்தம் எடுத்திருந்த மூன்று பேர், பாலியல் தொழிலுக்கு பெண்களை சப்ளை செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. மது போதையில் உளறிய இருவரால் பல ஆண்டுகளாக நடத்தி வந்த விபச்சார விடுதியை போலீசார் கண்டுபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி-வெப்துனியா

பின்னூட்டமொன்றை இடுக