கார்த்திகை பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் சுற்ற ஏற்ற நேரம்

கார்த்திகை தீபத் திருவிழா நடந்துகொண்டிருக்கும் நேரமிது.எப்போதும் மக்கள் அண்ணாமலையாரின் தரிசனம் பெறுகிறார்கள்.

ஒரு சமயம் நாங்கள் கார்த்திகை தீபத்தை அண்ணாமலையார் கோவிலில் இருந்து தரிசனம் செய்துவிட்டு அப்படியே மலைவலம் செய்தோம்.

தீபத்தன்று, அதாவது 6.12.22.தீப தரிசனம் மலைப்பாதையில் எவ்விடத்திலுமிருந்தும் தரிசிக்க முடியும்.

மறுநாள் 7.12.22 புதனன்று பௌர்ணமி ஆகையால், காலை 8:01 முதல் 8.12.22 காலை 9:37 வரை மலைவலம் செய்யலாம்.

மலை வலம் செல்வதற்கு எல்லா நாட்களுமே உகந்த தினம் என்றாலும் பௌர்ணமி தினத்தில் மட்டும் மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு மற்ற தினங்களை விட அதிக சிறப்பு உண்டு.

எனவே ஊழ்வினையை நீக்கும் திருவண்ணாமலையானை நினைத்தாலே பாவங்கள் தீரும். 2022 ஆம் ஆண்டில் பௌர்ணமி தினத்தில் அண்ணாமலையாரின் அருளும் ஆசியும், அண்ணாமலையில் உண்ணாமலை அம்மனையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானது.

அண்ணாமலைக்கு அரோகரா 🙏🙏🙏

பதிவிட்டவர்: உமாதேவி ஆடலரசன் (தமிழ்-கோரா)

பின்னூட்டமொன்றை இடுக