குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

இது ஒரு அழகிய மற்றும் மிக மிக அமைதியான ஒரு பாடல்…. இந்த பாடலை நாம் பாடும் போதும் கேட்கும் போதும் நம் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் மறையும்…..

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

சரணம் 1

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

சரணம் 3

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

Lord Krishna

சரணம் 4

கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

சரணம் – 5

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..

பின்னூட்டமொன்றை இடுக