நவம்பர் 13, 2009 இல் 7:25 மு.பகல் (கவிதை)
தாலாட்டு கேட்க
நினைத்தால்
தவிப்புகளே மிச்சம்.
வசந்தகாலத்தை
எதிர்பார்த்தால்
இலையுதிர் காலம்
காரத்தை நினைத்துத்
தொட்டால்
அமிலத்தின் சீற்றம்.
தென்றலுக்காய்
ஏங்கினால்
புயலின் அலைக்கழிப்பு
வாழ்வின் இரகசியம்
இச்சூழ்நிலை தனிலே..
முயன்றவர் வென்றார்.
முயல்வீர் நீவிர் அதனாலே!
———————————————-
Posted by John ஜான் போஸ்கோ
Thanks: http://johnbosco.blogspot.com
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 9, 2009 இல் 4:16 மு.பகல் (கவிதை)
* விழியில் விழுந்தாய்
இதயம் நுழைந்தாய்
ஆனால்,
உயிரில் கலக்கும் முன்
நழுவிச் சென்றாய்…
* உனக்கு நான்
எனக்கு நீ
என்ற வார்த்தைகளை
வாய்மொழியோடு மட்டும்
விட்டுச் சென்றாய்…
* கண்களில் காந்தத்தை வைத்து
பெண்களை படைத்த இறைவனே!
ஆண்களை மட்டும் ஏன்
தூண்டில் மீன்களாய் படைத்து விட்டாய்!
* தேனொழுகும் வார்த்தைகளில்
தேக்கு மர இதயமும்
மெழுகைப் போல்
இளகிவிடும்…
* கரும்பாய் இனித்திடும்
காதல் மொழிகளில்
இரும்பு இதயமும்
துரும்பாய் போய்விடும்…
* காதலைப் படைத்த இறைவன்
ஓர் கருவியையும் படைத்திருந்தால்
கண்டுபிடித்து விடலாம்
கலப்படமில்லா காதலை…
* நினைவை கனவாக்கி
நிஜத்தை நிழலாக்கி
சுகத்தை எடுத்துக் கொண்டு
சோகத்தை விட்டுச் சென்றவளே…
* நீ செய்த துரோகம் உன்
காதலனுக்கல்ல,
புனிதமான காதலுக்கு!
— வி.பி.நாராயணன், சென்னை.
* * *
Thanks:
http://www.dinamalar.com/Supplementary/varamalar_detail.asp?news_id=1000
1 மறுமொழி
நவம்பர் 9, 2009 இல் 3:48 மு.பகல் (கவிதை)

என் உயிர்
உன் அன்பே.
என் வெளிச்சம்
உன் காதல்
எனக்கு காவல்
உன் பேச்சு..
எனக்கு..இன்பம்
உன் குரல்..
என் தேடல்
உன் நலம்.
என் நிம்மதி
உன் நிம்மதி.
என் சந்தோசம்
உன் உயிர்…
அது என் உயிர்.
——————————
நன்றி-ராகினி
http://rahini.blogspot.com/
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 5, 2009 இல் 8:02 மு.பகல் (கவிதை)

—————————————————-
நின்முகம் தந்திடும் நிர்மலச் சிரிப்பு
தண் ஒளிவீசும் வெண்மதி தந்ததில்லை
உன் மழலைக்குரல் இனிமை
வேய்ங்குழல் இசை தந்ததில்லை
உன் தளர் நடைத்துள்ளல்
மென் பூங்கொடி அசைவிலில்லை
என் சிந்தை கவர் மதி
வேறு சிந்தையில் தோன்ற வில்லை
[In anything and every thing
the child's beauty is the best]
———————————————-
Posted by Thevesh
நன்றி; http://puthukkavithai.blogspot.com/2009/07/blog-post_29.html
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 5, 2009 இல் 6:35 மு.பகல் (கவிதை)
முதல் ஒன்றரை வருடத்தில் குழந்தையின் சுகாதாரம்
காக்கும்போது ஹெல்த் ஆஃபீஸராகவும்
அடுத்த மூன்று வயது வரை பிள்ளை மகிழ
கதை கூறும்போது கதாசிரியராகவும்,.
ஆண் மைந்தனுடன் கிரிக்கெட், ஃபுட்பால்
விளையாடும்போது விளையாட்டு வீராங்கணையாகவும்
பெண் மகவிற்கு சிகை அலங்காரம், முக
அலங்காரம் செய்யும்போது ப்யூட்டீஷியனாகவும்,
தன் குழந்தைகளுக்காக சுவைமிகு
பலகாரங்களையும், உணவையும் செய்யும்போது
ஹோட்டல் செஃபாகவும்
குழந்தைகளின் மாறுவேடப் போட்டிக்கு
வசனம் எழுதும்போது வசனகர்த்தாவாகவும்,
குழந்தைகளின் நடனப் போட்டிக்கு முதல்
அடி முதல் அபிநயம் கற்றுக் கொடுக்கும்போது
கொரியோகிராஃபராகவும்,
சிறார்களின் ஆடைகளில் புது டிசைன்களை
வடிவமைக்கும்போது ஃபேஷன் டிசைனராகவும்
பிள்ளைகள் தன் நண்பர்களுடன் தங்களது இல்லத்தை
ஒப்பிடுவதால் வீட்டை அலங்கரிக்கும்போது
இன்டீரியர் டெகரேட்டராகவும்,
கூடவே தோட்டத்தை செப்பணிக்கும் கார்டனராகவும்,
நவீன கால விஷயங்களைக் குழந்தைகள் பகிர்ந்து
கொள்ளும்போது அப்டுடேட் அம்மாவாகவும்…
பல பாத்திரங்களை அன்னையர்களுக்காக உருவாக்கி
கொடுக்கும் குழந்தைகளுக்கு
குழந்தைகள் தினத்தன்று
நன்றி உரைப்போமே!
வாயார வாழ்த்துவோமே!
——————————————————————–
- ஜெயஸ்ரீ-எம்.சாரி, வர்தா, மகாராஷ்டிரா.
நன்றி; மங்கையர் மலர்
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 3, 2009 இல் 6:11 பிற்பகல் (கவிதை)
நிதர்சனமற்ற ஒன்று
- லிவிங் ஸ்மைல் வித்யா
ஒவ்வொரு முறையும்
தவறான புரிதலின்போது
குழம்ப நேர்கிறேன்…
நிதர்சனத்திலற்ற ஒன்றுக்காய்
அடையாளப்படுத்தப்பட்ட
புறாவைப் போல
உரிய பருவத்திலும்
மறுக்கப்பட்ட தேவைகளால்
ஏங்கிப் போகிறேன்…
மகவுகளின் வயிராற
வேடிக்கை காட்டப்பட்ட
அம்புலிகளைப் போல
இணக்கமற்ற வேளையிலும்
நாசூக்காய்தான் உரையாற்றுகிறேன்
மூத்தவர்களிடம்….
களைத்த எசமானனை
வீட்டிற் சேர்க்கும்
அனிச்சைக் காளைகளைப் போல
சொந்தத் தேவைகளுக்கான
உடல் உழைப்புக்குத்தான்
அலைக்கழிக்கப்படுகிறேன்…
கம்புக்குப் போராடி
நெரிசலில் ஜீவிக்கும்
பண்ணைக் கோழிகளைப் போல
மனித வாழ்க்கையையே
வெறுக்கத்தான் செய்கிறேன்…
அஃ“றிணை வாழ்க்கையின்
ஆயிரம் இம்சைகள் குறித்த
பிரக்ஞையின்றி
யதார்த்தம் பழகாத
கவிதைக்காரன் ஒருவனைப் போல.
—————————————————————-
நன்றி; கல்கி 3-11-09
http://www.dinamalar.com/Supplementary/kalki_detail.asp?news_id=279&dt=10-26-09
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 3, 2009 இல் 2:21 பிற்பகல் (கவிதை)
முகங்கள்
————
ஓவியங்கள் வரையும்
குழந்தைகள் முகத்தை விட
அழகாயிருக்கிறது
குழந்தைகள் கிறுக்கித்தள்ளும்
பெரியவர்களின் முகங்கள்!
>தஞ்சை கமருதீன்
—————————————-
ரகசியம்
———-
எல்லா ரகசியங்களிலும்
ஒளிந்து கொண்டிருக்கின்றன
எவரோ ஒருவரின்
அவமானங்கள்
>பெ.பாண்டியன்
—————————————-
உழைப்பு
————–
சாப்பிடும் போது கூட
உழைத்துக் கொண்டே
சாப்பிடுகிறார்
நெற்றியில் வழியும் வியர்வையை
ஒரு கையால் துடைத்துக் கொண்டு!
>எம்.தாமரைச்செல்வன்
—————————————–
நன்றி;( வாசகர் கவிதை) குமுதம் 4-11-09
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 3, 2009 இல் 9:05 மு.பகல் (கவிதை)
“அப்பா இன்னும் வரலை”
எனக்கூறும்
மகனின் பொய்யை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வீட்டினுள்
இருந்தபடி.
“போயிட்டாருப்பா”
என திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.
கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்…
தகப்பனாய்
இருப்பது.
———————————————————–
பதிவிட்டவர்; பா.ராஜாராம்
நன்றி;
http://karuvelanizhal.blogspot.com/2009/10/blog-post_11.html
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 3, 2009 இல் 8:27 மு.பகல் (கவிதை)

இலை துளிர்க்க மறந்து…
வெட்கத்தில்…
பூக்களாய் சிரிக்கும்
குல்மொஹர் மரம்…
——————————————————–
நன்றி;http://ramkipoems.blogspot.com
photo: from net
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 3, 2009 இல் 7:50 மு.பகல் (கவிதை)
விளையாட்டு
————————–
பலூனை உடைத்து
குழந்தை
விளையாடுவதைப் பார்த்ததும்
காற்று விளையாடுகிறது…
நீர்க்குமிழை உடைத்து!
>பொதக்குடி வெற்றிமுரசு
————————————————————————
மொய்!
———-
ஒவ்வொருவரும்
தங்கள் பெயரை
சலித்துக் கொண்டே
எழுதுகிறார்கள்
திருமண
அன்பளிப்புக் கவர் மீது!
>தஞ்சை கமரூதீன்
—————————————————————-
பரிதாபம்
—————-
தமிழனாய்ப் பிறந்திருந்தால்
புத்தரும்
முள்வேலிக்குள் தான்
இருந்திருப்பார்!
>இளங்கோ
————————————————————————-
நன்றி; வாசகர் கவிதை-குமுதம் 4-11-09
கருத்துத் தெரிவிக்கவும்