இரவில் விலங்குகளின் கண்கள் ஏன் மின்னுகின்றன தெரியுமா?

தெரியுமா?

Why do animals' eyes sparkle?

நாய், பூனை, சிங்கம் போன்ற விலங்குகளின் கண்கள் இருட்டில் மின்னுவதை பார்த்திருப்போம். ஏன் சில விலங்குகளின் கண்கள் மட்டும்  மின்னுகின்றன என்பதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

சில விலங்குகளின் கண்கள் இரவில் பிரகாசிக்க காரணம் அவற்றின் கண்களின் விழித்திரையின் பின்புறத்தில் ஒளியை பிரதிபலிக்கும் ஒரு அடுக்கு உள்ளது. அதனால் இருட்டிலும் அவைகளால் பார்க்க முடியும்.

நாய்கள், பூனைகள், சிங்கங்கள், சிறுத்தைகள் போன்றவற்றின் உடல் இருட்டில் தெரியவில்லை என்றாலும் அவற்றின் பிரகாசமான கண்கள் ஒளிர்வதை காண முடியும். காரணம் அவற்றின் கண்களுக்கு பின்புறம் Tapetum Lucidum எனப்படும் ஒரு சிறப்பு வகை பிரதிபலிப்பு அடுக்கு உள்ளது.

இது அவற்றின் கண்களில் ஒளிச்சேர்க்கைகளால் உறிஞ்சப்படும் ஒளியின் அளவை அதிகரிக்கிறது. இந்த அடுக்கு ஒளியை பிரதிபலிப்பதால் இருட்டில் உள்ளவற்றை எளிதாக பார்க்க முடிகிறது.

விலங்குகளின் கண்கள் இரவில் பளபளக்க Tapetum Lucidum என்பது கண்களில் விழித்திரையின் பின்புறத்தில் உள்ள திசுக்களின் பிரதிபலிப்பு அடுக்காகும். இந்த திசு அடுக்கு காரணமாக ஐஷைன் தோன்றுகிறது. 

இவை விழித்திரை வழியாக மீண்டும் கண்களுக்குள் நுழையும் ஒளியை பிரதிபலிக்கிறது. இதனால் இருட்டில் பார்க்கும் திறன் அதிகரிக்கிறது. இதனால் வேட்டையாடுவதையும், வேட்டையாடுபவர்களை கண்டறியவும் எளிதாகிறது. 

டேப்டம் லூசிடம் தயாரிக்கும் கனிமங்களைப் பொறுத்து விலங்குகளின் கண்களின் நிறம் மாறும். நாய் போன்ற சில விலங்குகளின் கண்கள் வெண்மை நிறத்துடன் கூடிய நீல நிறத்திலும், புலிகளின் கண்கள் பச்சை நிறத்திலும், மஞ்சள் நிறத்தில் பூனையின் கண்களும் காணப்படும்.

இரவில் ஒளிரும் கண்களுடன் காணப்படும் விலங்குகள் பொதுவாக சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஆரஞ்சு போன்ற நிறங்களில் இருக்கும். ரங்கூன்கள், மான் கண்கள் மஞ்சள் நிறத்திலும், ஆந்தை, முயல்கள், நரிகளின் கண்கள் சிவப்பு நிறத்திலும் நரி, சிறுத்தை, புலியின் கண்கள் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

–கே.எஸ்.கிருஷ்ணவேனி
நன்றி: கோகுலம்

பின்னூட்டமொன்றை இடுக