சிவபுராணம்- பாடல் வரிகள்

சிவராத்திரி அன்று பாட வேண்டிய சிவபுராணம்
————————–

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!
தேசன் அடிபோற்றி7 சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி!
மாயப் பிறப்பறுக்கம் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச்சிவபுரா ணந்தன்னை
முந்தை விளை முழுதும் ஓய உரைப்பன்யான்,

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்கி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி,
விண்ணிறைந்து, மண்ணிறைந்து மிக்காய் விளக்கு ஒளியாய்
எண் இறந்து எல்லையிலாதானே! நின்பெறுஞ்சீர்
பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்.

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிப்
பல்விருகம், ஆகி, பறவையாய்ப் பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்,
செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்!
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்!
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
‘ஐயா’ எனவோங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம்விமலா!
பொய்ஆயின எல்லாம் போய் அகல வந்தரளி,
மெஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!

ஆக்கம், அளவு, இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்,
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம்கழிய நின்ற மறையோனே!

கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தாற் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று,
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்7
நிறங்கள்ஓர்ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் யெம்பெருமான்
வல்வினையேன் தன்னை!

மறைந்திட மூடிய மாய இருளை
அறம், பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி,
புறம்தோல் போர்த்து, எங்கும் புழுஅழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகி, கசிந்துஉள் உருகும்
நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேன்ஆர்! அமுதே! சிவபுரனேஷ
பாசம்ஆம் பற்றுஅறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம்கெடப்

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே அளவுஇலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர்உயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே!

அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையுமாம்
சோதியனே! துன்இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே!, அந்தம், நடுஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் 
தம் கருத்தின்

நோக்கிய நோக்கே! நுணக்குஅரிய நுண்உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பரிய பேர் ஒளியே!
ஆற்றுஇன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர்ஒளி ஆய், சொல்லாத நுண்உணர்வுஆய்.

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்!
ஊற்றுஆன உண்ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன், ‘என்ஐயா’ அரனே ‘ஓ?’ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு, மெய்ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப்புறவி சாராமே,
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்றுஆடம் நாதனே!
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ‘ஓ’ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து


———————————————
திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசக சுவாமிகள் திருவடிகளே சரணம்.

———————
நன்றி-மாலைமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: