இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம்

download (1)

முற்றிலும் சுற்றுலாவை நம்பி உள்ள நாடு தாய்லாந்து. தாய்லாந்து என்றாலே பாங்காக்  பட்டயா புக்கெட் போன்ற இடங்களும் கூடவே மஸாஜ் நிலையங்கள் இரவு நேர விடுதிகள் நம் நினைவுக்கு வரும் இந்த மூன்று இடங்களுக்குத்தான் இந்தியர்கள் அதிகமாக செல்கிறார்கள்images (5)

கிராபி என்பது ஒரு மாகாணம். தாய்லாந்தின் தென் கோடியில் அந்தமான் கடலோரம் இருக்கிறது கிராபி தான் தலை நகர். இதன் அருகில் அந்தமான் கடலில் உள்ள குட்டி தீவுகள் என குறைந்தது மூன்று நாட்கள் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இங்கு உள்ளன.images (4)

இங்கு நிறைந்த தண்ணீரோடு பாய்கிறது கிராபி என்ற நதி   ஆற்றை அழகாக வைத்திருப்பது எப்படி என்று இவர்களைப்பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அத்தனை தெளிவான தண்ணீர். ஆற்றின் மறுகரையில் சதுப்பு நிலக் காடுகள். நீண்ட வால் படகில் அரை மணி நேரம் பயணம் செய்தால் ஒரு சிறு காடு அதனுள் ஒரு உயர்ந்த சுண்ணாம்புப் பாறை அதில் ஏறிச் செல்ல படிகள் உண்டு. பாறை குகைக்குள் சென்றால் கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் என்று சில பகுதிகளை அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு இங்கு கண்டெடுக்கப்பட்டதாக கல்வெட்டு வைத்துள்ளது.images (3)

ஆற்றில் உள்ள மிதக்கும் ஓட்டல்களில் அங்கேயே பிடித்த மீன்களை நண்டுகளை சுடச்சுட பொரித்துத்தருகின்றனர். ஆற்றைக்கடந்து சென்றால் ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் குட்டி தீவு   வயல் வெளியும் தென்னை தோப்புக்களும் கேரளாவை ஞாபகப்படுத்துகிறது. இங்கு புத்தர் கோயில் புலிக்குகை பார்க்க வேண்டிய இடங்கள்.images (1)

கொஞ்சம் கடல் கொஞ்சம் மணல் என இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் இந்த தீவுகள். அலைகள் ஆர்பரிக்காத அமைதியான தெளிவான நீலக்கடல் நீரில் குளித்து களித்து கவலைகளை மறந்து வெள்ளை மணற்பரப்பில் ஓய்வெடுக்கலாம்.images (7)

நடுக்கடலும் நம்மூர் ஏரி மாதிரி அமைதியாகவே உள்ளது. இடையிடையே நாம் ஓய்வெடுக்க கடல் நடுவே மணற்பரப்புகள். அதில் இறங்கி நின்றால் நடுக்கடலில் நிற்கும் பிரமிப்பு. அபூர்வ கடல்மீன்களைக் கண்டு களிக்கலாம். இங்கு வனத்திற்குள் சென்று அரிய பறவைகள் விலங்கினங்களை பார்த்து மகிழலாம். ‘சர்பிங்’ போன்ற தண்ணீர் விளையாட்டுகள் இங்கு பிரபலம். இங்கிருந்து இரண்டு மணி நேர படகு பயணத்தில் ரெய்லே பீச்சிற்கு செல்லலாம். நம்மூர் கோவா கோவளம் போன்று இங்கு சூரிய குளியல் பிரபலம். தாய்லாந்தில் கடற்கரை தெருக்கள் எல்லாம் தூய்மையாக சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இருக்கின்றன. இயற்கையின் கொடை இருந்தாலும் கடல் சார்ந்த சுற்றுலாவில் தாய்லாந்து சாதிக்கும் ரகசியம் இதுதான் போலும்

https://chinnuadhithya.wordpress.com/2014/05/06/இயற்கை-கொஞ்சும்-தண்ணீர்/

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!


ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!
கொதிக்கும் ஆண்கள் நல சங்கம்

‘‘இந்தியாவுல பெண்களை விட ஆண்கள் தற்கொலையில்
ஈடுபடுறது ரெண்டு மடங்கு அதிகம். ஒவ்வொரு 5.84 நிமிஷத்துக்கும்
ஒரு ஆண் தற்கொலை செய்துக்கறதா சொல்லுது நேஷனல் க்ரைம்
ரெக்கார்டு பீரோ. காரணம், பெரும்பாலும் குடும்பப் பிரச்னைகள்
தான்.

ஆண்கள் தற்கொலையில மகாராஷ்டிராவுக்கு அடுத்து
ரெண்டாமிடத்துல இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.
‘குடும்ப வன்முறை…
பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ன்னு கோஷங்களைக் கேட்டுக்
கேட்டே நாம பழகிட்டோம். சொல்லப் போனா, இந்தியாவில்
ஆண்களுக்குத்தான் பாதுகாப்பில்லை’’ – விரல் நுனி
ஆதாரங்களை விவரித்துப் பேசுகிறார் சுரேஷ் ராம்.

அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தின் அமைப்பாளர். சமீபத்தில்
மேனகா காந்தியுடன் இந்த டேட்டாக்களைச் சொல்லித்தான்
பெரும் விவாதத்தைக் கிளப்பி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது
இந்த அமைப்பு.


—-
‘‘மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்ங்கற
பதவியில உட்கார்ந்துட்டா ஆண்களைத் திட்டுறது கடமையாகிடுது.
2008ல இதே சீட்ல அமர்ந்திருந்த ரேணுகா சௌத்ரி, குடும்ப வன்முறை
சட்டங்களைப் பத்தி பேசுறப்ப, ‘இது ஆண்கள் துன்பப்படுறதுக்கான
காலம்’னு பெருமையா சொன்னாங்க.

இப்ப ‘எல்லா வன்முறைகளும் ஆண்கள்கிட்ட இருந்துதான்
தொடங்குது’ன்னு திருவாய் மலர்ந்திருக்காங்க மேனகா காந்தி.
தமிழ்நாட்டுல நடக்குற கொலைகள்ல 40 சதவீதத்துக்கு மேற்பட்டவை
பெண்களால் நடக்குதுன்னு புள்ளிவிவரங்கள் சொல்லுது. அப்புறம்
எப்படி வன்முறை எல்லாத்தையும் ஆண்கள் கணக்குல
எழுதினாங்கன்னு தெரியல.

மேனகா காந்தி சொன்ன இன்னொரு திட்டமும் எங்களை எதிர்க்க
வச்சிருக்கு. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் பெண்கள் கிட்ட
மென்மையா, அவங்களுக்கு உதவிகரமா நடந்துக்குற பையன்களுக்கு
அவார்டு கொடுக்கப் போறாங்களாம்.

பையன்னா பெண்ணுக்கு உதவி செய்யணும், பாதுகாக்கணும்.
அவளுக்கு எது நடந்தாலும் அதுக்கு இவன்தான் பொறுப்புன்னு சமூகம்
தருது பாருங்க ஒரு பிரஷர்… அது தாங்காமதான் ஆண்கள் தற்கொலை
அதிகரிச்சிருக்கு. பிஞ்சு வயசுலயே அந்த மன அழுத்தத்தை இவங்க
திணிக்கப் பார்க்குறாங்க.

பிரதமர் மோடி கூட ‘உங்கள் தாயும் சகோதரிகளும் வெட்டவெளியில்
மலம் கழிக்கிறார்கள். இது ஒவ்வொரு ஆண்மகனுக்கும் அவமானம்’னு
ஒருதரம் பேசினார். ஏன், ஆண்கள் வெட்டவெளியில் போகலாமா?
அது அவமானம் இல்லையா? கழிப்பறை இல்லாததால சுகாதாரம்
கெட்டுப் போகுது. அதனால வர்ற நோய்கள் ஆண், பெண் ரெண்டு
பேரையும்தான் பாதிக்கும். சுத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை
ஆம்பளை – பொம்பளைன்னு இழுத்துவிட்டு பாலிடிக்ஸ் பண்ணி
ஆதாயம் தேடப் பார்க்குறாங்க இவங்க!’’
‘‘இதில் என்னங்க ஆதாயம்?’’

‘‘நிறைய இருக்கு. பெண்களை தனி ஓட்டு வங்கியா பார்க்குறாங்க
அரசியல்வாதிகள். அதோட, இதில் உலக நாடுகளின் சதியெல்லாம்
இருக்கு. இந்தியாவின் குடும்ப அமைப்பு மேல அமெரிக்காவுக்குப்
பொறாமை. அங்கெல்லாம் முதியோருக்காகவும் வேலையில்லா
பட்டதாரிகளுக்காகவும் அரசாங்கம் காசைக் கொட்டி பட்ஜெட் ஒதுக்க
வேண்டியிருக்கு.

ஆனா, இந்தியாவுல ஒவ்வொரு குடும்பமும் ஒரு அரசாங்கம் மாதிரி.
குடும்பத்துல ஒருத்தனுக்கு வேலை கொடுத்தா கூட அந்த வீடே சச்சரவு
இல்லாம வாழும். குடும்ப அமைப்புன்னு ஒண்ணு இருக்குற வரை
இந்தியா உடையாது. பிரச்னைகள் வராது. அரசாங்கத்துக்கு வீண்
செலவுகள் இருக்காது. அதெல்லாம் ஏன்… குடும்பத்துக்கே ஒரு
பைக்தான்னு இருக்குற வரைக்கும் நுகர்வுக் கலாசாரம் கூட இங்கே
வளராது.

அதனாலதான் இந்தியா, சீனா, ஜப்பான் மாதிரியான கிழக்கு நாடுகள்ல
குடும்ப அமைப்பை சிதறடிக்க எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா
எடுக்குது. சீனாவிலும் ஜப்பானிலும் அதை ஓரளவு சாதிச்சிட்டாங்க.
இந்தியாவில் அவங்க எதிர்பார்த்த அளவுக்கு ரிசல்ட் இல்ல. அந்த
வெறுப்பைத்தான் ஆட்சியாளர்கள் அடிக்கடி இப்படி வெளிப்படுத்துறாங்க!’’

‘‘இத்தனை நாள் பெண்கள் அடிமைகளா இருந்தாங்களே…
‘இனி ஆண்கள் துன்பப்படும் காலம்’ என்பதில் என்ன தப்பு?’’

‘‘பெண்கள் அடிமைகளா இருந்தாங்களா? இதையே நாம மறுசிந்தனை
செய்யணும். ராமாயணம்னா சீதையை தீக்குளிக்கச் சொன்னதை மட்டும்
தான் பார்க்கறோமே தவிர, மனைவி கேட்ட வரத்தால செத்துப் போன
கணவன், சித்தி வார்த்தைக்காக காட்டுக்குப் போன மகன், தங்கச்சியோட
பழிவாங்கலுக்காக வில்லனா மாறின ராவணன்னு அதோட மறுபக்கத்தைப்
பார்க்கிறதில்லை. வாழ்க்கையிலயும் இப்படித்தான்.

அந்தக் காலத்துலயும் எத்தனையோ பெண்கள் குடும்பத்தோட டிசைடிங்
அத்தாரிட்டியா இருந்திருக்காங்க. என்ன… ‘வீட்டுக்குள்ள நான்
பார்த்துக்கறேன்; வெளி வேலைகளை நீ பார்த்துக்கோ’ன்னு
பொறுப்புகளைப் பிரிச்சிக்கிட்டாங்க. வெளியே போய் சம்பாத்தியம்
கொண்டு வர்ற ஆம்பிளையை உசத்தியாவும் பெண்ணை தாழ்வாவும்
நினைச்சது நம்ம தப்பு.

மாசம் முப்பது நாளும் வெளியே சாப்பிடுற இன்றைய தம்பதிகளைக்
கேட்டுப் பாருங்க. வீட்டில் ஒருத்தர் இருந்து சமைச்சுப் போட்டா அது
எவ்வளவு சேமிப்பு… அதுவே பெரிய சம்பாத்தியம்னு சொல்வாங்க!’’

‘‘மோடி பேசுவது அமெரிக்க சதி, சரி… சராசரி ஆண்களே ஆக்ரோஷமா
பெண்ணியம் பேசுறாங்களே! அதுக்கு என்ன காரணம்?’’

‘‘ஆல்ஃபா மேல் சிஸ்டம்னு ஒண்ணு இருக்கு. ஓநாய்கள் கூட்டத்துல
ஆதிக்கம் நிறைஞ்ச ஆண், தன் கூட்டத்தில் இருக்குற எல்லா
பெண்ணோடும் தான்தான் இன்பம் துய்க்கணும்னு நினைக்கும்.

இதனால இளம் ஜோடிகளை சேரவே விடாம பிரிச்சி விட்டுடும்.
இப்படிப் பிரிக்கிற வேலைதான் ஆண்கள் பேசுற ஃபெமினிஸம்.
வேணும்னா பாருங்க…

இளம் பையன்களை விட மிடில் ஏஜ் ஆண்கள்தான் பெண்ணியம்
அதிகம் பேசுவாங்க. கல்யாணம் ஆகிடுச்சு… நம்ம பாலியல் வாழ்க்கை
முடிஞ்சுடுச்சுங்கற உண்மையை ஏத்துக்க முடியாம செய்யிற வேலை
இது!’’

‘‘நீங்க பேசுறது என்ன? ஆணியமா? இல்ல, ஆண் மேலாதிக்கமா?’’

‘‘இது பால் சமத்துவம். ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி மதிக்கப்
படணும்னு சொல்றோம். ‘அவங்க ஒருத்தருக்கொருத்தர் எதிரி இல்ல…
அன்பா காதலிச்சு வாழப் பிறந்தவங்க… அதுக்கு அனுமதிங்க’ன்னு
கேட்டுக்கறோம். பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் எல்லாம், ஏதோ
மெஷின் கன்னை பெண்கள்கிட்ட கொடுத்து ‘சுட்டுட்டு வா’ன்னு
சொல்ற மாதிரி இருக்கு. உதாரணத்துக்கு, சமீபத்துல டெல்லியில
நடந்த சம்பவம்.

ஜாஸ்லீன் கவுர்னு ஒரு பொண்ணு… ‘ரோட்ல என்கிட்ட தப்பா
நடந்துக்கிட்டான்’னு ஒரு பையன் போட்டோவை நெட்ல போட்ருச்சு.
அவனை தீவிரவாதி மாதிரி எல்லாரும் கரிச்சுக் கொட்ட
ஆரம்பிச்சிட்டாங்க.

அப்புறம் ஸ்பாட்ல ஒரு தம்பதிதான் ‘பையன் மேல தப்பில்ல. இந்தப்
பொண்ணுதான் உன்னை போலீஸ்ல சிக்க வைக்கிறேன்னு அவனை
மிரட்டுச்சு’ன்னு உண்மையைச் சொன்னாங்க. முதல்ல அந்தப்
பையனை ட்விட்டர்ல திட்டின சோனாக்‌ஷி சின்ஹாவே அதுக்கப்புறம்
வருந்தி ட்வீட் பண்ணியிருந்தாங்க.

இந்தத் தலைமுறையை ஏமாத்த முடியாது. நாங்க காலேஜ்கள்ல போய்
பேசும்போது இளம் பெண்களே ஆண்களுக்கு நேருகிற அநியாயங்களை
ஒப்புக்குறாங்க. 2001ம் வருஷத்துல தற்கொலை செய்துக்கிட்ட பெண்கள்
42,310 பேர். அதுவே 2014ல 42,537 பேர்தான். பெரிய வித்தியாசங்கள் இல்ல.

ஆனா, ஆண்களோட தற்கொலை அபாயகரமா அதிகரிச்சிருக்கு. 2001ல
66,850 பேரா இருந்தது, இப்ப 89,129 பேரா வளர்ந்து நிக்குது.

சமூக அழுத்தமும் பெண்களுக்கு சாதகமான சட்டங்கள் தவறா பயன்
படுத்தப்படுறதும்தான் இதுக்குக் காரணம். இதை இந்தத் தலைமுறைப்
பெண்கள் ஏத்துக்கறாங்க. அதனால எதிர்காலம் பத்தின நம்பிக்கை பிரகாசமா
இருக்கு!’’ பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் எல்லாம், ஏதோ மெஷின்
கன்னை பெண்கள்கிட்ட கொடுத்து ‘சுட்டுட்டு வா’ன்னு சொல்ற மாதிரி
இருக்கு.

————————————-
– கோகுலவாச நவநீதன்
நன்றி – குங்குமம்

ஆலமரம்

[​IMG]

ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படியே முளைத்தாலும் அது பூக்காது, காய்க்காது, கனியாது என்பார்கள். ஏனென்றால், ஆலமரம் இருக்கும் இடத்தில் மற்ற செடிகள் ஓங்கி உயரவோ, வளரவோ முடியாது. அதுபோன்ற சக்தி கொண்டது ஆலமரம்.

அடுத்ததாக, ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண்டாலும் பல் துலக்கும் போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது. குறிப்பாக ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி சொன்னது.

தவிர, ஆலமரங்கள் சில கோயில்களுக்கு தல விருட்சங்களாகவும் இருக்கிறது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து தவம் செய்தால் சிலதெல்லாம் சித்தியாகும். அரச மரத்தை போதி மரம் என்று சொல்கிறோம்.

ஆனால், இலங்கை அனுராதாபுரத்தில் உள்ள போதி மரம் ஆலமரம்தான்.

மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு.

சில எல்லைத் தெய்வங்களுக்கு ஆலம் பழம் நெய்வேத்தியமாக இருக்கிறது. தவிர, ஆலமரங்கள் இருந்த இடத்தில் முனிவர்கள், சித்தர்கள் அமர்ந்து அந்தக் காலத்தில் தவம் செய்திருக்கிறார்கள். பொதுவாக குளிர்ச்சியான இடத்தைத் தேடி அவர்கள் உட்காருவார்கள். சாதகமான சக்தியையும் தரக்கூடியது ஆலமரம்.

மேலும், ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும்.

அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.

பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை , மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வமான உண்மை.

இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பார் என்று நம் முனோர் அறிந்திருந்தனர் .

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது.
கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். ஞாபகமறதி நீங்கும்.உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.

பூக்கள்:

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.

விழுதுகள்:

தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில் மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.

இலைகள்:

ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.

ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.

சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.இம்மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் . இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டை குணம்பெறும்.

புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.

கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப் போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது. கனியை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.

வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.

ஆல மர விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரையில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் இந்திரியம் தீர்த்துப் போதல், இந்திரியப் போக்கு போன்றவை குணப்படுகிறது.

ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும். ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.

ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.

ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் ஆற விடுகின்றது.

வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தெருவுக்கு , ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.

 http://www.tamilsurabi.com/forum/threads/ஆலமரம்.579/

பொய் சொல்லலாகாது…! – மகாத்மா காந்தி

அடடே…அப்படியா…?!

மருந்து ஸ்பிரேக்கள் எளிதில் தீப்பற்றக்கூடியது…

இறுக்கமான ஜீன்ஸ் ஆபத்து…!

வஜ்ராசனம், சக்ரவாகாசனம்…!

பளீர் டிப்ஸ்…

மாற்றி யோசி

மாற்றி யோசி – இது மனதுக்கான தாரக மந்திரம்
எந்த ஒரு தோல்விக்கும், பிரச்னைக்கும் மனம்
சுருங்கி விடாமல் மாற்றி யோசித்தால் மனம்
லேசாகும். தெளிவு பிறக்கும்..!

——————————————

ஆம்புலன்ஸ் ஒலி கேட்டதும் ஐயோ பாவம் -என்று
கூறாமல் ஆண்டவா! ஆபத்திலுள்ளவரை காப்பாற்று’
என பிரார்த்திக்கலாமே..!

————————————————–

பணம் திருட்டுப் போய் விட்டால், அப்பாடா! பணம்
போனால் போகுது. உயிர்ச்சேதம் ஏற்படவில்லையே
என்று ஆறுதல் அடையலாமே..!

———————————————–

எடுத்த காரியம் சரியாக அமையாவிட்டால், அட!
இன்னும் சிறப்பாக முடியணும்னு விதி, அதனால்தான்
இப்ப தள்ளிப்போச்சு என்று ஆக்கப்பூர்வமாக
நம்பலாமே..!

————————————————————————

ஒரு பாடத்தில் மட்டும் மதிப்பெண் குறைந்து
விட்டால், அடுத்தமுறை இதில் அதிக கவனம்
செலுத்தி 100 மார்க் வாங்கணும்னு நினைக்கலாமே..!

—————————————————————————-

வேலையாள் வராவிட்டால் சலிப்புக் கொள்ளாமல்
இன்னைக்கு நம் உடலின் அதிகப்படியானக்
கலோரியைக் குறைக்க அற்புத வாய்ப்பு என
ஊக்கத்துடன் நாமே களம் இறங்கி வேலை
செய்யலாமே..!

————————————————————————-
மங்கையர் மலர்

« Older entries Newer entries »