மூங்கில் அரிசி பாயசம்!

தேவையான பொருட்கள்:

மூங்கில் அரிசி – 1 கப்,
பால் – 4 கப், வெல்லப்பொடி – ஒன்றரை கப்,
முந்திரி பருப்பு – 12 ஏலக்காய்ப் பொடி – 1 தே. கரண்டி,
நெய் – 2 மேஜைக் கரண்டி.

செய்முறை:

மூங்கில் அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நொய் ஆக்கிக்
கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு அதில் நொய்யை
போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வேக
வைக்கவும். பின்னர் வெல்லத்தை நன்றாகக் கரைத்து,
வடிகட்டி சேர்த்துக் கலக்கவும். கொதிக்கும்போது பால் சேர்த்து
நன்றாகக் கலக்கவும். பாயசம் பதம் வரும் போது ஏலக்காய்ப்
பொடி, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.
இப்போது சுவையான மூங்கில் அரிசிப் பாயசம் தயார்!

————————————–

– தென்றல் மதுசூதனன்
மங்கையர் மலர்

பலாக்காய் கார வறுவல்

வேப்பம்பூ சாதப்பொடி

கோதுமை புட்டு

Frying And semolina Wheat in a pan, mixer-grinder and grind to a round place in the bottles When needed, which spray water on the hands of some of the picari, take 5 minutes to cook in spirit Then poured on to a plate, leaving the shed, coconut milling, sugar, cardamom powder and serve with Disliked the taste of sweet, mustard, cumin lentil, Curry Tree, onion, green chillies talittu, salt and eat At the same time, rye, sorghum, can use also Ragi

காலிஃப்ளவர் பீஸ் புலவ்

பாசிப்பருப்பு மாம்பழ அல்வா

கோவைக்காய் வதக்கல்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

கோவைக்காய் என்றால் ஸ்லேட்டும், பலபமும் ஞாபகம் வருகிறது. ஸ்லேட்டைத் தேய்த்து அலம்ப, கோவை இலைகளைப் போட்டுத்  தேய்த்துக் கரியுடனும் தேய்த்து அலம்புவோம். சமயத்தில் தகர ஸ்லேட்டாக் கூட இருந்து விடும். இலை பரிக்கும்போது காயும் பழமும் பச்சையும் சிவப்புமாகத் தொங்குவதைப் பார்க்க அழகாக இருக்கும்.

’கோவைப்பழம் தன்னைக் கிளியே கொத்திநீ தின்னுகையில் ஆவலுடன்பார்த்தேன் கிளியே அருகினில் வந்திடுவாய்’ என்று  பாடத் தோன்றும். கிராமங்களில், தானாக முளைத்துத் தழைத்துப் படரும் கொடியாகத்தான் அறிந்திருந்தோம். அதுவே மகத்தான உடல் நலம் கொடுக்கும் ஒரு காயெனத் தெரியாததுதான் உண்மை.

ஆந்திராவில் வசிக்க நேர்ந்த ஒருவர் இதைச் சமைக்கலாம் என்று சொல்லியபோது கூட அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டவர்களையும் பார்த்திருக்கிறேன். பிற்பாடு வெகு காலத்திற்குப் பிறகு ஆந்திரா, கன்னடா, பெங்கால் என்று  வசிக்கத்துவங்கிய காலகட்டத்தில் சமைக்கவும் சாப்பிடவும் பிறர்க்குச் சொல்லவும் பழக்கமாகி விட்டது. இதைப் பயிரிட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பும் காய்களிலும் நம்பர் ஒன்றாக இருக்கிறது. இந்தியர்களின் விரும்பும் காய் லிஸ்டில் சேர்ந்து விட்டது. இதில் பச்சடி முதல் துவையல், வறுவல், வத்தல் எல்லாம் செய்யலாம். நீரிழிவு, வாய்ப்புண், வயிறு சம்பந்தப்பட்ட உபத்திரவங்கள் இவை யாவிற்கும் நல்லது.


P1020340

பச்சைநிற நீண்ட காய்களில் வெள்ளை நிறக் கோடுகள் கொண்டது இந்தக் காய்கள். வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது இந்தக் கொடி. ஆங்கிலத்தில் Ivy gourd,Littlegourd  என்று சொல்லுவார்கள். குந்துரு, திண்டேரா, தொண்டகாயி என்று பலமொழிகளில் பலபெயர். சின்னதாக ஒரு வதக்கலைப் பார்ப்போம். அதன் பிறகு எல்லா வகைகளும் நீங்களாகவே முயற்சிக்கலாம்.

வேண்டியவைகள்:
நல்ல கோவைக்காய் – கால் கிலோ
நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
ருசிக்கு – உப்பு
கறிப்பொடி – 2 டீஸ்பூன் அல்லது   மிளகாய், தனியாப்பொடி விருப்பத்திற்கு
மஞ்சள் பொடி – சிறிது.
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளித்துக் கொட்ட
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிது

P1020341

செய்முறை:


கோவைக்காயை நன்றாக அலம்பி, நீண்ட வகையிலோ, வட்டமான வடிவிலேயோ மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயமும் அப்படியே. அதிகம் சேர்க்கலாம்.


நான் எந்தக் காயையுமே துளி எண்ணெய் சேர்த்துக் கலந்து   மைக்ரோவேவ் அவனில் 7 நிமிஷம் வேக வைத்து எடுத்துக் கொள்வேன். காய் கலரும் மாறாது. எண்ணெயும் குறைவாக விடலாம். நேராகவே செய்வதானால்,  வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு உளுத்தம் பருப்பைத் தாளித்துக் கொட்டி, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து நறுக்கிய கோவைக்காயைப் போட்டு,உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். துளி தண்ணீர் தெளித்து,மூடிபோட்டு மூடித் திறந்து சட்டுவத்தால் கிளறிவிட்டுச் சுருள வதக்கவும். வதங்கியதும், கறிப்பொடியைத் தூவி வதக்கவும். எந்த மசாலா விருப்பமோ அதையும் தூவி வதக்கி இறக்கவும்.

P1020344

வதக்கிய கறி ஆ-தலால் சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம். ரொட்டியுடனும் எடுத்துப்போக உபயோகிக்கலாம். வட இந்திய உணவுகளைப் போல இஞ்சி, பூண்டு மசாலா சேர்த்தும், க்ரேவிகள் செய்யலாம். கறியுடன்  வேர்க்கடலை வறுத்துப் பொடித்ததைப் போட்டும் செய்யலாம். கற்பனையில் ருசித்து விட்டுச் செயலில் இறங்குங்கள்.

====காமாட்சி மகாலிங்கம்காமாட்சி மகாலிங்கம்

=http://fourladiesforum.com/2014/03/28/

சிம்பிள் கிச்சன் டிப்ஸ்!

Simple Tips for Kitchen!

மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நொடியைத்
தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக
ஒரு கப் பாலை சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக
இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது
கைகளில் பிசுப்பிசுப்பாக ஒட்டாமலிருக்க கைகளில்
உப்பை தடவிக் கொண்டு நறுக்க வேண்டும்.

தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது
ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால்
தோசை நன்றாக வருவதோடு மொரு, மொருவன
இருக்கும்.

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள்
செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில்
போட்டு நல்லெண்ணெய் விட்டு கிளறி ஆற வைத்து
பின்னர் செய்தால் உதிரியாக சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை
வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும்
சேர்த்து வேக வைக்க வேண்டும்.
இதனால் உருளைக் கிழங்கு வெடிக்காமல் நல்ல
பதத்துடன் இருக்கும்.

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை
பச்சையாக அரைத்து ஊற்றவும். குருமா வாசனையுடன்
சுவையாகவும் இருக்கும்.

நெய்யை காய்ச்சி இறக்கும் போது அரை தேக்கரண்டி
வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன்
இருக்கும்

கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி
சர்க்கரையைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக
இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில்
போட்டு விட்டால் அதிக உப்பை அந்த சோற்று
உருண்டை உறிஞ்சு கொள்ளும்.

——————————————

நன்றி – தினகரன்

நன்னாரி தேன் சர்பத்

தேவையான பொருட்கள்

நன்னாரி வேர் – 200 கிராம்

தண்ணீர் – கால் லிட்டர்

தேன் – தேவைக்கேற்ப

எலுமிச்சை-1

செய்முறை

* முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி
நன்னாரி வேர்களைச் சிறு சிறு துண்டுகளாக்கி
அதில் ஊற விட வேண்டும்.

* மறுநாள் காலை வேருடன் ஊறிய நீரை அடுப்பில்
வைத்து பாதியாக வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி
நீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் தேன் கலந்து குளிர்ச்சியாக சாப்பிட்டால்
உடலுக்கு நலம். சிறிது எலுமிச்சையும் இதோடு
சேர்த்து கொள்ளலாம்.இதனால் உடல் சூடு குறையும்.
கண் எரிச்சல் வராது. நாக்கு வறட்சி உண்டாகாது.

கோடைக்கு சுகம் தரும் சர்பத் இது.
சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

———————————-
நன்றி!
மாலை மலர்.

கரிசலாங்கண்ணி துவையல்!

=

தேவையான பொருட்கள்:

கரிசலாங் கண்ணிக் கீரை – ஒரு கட்டு (200 கிராம்),
மிளகாய் வற்றல் – 8,
எலுமிச்சை – 2,
நெய் -2 ஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு.

செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்து, வாணலில்
போட்டுச் சிறிது நெய்விட்டு வதக்கவும். மிளகாய்
வற்றலை இரண்டாகக் கிள்ளிப்போட்டுத் தனியே
வறுத்து, அத்துடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து
நன்கு அரைத்து, கீரையும் சேர்த்து வதக்கி இறக்கவும்.

இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால்,
ரத்த சோகை குணமாகும். தலைமுடி நீளமாக வளரும்.

————————————-

-சிறுவர் மலர்

« Older entries Newer entries »