ஹைக்கூ – கவிஞர் இரா .இரவி


பூகம்பம் வரும் முன்
அறியும் தவளை
மனிதன் ?

சேமிக்கும் எறும்பு
மழைக் காலத்திற்கு
மனிதன் ?

நன்றி மறக்காது
வாலாட்டும் நாய்
மனிதன் ?

பசிக்காமல் உண்பதில்லை
விலங்குகள்
மனிதன் ?

பிறந்ததும் உடன்
நீந்திடும் மீன்
மனிதன் ?

அடைகாக்கும் காகம்
குயிலின் முட்டையையும்
மனிதன் ?

காடுகள் வளரக்
காரணம் பறவைகள்
மனிதன் ?

சீண்டாமல் எவரையும்
கொத்தாது பாம்பு
மனிதன் ?

ஓடிடச் சலிப்பதில்லை
மான்
மனிதன் ?

அசைவம் உண்ணாது
அசைவம் ஆகின்றது
ஆடு

கொள்ளையர்களின்
கூடாரமானது
கல்வி நிறுவனங்கள்


இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

50 பின்னூட்டங்கள்

  1. era.eravi said,

    மார்ச் 6, 2011 இல் 8:38 பிப

    mikka nandri

  2. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:44 பிப

    காந்தியடிகள் ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    அகிம்சையை உணர்த்திய
    அறிவு ஜீவி
    காந்தியடிகள்

    ரகசியம் இல்லாத
    அதிசய மாமனிதர்
    காந்தியடிகள்

    கொண்ட கொள்கையில்
    குன்றென நின்றவர்
    காந்தியடிகள்

    திருக்குறள் வழி
    வாழ்ந்த நல்லவர்
    காந்தியடிகள்

    சுட்ட கொடியவனையும்
    மன்னித்த மாமனிதர்
    காந்தியடிகள்

    உலகம் வியக்கும்
    ஒப்பில்லாத் தலைவர்
    காந்தியடிகள்

    வன்முறை தீர்வன்று
    வையகத்திற்கு உணர்த்தியவர்
    காந்தியடிகள்

    நெஞ்சுரத்தின் சிகரம்
    நேர்மையின் அகரம்
    காந்தியடிகள்

    அரை ஆடை அணிந்த
    பொதுஉடைமைவாதி
    காந்தியடிகள்

    வெள்ளையரின்
    சிம்ம சொப்பனம்
    காந்தியடிகள்

    மனித உரிமைகளின்
    முதல் குரல்
    காந்தியடிகள்

    அமைதியின் சின்னம்
    அடக்கத்தின் திரு உருவம்
    காந்தியடிகள்

    அன்றே உரைத்தவர்
    உலக மயத்தின் தீமையை
    காந்தியடிகள்

    மனிதருள் மாணிக்கம்
    மாமனிதருக்கு இலக்கணம்
    காந்தியடிகள்


    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!


    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  3. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:47 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    பார்க்காதவர்கள் பாருங்கள்
    தேவதை
    என்னவள்

    நடந்து சென்றாள்
    கடந்து சென்றாள்
    கடத்திச்சென்றாள்

    சக்தியில்
    மின்சாரத்தை வென்றது
    அவள் கண்சாரம்

    வேண்டாம் வண்ணம்
    இயற்கையாகவே சிகப்பு
    அவள் இதழ்கள்

    உச்சரிப்பை விட
    அசைவே அழகு
    அவள் இதழ்கள்

    செவிகளை விட
    விழிகளுக்கு இன்பம்
    அவள்

    ஆயிரம்
    அர்த்தம் உண்டு
    மவுனத்திற்கு

    வருகிறது
    பெரு மூச்சு
    அவளை நினைத்தாலே

    இன்று நினைத்தாலும்
    மனதில் மகிழ்ச்சி
    அவள் புன்னகை

    கால்தடம் அழித்தது
    கடல் அலை
    உள்ளத்தின் தடம் ?

    முகம் சிரித்தாலும்
    அகம் அழுகின்றது
    காதல் தோல்வி

    சோகமான முடிவுகள்
    சுகமான சுமைகள்
    காதல் தோல்வி

    அருமை அறியாதவனிடம்
    அகப்பட்டால்
    வீணையும் விறகுதான்

    நடிகர்களின் ஆசை
    நடிகைகளையும் தொற்றியது
    வாரிசு அறிமுகம்

    ஒரே வரிசையில்
    தமிழ் அறிஞர்களும், ஆபாச நடிகைகளும்
    கலைமாமணி பட்டமளிப்பில்

    வில் அம்பு
    விளம்பரமோ ?
    அவள் விழிகள்

    இன்றும் காணலாம்
    டைனோசர்கள்
    அரசியல்வாதிகள்

    சுருங்கச்சொல்லி
    விளங்கவைத்தல்
    ஹைக்கூ

    வாடிக்கையானது
    காக்காக் குளியல்
    பெரு நகரங்களில்

    ராமன் ஆண்டாலும்
    ராவணன் ஆண்டாலும்
    ஒழியவில்லை வறுமை

    உலகெலாம் பரவியது
    தேமதுரத் தமிழோசை அல்ல
    ஊழல் ஓசை

    பெருகப் பெருக
    பெருகுது வன்முறை
    மக்கள்தொகை

    பலதாரம் முடித்தவர்
    பண்பாட்டுப் பேச்சு
    ஒருவனுக்கு ஒருத்தி

    சிலைகளில் தெரிந்தது
    ஆடை அணிகலனும்
    சிற்பியின் சிறப்பும்

    கூட்டம் கூடுவதில்லை
    இலக்கிய விழாக்களுக்கு
    தொலைகாட்சிகளால்

    நிஜத்தை வென்றது நிழல்
    நாடகத்தை வென்றது
    திரைப்படம்

  4. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:48 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    ஆட்சியில் ஆள்பவர்களை விட
    மனதை ஆண்டவர்கள்
    மரித்த பின்னும் வாழ்கின்றனர்

    சிற்பி வீட்டு
    படிக்கல்லானாலும்
    சிலையாவதில்லை

    கோடிகள் கொள்ளை
    அடித்தாலும் முடிவு
    தற்கொலை கொலை

    பொம்மை உடைந்த போது
    மனசும் உடைந்தது
    குழந்தைக்கு

    தடியால் அடித்து
    கனிவதில்லை கனி
    குழந்தைகளும்தான்

    அனைவரும் விரும்புவது
    அதிகாரம் அல்ல
    அன்பு

    நிலம் விற்றுப்
    பெற்றப் பணத்தில்
    அப்பாவின் முகம்

    கால்களைத் தொட்டு
    வணங்கிச் சென்றன
    அலைகள்

    சிற்பி இல்லை
    சிற்பம் உண்டு
    நிலையானது எது ?

    போட்டியில் வென்றது
    புற அழகை
    அக அழகு

    நான் கடவுள் என்பவன்
    மனிதன் அல்ல
    விலங்கு

    அவளுக்கும் உண்டு
    மனசு மதித்திடு
    மனைவி

  5. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:50 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    வானிலிருந்து வரும்
    திரவத்தங்கம்
    மழை

    இரண்டும் சமம்
    மலை மண்
    மழைக்கு

    கழுவும் நீரே
    அழுக்கு
    சுத்தம் ?

    ஓய்வுக்கு ஒய்வு
    தந்தால்
    சாதிக்கலாம்

    சாதனைக்கு
    முதல் எதிரி
    சோம்பேறித்தனம்

    தண்ணீரைப் பெட்ரோலாக்கி
    வித்தைக் காட்டியவரிடம்
    வித்தைக் காட்டியது இயற்கை

    எலி மீது யானை
    எப்படிச் சாத்தியம்
    பிள்ளையார்

    உருண்டது
    உலோகக் குண்டென
    தாமரையிலைத் தண்ணீர்

    கருவறை உள்ள
    நடமாடும் கடவுள்
    தாய்

    பல் பிடுங்கிய
    பாம்பாக
    தோற்ற அரசியல்வாதி

    இன்றும் சொல்கின்றது
    மன்னனின் பெயரை
    அரண்மனை

    பெருமூச்சு விட்டாள்
    தங்கக்கோபுரம் பார்த்து
    முதிர்கன்னி

    கல்லுக்குள் தேரை
    பாறைக்கு மேல் செடி
    மனிதனுக்குள் மனிதநேயம் ?

  6. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:51 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மன்னராட்சியையும் வென்றார்கள்
    அரசியல்வாதிகள்
    குடும்ப அரசியிலில்

    மனிதனால் படைக்கப்பட்டு
    மனிதனையே படுத்துகின்றது
    பணம்

    எங்கு ?முறையிடுவது
    ஆண் காவலர்களால்
    பெண் காவலர்களுக்குத் தொல்லை

    அவள் தந்த
    சங்கு பயன்பட்டது
    இறுதி ஊர்வலத்திற்கு

    சவுக்குமரம்
    பார்க்கையில்
    அவள் நினைவு

    தமிழைக் காத்ததில்
    பெரும்பங்குப் பெற்றன
    பனை மரங்கள்

    தமிழை அழிப்பதில்
    பெரும்பங்குப் பெற்றன
    தொலைக்காட்சிகள்

    மூடநம்பிக்கையால்
    முற்றுப் பெற்றது
    சேதுகால்வாய்த் திட்டம்

    இடித்ததால்
    இடிந்தது மனிதநேயம்
    பாபர் மசூதி

    எட்டாவது அதிசயம்
    ஊழலற்ற
    அரசியல்வாதி

    மூச்சுக்காற்று வெப்பமானது
    ஏழை முதிர்கன்னிக்கு
    தங்கத்தின் விலையால்

    திரும்புகின்றது
    கற்காலம்
    மின்தடை

    கருவறையில் உயிர்ப்பு
    கல்லறையில் துயில்வு
    இடைப்பட்டதே வாழ்க்கை

    எல்லோரும் சிரிக்க
    அழுது பிறந்தது
    குழந்தை

    எல்லோரும் அழ
    அமைதியாக இருந்தது
    பிணம்

    நடமாடும் நயாகரா
    நடந்துவரும் நந்தவனம்
    என்னவள்

    பெயருக்கு காதலிக்கவில்லை
    பெயரையே காதலித்தேன்
    மலரும் நினைவுகள்

    அதிக வெளிச்சமும்
    ஒருவகையில் இருட்டுத்தான்
    எதுவும் தெரியாது

    கூந்தல் மட்டுமல்ல
    வாயும் நீளம்தான்
    அவளுக்கு

  7. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:52 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மூன்று சீட்டு சண்டை
    முச்சந்திலும்
    அரசியலிலும்

    ஆடிய ஆட்டம்
    நொடியில் முடிந்தது
    அரசியல்

    நேற்று இருந்தார்
    இன்று இருப்பதில்லை
    அரசியல்

    நடக்கும் என்பார் நடக்காது
    நடக்காது என்பார் நடந்துவிடும்
    அரசியல்

    எண்ணங்களால் அன்று
    எண்ணிக்கைகளால் இன்று
    கூட்டணி

    விரைவில் காதல்
    விரைவில் திருமணம்
    விரைவில் மணவிலக்கு

    வேண்டாம் இனி
    கொலைகாரனாக்கியது
    பேருந்து தினம்

    கிடைக்கவில்லை
    எங்கு தேடியும்
    போதிமரம்

    நல்ல கூட்டம்
    பித்தலாட்டப் பயிற்சி
    சோதிடப் பயிற்சி

    புரட்டு அங்கிகாரம்
    பல்கலைக்கழகப்பாடத்தில்
    சோதிடம்

    வேடந்தாங்கல் செல்லாத
    இரும்புப்பறவை
    விமானம்

    நேசித்தால் இனிக்கும்
    யோசித்தால் கசக்கும்
    வாழ்க்கை

    சுறுசுறுப்பின் சின்னம்
    பறக்கச் சலிப்பதில்லை
    தேனீ

  8. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:52 பிப

    ஹைக்கூ இரா .இரவி

    வீடு மாறியபோது
    உணர்ந்தேன்
    புலம் பெயர்ந்தோர் வலி

    விமர்சனங்களுக்கு
    செவி மடுக்கவில்லை
    தவளை

    இராமாயண மாற்றம்
    கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
    கலங்கினான் இலங்கை வேந்தன்

    மலர்களோடு பேசினேன்
    அவளின் தாமதத்திற்கு
    நன்றி

    பாராட்டினார்கள்
    சிலையையும் சிற்பியையும்
    சோகத்தில் உளி

    ஏங்கியது குழந்தை
    கதை கேட்க
    முதியோர் இல்லத்தில் பாட்டி

    பொருத்தமாக இல்லை
    எயிட்ஸ் விளம்பரத்தில்
    நடிகர்

    கூவலின் இனிமை
    இனப்பெருக்கத்தில் இல்லை
    குயில்

    திருந்தாத மக்கள்( மாக்கள் )
    அமோக வசூல்
    சாமியார் ? தரிசனம்

    முக்காலமும் எக்காலமும்
    அழியாத ஒன்று
    காதல்

    வேகமாக விற்கின்றது
    நோய் பரப்பும் குளிர்பானம்
    வருத்தத்தில் இளநீர்

    உழைப்பாளியின் ரத்தம்
    உறிஞ்சிக் குடிக்கும்
    டாஸ்மாக்

    விதைத்த நிலத்தில்
    பாய்ச்சிய நீரில்
    பாலிதீன் பைகள்

  9. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:53 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கூடுதலாக உண்டு
    தாய்மண் பாசம்
    புலம் பெயர்ந்தவர்களுக்கு

    வெந்நீர் ஊற்றியபோதும்
    வளரும் செடிகள்
    புலம் பெயர்ந்தவர்கள்

    பயன்பட்டது
    சாக்கடைநீரும்
    தீ அணைக்க

    கூடலின் அருமை
    உணர்த்தியது
    ஊடல்

    ஈடில்லா வேகம்
    பின்னோக்கிப் பார்ப்பதில்
    மலரும் நினைவுகள்

    உடலின் மச்சமென
    நீங்காத நினைவு
    காதல்

    இனிமை இனிமை
    சின்னத் தீண்டல்
    சிந்தையில் கிளர்ச்சி

    கோலமிட்டுச் சென்றது
    சாலையில்
    தண்ணீர் லாரி

    பிணமானபின்னும்
    காசு ஆசை
    நெற்றியில் காசு

    தடுக்கி விழுந்ததும்
    தமிழ் பேசினான்
    அம்மா

    வந்துவிட்டது
    சேலையிலும் சைவம்
    சைவப்பட்டு

    கொன்ற கோபம்
    இன்னும் தீரவில்லை
    அதிரும் பறை

    உயராத கூலி
    உயரும் விலைவாசி
    வேதனையில் ஏழைகள்

    அயல்நாட்டில் ஊறுகாய்
    நம்நாட்டில் சாப்பாடு
    தொலைக்காட்சி

    மழை வந்ததும்
    உடன் வந்தது
    மண்வாசைனை

  10. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:54 பிப

    ஹைக்கூ கவிதை

    பறக்காமல் நில்
    பிடிக்க ஆசை
    பட்டாம்பூச்சி

    பறவை கூண்டில்
    புள்ளிமான் வலையில்
    மழலை பள்ளியில்

    வானத்திலும் வறுமை
    கிழிசல்கள்
    நட்சத்திரங்கள்

    புத்தாடை நெய்தும்
    நெசவாளி வாழ்க்கை
    கந்தல்

    உயரத்தில்
    பஞ்சுமிட்டாய்
    வான் மேகம்

    டயர் வண்டி ஓட்டி
    நாளைய விமானி
    ஆயத்தம்

    பிறரின் உழைப்பில் தன்னை
    பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
    முழு நேர சோம்பேறிகள் முதலாளி

    சந்திரன் அல்லி
    நான் அவள்
    காதல்

    கடல் கரைக்கு
    அனுப்பும் காதல் கடிதம்
    அலைகள்…

    அமாவாசை நாளில்
    நிலவு
    எதிர் வீட்டுச் சன்னலில்

    விதவை வானம்
    மறுநாளே மறுமணம்
    பிறை நிலவு

    வழியில் மரணக்குழி
    நாளை
    செய்தியாகி விடுவாய்

    கோடை மழை
    குதூகலப்பயணம்
    திரும்புமா? குழந்தைப்பருவம்

    வானம்.
    கட்சி தாவியது
    அந்திவானம்.

    மழையில் நனைந்தும்
    வண்ணம் மாறவில்லை
    வண்ணத்துப்பூச்சி

    மானம் காக்கும் மலர்
    வானம் பார்க்கும் பூமியில்
    பருத்திப்பூ

    என்னவளே உன்
    முகத்தைக் காட்டு…
    முகம் பார்க்கவேண்டும்

    ஒலியைவிட ஒளிக்கு
    வேகம் அதிகம்
    பார்வை போதும்

    கிருமி தாக்கியது
    உயிரற்ற பொருளையும்
    கணினியில் வைரஸ்

    மரபுக் கவிதை
    எதிர்வீட்டு சன்னலில்
    என்னவள்…

    நல்ல விளைச்சல்
    விளை நிலங்களில்
    மகிழ்ந்து நிறுவனங்கள்

    கத்துக்குட்டி உளறல்
    நதிநீர் இணைப்பு
    எதிர்ப்பு

    நல்ல முன்னேற்றம்
    நடுபக்க ஆபாசம்
    முகப்புப் பக்கத்தில்

    இன்று குடிநீர்
    நாளை சுவாசக்காற்று
    விலைக்கு வாங்குவோம்

    பெட்டி வாங்கியவர்
    பெட்டியில் பிணமானவர்
    பிணப்பெட்டி

    உணவு சமைக்க உதவும்
    ஊரை எரிக்கவும் உதவும்
    தீக்குச்சி

    நடிகை வரும் முன்னே
    வந்தது
    ஒப்பனை பெட்டி

    தனியார் பெருகியதால்
    தவிப்பில் உள்ளது
    அஞ்சல் பெட்டி

    தாத்தா பாட்டியை
    நினைவூட்டியது
    வெற்றிலைப்பெட்டி

    நகைகள் அனைத்தும்
    அடகுக் கடையில்
    நகைப்பெட்டி?

    மூடநம்பிக்கைகளில்
    ஒன்றானது
    புகார்ப்பெட்டி

    கரைந்தது காகம்
    வந்தனர் விருந்தினர்
    காகத்திற்கு

    அவசியமானது
    புற அழகல்ல
    அக அழகுதான்

    சண்டை போடாத
    நல்ல நண்பன்
    நூல்

    ரசித்து படித்தால்
    ருசிக்கும் புத்தகம்
    வாழ்க்கை

    சக்தி மிக்கது
    அணுகுண்டு அல்ல
    அன்பு

    அழகிய ஓவியிமான்து
    வெள்ளை காகிதம்
    துரிகையால்

    மழை நீர் அருவி ஆகும்
    அருவி நீர் மழை ஆகும்
    ஆதவனால்

    ஒன்று சிலை ஆனது
    ஒன்று அம்மிக்கல் ஆனது
    பாறை கற்கள்

    காட்டியது முகம்
    உடைந்த பின்னும்
    கண்ணாடி

    உருவம் இல்லை
    உணர்வு உண்டு
    தென்றல்

    பாத்ததுண்டா மல்லிகை
    சிவப்பு நிறத்தில்
    வாடா மல்லிகை

    கூர்ந்து பாருங்கள்
    சுறுசுறுப்பை போதிக்கும்
    வண்ணத்துப்பூச்சி

    இல்லாவிட்டாலும் கவலை
    இருந்தாலும் கவலை
    பணம்

    உடல் சுத்தம் நீரால்
    உள்ளத்தின் சுத்தம்
    தியானத்தால்

    மழலைகளிடம்
    மூட நம்பிக்கை விதைப்பு
    மயில் இறகு குட்டி போடும்

    பரவசம் அடைந்தனர்
    பார்க்கும் மனிதர்கள்
    கவலையில் தொட்டி மீன்கள்

    அம்மாவை விட
    மழலைகள் மகிழ்ந்தன
    அம்மாவிற்கு விடுமுறை

    இளமையின் அருமை
    தாமதமாக புரிந்தது
    முதுமையில்

    தோற்றம் மறைவு
    சாமானியர்களுக்குதான்
    சாதனையாளர்களுக்கு இல்லை

  11. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:55 பிப

    காதல் ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    அன்றும் இன்றும்
    என்றும் இனிக்கும்
    காதல்

    உணர்ந்தவர்களுக்கு மட்டும்
    புரிந்திடும் உன்னத சுகம்
    காதல்

    கற்காலம் முதல்
    கணிப்பொறி காலம் வரை
    காதல்

    செல்ல வழி உண்டு
    திரும்ப வழி இல்லை
    காதல்

    கண்களில் தொடங்கி
    கண்ணிரில் முடியும்
    சில காதல்

    காவியத்திலும்
    கணினியுகத்திலும்
    இனிக்கும் காதல்

    விழியால் விழுங்குதல்
    இதழால் இணைதல்
    காதல்

    இரசாயண மாற்றம்
    ரசனைக்குரிய மாற்றம்
    காதல்

    விழி ஈர்ப்பு விசை
    எழுப்பும் இனிய இசை
    காதல்

    சிந்தையில் ஒரு மின்னல்
    உருவாக்கும் ஒரு மின்சாரம்
    காதல்

    வானில் மிதக்கலாம்
    உலகை மறக்கலாம்
    காதல்

    பெற்றோரை விட
    பெரிதாகத் தோன்றும்
    காதல்

  12. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:55 பிப

    ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி

    ஏவுகணை சோதனை வெற்றி
    விலைவாசி குறைப்பில் தோல்வி
    இந்தியா

    அறிவு விளக்கை அணைத்து விட்டு
    அணையா விளக்கு
    காமராசருக்கு

    தூரத்தில் தர்ம தரிசனம்
    அருகில் நடப்பது
    அதர்ம தரிசனம்

    இலஞ்சம் ஒழிப்பவரே
    இலஞ்சம் வாங்கி கைது
    காவல்துறை

    ஏறும் விலைவாசி
    இறக்கிட யோசி
    மக்கள் விருப்பம்

    அன்று ஊறுகாய்
    இன்று சாப்பாடு
    திரைப்படங்களில் ஆபாசம்

    நாட்டில் ஓடியது
    தேனும் பாலும்
    திருப்பதிக்கு தங்கக் கோபுரம்

    பேச ஆரம்பித்தனர்
    மதுவிலக்கு
    அருகில் தேர்தல்

    வெற்றி பெற்றன
    ஊடகங்கள்
    பண்பாட்டுச் சீரழிப்பில்

    போதித்தன
    மிருக குணம்
    தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்

    குடிபோதையில்
    குடும்பத்தலைவன்
    தள்ளாடும் குடும்பம்

    வந்தாரை வாழ வைத்தே
    வீடு இழந்தவன்
    தமிழன்

    கூழ் இன்றி ஏழை
    கோடிகளில் அரசியல்வாதி
    வாழ்க இந்தியா

    சக நடிகர் கைது
    கண்டிக்காத திரைஉலகம்
    சுயநலவாதிகள்

  13. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:56 பிப

    ஹைக்கூ இரா .இரவி

    வளர்த்திட்ட மண்ணிற்கு
    நன்றி சொன்னது மரம்
    பூ உதிர்த்து

    மழை நின்ற பின்னும்
    மழை
    மரத்திலிருந்து

    இயற்கையில் செயற்கை
    சிகைத் திருத்தமென
    செடித் திருத்தம்

    பொறாமை கொள்ளவில்லை
    மரத்தைப் பார்த்து
    புற்கள்

    வாழ்ந்தவர்கள் இறந்தனர்
    இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
    தாஜ்மஹால்

    பார்ப்பதில்லை
    காதல் காட்சி
    அவளையே ஞாபகப்படுத்துவதால்

    நீளமான கூந்தல்
    எங்கு பார்த்தாலும்
    அவள் நினைவு

    பெரிய சோகத்தையும்
    நொடியில் அழிக்கும்
    அவள் புன்னகை

    மறக்க நினைத்தாலும்
    முடிவதே இல்லை
    அவள் முகம்

    நல்ல கவிதைகள்
    நூலாகுமுன் இரையானது
    கரையானுக்கு

    புவி ஈர்ப்பு விசை நியூட்டன்
    விழி ஈர்ப்பு விசை
    காதலர்கள்

    மதங்களை விட
    மிகவும் உயர்வானது
    மனிதம்

    பிரிவால் துடி துடித்தது
    அறுபட்ட
    பல்லியின் வால்

    சிந்தைகளை
    சிதைத்து
    கேளிக்கைகள்

  14. era.eravi said,

    ஏப்ரல் 30, 2011 இல் 1:56 பிப

    ஹைக்கூ இரா .இரவி

    பொய் மட்டுமே மூலதனம்
    அமோக வருமானம்
    அரசியல்

    தொட்டில் முதல் சுடுகாடு வரை
    தொடரும் கொடிய நோய்
    லஞ்சம்

    வறுமை ஒழியவில்லை
    வளங்கள் இருந்தும்
    கருப்புப்பணம்

    ஏழை மேலும்ஏழையானது போதும்
    விரைவில் வேண்டும்
    மாற்றம்

    பிரதமரால் அன்று
    கோடீஸ்வரர்களால் இன்று
    மந்திரி பதவி

    அளவு சுவை
    இரண்டும் பெரிது
    அவள் இதழ்கள்

    இதழ்கள் பேசவில்லை
    விழிகள் பேசின
    மொழி பெயர்தது மனசு

    ஏமாளிகள் உள்ளவரை
    எமாற்றுவோருக்குப் பஞ்சமில்லை
    சாமியார்கள்

    திரும்புகின்றது
    கற்காலம்
    மின்தடை

    அனைத்தும் அறிவோம் என்றவர்
    அறியவில்லை கேமிரா
    சாமியார்

    உபதேசம்
    பிரம்மச்சரியம்
    சல்லாபத்துடன்

    கோடிகள் குவிந்தும்
    பட்டினியாகவே
    கடவுள்

    தங்கத்தின் ஆசை
    விதிவிலக்கல்ல
    கடவுள்களும்

    வயது கூடக் கூட
    அழகும் கூடியது
    அவளுக்கு

  15. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:12 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கடை மூடியதால்
    குடி மகன்கள் வருத்தம்
    காந்தி ஜெயந்தி

    அசைவப் பிரியர்களுக்கு வருத்தம்
    ஞாயிறன்று வந்ததால்
    காந்தி ஜெயந்தி

    தேர்வு எழுதியதில்
    ஆள் மாறாட்டம்
    கல்வி அமைச்சர் ?

    காயம் இல்லை
    மரத்தில் இருந்து விழுந்தும்
    இலை

    அரசியல்வாதிகளின்
    கேலிக் கூத்தானது
    உண்ணாவிரதம்

    மரமானதற்கு
    வருந்தியது
    சிலுவை மரம்

    தந்திடுவீர்
    தானத்தில் சிறந்தது
    உடல் தானம்

    அசலை வென்றது
    நகல்
    செயற்கைச் செடி

    உடை வெள்ளை
    உள்ளம் கொள்ளை
    அரசியல்வாதிகள்

    கண்டுபிடியுங்கள்
    வேண்டுகோள்
    விழிகளில் மின்சாரம்

    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    http://www.eraeravi.wordpress.com
    http://www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

  16. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:13 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கண்களுக்கு விருந்து
    காட்சிப் பெட்டகம்
    இயற்கை

    உழைக்காத மலருக்கு
    வியர்வையா ?
    பனித்துளி

    பூமியிலிருந்து வானம்
    வானத்திலிருந்து பூமி
    தண்ணீர் சுற்றுலா மழை

    உச்சரிப்பைவிட
    உயரந்தது
    மௌனம்

    ஒழியவேண்டும்
    வரங்களுக்கான
    தவம்

    விரல்களின்றித்
    தீண்டியது
    தென்றல்

    உற்றுக்கேளுங்கள்
    பேசும்
    மலர்

    மரமும் கெட்டது
    மனிதனைப் பார்த்து
    கல்லானது

    ஒரு வீட்டில் ஒரு நாளில்
    இத்தனை பாலித்தீன்
    நாட்டில் ?

    யாருக்கு வாக்களிக்க
    தேர்ந்து எடுக்க முடியவில்லை
    குழப்பத்தில் மக்கள்

    ருசிப்பதில் திகட்டலாம்
    ரசிப்பதில் திகட்டுவதில்லை
    அழகு

    கிடைக்காததற்காக ஏங்குவது
    கிடைத்ததை உணராதது
    பலரின் வாழ்க்கை

    கற்பனைதான்
    கல்வெட்டானது
    தேவதை

    ஏழு வண்ணங்களில்
    எண்ணம் கவரும் வில்
    வானவில்

    பிரிந்து
    பின் சந்தித்தால்
    சுவை அதிகம்

    நேற்றைய நவீனம்
    இன்றைய நவீனமன்று
    நாட்டு நடப்பு

  17. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:14 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி [Edit Kavithai]
    பெயர் பொறிப்பவர்கள்
    உணருவதில்லை
    மரத்தின் வலி

    அடிபடும்போது வலிக்கவில்லை
    கொலை நடந்த போது வலித்தது
    கத்திக்கு

  18. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:15 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உச்சரித்தாலே
    உதடுகள் முத்தமிடும்
    முத்தம்

  19. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:16 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
    பதவி ஊசலாடுகிறது
    சிதம்பர ரகசியம்

    பொதுஉடைமை
    உணர்த்தியது
    செம்பருதி பூ

    தங்கக்கூண்டு வேண்டாம்
    தங்க கூண்டு போதும்
    காதலர்களுக்கு

    இயற்கையின்
    இனிய கொடைகள்
    வண்ணங்கள்

    மூளையின்
    முடங்காத முயற்சி
    எண்ணங்கள்

    இதயத்தை இதமாக்கும்
    கோபத்தைக் குறைக்கும்
    இனிய இசை

    ஈடு இணை இல்லை
    இன்பத்தின் எல்லை
    காதல் உணர்வு

    அளவிற்கு அதிகமானால்
    ஆபத்து
    பணமும் காற்றும்

    யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
    சந்திக்கும்போது
    பிரிந்த காதலர்கள்

    அன்று பாசத்தால்
    இன்று பணத்தால்
    உறவுகள்

    புலியைக்கண்ட மானாக
    வேட்பாளரைக் கண்ட
    வாக்காளர்

  20. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:17 பிப

    அணு உலை உயிர்களுக்கு உலை கவிஞர் இரா .இரவி

    நமக்கு நாமே
    வைக்கும் அணுகுண்டு
    அணு உலை

    வராது பூகம்பம் சரி
    வந்தால்
    அணு உலை

    கணிக்க முடியாதது
    இயற்கையின் சீற்றம்
    அணு உலை

    கொலைக்களம் ஆக வேண்டாம்
    கூடங்குளம்
    அணு உலை

    மின்சாரம் காற்றிலும் கிடைக்கும்
    உயிர்கள் போனால் கிடைக்குமா ?
    அணு உலை

    பண நட்டம் பெற்றிடலாம்
    உயிர்கள் நட்டம் ?
    அணு உலை

    மின்சாரம் பெறப் பல வழி
    உயிர்கள் போக வழி
    அணு உலை

    உயிர்கள் அவசியம்
    மின்சாரம் அனாவசியம்
    அணு உலை

    வாழலாம் மின்சாரமின்றி
    வாழமுடியுமா?உயிரின்றி
    அணு உலை

    உயிரா ? மின்சாரமா?
    உயிரே முதன்மை
    அணு உலை

    வராது சுனாமி என்றவர்களே
    வராமலா இருந்தது சுனாமி
    அணு உலை

    உத்திரவாதம் உண்டா ?
    பூகம்பம் வரதா ?
    அணு உலை

    விரும்பவில்லை வெறுக்கின்றனர்
    மனிதாபிமானிகள்
    அணு உலை

    வேண்டும் என்போர்
    வசித்திட வாருங்கள்
    அணு உலை அருகில்

  21. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:18 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    எங்கு ஒலித்தாலும்
    உடனே கவனிக்கிறேன்
    உன் பெயர்

    கொள்ளை அழகு
    நீரிலும்
    அவள் முகம்

  22. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:18 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கேலிக்கூத்தானது
    அகிம்சையின் ஆயுதம்
    உண்ணாவிரதம்

    எடுபடவில்லை
    மோடியின்
    மோடிமஸ்தான் வேலை

    காந்தியடிகளை
    அவமானப்படுத்தும்
    மத வெறியர்

    பிறக்கும் போது இல்லை
    இறக்கும் போது உண்டு
    ஆடை

    யானையின் வாய்
    அரசியல்வாதியின் கை
    சென்றால் திரும்பாது

    இதயம் அல்ல
    மூளைதான்
    காதலியின் இருப்பிடம்

  23. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:20 பிப

    எய்ட்ஸ் ஹைக்கூ

    கவிஞர் இரா .இரவி

    பண்பாடுப் பயிற்றுவிக்கும்
    பயமுறுத்தல் நோய்
    எய்ட்ஸ்

    ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
    இருபாலருக்கும்
    வராது எய்ட்ஸ்

    மருந்து இல்லை
    மரணம் உறுதி
    எய்ட்ஸ்

    உயிரை உருக்கும்
    உடலைக் கெடுக்கும்
    எய்ட்ஸ்

    கவனம் தேவை
    குருதி பெறுகையில்
    எய்ட்ஸ்

    எச்சரிக்கை
    ஊசி போடுகையில்
    எய்ட்ஸ்

    வரும் முன் காப்போம்
    உயிர்க் கொல்லிநோய்
    உணர்ந்திடுவோம்

    சபலத்தின் சம்பளம்
    சலனத்தின் தண்டனை
    எய்ட்ஸ்

    சில நிமிட மகிழ்வால்
    பல வருடங்கள் இழப்பு
    எய்ட்ஸ்

    வெறுக்க வேண்டாம்
    நேசிப்போம் நண்பராக
    எய்ட்ஸ் நோயாளிகளை

  24. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:21 பிப

    அணு உலை ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    அறிவியலின்
    ஆபத்து
    அணுஉலை

    அரிசி உலை உயிர் வளர்க்கும்
    அணு உலை உயிர்களைப்
    பறிக்கும்

    அதனைத் தொலை
    உயிருக்கு உலை
    அணு உலை

    நன்மையை விட
    தீமையே அதிகம்
    அணு உலை

    கூட்டமாகக் கொல்லும்
    கொடிய வில்லன்
    கூடங்குளம் அணு உலை

    பற்றி எரிந்தால்
    அணைக்கவே முடியாது
    அணுஉலை

    கொள்ளியால்
    தலைச் சொரிதல்
    அணுஉலை

    ஆதாயத்தை விட
    ஆபத்தும் அழிவும் அதிகம்
    அணுஉலை

    உயிர் இனங்களை மட்டுமல்ல
    புல் பூண்டுகளை அழிக்கும்
    அணுஉலை

    அயல்நாடுகளில்
    அங்கீகரிக்கவில்லை
    அணுஉலை

    அக்கம் பக்கம்
    அழிவு நிச்சியம்
    அணுஉலை

    வேண்டாம் வேண்டாம்
    கூடங்குளம்
    ரத்தக்குளமாகிட

    உலை வைக்காமல்
    உண்ணாவிரதம்
    அணுஉலை மூட

    ஜப்பானின் அழிவு
    தமிழகத்திற்கு வேண்டாம்
    மூடுக அணுஉலை

  25. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:21 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கோடுகளின்
    கவிதை
    ஓவியம்

    சொற்களின்
    ஓவியம்
    கவிதை

    மதிக்கப்படுவதில்லை
    திறமைகள் இருந்தும்
    குடிகாரர்கள்

    இக்கரைக்கு அக்கரைப் பச்சை
    அரசு ஊழியருக்கு
    வணிகராக ஆசை

    ஊழல் மறைக்க
    ஊழல் செய்யும்
    அரசியல்வாதிகள்

    பழமையானாலும்
    விறகாவதில்லை
    வீணை

    ஜடப் பொருள்தான்
    மீட்டத் தெரியாதவர்களுக்கு
    வீணை

    அம்புகள் படாத வில்
    விழி அம்புகள் அட்ட வில்
    வானவில்

    புகழ் அடையவில்லை
    பிறந்த பூமியில்
    புத்தன்

    ஒருபோதும் மறப்பதில்லை
    உணவு இட்டவர்களை ‘
    நாய்கள்

    வெடி வெடிப்பதில்லை
    சில கிராமங்களில்
    பறவைப்பாசம்

    மனிதனை விட
    அறிவாளிகள் விலங்குகள்
    சுனாமியில் தப்பித்தன

    அறிவுறுத்த வேண்டி உள்ளது
    மனிதனாக வாழ
    மனிதனை

    அடிக்கரும்பு
    அதிக இனிப்பு
    மண்ணுக்கு அருகில்

    மேய்ப்பன் இன்றியே
    இல்லம் வந்தன
    ஆடுகள்

    நிலத்தில் பிறந்து நீரில் வாழ்ந்து
    நிலத்தில் முடியும்
    படகு

    மனிதனின் கால் பட்டதால்
    களங்கமான
    நிலவு

  26. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:22 பிப

    செங்கொடி கவிஞர் இரா .இரவி

    மறைந்தும் மறையாத
    துருவ நட்சத்திரம்
    செங்கொடி

    இனமானத் தீயை
    மூட்டிய தீ
    செங்கொடி

    செங்கொடிகளையும்
    வாய் திறக்க வைத்தவள்
    செங்கொடி

    மூன்று உயிர்கள் காக்க
    தன்னுயிர் தந்த தியாகி
    செங்கொடி

    மனிதாபிமான மற்றவர்களுக்கு
    மனிதாபிமானம் போதித்தவள்
    செங்கொடி

    தன்னை எரித்து
    தமிழ்ப் பகை எரித்தவள்
    செங்கொடி

    உடலால் எரிந்து
    உணர்வால் வாழ்பவள்
    செங்கொடி

    அய் நாவில் ஈழக்கொடி
    பறக்க வழிவகுத்தவள்
    செங்கொடி

    முத்துக்குமாரின் வழியில்
    முத்திரைப் பதித்தவள்
    செங்கொடி

    தூங்கியத் தமிழினத்தை
    தன்னை எரித்து எழுப்பியவள்
    செங்கொடி

    இன எதிரிகளின்
    முகத்திரைக் கிழித்தவள்
    செங்கொடி

    ஈழத்துத் தீலிபனை
    நினைவூட்டிச் சென்றவள்
    செங்கொடி

    இயந்திர உலகில்
    இளகிய இதயம் பெற்றவள்
    செங்கொடி

    சுயநல உலகில்
    பொதுநல இமயம்
    செங்கொடி

    உயிர் ஆயுதம் ஏந்தி
    எதிரிகளை வீழ்த்தியவள்
    செங்கொடி

    ஒரே நாளில்
    உலகப் புகழ்ப் பெற்றவள்
    செங்கொடி

    புலம் பெயர்ந்த தமிழர்களின்
    புலம் உணர்த்தியவள்
    செங்கொடி

    அய்ம்புலனை அழித்து
    அறிவுப் புகட்டியவள்
    செங்கொடி

    தமிழ் இனத்தின் தியாகத்தை
    தரணிக்குக் கற்பித்தவள்
    செங்கொடி

  27. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:24 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    இனிக்கவில்லை
    விடுதலைத் திருநாள்
    நினைவில் ஈழத்தமிழர்

  28. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 22, 2011 இல் 2:26 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    பாமரர்கள் மட்டுமல்ல
    படித்தவர்களிடமும் பெருகியது
    மூடநம்பிக்கை

    இரண்டும் ஒழிந்தால்
    வல்லரசாகும் இந்தியா
    சாமியார் சாமி

    கணினி யுகத்தில்
    கற்கால நம்பிக்கை
    பிரசன்னம் பார்த்தல்

    முட்டாளை அறிவாளியாக்கும்
    அறிவாளியை மேதையாக்கும்
    சுற்றுலா

    வாழ்க்கை முரண்பாடு
    பணக்காரர்களுக்கு பசி இல்லை
    ஏழைகளுக்கு பசி தொல்லை

    அறிந்திடுங்கள்
    சோம்பேறிகளின் உளறல்
    முடியாது நடக்காது தெரியாது

    சாதிக்கின்றனர்
    கைகள் இல்லாமலும்
    கைகள் உள்ள நீ ?

    வாழ்க்கை இனிக்கும்
    கொடுத்ததை மறந்திடு
    பெற்றதை மறக்காதிரு

    கவனம் தேவை
    சிக்கல் இல்லை
    சிந்தித்துப் பேசினால்

    விரல்களால் தெரிந்தது
    விழிகளில் உலகம்
    இணையம்

    கையில் வெண்ணை
    நெய்யுக்கு அலைகின்றனர்
    கோவில்களில் தங்கம்

  29. eraeravi said,

    ஏப்ரல் 6, 2012 இல் 8:37 பிப

    ஒரு விதையின் வினா கவிஞர் இரா .இரவி

    பறவை ஒன்று பழத்தைத் தின்று
    கொட்டையை விட்டுச் சென்றது !

    மண்ணில் விழுந்த நான்
    மழை நீரால் துளிர்த்து வளர்ந்தேன் !

    நான் வளரக் காரணமான மழை
    வரக் காரணமானேன் நான் !

    உனக்கு நிற்க நிழல் தந்தேன்
    நீ புசிக்க நல்ல பழங்கள் தந்தேன் !

    நீ சுவாசிக்கத் தூயக் காற்றுத் தந்தேன்
    உந்தன் நோய் தீர்க்கும் மருந்து தந்தேன் !

    பறவைகளும் வந்து அமர்ந்து
    பழம் தின்று பறந்து சென்றன !
    நன்றி மறந்து என்னை பணத்திற்காக
    நீ விலைப் பேசி விற்று விட்டாய் !

    என்னை வாங்கியவன் வருகிறான்
    இரக்கமின்றி வெட்டக் கோடாரியோடு !

    என்னை விற்ற உன்னிடம் ஒரு கேள்வி
    என்னை விட்டுச் சென்றது ஒரு பறவை !
    என்னை நட்டவன் நீ இல்லை
    என்னை விற்க உனக்கேது உரிமை !

  30. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 1:24 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

    முட்டாளை அறிவாளியாக்கும்
    அறிவாளியை மேதையாக்கும்
    சுற்றுலா !

    அறிவுறுத்த வேண்டியுள்ளது
    மனிதனாக வாழ
    மனிதனை !

    மண்ணுக்கு அருகில் இருந்ததால்
    அதிக இனிப்பு
    அடிக்கரும்பு !

    மெய்ப்பன் இன்றியே
    இல்லம் வந்தன
    ஆடுகள் !

    களங்கமானது
    மனிதனின் கால் பட்டதால்
    நிலவு !

    வாழ்க்கை முரண்பாடு
    பணக்காரனுக்கு பசி இல்லை
    ஏழைக்கு பசி தொல்லை !

    அறிந்திடுங்கள்
    சோம்பேறிகளின் உளறல்
    முடியாது நடக்காது தெரியாது !

    சாதிக்கின்றனர்
    கைகள் இன்றி
    கைகள் உள்ள நீ !

    வாழ்க்கை இனிக்கும்
    கொடுத்ததை மறந்திடு
    பெற்றதை மறக்காதிரு !

    கவனம் தேவை
    சிக்கல் இல்லை
    சிந்தித்துப் பேசினால் !

    விரல்களால் தெரிந்தது
    விழிகளில் உலகம்
    இணையம் !

    உணர்த்தியது
    பசியின் கொடுமை
    நோன்பு !

    வக்கிரம் வளர்க்கும்
    வஞ்சனைத் தொடர்கள்
    தொலைக்காட்சிகளில் !

  31. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 1:25 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

    கற்பனைதான்
    கல்வெட்டானது
    தேவதை !

    கிடைக்காததற்கு ஏங்குவது
    கிடைத்ததை உணராதது
    பலரின் வாழ்க்கை !

    ஏழு வண்ணங்களில்
    எண்ணம் கவரும் வில்
    வானவில் !

    பிரிந்து
    பின் சந்தித்தால்
    சுவை அதிகம் !

    நாட்டு நடப்பு
    நேற்றைய நவீனம்
    இன்றைய நவீனமன்று !

    பெயர் பொறிப்பவர்கள்
    உணருவதில்லை
    மரத்தின் வலி !

    காயம் இல்லை
    மரத்திலிருந்து விழுந்தும்
    இலை !

    மரமானதற்கு
    வருந்தியது
    சிலுவை மரம் !

    தந்திடுவீர்
    தானத்தில் சிறந்தது
    உடல் தானம் !

    அசலை வென்றது
    நகல்
    செயற்கைச் செடி !

    பசிபோக்கும்
    அட்சயப் பாத்திரம்
    அவள் முகம் !

    உணர்த்தியது
    பொதுவுடைமை
    செம்பருத்திப் பூ !

    மூளையின்
    முடங்காத முயற்சி
    எண்ணங்கள் !

    இதயத்தை இதமாக்கும்
    கோபத்தைக் குறைக்கும்
    இனிய இசை !

  32. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 1:27 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

    ஆசைப்பட்டது காளான்
    ஆசையை வெறுத்த
    புத்தரின் உயிர் !

    அடைந்தான் பரவசம்
    சுனாமியில் தொலைந்த மகன்
    கண் முன்னே !

    இயற்கையை நேசிக்க
    இதமாகும்
    இதயம் !

    இருக்கட்டும் தூய்மையாக
    இரண்டும்
    அகமும் புறமும் !

    தேவையில்லை
    ஏழைகளின் வீட்டிற்கு
    பூட்டு !

    பெண்களுக்கு அழகு
    பொன்னகையை விட
    புன்னகை !

    வான் மேக
    சிக்கி முக்கி உரசல்
    மின்னல் !

    மனிதனின்
    முதல் நவீனம்
    மொழி !

    முட்டாள்
    மகுடி ஊதுகிறான்
    காதில்லாப் பாம்பிடம் !

    அழிவிற்கு
    வழி வகுக்கும்
    ஆயுதம் !

    உணர்ச்சி வசமின்றி
    அறிவுவசம் எடுப்பது
    உத்தி !

  33. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 1:27 பிப

    குழந்தை ! கவிஞர் இரா .இரவி .

    உள்ளது உள்ளபடி
    உரைக்கும் காந்தி
    குழந்தை !

    உடைந்தது பொம்மை
    உடைந்தது மனசு
    குழந்தை !

    செல்வங்களில்
    உயர்ந்த செல்வம்
    குழந்தை !

    உலகின் முதல் மொழி
    உன்னதமான மொழி
    குழந்தை !

    குழல் யாழ்
    வென்றது
    குழந்தை !

    கவலை நீக்கும்
    இன்பம் தரும்
    குழந்தை !

    பிழையாகப் பேசினாலும்
    பேசுவதே அழகு
    குழந்தை !

    கருவில் உருவான
    விசித்திர விந்தை
    குழந்தை !

    சாதி மத பேதம்
    அறியாதது
    குழந்தை !

    சிரிப்புக்கு இணையான
    பூ உலகில் இல்லை
    குழந்தை !

  34. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 1:29 பிப

    மது ! கவிஞர் இரா .இரவி .

    கண்மூடி குடிக்கின்றாய்
    விரைவில் கண் மூடுவாய்
    மது !

    உள்ளே போனதும்
    உன்னை இழப்பாய்
    மது !

    இரண்டும் அழியும்
    பணம் குணம்
    மது !

    இறங்க இறங்க
    இறங்கும் உன் மதிப்பு
    மது !

    குடலை அரிக்கும்
    உடலை வருத்தும்
    மது !

    மனக்கட்டுப்பாடு இருந்தால்
    மனம் நாடாது
    மது !

    மற்றவர்கள்
    து என துப்புவார்கள்
    மது !

    உழைப்பை வீணடிக்கும்
    இறப்பை விரைவாக்கும்
    மது !

    குற்றவாளியாக்கும்
    சிறைக்கும் அனுப்பும்
    மது !

    சூது ஆடுவாய்
    சொத்து இழப்பாய்
    மது !

    மாது வெறுப்பாள்
    துணையை இழப்பாய்
    மது !

  35. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 1:30 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

    விடுதலை கேட்டவர்களை
    வீதியில் நிறுத்தியது
    இலங்கை !

    சுதந்திரம் கேட்டவர்களை
    சோகத்தில் ஆழ்த்தியது
    இலங்கை !

    குடும்பங்களைச் சிதைத்து
    கோரத்தாண்டவம் ஆடியது
    இலங்கை !

    தண்ணீர்த் தீவை
    கண்ணீர்த் தீவாக்கியது
    இலங்கை !

    ஆணவத்தின் உச்சம்
    திமிரின் எச்சம்
    இலங்கை !

    மனிதாபிமானம் மறந்து
    விலங்கானது
    இலங்கை !

    தமிழருக்கு வழங்கிய நிதி
    சிங்களருக்குப் பயன்படுத்தும்
    இலங்கை !

    குரங்கின் கையில்
    பூ மாலையாக தமிழர்
    இலங்கை !

    பாலுக்கு பூனை காவல்
    தமிழருக்கு சிங்களர் காவல்
    இலங்கை !

    நாய் வால் என்றும் நிமிராது
    குணம் என்றும் மாறாது
    இலங்கை !

    மன்னிக்க மாட்டார் புத்தர்
    மவ்னிகளான புத்தப்பிச்சுகளை
    இலங்கை !

    வணங்க வேண்டாம் புத்தரை
    புத்தரின் வேண்டுகோள்
    இலங்கை !

    புத்தரின் போதனை மறந்து
    எலும்பு வாங்கி பயனேது
    இலங்கை !

    என்று விடியும்
    ஏக்கத்தில் தமிழர்
    இலங்கை !

    புறத்திற்கு போடலாம் முள்வேலி
    அகத்திற்கு ?
    இலங்கை !

    ரத்த வெறியனுக்கு
    ரத்தினக் கம்பளம்
    இந்தியா !

  36. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 1:32 பிப

    எழுத்து ! கவிஞர் இரா .இரவி .

    அறிந்தது மனதில் நின்றது
    அறியாதது அறிய வைத்தது
    எழுத்து !
    ————————————-
    மனிதனின் வளர்ச்சிக்கும்
    சாதனைக்கும் காரணம்
    எழுத்து !
    ————————————
    இல்லாத உலகம்
    நினைக்கவே அச்சம் !
    எழுத்து !
    ——————————————-
    திருவள்ளுவரை
    உலகிற்குக் காட்டியது
    எழுத்து !
    ———————————
    அறிஞர்கள் கவிஞர்கள்
    எழுத்தாளர்கள் மூலப் பொருள்
    எழுத்து !
    ——————————————————————————————
    ஒலி வடிவம் வரி வடிவமானது
    நாகரீகத்தின் தொடக்கம் மொழியின் உச்சம்
    எழுத்து !
    ———————————————-
    தோன்றாமல் இருந்திருந்தால்
    ஆதிவாசியாகவே இருந்திருப்பான்
    எழுத்து !
    ———————————————
    அறிவு வளரவும் ஆள் வளரவும்
    உதவியது
    எழுத்து !
    ——————————————
    பார்வையற்றவர்களும்
    தடவி உணரும் உன்னதம்
    எழுத்து !
    ——————————————
    ஆற்றலையும் வீரத்தையும்
    பறை சாற்றியது கல்வெட்டு
    எழுத்து !
    —————————————–
    காவியம் காப்பியம்
    காத்தது ஓலைச்சுவடி
    எழுத்து !
    ——————————————

  37. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 1:33 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    பறிக்குது மனம்
    நீல வானம்
    நிலா வானம் !

    பெறுவது அவலம் அன்று
    திருவிழா இன்று
    கடன் மேளா ?

    லஞ்சம் தவிர்
    நெஞ்சம் நிமிர்
    வாசகத்திற்குக் கீழ் லஞ்சம் !

    ஆறடி கூட
    புதைக்கப்பட்டவனுக்கே
    எரிக்கப்பட்டவனுக்கு ?

    குணம் மாறி இருப்பான்
    இன்று இருந்திருந்தால்
    கர்ணன் !

    வலை கட்டிக்
    காத்திருந்தது பூச்சிக்காக
    சிலந்தி !

    தேவையற்றதை நீக்கிட
    கிடைத்தது
    சிலை !

    நினைவிற்கு வந்தது
    பரமபத பாம்புகள்
    அரசியல்வாதிகள் !

    வாழ்கிறார்கள்
    மக்கள்
    மனிதர்கள் ?

    ஏவி என்ன பெருமை
    ஏவுகணை நூறு
    ஊழல் !

    அமைதி நிலவியது
    குடியும் கொடியும்
    இல்லா கிராமம் !

    விழுங்கி விட்டன
    செல்பேசி கோபுரங்கள்
    குருவிகள் !

    ஒழுங்குபடுத்தப்பட்ட
    ஓசை
    இசை !

  38. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 8:32 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மருந்தளித்தார் மனிதநேயத்தோடு
    மலையாள நடிகர்
    தமிழக நடிகர்கள் ?

    எந்த விலை ஏறியபோதும் வருந்தாதவன்
    மது விலை ஏறியதும் வருந்தினான்
    குடிமகன் !

    நேர்மையின் சின்னம்
    திருவாளர் பரிசுத்தம்
    சொத்து பத்து கோடி !

    கடவுச்சீட்டு இன்றி
    பல நாடு பயணம்
    உரத்த நாடு ! வருசை நாடு !

    சகல சக்தியோடு அவாள்
    குடியரசுத்தலைவரை
    ஆசிர்வதிக்கும் அவாள் !

    மழைக்கான
    மேளமும் விளக்கும்
    இடி மின்னல் !

    ரசிப்பதும் சுகம்
    நனைவதும் சுகம்
    மழை !

    ஒவ்வொரு நாளும்
    ஒவ்வொரு மாதிரி
    நிலவும் அவளும் !

    நிலவு
    உருட்டிய சோளிகள்
    நட்சத்திரங்கள் !

    மழைக்கான
    பச்சைக் கொடி
    பசுமை !

  39. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 8:33 பிப

    பிடிவாதம் ! கவிஞர் இரா .இரவி .

    வாதம் செய்வது திறமை !
    பிடிவாதம் செய்வது மடமை !
    ——————————————————
    கை கால்களை
    முடக்கும் வாதம் !
    மூளையை முடக்கும்
    பிடிவாதம் !
    ——————————————————
    வாதத்தை விட கொடிய நோய்
    வேண்டாம் பிடிவாதம் !
    —————————————————–
    பெரிய மனிதர்களின்
    வீழ்ச்சிக்கு காரணம்
    பிடிவாதம் !
    ———————————————————
    விட்டுக் கொடுத்தால்
    வாழ்க்கை சிறக்கும் !
    பிடிவாதம் ! வாழ்வை அழிக்கும் !

  40. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 8:34 பிப

    கொடிது ! கொடிது ! தீ கொடிது ! கவிஞர் இரா .இரவி .

    வாழ வேண்டிய உயிர்களைக் குடிக்கும்
    வஞ்சனை மிக்க தீ கொடிது !

    தீபாவளி நெருங்குவதால் விரைந்து முடிக்க
    முதலாளி நெருக்கியதால் வந்த விபத்து !

    தீபாவளி வெடி தயாரித்த தொழிலாளிகளே
    தீபாவளி வெடியாகி வெடித்து விட்டார்கள் !

    விதிகளைக் கடைபிடிக்காமல் முதலாளிகள்
    விதிகளை மீறியதால் வந்த கொடிய விபத்து !

    அளவிற்கு அதிகமான ரசாயனம் இருப்பு
    அதிகமானோரின் உயிர்கள் பறிப்பு !

    தீயை வேடிக்கைப் பார்த்தவர்களும் மரணம்
    தீயிலிருந்து காக்கச் சென்றவர்களும் மரணம் !

    பெருமையாக சிவகாசி குட்டி ஜப்பான் என்கின்றோம்
    பெரிய அளவில் மருத்துமனைகள் இல்லை !

    மிகப்பெரிய மருத்துவ மனையை சிவகாசியில்
    முதலில் கட்டுவதற்கு ஆவன செய்யுங்கள் !

    கவனம் கவனம் உயிர்கள் பதனம்
    கவனக் குறைவால் உயிர்கள் இழப்பு !

    இழந்த உயிர்கள் போதும் ! போதும் !
    இனிஒரு உயிர் கூட இழக்கக் கூடாது !

    இறந்தவர்கள் அனைவருமே வாழ வேண்டிய
    இளம் வயதினர்கள்தான் முடிந்தது கதை !

    எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும்
    இழந்த உயிருக்கு ஈடாகுமா?

    அப்பாவை இழந்து அழுகுது குழந்தை !
    அம்மாவை இழந்து வருந்துது குழந்தை !

    அவர்கள் உயிர்களைப் பணயம் வைத்து
    உங்களுக்கு தரும் வெடிகள் தேவையா ?

    உங்கள் மகிழ்ச்சிக்காக வெடி தயாரித்தவர்கள்
    அவர்களின் உயிர்களை இழந்து விட்டனர் !

    வெடி தேவைதானா ? சிறிது சிந்தியுங்கள் !
    வெடி வெடிக்காமல் இருங்கள் இந்த வருடம் !

  41. RRavi Ravi said,

    ஒக்ரோபர் 29, 2012 இல் 8:36 பிப

    ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    முகம் மலர்ந்தன
    மலர்கள்
    ஆதவன் !

    மரத்திற்கு
    உரமானது
    உதிர்ந்த இலை !

    புல்லின் பனித்துளி
    தாகம் தணித்தது
    சூரியன் !

    அடிக்காதபோது
    அமைதி காத்தது
    ஆலய மணி !

    செடியிலிருந்து
    மலர் சிரித்தது
    உதிர்ந்த மலர் கண்டு !

    தந்தன மகிழ்ச்சி
    சிந்தைக்கு
    சிறு புல்கள் !

    ரசிக்க
    சலிக்காத
    இயற்கை !

  42. RRavi Ravi said,

    மே 1, 2013 இல் 6:44 பிப

    ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    சிற்பி இல்லை
    சிலை உண்டு
    அழியாத கலை !

    வீழ்ந்த பின்னும்
    நடந்தது நதியாக
    நீர் வீழ்ச்சி !

    வளர்ந்துகொண்டே செல்கிறது
    புவி வெப்பமயம்
    கொளுத்தும் கோடை !

    நடந்தது கொலை
    சகஜம் என்றனர்
    அரசியல் !

    விரித்தது தோகை
    மேகம் பார்த்து
    ஆண் மயில் !

    ஆடி அடங்கியவர்
    இறுதி ஊர்வலத்தில்
    ஆட்டம் போட்டனர் !

    இறந்தும் விடவில்லை
    காசு ஆசை
    நெற்றியில் நாணயம் !

    கோடீஷ்வரருக்கு
    இறுதில் எஞ்சியது
    ஒரு ரூபாய் நாணயம் !

  43. RRavi Ravi said,

    மே 1, 2013 இல் 6:46 பிப

    ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பெயரை மாற்றுங்கள்
    கருணை இன்றி நிராகரிப்பு
    கருணை மனுக்கள் ?

    பசுமை இலை
    வழங்கியது சிகப்பு
    மருதாணி !

    விழுங்கியது
    கோடை விடுமுறையை
    இன்றைய கல்வி !

    கறிக்கோழியாக
    மதிப்பெண்ணுக்காக
    மாணவன் !

    தேர்வில் வெற்றி
    வாழ்வில் தோல்வி
    மாணவர்கள் !

    உணர்த்தியது
    மழையின் வருகை
    இடி மின்னல் !

    மரங்களை வெட்டி
    கட்டிய கட்டிடங்களில்
    செயற்கைச் செடிகள் !

    இன்பம் துன்பம்
    உணர்த்தியது
    பிறை நிலவு !

    வலைக்கட்டிக் காத்திருந்தது
    பூச்சிக்காக
    சிலந்தி !

    புத்தரை வணங்குவது
    புத்தருக்கு அவமானம்
    சிங்களர் !

    விஞ்சியது
    ஜாலியன் வாலாபாக் கொடுமையை
    இலங்கைப் படுகொலைகள் !

    தாமதமாகவே விழித்தது
    தூங்கிய தமிழினம்
    லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !

  44. RRavi Ravi said,

    மே 1, 2013 இல் 6:47 பிப

    ஹைக்கூ ! ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி !

    ஏழைகளின் மலர்
    பணக்காரர்கள் மலரானது
    மல்லிகை !

    இன்றைய மனிதர்கள்
    சத்து இன்றி
    இல்லை பழைய கஞ்சி !

    தனியாகப் பேசுகின்றனர்
    இல்லத்தரசிகள்
    தொடர்களின் பாதிப்பு !

    சேதாரத்தால்
    சேதரமானார்கள்
    வாடிக்கையாளர்கள் !

    செய் கூலி இல்லை என்று
    சேர்த்தார்கள்
    செம்பொன் !

    தள்ளுபடி என்று
    தள்ளுபடியானது
    நாணயம் !

    நாங்கள்தான் தங்கம்
    எல்லோரும் சொல்கிறார்கள்
    தங்க வியாபாரிகள் !

    வாங்கினால் அதிகம்
    விற்றால் குறைவு
    தங்கம் !

  45. RRavi Ravi said,

    மே 1, 2013 இல் 6:48 பிப

    மரப்பாச்சி ! கவிஞர் இரா .இரவி

    .தரணிக்கு உணர்த்தியது
    தச்சனின் திறமையை
    மரப்பாச்சி !

    பெரியவர்களுக்கும் பயன்பட்டது
    விற்றுப் பிழைக்க
    மரப்பாச்சி !

    வெட்டியதற்கு வருந்தாமல்
    மகிழ்ந்தது மரம்
    மரப்பாச்சி !

    பெண் இனத்தின்
    பிரதிநிதியாக
    மரப்பாச்சி !

    உடையவே இல்லை
    பலமுறை விழுந்தும்
    மரப்பாச்சி !

    உண்ணாவிட்டாலும் சோறு
    ஊட்டி மகிழ்ந்தது குழந்தை
    மரப்பாச்சி !

    பொம்மை அல்ல
    உயிர்த்தோழி குழந்தைக்கு
    மரப்பாச்சி !

    அம்மணம் பிடிக்காமல்
    ஆடை அணிவித்தது குழந்தை
    மரப்பாச்சி !

    பேசாவிட்டாலும் பேசி
    மகிழ்ந்தது குழந்தை
    மரப்பாச்சி !

    கோபம் வந்தால்
    ஆயுதமானது குழந்தைக்கு
    மரப்பாச்சி !

    தாயுக்கு உதவியது
    குழந்தைக்கு சோறு ஊட்ட
    மரப்பாச்சி !

    உரசிப் போட
    நீக்கியது தலைவலி
    மரப்பாச்சி !

    உற்று நோக்கினால்
    உயிருள்ளதாகத் தெரியும்
    மரப்பாச்சி !

    அக்றிணை அல்ல
    உயர்திணை
    மரப்பாச்சி !

  46. RRavi Ravi said,

    மே 1, 2013 இல் 6:50 பிப

    தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !

    ஒழிக்காமல் வளர்த்தது
    தீவிரவாதம்
    தூக்குத்தண்டனை

    கொலை செய்தவனை
    கொலை செய்தது அரசு
    தூக்குத்தண்டனை

    கணினி யுகத்தில்
    காட்டுமிராண்டித்தனம்
    தூக்குத்தண்டனை

    வல்லரசின் ஆசைக்கு
    இணங்கி
    தூக்குத்தண்டனை

    இரகசியத்தை அழிக்க
    விரைவாக நிறைவேற்றம்
    தூக்குத்தண்டனை!

    ஒழித்து விட்டன
    வளர்ந்த நாடுகள்
    தூக்குத்தண்டனை !

    விரும்புவதில்லை
    மனிதாபிமானிகள்
    தூக்குத்தண்டனை !

    மனிதாபிமானமற்ற
    மடச்செயல்
    தூக்குத்தண்டனை !

    நடைமுறையுள்ள நாட்டில்
    பெருகியது வன்முறை
    தூக்குத்தண்டனை !

    பகுத்தறிவைப் பயன்படுத்தினால்
    நீக்கிடலாம்
    தூக்குத்தண்டனை !

    அரசியல் லாபம்
    அடைந்திட வழங்குவது
    தூக்குத்தண்டனை !

    .பழிக்குப்பழி வாங்கும்
    விலங்கு குணம்
    தூக்குத்தண்டனை !

    நாகரீக உலகில்
    நாகரீகமற்ற செயல்
    தூக்குத்தண்டனை !

    அடுத்தவருக்கு என்றால் வேடிக்கை
    தனக்கு என்றால் வேதனை
    தூக்குத்தண்டனை !

    நிரபரதிக்கும் வழங்கிய
    வரலாறு உண்டு
    தூக்குத்தண்டனை !

    வாருங்கள் மனிதர்களே
    தூக்கிலிடுவோம்
    தூக்குத்தண்டனை !

  47. RRavi Ravi said,

    மே 1, 2013 இல் 6:52 பிப

    தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

    திறந்தே இருக்கும் ! கவிஞர் இரா .இரவி !

    வாய்ப்பு உன் வாசல் வந்து
    கதவைத் தட்டுமென்று காத்திருந்து
    பொன்னான பொழுதை வீணாக்காதே !
    வாய்ப்பு எனும் வாசல் தேடி
    நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம் !
    திறந்தே இருக்கும் !
    ———————————————————————
    மன நிலையைப் பெற்றிடு ! கவிஞர் இரா .இரவி !

    ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு
    தோற்றதும் துவண்டிடும் மன நிலை விடு !
    வெற்றி கிட்டும்வரை முயற்சி செய்யும்
    மன நிலையைப் பெற்றிடு !
    ———————————————————————–
    வாழ்க்கை வசந்தமாகும் ! கவிஞர் இரா .இரவி !

    வெற்றி சில நிமிடங்களில் கிட்டிட
    வாழ்க்கை திரைப்படம் அன்று !
    பயிற்சி செய் ! முயற்சி செய் !
    தோல்வி கிடைத்தால்
    காரணத்தை ஆராய்ந்தால்
    அடுத்தப் போட்டியில்
    அதனைத் தவிர்த்திடு !
    வெற்றி வசமாகும் !
    வாழ்க்கை வசந்தமாகும் !
    நினைத்தது கிட்டும் ! கவிஞர் இரா .இரவி !
    என்னால் முடியும் !
    என்றே முயன்றால் !
    முயன்றது முடியும் !
    என்னால் முடியாது !
    என்றே நினைத்தால் !
    முயன்றது முடியாது !
    யாரை நீ நம்பாவிட்டாலும் !
    உன்னை நீ நம்பு !
    நினைத்தது கிட்டும் !

    இனிதே பயன்படுத்து ! கவிஞர் இரா .இரவி !
    பொழுதைப் போக்குவதல்ல
    பொன்னான வாழ்க்கை !
    பொழுதைத் திட்டமிடு !
    பழுது நீங்கும் !
    ஒவ்வொரு வினாடியும்
    ஒவ்வொரு வைரம் !
    போன பொழுது
    திரும்ப வராது !
    இருக்கும் பொழுதை
    இனிதே பயன்படுத்து !

    நெஞ்சில் நிறுத்து ! கவிஞர் இரா .இரவி !
    வென்றவர்களின் வரலாறு படித்திடு !
    வென்று நீயும் வரலாறு படைத்திடு !
    சாதித்தவர்களின் சாதனை அறிந்திடு !
    சாதித்து சாதனை புரிந்திடு !
    உண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்க்கை !
    கண்டு இறங்கி சாதித்து வாழ்ந்திடு !
    எதிர்மறை சிந்தனைகளை
    அகராதியிலிருந்து அகற்று !
    நேர் மறை சிந்தனைகளை
    நெஞ்சில் நிறுத்து !

    வெற்றி வசமாகும் ! கவிஞர் இரா .இரவி !
    வெந்த சோறு தின்று !
    விதி வந்தால் சாவேன் !
    என்று சொல்வதை நிறுத்து !
    மதியால் சாதித்து வாழ் !
    மண்ணுலகம் போற்றிட வாழ் !
    சராசரியாக காலம் கழிக்காதே !
    சாதிக்கப் பிறந்தவன் நீ !
    வித்தியாசமாக சிந்தித்து !
    விவேகமாக செயல்படு !
    வெற்றி வசமாகும் !

    உலகம் வரவேற்கும் ! கவிஞர் இரா .இரவி !
    தாழ்வு மனப்பான்மை உன்னை
    தாழ்த்தி விடும் !
    உயர்வாக எண்ணு ! உன்னை நீ
    உயர்வாக எண்ணு !
    உன்னுள் திறமைகள்
    ஓராயிரம் உண்டு !
    இருக்கும் திறமைகளை
    இனிதே பயன்படுத்து !
    உன்னை என்றும்
    உலகம் வரவேற்கும் !

  48. RRavi Ravi said,

    மே 1, 2013 இல் 6:54 பிப

    காதல் ! கவிஞர் இரா .இரவி .

    நெடிலில் தொடங்கி
    மெய்யில் முடியும்
    சொல் மட்டுமல்ல !
    நெடிய உறவாகத் தொடர்ந்து
    மெய்யான அன்பை பொழிவது !
    இன்பங்கள் எத்தனையோ
    இவ்வுலகில் இருந்தாலும்
    இனிமையான காதல் இன்பத்திற்கு
    இணை இவ்வுலகில் இல்லை !
    கூடு விட்டு கூடு பாயும்
    எண்ண அலை !
    தனிமையில் பேச வைக்கும்
    பாச வலை !
    மகிழ்ச்சிப் போதையில்
    மிதக்க வைக்கும் கலை !
    கோடிப் பணம் தந்தாலும்
    பிடிக்காத நிலை !
    இறுதிவரை உறுதியாக இருந்தால்
    அசைக்க முடியாத மலை !

  49. RRavi Ravi said,

    மே 1, 2013 இல் 6:55 பிப

    ஹைக்கூ (சென்டிரியு) கவிஞர் இரா .இரவி !

    செவி மடுக்க வேண்டாம்
    மூடர்களின் உளறல்
    அழியாது உலகம் !

    மதத்தை வென்றது பாசம்
    பள்ளிவாசலில் குழந்தையை
    மந்திரிக்க இந்து தாய் !

    தடை செய்தால்
    அமைதி நிலவும்
    சாதிக்கட்சிகள் !

    பிஞ்சுலேயே கற்பிப்பு
    ஆணாதிக்க உள்ளம்
    ஆண் பிள்ளைக்கு !

    சிரிச்சாப் போச்சு
    அடிமைத்தனம் போதிப்பு
    பெண் குழந்தைக்கு !

    சின்ன மீன் போட்டு
    சுறா மீன் பிடிப்பு
    அரசியல் !

    அந்நிய முதலீடு வரவேற்று
    பெற்றப் பணங்கள்
    அந்நிய நாட்டு வங்கியில் முதலீடு !

    பார்ப்பதற்கு அழகு
    மலர்கள்மீது
    மார்கழிப்பனி !

    பணியாளர்கள் வயிற்றில்
    அடித்தவர் நன்கொடை
    எழுமலையானுக்கு !

  50. பேராசிரியர் கண.சிற்சபேசன் said,

    மார்ச் 23, 2021 இல் 12:52 பிப

    கொள்ளையர்களின் கூடாரமானது கல்விக்கூடங்கள் என்றால் கொஞ்சமும் அஞ்சாமல் பேரோடும் புகழோடும் வாழ்வது எப்படி கொள்ளையர்கள்?


era.eravi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி