கவி என்றால் குரங்கு!

நான் மாமரங்கள் நிறைந்த ஊருக்கு சென்றிருந்தேன்.ஒருவரைக் காட்டி,’’இவர்தான் இந்த ஊர் சித்திரக்கவி’’ என்றார்கள்.

‘சித்திரக் கவிதையெல்லாம் எழுதுவாரா?’ என்றேன்

‘’சித்திரை மாதம் மாமரங்களின் மேல்தான் காணப்படுவார்.மாம்பழங்களைத் திருடுவதறகாக’’ என்றனர்.

அப்போதுதான் கவி என்றால் குரங்கு என்ற பொருளும் இருப்பதும் காளமேகப்புலவர், ‘கவியரசர்’ குறித்துப் பாடிய ‘முன்னிரண்டு காலெங்கே’ பாடல் நினைவுக்கு வந்தது.

———————–
வெ.இறையன்பு ‘ஏழாவது அறிவு’ பாகம் 3

பின்னூட்டமொன்றை இடுக