பெண்ணைப் படைத்த பிரம்மன்!

ஓர் மின்னல் வெட்டுகிறது.

கணமும் தாமதிக்காத பிரமன் கைகளால் மின்னலைத் தாவிப் பற்றிப் பெண்ணாய்ச் சமைத்துவிடுகிறான்.

வெட்டி மறைகிற மின்னலைப்போல் பெண்ணும் மறைந்துவிட்டால் என்னசெய்வது. தன் படைப்பு ஆணுக்குப் பயன்படாமலே போய்விடுமே! என்று வருத்தம் கொண்டவன் கண்களில் ஒன்றைப்போல் தோற்றம் கொண்ட இரு மேரு மலைகள் தென்படுகிறது.

பேரானந்தம் கொண்ட பேரிரைவன் இம்மலைகளைப் பெண்ணின் மார்பில் பாரமாக ஏற்றிவிட்டாள் மின்னலைப் பொல் வெட்டி மறையாமல் இருப்பாளல்லவா! -என்று கருதியவன் அப்படியே செய்துவிடுகிறான்.

இப்படியோர் கற்பனை செய்து கவிபாடி அரங்கேற்றம் செய்கிறான் அதிவீர இராம பாண்டியன். (இவன் ஓர் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது)

பெண்ணாகப் படைத்த மின்னலின் மாரில் மலைகளைப் பாரமாக இயன்றினான் என்கிறீர். மின்னல் வெட்டுகிற வேகத்தில் மலைகளைத் தூக்கியெறிந்து விடாதா? மலைகள் தூக்கியெறியப் படாதிருக்கத் துளையிட்டு மரையிட்டிருக்கிறானா? அல்லது ஆணிதான் அடித்திருக்கிறானா? -என்று கேட்டுக் குடைந்தெடுத்துவிட்டான்  ஒரு புலவன்.

அதிவீர இராம பாண்டியருக்கு ஒரே மனக்கவலை. புலவனின் கேள்விகளுக்குத் தன்னால் பதில் கூற இயலவில்லையே என்கின்ற அவமானம் வேறு. அவையைக் கலைத்துவிட்டு அந்தபுர மண்டபத்தில் அமர்ந்திருக்கிறான் மன்னன். அப்பொழுது அவன் மனைவியருள் யவ்வனப் பருவ மங்கையொருத்தி அவன்முன் வருகிறாள்.

மன்னா! ஏன் கவலையுடன் காட்சி தருகிறீர்? என்னிடம் சொல்லலாகாதா? என்கிறாள் தேவி.

அவையில் நடந்ததை அவளிடம் கூறி அமைதி கொள்கிறான் மன்னன்.

தங்களுக்குத் தெரியாத தொன்றுண்டா? தங்களால் கூடவா அப்புலவனின் கேள்விக்குப் பதில் கூற இயலவில்லை?

தங்களுக்குத் தெரியாத தொன்றுண்டா என்றால் உனக்குத் தெரியும் என்றல்லவா பொருள். இதன் பொருள் உனக்கத் தெரியுமா? உடனே சொல் என்கண்ணே! என்கிறான் மன்னன்.

சொன்னால் மட்டும் போதுமா? காட்சியாகவே காட்டிவிடவா? என்ற தேவி மார்க் கச்சையை அவிழ்த்துக் காட்டுகிறாள். இப்பொழுது புரிகிறதா? மலைகளைப் பாரமாக இயற்றிய இறைவன் துளையிட்டு மறையிட்டு ஆணிகளையும் அடித்திருக்கிறான் என்பது! மாரோடு மலைகளை இரண்டற இருத்தும் ஆணிகளின் கொண்டைகளன்றோ இவ்விரு முலைக்காம்புகளும்! என்கிறாள்.

இத்துனைப் பொருட்செறிவு மிகந்த அதிவீர இராம பாண்டியனின் அப்பாடலைப் பார்ப்போமா?

வாய்ந்த மின்னை மடந்தைய ராக்கிவின்
போந்தி டாமலன் றோமலர்ப் புங்கவன்
சாந்த ணிந்த அம்மணிக் குன்றென
ஏந்து வெம்முலைப் பாரம் இயற்றினான்!
————————————————————
அகரம்.அமுதா – இலக்கியகட்டுரையிலிருந்து

source:http://ilakkiya-inbam.blogspot.com/2008/06/blog-post_13.html

பின்னூட்டமொன்றை இடுக