சிறுவர்கள் போட்ட விடுகதை (விடையுடன்)

riddle new.jpg

சுற்றும்போது ஆனந்த சுகம். அது என்ன?

விடுகதை

1. சுற்றும்போது ஆனந்த சுகம். அது என்ன?

2. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?

3. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன். பள்ள நீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?

4. கலர்ப்பூ கொண்டைக்காரி. காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?

5. கந்தல் துணி கட்டியவன். முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?

6. படபடக்கும், பளபளக்கும், மனதுக்குள் இடம் பிடிக்கும். அது என்ன?

7. தலையில் கிரீடம் வைத்த தங்கப் பழம். அது என்ன?

8. நிலத்தில் நிற்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன?

9. எவ்வளவு ஓடினாலும் வியர்வையும் வராது; திருடனுக்கும் பிடிக்காது. அது என்ன?

10. கையையும் கழுத்தையும் வெட்டினாலும், மிகவும் நல்லவர். யார் அவர்?

விடுகதை போட்டவர்:
கே. சதிஷ், 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பொதட்டூர் பேட்டை, திருவள்ளூர்.

கண்டுபிடி

1. மின்விசிறி

2. தொலைபேசி

3. நெருப்பு

4. சேவல்

5. சோளக்கதிர்

6. பட்டாசு

7. அன்னாசிபழம்

8. முடி

9. நாய்

10.தையற்காரர்

சாயந்திரம் கை பிடித்து :: அது என்ன?

Traditional Butter Churn (cc) ILRI

விடுகதை:
சாயந்திரம் கை பிடித்து
சாமத்தில் கருத்தரித்து
விடியும்போது தாயையும் பிள்ளையையும் பிரிச்சு விட்டாச்சு.
அது என்ன?

விடை:
பால், தயிர், வெண்ணை, மோர்

சாயங்காலம் மாட்டு மடியில் கைப்பிடித்து பால் கறப்போம். பாலை காய்ச்சி உரை மோர் கலப்போம். அது நள்ளிரவில் தயிராகி போய்விடும். திரும்பவும் காலையில் தயிரைக் கடையும்போது, மோரும் வெண்ணையும் பிரிந்துவிடும்.

இதுதான் அந்த விடுகதைக்கு அர்த்தம்.

 

 

வயது என்ன..? – புதிர்

தேவலோக பேரழகி – (குறுக்கெழுத்துப் போட்டி)

சில்ட்ரன் ஜோக்- ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க,,,

குறுக்கெழுத்துப் புதிர் – கோகுலம்

அமைதியான பையன், அடிக்காமல் அழுவான்

1) அமைதியான பையன், அடிக்காமல் அழுவான்
– அவன் யார்?

2) இலை இல்லை, பூ இல்லை, கொடி உண்டு – அது என்ன?

3) அதிவேகக் குதிரை, ஆடியபடி செல்லும் குதிரை
போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் – அது என்ன?

4) எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது
-அது என்ன?

5) ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒரு பிள்ளை ஓடுவான்,
மற்றவன் நடபான் – அது என்ன?

6) உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி – அது என்ன?

7) இவன் வலை பின்னுவான், ஆனல் மீன் பிடிக்க
மாட்டான் – அது என்ன?

======================================
விடைகள்:
1) ஐஸ்
2) கைரேகை
3) ரயில் பெட்டி
4) இடியாப்பம்
5) கடிகார முட்கள்
6) கணை இமை
7) சிலந்தி

விடுகதை

 

1) உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்-
நான் யார்?

2) இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை
பெய்யாது- அது என்ன?

3) தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுத்தும்.
ஆனால் சிறகில்லை. அது என்ன?

4) ஆயிரம் பேருக்கு ஒரு இடை கச்சை. அது என்ன?

—————————–
விடைகள்:
1) தபால் பெட்டி
2) பட்டாசு
3) தபால் தலை
4) துடைப்பான் (விளக்குமாறு)

ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை)

படிமம்:Banana trees in home.jpg

1) குலை தள்ளிப்பழம் தருவேன், குழந்தைகளுக்காக
உயிர் விடுவேன் – நான் யார்?

2) குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன்
தூக்கி விடுவான் – அது என்ன?

3) ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால்
வலிக்கும், கடித்தால் சுவைக்கும் – அது என்ன?

4) வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான்
– அது என்ன?

5) ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன?

=============================================

விடைகள்:
1) வாழை
2) பணியாரம்
3) கரும்பு
4) பட்டம்
5) நாக்கு

photo courtesy:

« Older entries