ஒரு கோட்டில் இரு முகம்

17952666_1685487178420747_6787461222810940978_n.jpg

கமல் சொன்ன வார்த்தை!

டி.வி. சீரியல் இயக்குனராக இருந்து பின்னர்
ஓவியராக மாறியவர் ஸ்ரீதர். சினிமா பிரபலங்களை
வித்தியாசமான கோணங்களில் ஓவியமாகத் தீட்டி
அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்.
அந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்…

டிஜிட்டல் ஓவியம் எப்போது?

எதையும் புதுசா செய்யணும் என்கிற ஆர்வத்தில்
2000ல் சிட்னிக்கு போய் டிஜிட்டல் ஓவியப் பயிற்சி
பெற்றேன். அதற்காக சென்னையில் ஒரு ஸ்டூடியோ
ஆரம்பித்தேன். டிஜிட்டல் ஓவியத்தின் முதல்
துவக்கமாக அது அமைந்தது.

தபேலா கலைஞர் ஜாகீர்ஹூசைனின் நிறைய
படஙகளை வரைந்து கொடுத்தேன். அவருடைய
கலிபோர்னியா வீட்டிலும் மும்பை வீட்டிலும் உள்ள
படங்கள் நான் பண்ணியதுதான்.

கமல் ஓவியர் ஆனது எப்படி?

ஓவியர் பிகாசோ இந்தியாவில் பிறந்திருந்தால்
அவர் எந்த மாதிரி படங்கள் வரைந்திருப்பார் என்கிற
கான்ஸெப்ட்ல சில ஓவியங்கள் வரைந்து கமல்
சாரிடம் காண்பித்தேன். அதை பார்த்த நொடியில் கமல்
சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

‘பிகாசோ இந்தியாவில் பிறந்திருந்தால் ஜல்லிக்கட்டு
தானே வரைந்திருப்பார்’ என்று அவர் கேட்டதும் அசந்து
போனேன். நான் ரயில் வரைந்திருந்தேன். நாம இன்னும்
வரலாற்றை உள்வாங்கணும்னு நெனைச்சுக்கிட்டேன்.

கமல் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆனதை கொண்டாட
கமலின் 50 முக்கியமான கேரக்டர்களை குரூப்
போட்டோவாக வரைந்து பரிசளித்தேன்.அதை இன்னும்
தன் அலுவலக வரவேற்பறையில் வைத்துள்ளார்.

உங்கள் தூரிகையில் ஓவியமாகிய மற்ற பிரபலங்கள்?

சதுரகிரி மலையில் ரஜினி சார் தியானம் செய்வது
போலவும் பாபாஜி அவரை வாழ்த்துவது போலவும்
வரைந்த படத்தை ரஜினிசாரிடம் கொடுத்தேன். ரொம்ப
சந்தோஷப்பட்டார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சின்ன வயது முதல்
ஆஸ்கார்வரை அவரது படஙகளை வரைந்தளித்தேன்.
அவருக்கு பெயர் வைத்த பாபா படம் வரைந்து
கொடுத்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டார்.

நடிகர் விஜய் மனைவி சங்கீதா, விஜய்க்கு தெரியாமல்
அவரை ஒரு படம் வரைந்து கொடுக்கச் சொன்னார்.
அதை கணவரின் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார்.

இன்னும் இளையராஜா, லட்சுமிமேனன், என்று அவர்
வரைந்தவர்கள் பட்டியல் நீளம்.

—————————-

– சபீதா ஜோசப்
குமுதம்

ஓவியர் விவியா வாலண்டினா

சென்னையைச் சேர்ந்தவர் விவியா வாலண்டினா.

எம்எஸ் பயோ டெக்னாலாஜி படித்துவிட்டு
அமெரிக்காவில் கொஞ்ச நாள் வாசம்,
பின் தேசத்தின் மீதான நேசம் காரணமாக
திரும்ப இங்கே வந்தவர் தற்போது சென்னையில்
உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

இவருக்கு ஓவிய கலையின் மீது அளவு கடந்த
பற்றும் பாசமும் உண்டு.
பள்ளி பருவத்திலேயே இதற்காக பல பரிசுகள்
பெற்றுள்ளார். பின்னர் தனது ஓவிய திறமையை
நிறையவே வளர்த்துக் கொண்டுள்ளார்.

ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒருவித அற்புதமான
அழகுடன் மிளிர்கிறது.
லேண்ட்ஸ்கேப் வகை ஓவியங்கள் வரைவதில் தேர்ச்சி
பெற்ற இவரின் கைவண்ணம் அது தொடர்பான அலைகள்,
கடற்கரை, பனிக்காடு போன்ற ஓவியங்களில் அழகாக
வெளிப்பட்டுள்ளது.
அதே போல கறுப்பு வெள்ளையில் சிவப்பு வண்ண
பின்னணியில் இவர் வரைந்துள்ள ஆண், பெண் ஓவியம்
ஒரு காவியம் போல பல கதை சொல்கிறது. தண்ணீரில்
அலைபாயும் பாய்மரப் படகின் ஓவியம் பார்ப்பவரின்
மனதை சந்தோஷத்தில் அலைபாய வைக்கிறது.

பசுமை நிறைந்த காட்டுக்குள் பாயும் தண்ணீர் நம்மை
ஜில்லிட வைக்கிறது. இப்படி ஒவ்வொரு ஓவியமும் ஒரு
உணர்வை நம்முள் உண்டாக்குகிறது என்றால் அது
ஓவியரின் திறமையே.

இவரது ஓவிய கண்காட்சி கடந்த ஆண்டு செப்டம்பர்
இறுதியில் சென்னை எக்மோர் மாண்டியத்
சாலையில் உள்ள ஓட்டல் அம்பாசடர் பல்லவாவில்
நடைபெற்றது

——————————————-

உஷா சாந்தாராம் – ஓவியர்

 உஷா சாந்தாராம் கர்நாடகா பெங்களூரூவை சேர்ந்த
ஃபைன் ஆர்டிஸ்ட் தற்செயலாக இவரின் ஓவியங்களை
பார்க்க நேரிட்டது நான் என்னோட கிராமத்திற்க்கு போய்
வந்த ஒரு உணர்வு அவ்வளவு அற்புதமாக ஓவியங்கள்
வரைந்திருக்கின்றார்…

நான் ரசித்த அவரின் சில ஓவியங்கள் உங்களின்
பார்வைக்கு…

இது மாதிரி பொண்ணு கிடைக்கணுங்க எவ்ளோ
அழகான சிரிப்போட இருக்கும் ஒரு இளம்பெண்ணின்
ஓவியம்…



டபரா செட் காபி குடிக்கும் அப்பத்தா …


கையில் முறம் வைத்து அரிசி கல் பொறுக்கும் அம்மா…


அடிகுழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைக்கும் அம்மாயி…

இளநீர் வெட்டிகொடுக்கும் குப்புசாமி..

மாவரைக்கும் ஆட்டுரல்…

கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் வெட்டிப்போட்ட
தென்னை மரத்தில் உட்கார்ந்திருக்கும் பாட்டையா…

தண்ணீர் எடுக்க ஊரில் இருக்கும் தண்ணீர் தொட்டியில்
தண்ணீர் பிடிக்க காலி பித்தளை குடத்துடன் நிற்கும் தங்கை...

மக் , டம்ளர் கூட இவ்ளோ அழகா?

ஹம்பி பில்லர்…

=

அமைதியான அழகு பதுமை…

சேலை முந்தானையை ஏற்றி சொருகி துணி துவைக்கும் ஆச்சி…

கிரிக்கெட் வீரர்…

 
பள்ளியில் சைக்கிளுடன் நிற்கும் மாணவன் ….


மனைவியோடு இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்கத்துவீட்டு அண்ணா


சைக்கிளில் வைத்து இளநீர் விற்கும் ராமசாமி

இன்னும் இவரின் பல ஓவியங்கள் இந்த தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன

இவரின் தளம் http://usha-shantharam.blogspot.com/
திருமதி உஷா சாந்தாராம்..
 –
=======================================================
நன்றி:
http://www.priyamudanvasanth.com/2010_04_01_archive.html

கோலங்கள் – அவள் விகடன்

கோலங்கள்… கோலங்கள்….
Posted Image

“அவள் விகடன்”

கண்களில் கனவு..!

வாட்டர் கலரில் நிறைய ஷேட்ஸ்  உபயோகித்து
வரைந்த ஓவியம்

======================

வரைந்தவர்:-மனோ சாமிநாதன்
நன்றி: http://muthusidharal.blogspot.com/search/label/ஓவிய முத்துக்கள்

யாரையும் லவ் பண்ணல! – சதா

========================================================
“லவ் பண்றது தேசத் துரோகமா? சினிமாக்காரங்க லவ் பண்ணுனா
மட்டும் ஏன் இப்படி விழுந்து விழுந்து விசாரிக்கிறீங்க..?

நான் இன்னும் யாரையும் லவ் பண்ணல!

>சதா

குழலூதும் கண்ணன்

ஓவியம் – குழலூதும் கண்ணன்
– முத்துக்குமார்

Thanks: http://www.nilacharal.com/ocms/log/05120818.asp

மண்ல் ஓவியம்- துர்கா தேவி

http://snapjudge.files.wordpress.com/2007/10/beach_durga_kolkata_calcutta_statue_sand_sculpture.jpg

Rajaravivarma-painting

« Older entries