பட்டால்தான் தெரிகிறது!

தெய்வ அனுக்கிரகம், தெய்வ தரிசனம், தெய்வ அனுபவம்
சுலபத்தில் கிடைத்து விடாது.

உத்தமர்களின் உறவும், அவர்களுடைய அருளும் இருந்தால்
தான், தெய்வத்தை உணர முடியும் என்பதை உணர்த்தும்
கதை இது!

ராவண சம்ஹாரம் முடிந்து, ஸ்ரீ சீதா – ராம பட்டாபிஷேகம்
நடந்த பின், அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்தார்
ஸ்ரீராமர். அலங்கரிக்கப்பட்ட குதிரை முன்னே செல்ல,
சத்ருக்னன், புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் பின்
தொடர்ந்தனர்.

துக்கராங்கம் எனும் நகரில் நுழைந்தது குதிரை.
அந்நகரத்து இளவரசனான தமனன், குதிரையை பிடித்துக்
கட்டினான். இதனால், கடும் போர் மூண்டது. பரதன் மகன்
புஷ்கரனின் அம்பினால் அடிபட்ட தமனன்,
மூர்ச்சையடைந்து கீழே விழுந்தான்.

இதை அறிந்த மன்னன் சுபாகு, தன் மகனை கீழே
தள்ளியவர்களை பழி வாங்க, பெரும் படையுடன் போர்க்களம்
புகுந்தான். போர்க்களத்தில், அவன் எய்த அத்தனை
அம்புகளையும் எதிர் கொண்ட ஆஞ்சநேயர், ‘ஜெய் சீதாராம்…’
என்று கூறியபடியே, ஆகாயத்தில் எழும்பி, சுபாகுவின்
நெஞ்சை, தன் நெஞ்சால் இடித்து, அவனை கீழே தள்ளினார்.

மூர்ச்சையாகிக் கீழே விழுந்த சுபாகுக்கு, கனவைப் போல
ஒரு அதிசய காட்சி தெரிந்தது.

அயோத்தியில் பெரிய யாக குண்டம்; வசிஷ்டர், வாமதேவர்,
ஜாபாலி மற்றும் சியவனர் முதலான மகரிஷிகள் எல்லாம்
சூழ்ந்திருக்க, யாகத்திற்காக சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்
ஸ்ரீராமர். ஆகாயத்தில், பிரம்மா முதலான தேவாதி தேவர்கள்
எல்லாம் ஸ்ரீராமரை துதித்தபடி இருந்தனர்.

கனவு கலைந்தது; திடுக்கிட்ட சுபாகு, ‘ஆகா… நான் எதிர்க்கும்
இந்த சேனை, மகாவிஷ்ணுவின் அவதாரமும், என் பக்திக்கு
உகந்தவருமான ஸ்ரீராமருடையது. ஸ்ரீராமரே பரப்பிரம்மம்
என்ற எண்ணத்தை கை விட்டு, நான் ஏன் ராம பக்தர்களை
எதிர்த்தேன்…’ என நினைத்து எழுந்த சுபாகு, உடனே, போரை
நிறுத்தும்படி தன் வீரர்களுக்கு கட்டளை இட்டான்.

அதேசமயம், அவனுக்கு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த
சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. அது…

தீர்த்த யாத்திரை செய்தபடி சுபாகு வந்து கொண்டிருந்த போது,
அசிதாங்கர் என்ற ரிஷி, ராம நாமத்தை உச்சரித்தபடி
இருப்பதைப் பார்த்தான். அவரிடம் அதுபற்றி கேட்க, அவர்,
‘உன் இஷ்ட தெய்வமான நாராயணனே தற்போது ராமர்
என்ற பெயரில் அயோத்தியில் இருக்கிறார். அவரை எண்ணி
ஜபம் செய்கிறேன்…’ என்றார்.

சுபாகு சிரித்துக் கொண்டே, ‘என்ன இது… ராமனும், என்னைப்
போல் ஒரு அரசன் தானே… காட்டில் அலைந்து திரிந்து,
மனைவியை  தேடிய அவனைப் போய் நாராயணன் என்கிறீர்களே…’
என, எகத்தாளமாய் பேசினான்.

அசிதாங்கர் வருந்தியபடியே, ‘சுபாகு… தக்க சமயம் வரும்
போது உனக்குப் புரியும்…’ என்றார்.

அதன்படியே, தன்மீது, ஆஞ்சநேயர் தன் நெஞ்சால் மோதியவுடன்,
தனக்கு ராமரை பற்றிய உண்மை புரிந்தது என தெளிந்தான்
சுபாகு. அதன்பின், ஸ்ரீராமருடைய யாகத்தில் கலந்து, அவரை
தரிசித்து நன்னிலை பெற்றான்.

நல்லவர்களின் உறவை வேண்டுவோம்; பிடித்திருக்கும்
துயரங்களைத் தாண்டுவோம்!

—————————————

பி.என்.பரசுராமன்
–தினமலர்

சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் குறிப்பிடுகிறாரே. இதன் விளக்கம் என்ன?
ஏ.மாணிக்கம், உலகம்பட்டி

திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள மந்திரவரி இது. கடவுள் ஒருவரே. நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார் திருமூலர். உலகத்தை ஒரே குடும்பம் ஆக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே இருக்கிறது.

** பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால், ரயிலில் செல்லும் போது ஸ்லோகம் படிக்கிறேன். இதனால் குறை ஏதும் ஏற்படுமா?
எஸ்.ஜெயஸ்ரீ, சென்னை

ஒருவனுக்கு மூல வியாதி… கழிவறையில் இருந்து கொண்டு “கடவுளே! வலி தாங்க முடியவில்லையே! எனக்கு இந்த நோயை குணமாக்குவாயா?’ என்று வேண்டுகிறான். எங்கிருந்து கடவுளை நினைக்கிறோம்…எப்படி நினைக்கிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல! அவரை மனதார நினைத்தாலே போதும். பலன் கிடைக்கும்.

* காளியை எந்தநாளில் வழிபடுவது சிறப்பு?
ஆர்.மீனாட்சி, போத்தனூர்

ஞாயிறு, வெள்ளி, அஷ்டமி திதி, பவுர்ணமி, பரணி நட்சத்திர நாட்கள் உகந்தவை. ராகு காலத்தில் வழிபடுவது இன்னும் சிறப்பு.

* சில குழந்தைகள் இறந்து பிறக்கிறதே! இதன் ஆன்மிக தாத்பர்யம் என்ன?
எஸ்.சொர்ணவள்ளி, சிந்தாமணி

சந்தனு மகாராஜாவிடம், கங்காதேவி எட்டு பிள்ளைகளைப் பெற்றாள். ஏழு பிள்ளைகளை நதியில் வீசி விட்டாள். காரணம், அந்தக் குழந்தைகள் முற்பிறப்பில், தங்கள் பிறவி சீக்கிரம் கழிய வேண்டுமென வரம் பெற்றிருந்தன. அதுபோல் தான் இதுவும்…இறந்து பிறக்கும்
குழந்தைக்கு கருவிலேயே ஒரு பிறவி கழிந்து விட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை?
எஸ்.எல்.பிச்சை முத்து, சிங்கப்பெருமாள் கோவில்

தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை மிகவும் உகந்தவை. காசி, ராமேஸ்வரம் போன்ற பிதுர் வழிபாட்டு தலங்களுக்கு எந்த நாளில் சென்றாலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.

* துர்க்கைக்கு ராகுகால தீபம் ஏற்றிய எலுமிச்சம்பழம் உடைந்ததால் மனம் வருந்துகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்?
ஜெயலட்சுமி, பெங்களூரு

பழம் காய்ந்திருந்தால் இவ்வாறு ஆகும். எலுமிச்சம் பழத்தை தவிர்க்கவும். மண் அகலில் தீபம் ஏற்றுவதே நல்லது.

* நேபாளத்தில் பூகம்பத்தால் மக்கள் அல்லல்படுகிறார்களே. அவர்களின் துன்பம் தீர பரிகாரம் சொல்லுங்கள்.
கே. கே. வெங்கடேசன், செங்கல்பட்டு

உங்கள் ஊர்க் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை நடத்த ஏற்பாடு செய்யுங்கள். அதற்கு சக்தி அதிகம். வீட்டு வழிபாட்டிலும், இயற்கை சீற்றம் நேராமல் உலகைக் காக்கும்படி கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்.

* சுவாமி முன் திருமணத்திற்காக பூக்கட்டி பார்ப்பது சரியா?
கே.ஆர்.சுந்தரம், மதுரை

ஜாதகம் இருந்தால் மணப்பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் பூக்கட்டி பார்த்து திருமணம் நடத்தலாம்.

* கோயிலுக்குச் செல்லும் போது நடை சாத்தியிருந்தால் முன்னால் நின்று வணங்கலாமா
எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்

கூடாது.. நடை திறக்கும் வரை காத்திருந்து வழிபாடு செய்யுங்கள்.

===========

நன்றி – ஆன்மீக மலர்

நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )

1. சப்தாஸ்வன் என்று சிறப்புப்பெயர் கொண்டவர்…
சூரியன் (ஏழு குதிரைகளைக் கொண்டவன்)

2. மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து

சிவபதம் பெற்ற அடியவர்….
மூர்த்திநாயனார்

3. ஆறுபடைவீட்டில் குகாசலம் எனப்படும் தலம்…
சுவாமிமலை

4. திருமால் மீது முகுந்தமாலை பாடிய ஆழ்வார்…
குலசேகராழ்வார்

5. யுகங்களில் தர்மயுகம் என்று சிறப்பிக்கப்படுவது….
கிருதயுகம்

6. ராமாயணத்தில் மந்திர ரத்தினமாகத் திகழ்வது…
சுந்தர காண்டம்

7. துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமாயணம்…
ராமசரித மானஸ்

8. ராஜரிஷியான விஸ்வாமித்திரரின் இயற்பெயர்….
கவுசிகன்

9. பூதத்தாழ்வார் பாடிய பிரபந்தப்பாடல்….
இரண்டாம் திருவந்தாதி

10. நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..
காளஹஸ்தி

===========
ஆன்மீக மலர்

ஜூன் 24 ஆனி உத்திரம்

ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம்
நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள்,
மூன்று திதி நாட்கள்.

ஏன் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்த வேண்டும்… ஏழு
நாட்களோ, 10 நாட்களோ, 70 நாட்களோ நடத்தலாமே
என்ற கேள்வி எழுகிறதல்லவா! இதற்கு காரணம் உண்டு.

பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை
நடைபெறும். அதாவது, அதிகாலை, 4:00 மணிக்கு,
திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜையும், 6:00 மணிக்கு,
காலசந்தி எனப்படும் காலை பூஜையும் நடக்கும்.
பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜையும்,
மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை எனப்படும் சாயங்கால
பூஜையும், இரவு, 7:00 மணிக்கு ராக்காலம் எனப்படும் இரவு
பூஜையும், 9:00 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை
பூஜையும் நடக்கும்.

தேவர்களும் இதே போல, ஆறுகால பூஜையை நடத்துவர்.
ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு.
அவர்களுக்கு தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை
காலப்பிரிவுகள் உண்டு.

தை முதல் ஆனி வரை (காலை, 6:00 மணி முதல் மாலை,
6:00 மணி வரை) உத்ராயணம்; ஆடி முதல் மார்கழி வரை
(மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை)
தட்சிணாயணம்.

அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி.
காலைப் பொழுதோ, மாசி மாதம்; மதியம் – சித்திரை
திருவோணம்; மாலைப்பொழுது – ஆனி; ராக்காலம் – ஆவணி;
அர்த்தஜாமம் – புரட்டாசி. இதனால் தான், தேவர்களின்
அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம்.

இதை, ஆருத்ரா தரிசனம் என்பர். அடுத்து, மாசி மாதம்
வளர்பிறை சதுர்த்தசியன்று காலை, 6:00 மணிக்கும்,
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மதியம்,
12:00 மணிக்கும் அபிஷேகம் செய்வர்.

இதையடுத்து, ஆனி உத்திரத்தன்று மாலை, 4:00 மணியளவிலும்,
அடுத்து, ஆவணி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 7:00
மணிக்கும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 9:00
மணிக்கும் அபிஷேகம் செய்வர்.

இந்த அபிஷேக நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது மார்கழி
திருவாதிரையும், ஆனி உத்திரமும் தான்.

மார்கழி காலைப்பொழுதில் அபிஷேகம் காண
வாய்ப்பில்லாதவர்கள், ஆனி, மாலைப்பொழுதில் இந்த
அபிஷேகத்தை தரிசிக்கலாம்.

பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம்
பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி
தாமிர சபை, குற்றாலம் சித்திர சபைகளில் இந்த
அபிஷேகங்களைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு.

இவற்றில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னிதி, மனிதனின்
உருவ அமைப்போடு ஒத்துப் போகிறது.

ஒரு நாளைக்கு மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கையை
குறிப்பிடும் விதமாக, இங்குள்ள பொன்னம்பலத்தில், நமசிவாய
மந்திரம் பொறிக்கப்பட்ட, 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள்
வேயப்பட்டுள்ளன. இதில் அடிக்கப்பட்டுள்ள,
72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது.

கோவிலில் உள்ள ஒன்பது வாசல்கள், மனித உடலிலுள்ள
ஒன்பது துவாரங்களை (கண், காது, மூக்கிலுள்ள ஆறு துவாரங்கள்,
தொப்புள், பிறப்புறுப்பு, குதம்) குறிக்கிறது.

மனிதனும் தெய்வாம்சம் கொண்டவனே! அவனுக்கு ஆண்டவன்
தந்துள்ள உறுப்புகளைப் பயன்படுத்தி நற்பெயர் எடுக்க வேண்டும்
என்பதே பொன்னம்பலத்தின் தத்துவம். நடராஜர் பற்றி அரிய
தகவல்களை அறிந்து கொண்ட நாம், ஆனி உத்திர திருநாளன்று,
அந்த ஆனந்தக்கூத்தனின் அருள் பெற புறப்படுவோமா!

—————————————————

தி.செல்லப்பா

நகராத குதிரையும், இறைவனின் திருநாமமும்!

இறைவனின் திருநாமங்களை வாய்விட்டு உரக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதன் பலன் அளவிட முடியாது என, தெய்வீக நூல்கள் சொல்கின்றன.

ராவண சம்ஹாரத்திற்கு பின், அகத்தியரின் ஆலோசனைப்படி, வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அசுவமேத யாகம் செய்ய தீர்மானித்தார் ஸ்ரீராமர். அதற்காக, கறுத்த காது, வெளுத்த உடல், சிவந்த வாய், மஞ்சள் நிற வால் ஆகியவைகளுடன் கூடிய உயர் ரக குதிரை தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஸ்ரீராமரின் உத்தரவுப்படி அக்குதிரை, திக்விஜயத்திற்காக புறப்பட்டது.

சத்ருக்னன், அவரது பிள்ளை புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் போன்றோர் பாதுகாவலர்களாக குதிரையை பின் தொடர்ந்தனர்.

அன்னை காமாட்சியை நேரில் தரிசித்த சுமதன் எனும் அரசரின் நாடு, சியவன முனிவரின் ஆசிரமம், புருஷோத்தம ஷேத்திரம், சக்கராங்க நகரம், தேஜப்புரம் எனும் பல பகுதிகளின் வழியாக நடைபெற்ற அவர்களின் பயணம், ஹேமகூடம் என்ற இடத்தை அடைந்ததும், அசையாமல் அப்படியே நின்றது குதிரை.

சேனை வீரர்கள் அதை பலவாறாக இழுத்துப் பார்த்தனர்; நகரவில்லை.
ஆஞ்சநேயர் தன் வாலால் சுற்றி, பலம் கொண்ட மட்டும் குதிரையை இழுத்தார். அப்போதும், குதிரை அசையவில்லை.

‘இங்கே ஏதோ அதிசயம் இருக்க வேண்டும்; அதனால் தான் குதிரை நகர மறுக்கிறது…’ என்று சுற்றிலும் தேடிப் பார்த்தனர். அவர்களின் பார்வையில், சவுனகர் முனிவரின் ஆசிரமம் தென்பட்டது. அனைவரும் அவரிடம் சென்று, நடந்ததை கூறினர்.

‘குதிரையின் காதுகளில் விழும்படி, அனைவரும் ராம நாமத்தை உரக்கக் கூறுங்கள்…’ என்றார் முனிவர். அதன்படி அனைவரும் குதிரை நின்ற இடத்தை சுற்றி வந்து, ராம நாமத்தை உரக்கச் கூறினர்.

அடுத்த நொடி, அவ்விடத்தில், ராட்சஷன் போல் தோற்றமளித்த ஒருவன் வெளிப்பட்டு, ‘நான் கவுட தேசத்தை சேர்ந்த அந்தணன்; காவிரிக் கரையில் ஜெபம் செய்து, அதன் மூலம் கிடைத்த புண்ணியத்தின் பலனால் சொர்க்கம் சென்றேன்.

‘வழியில்அப்சரஸ் பெண்கள் பணி விடைகள் செய்ய, ஏராளமான முனிவர்கள் தவம் செய்தபடி இருந்தனர். அவர்களை பார்த்த நான், சொர்க்கம் போகும் ஆணவத்தில், அவர்களை பழித்து பேசினேன். அதன் விளைவாகவே, இந்த ராட்சச ஜென்மம் வாய்த்தது

‘ராம நாமம் கேட்டால், சாப விமோசனம் பெறலாம் என்பதை அறிந்து, ஸ்ரீராமரின் அசுவமேத குதிரையை நிறுத்தினேன். நீங்கள் ராம நாமம் கூறியதும், விமோசனம் பெற்றேன்…’ என்று சொல்லி, ராட்சஷன் வடிவம் நீங்கி, பழைய உருவம் அடைந்து சொர்க்கம் சென்றான்.

தெய்வ நாமம் எல்லாவிதமான பாவங்களையும் போக்கும்; தினமும் சில நிமிடங்களாவது இறை நாமத்தை சொல்வது, நமக்கும், நம் சந்ததிகளுக்கும் நன்மையை தரும்!

பி.என்.பரசுராமன்

திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய மந்திரம்


ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே


பொருள் :
பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த
வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து
சேவிக்கின்றனரோ,

அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த
புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்
பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான
ஹே மலையே!

தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த
பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக்
கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள
வேண்டுகிறேன்.

தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான
ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து
வைத்து அருள வேண்டும்.)

ஸ்ரீ-அன்னையும்-பூக்களும்

images (2)

ஒரு பூவைப் போலிருங்கள்.  நாம் ஒவ்வொருவரும் பூவைப் போலிருக்க முயற்சி செய்ய வேண்டும். வெளிப்படையாக தெளிவாக இனிமையாக மென்மையாக உயர்ந்த பண்புடன்.frewcc

பூ தன்னைச் சுற்றிய எல்லாவற்றிடமும் ஒளிவு மறைவின்றி இருக்கிறது. இயற்கை ஒளி சூரியக்கதிர் என்று எதனிடம் இருந்தும் தன்னை அது மறைத்துக்கொள்வதில்லை.

பூ சமனிலை கொண்டது. சலுகை காட்டுவதில்லை எல்லோருமே அதனுடைய அழகை மணத்தை அனுபவிக்க முடியும்.

பூ பெருந்தன்மையானது. நம்முடைய மகிழ்ச்சிக்காக நம்மை ஆகுதி செய்து கொள்கிறது.images (2)

பூ எப்போதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது அதன் இனிமைகள் நம்மை தொற்றிக் கொள்ளும்.

ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது. அதை அன்னைக்கு மனமாரச் சமர்ப்பிப்பதால் அதன் பலனை நாம் எளிதாக அடையலாம்.

பூக்களுக்கு ஏற்புத்தன்மை அதிகம். ஒவ்வொரு பூவிற்கும் அன்னை ஒரு தனி சிறப்பைத் தந்திருக்கிறார். அவை செலுத்திய சக்தியை மிகச் சரியாக பெற்றுக்கொண்டிருக்கின்றன. மக்கள் எல்லாப் பொழுதுகளிலும் அப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்று சொல்லுவதற்கில்லை. காரணம் அவர்களுடைய ஏற்புத்தன்மை பூக்களூடையதைவிட குறைவாகவே இருக்கிறது. அதனால் தங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய சக்தியை இழந்து விடுகிறார்கள். பூக்களோ அந்த சக்தியை வியக்கத்தக்க விதத்தில் தமக்குள் தக்க வைத்துக் கொள்கின்றனdownload

வெண்தாமரை மலர்.    நம்முடைய தெய்விக உணர்வு மேம்படும் மேனி பொலிவடையும்download (1)

செந்தாமரை மலர்     புது உணர்வுகளும் புதுத் தெம்பும் நமக்கு ஏற்படும்.images (2)

இளஞ்சிவப்பு ரோஜா   மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி காணலாம். தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம்.images (5)

வெள்ளை ரோஜா    அச்சம் பறந்தோடும் தைரியம் கொடி கட்டும் பகைவரும் நண்பராகலாம்.images (4)

மஞ்சள் ரோஜா    குரோதம் தொலைந்து கணவன் மனைவி குதூகலத்துடன் வாழ்ந்திடலாம்.images (1)

சிவப்பு ரோஜா   மனிதனின் காமத்தை கோபத்தை ஆசையை விருப்பத்தை தெய்விக அன்பாக மாற்றிவிடும்.

அலரி  [கஸ்தூரி பூக்கள்]download (2)

இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு அலரி சோதனைகளை விரட்டும்.

வெள்ளை அலர் பூக்கள்      மனத்தில் அமைதி நிலைக்கும்.download (4)

செம்பருத்தி   உங்கள் கவலை எதுவானாலும் அதைத் தீர்க்க செம்பருத்திப் பூவை பயன்படுத்துங்கள்.download (13)

மல்லிகை    மது போதை வஸ்துக்களூக்கு அடிமைப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீளலாம்.download

அல்லி    செல்வம் பெருக அல்லி மலரை சமர்ப்பணம் செய்யுங்கள்.download (7)

வாடாமல்லி    தீர்க்கமான ஆயுள் கொடுக்கும்.download (6)

டிசம்பர் பூ     உண்மையான நட்பு கிடைக்கும். குழந்தை பாக்கியத்துக்கு உடன் சாமந்தி தென்னம்பூக்களைச் சமர்ப்பிக்கலாம். நிம்மதி கிடைக்கும்.

மஞ்சள் நிற கனகாம்பரம்    படிப்பில் முன்னேற்றம் காணலாம்.

ஆரஞ்சு நிற கனகாமபரம்    எண்ணியதெல்லாம் இனிதே நிறைவேறும்.download (6)

சாமந்தி   பகைவரை வெற்றி கொள்ளும் சக்தியை சாத்தியமாக்கும்.download (17)

எருக்கம்பூ   துணிவு தன்னம்பிக்கை முழுமையான தைரியத்தைக் கொடுக்கும்

காகிதப்பூ  எல்லாவிதமான பாதுகாப்பையும் தரும் குறிப்பாக பயணங்களில் நல்லதொரு துணையாக வரும்download (3)

நித்யகல்யாணி  முன்னேற்றத்துக்கான குறியீடுdownload (16)

நாகலிங்கப்பூ  செல்வ வளத்தின் அடையாளம்download (14)

மனோரஞ்சிதம்  மனத்தெளிவுக்கும் விவேகத்துக்கும் மனோரஞ்சிதப்பூ ஒரு குறியீடு.

சம்பங்கி    கண்டுணரும் ஆற்றல் மேம்படும்.

கொன்றை   எடுத்துக்கொண்ட வேலையை நேர்த்தியாக முடிக்கும் ஆற்றல் கிடைக்கும்.download (11)

ஊமத்தை    வாய்ப்பை நல்லவிதமாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும்.download (10)

தும்பைப்பூ   ஆசைகள் நிறைவேறும்.

செண்பகப்பூ   மன நிறைவோடு வாழ உதவும்.download (12)

மகிழம்பூ  நீங்கள் முன்னேறுவதற்கும் நல்ல மாற்றங்களை வாழ்வில் பெறுவதற்கும் உகந்தது.images

அந்தி மந்தாரை  வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டலாம்.download (8)

பவழமல்லி   உங்க நியாயமான ஆசைகள் நிறைவேறும்.

திரு நீற்றுப்பச்சை  உங்களுக்குள் நல்ல ஒழுக்கம் ஏற்படும்.download (5)

தாழம்பூ  தெய்வத்துடன்  சம்பந்தப்படவும் தெய்வத்தின் வழி நடத்துலை வாழ்வில் பெற்றிடவும் உதவும்,  images (1)https://chinnuadhithya.wordpress.com/2014/02/21/

மனிதரும் தெய்வமாகலாம்!

ஜூன் 14, ஆனி பிரம்மோற்சவம் ஆரம்பம்

குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை
பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப்
பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம்
சென்றனர் மக்கள்.

அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது,
‘அது தன் நிலமே…’ என வாதாடினான் மன்னன்.
பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு
தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன்
கோவிலுக்குச் சென்று, ‘உண்மையை வெளிக்
கொண்டு வர உன்னைத் தவிர வேறு கதியில்லை…’
என்று மனமுருகி வேண்டினர் மக்கள்.

மக்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவன்,
மாறு வேடத்தில் சென்று, பேரரசரிடம் முறையிட்டார்.
பேரரசரும் குறுநில மன்னனை வர வழைத்தார்.
அவரிடம் சிவன், ‘மன்னா… உன் நிலம் எப்படிப்பட்ட
தன்மையுடையது?’ என்று கேட்டார். அதற்கு மன்னன்,
‘அது வறண்ட பூமி…’ என்றான்.

அதை மறுத்த சிவன், ‘பேரரசே….. அது செழிப்பான
நிலம்; சந்தேகம் என்றால், நிலத்தை தோண்டுங்கள்;
தண்ணீர் வரும்…’ என்றார்.

அதன்படி நிலத்தை தோண்ட, நீர் வெளிப்பட்டது.
குறுநில மன்னன் தலை குனிந்தான். மக்களிடமே
நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர்.

தன் பக்தர்களை ஏமாற்ற எண்ணியவர்களுக்கு,
‘தண்ணி’ காட்டிய சிவன் அருளும் இடம் தான்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்.
இக்கோவிலுக்கு திருப்பணி செய்தவர்
மாணிக்கவாசகர்.

சிற்பத்திற்கு சிறப்பு பெற்ற இக்கோவிலின் மூலவர்
ஆத்மநாதர். இவரை சிலை வடிவில் தரிசிக்க முடியாது.
காரணம், அரூபம் எனப்படும் உருவமற்ற நிலையில்
உள்ளார்.

மூலஸ்தானத்தில். இவர் இருக்குமிடத்தை அடையாளம்
காட்ட, குவளை ஒன்றை வைத்திருப்பர்.

இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில்,
அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவனின் சிற்பம்,
தத்ரூபமாக வடிக்கப் பட்டிருக்கும். மண்டபங்களில்
உள்ள தாழ்வாரம், முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது
போல் அமைக்கப்பட்டுள்ளது.

கல் வேலையா, இரும்பு வேலையா என்று அறிய
முடியாதபடி, சிற்பிகள் தங்கள் கைவண்ணத்தைக்
காட்டியுள்ளனர்.

பொதுவாக, கோவில்கள் கிழக்கு நோக்கி இருக்கும்.
அரிதாக சில தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்திருக்கும்.
ஆனால், ஆவுடையார் கோவில், தெற்கு நோக்கி உள்ளது.
சிவன், குருவாக தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும்
நிலையை, ‘தட்சிணாமூர்த்தி’ என்பர்.

இங்கு அவர், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த
தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

மதுரையில் ஆட்சி செலுத்திய அரிமர்த்த பாண்டியன்,
திருவாதவூரார் என்ற அமைச்சரை, குதிரைப் படைக்கு
குதிரை வாங்க அனுப்பினார். அமைச்சர்
ஆவுடையார்கோவிலை அடைந்த போது, குரு வடிவில்,
அவருக்கு காட்சி அளித்தார் சிவன்.

இதையடுத்து, அங்கேயே தங்கிவிட்ட வாதவூரார்,
குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தை கோவில்
திருப்பணிக்கு செலவிட்டார். இதை அறிந்த மன்னன்,
அவருக்கு பல்வேறு தண்டனைகள் கொடுத்தார்.
இறுதியில், சிவனருளால், உண்மை தெரிந்து கொண்டான்
மன்னன்.

சிவன், தன்னை ஆட்கொண்ட விதத்தை உருக்கமாக
பாடினார் வாதவூரார். அதுவே, ‘திருவாசகம்’ ஆனது.
இதன் அடிப்படையில் அவர், ‘மாணிக்கவாசகர்’ என பெயர் பெற்றார்.
இவர் ஒரு பக்தராயினும், சிவனாகவே கருதி,
ஆனி உத்திர திருவிழா இவருக்கு கொண்டாடப்படுகிறது.
விழா நாட்களில், சிவனுக்கு பதிலாக மாணிக்கவாசகர்
எழுந்தருள்வார்.

ஜூன் 24ம் தேதி நடக்கும் உபதேசக் காட்சி முக்கியமானது.
நம் எல்லாருக்குள்ளும் தெய்வத்தன்மை இருக்கிறது;
இறைவனிடம் உண்மையான பக்தி செலுத்தினால்,
அனைவருமே தெய்வமாகலாம்!

———————————-

தி.செல்லப்பா
வாரமலர்

தானத்திலும் கருமித்தனம் கூடாது..!

ஒரு பணக்காரர் துறவியிடம் போனார்.

அவரிடம் ‘மகனே, உனக்கு கிரகநிலை சரியில்லை
இதனால் உன் செல்வம் அழிந்து போக வாய்ப்புண்டு.
நீ பழங்கள் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்,
பிரச்சினை குறையும்’ எனறார் துறவி.

பணக்காரரோ பெரிய கருமி.

பழம் வாங்கிக் கொடுத்தால் நிறைய செலவாகுமே!!
என்ன செய்யலாம்? என யோசித்தவர், வேலைக்காரனை
அழைத்து, ‘நம் தோட்டத்தில், பழுத்து கனிந்து கீழே விழும்
நிலையிலுள்ள வாழைப்பழங்களை மட்டும் பறித்துவா’
என்றார்.

அவனும் ஐந்தாறு பழங்களை பறித்து வந்தான்.

அதை வேலைக்காரி ஒருத்தியிடம் கொடுத்தார் பணக்காரர்

வீட்டுக்கு போவதற்குள் பழங்கள் அழுகி விடுமே! இதைப்போய்
தானம்  செய்கிறாராக்கும்’ என்று எண்ணிய வேலைக்காரி,
அங்குள்ள பண்ணையில் இருந்த பால் கறப்பவரிடம் கொடுத்து
இவற்றை மாட்டுக்கு கொடுங்கள்’ என்றாள்

‘அழுகும் நிலையிலுள்ள பழத்தை மாட்டுக்கு கொடுத்தால்
ஆகாது’ என்ற அவன் அவற்றை விட்டெறிந்தான்.

தன் கருமித்தனத்தால் பணக்காரரும் செல்வத்தை இழந்தார்

மற்றவர்கள் மனம் குளிரும் வகையில் தானம்
செய்தால்தான் புண்ணியம் .
தானத்திலும் கருமித்தனம் கூடாது..!

—————————————————
நன்றி: ஆன்மீக மலர்

விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம்.

வைகாசி விசாகத்தை முருகனின் பிறந்ததினமாக
மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம்,
பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால்
ஞானமும், கல்வியும் பெருகும்.

துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி
விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை
வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர்,
பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு
தானமாக கொடுக்கலாம்.

வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும்.
இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு.
எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை
அவர் வழங்குவதாக ஐதீகம்.

வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை
தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம்
முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால்
திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும்.
குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை
4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க
வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு
உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு
விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து
மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’
என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.
திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது
நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை
சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம்
இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப்
பெறும்.

————————————–

« Older entries Newer entries »