வளர்ச்சி!

சின்னப்
பிள்ளையாய்
இருந்தவன்
பெரியவனாகி
விட்டான்!
வீட்டில்
இன்னொரு
சின்னப்பிள்ளை
பிறந்ததும்…!

———————

– மகிழை சிவகார்த்தி
–குமுதம்

பாசம்! –

ஓடுவதற்கு
சாவி கொடுத்தாலும்
ஓட மனமில்லாமல்
குழந்தையையே
சுற்றிச் சற்றி வருகின்றன
விளையாட்டு பொம்மைகள்.

——————–

-எஸ்.டேனியல் ஜூலியட்
–குமுதம்

வருத்தம்!


சிவந்த கன்னத்தில் பட்டு
குழந்தையின் அழகை
குறைத்துவிட்டதற்காக
வருந்துகிறது மை.

———————-

– டி.ஜெய்சிங்
குமுதம்

பேசாமல் திரும்பினான்!


வீட்டுக்குள்
நுழைந்த திருடன்
பேசாமல் திரும்பினான்!
குழந்தையின் கையில்
“போலீஸ் அப்பா’வின்
துப்பாக்கி!

—————————————
– அப்துல்

–குமுதம்

Newer entries »